Friday, March 20, 2026

கும்பகோணம் நாகேஸ்வரர், நாகநாதர்.

குடந்தைக் கீழ்க்கோட்டம்  (நாகேசுவரசுவாமி திருக்கோயில்)இறைவர் திருப்பெயர்:   நாகேஸ்வரர், நாகநாதர்.  இறைவியார் திருப்பெயர்: பிருகந்நாயகி, பெரியநாயகி.  தல மரம்:  வில்வமரம் - (Vilvam or Bael Tree)  தீர்த்தம் : சிங்கமுக தீர்த்தம். மகாமகத்தீர்த்தம்  வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர்,  சேக்கிழார், சிங்கமுக தீர்த்தம். Sthala Puranamஅமுதகலசத்தின் (குடத்தின்) வில்வம் சிவலிங்கமான தலம். தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்    :    அப்பர்   -    1. சொன்மலிந்த மறைநான்கா (6.75); பாடல்கள்     : சேக்கிழார்  -       நல்லூரில் நம்பர் அருள் (12.21.215,216 & 217) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                      வந்து அணைந்து திருக்கீழ்க் கோட்டத்து (12.28.408) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.  "கோயிற் பெருத்தது கும்பகோணம்" என்னும் மொழிக்கேற்ப இத்தலத்தில் ஏராளமான கோயில்கள் உள்ளன. தீர்த்தக் கிணற்றில் படிகள் இறங்கிச் செல்ல வேண்டும்; இறங்கு வாயிலில் கல்லில் இரு சிங்கங்கள் சுதையில் உள்ளன. இங்குள்ள நடராச மண்டபம், "பேரம்பலம்" எனப்படுகிறது. ரத அமைப்பில் உள்ளது; இருபுறங்களிலும் உள்ள கல் (தேர்¢ச்) சக்கரம் கண்டு மகிழத் தக்கது, இச்சக்கரங்களின் ஆரங்களாக 12 ராசிகளும் இடம் பெற இரண்டு குதிரைகளும் நான்கு யானைகளும் இழுக்கும் நிலையில் இத்தேர் மண்டபம் அமைந்துள்ளது மனதைக் கவர்வதாக உள்ளது; பெயரே ஆனந்தத் தாண்டவ நடராசசபை அல்லவா? நடனத்திற்குச் சிவகாமி தாளம் போடும் பாவனையும், மகாவிஷ்ணு குழலூதும் காட்சியும் பேரழகுடையன. மூலவர் - அழகான திருமேனி; உயரமான ஆவுடையார் - மிகவும் குட்டையான பாணம். 'பாடகச்சேரி ஸ்ரீ இராமலிங்கசுவாமிகள்' என்னும் மகான்; புதர் மண்டிக்கிடந்த இத் திருக்கோயிலைச் சீர்த்திருத்தித் திருப்பணிகள் செய்வித்து 1923-ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்வித்துள்ளார். ராஜகோபுரம், மேற்குக் கோபுரம், நடராசசபை, சுற்றுச்சுவர்கள், சங்கமுகதீர்த்தக்கிணறு முதலிய திருப்பணிகள் அவரால் செய்யப்பட்டவை. இதற்காக இம் மகான், தம் கழுத்தில் பித்தளைச் செம்பு ஒன்றை உண்டிக் கலயமாகக் கட்டிக் கொண்டு தெருக்கள்தோறும் சென்று பிச்சையெடுப்பது போல நிதி திரட்டிய அருஞ்செயலை இன்று கேட்டாலும், நினைத்தாலும் நம் மனம் நெகிழ்கின்றது. சித்திரை மாதம் 3வது  நாள் சூரிய கிரணங்கள் காலையில் மூலஸ்தானத்தில் உள்ள மூர்த்தியின் மேல் படுகின்றது.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Friday, March 6, 2026

ஒரே ஆவுடையில் இரண்டு லிங்கங்கள்.

ஆரண்யேச்வரம் (கீழைத் திருக்காட்டுப் பள்ளி)
 ஒரே ஆவுடையில் இரண்டு லிங்கங்கள்! - கீழைத்திருக்காட்டுப்பள்ளி அதிசயமும் வரலாறும் 
தமிழகத்தின் ஆன்மீகப் பொக்கிஷங்களில் ஒன்றான, மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகிலுள்ள அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில் பற்றிய  தகவல் இதோ!

 அபூர்வ இரட்டை லிங்கம் (தசலிங்கம்): இக்கோயிலின் கருவறையில் மற்ற கோயில்களில் இல்லாத ஒரு அதிசயம் அரங்கேறியுள்ளது. பொதுவாக ஒரு ஆவுடையில் ஒரு பாணம் (லிங்கம்) மட்டுமே இருக்கும். ஆனால், இங்கு ஒரே ஆவுடையில் இரண்டு லிங்கத் திருமேனிகள் அமையப் பெற்றுள்ளன. இது 'தசலிங்கம்' என்று போற்றப்படுகிறது. அக்னி பகவான் சிவபெருமானை இரண்டு திருமேனிகளாக ஆராதித்ததன் அடையாளமே இது என்று கூறப்படுகிறது. இந்த தரிசனம் 
 காணப்படுவது தனிச்சிறப்பு.

 தல வரலாறு: 'ஆரண்யம்' என்றால் காடு. முற்காலத்தில் முல்லைக் காடாக இருந்த இப்பகுதியில், ஒரு பசு பால் சொரிந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது இந்த சுயம்பு லிங்கம் கண்டெடுக்கப்பட்டது. முல்லை வனத்தில் தோன்றியதால் ஈசன் 'ஆரண்யேஸ்வரர்' என்றும், அன்னை 'அகிலாண்டேஸ்வரி' என்றும் அழைக்கப்படுகின்றனர்.

 நண்டு பூஜித்த விநாயகர்: இத்தலத்தின் மற்றுமொரு சிறப்பு 'நண்டு விநாயகர்'. பூர்வ ஜென்ம சாபத்தால் நண்டாகப் பிறந்த ஒரு கந்தர்வன், இங்குள்ள விநாயகரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக வரலாறு. எனவே, இங்கு விநாயகரை வழிபட்டால் தீராத வினைகளும் தீரும் என்பது நம்பிக்கை.

 பரிகாரச் சிறப்புகள்:

பதவி உயர்வு: பதவியை இழந்தவர்கள் அல்லது வேலையில் தடை இருப்பவர்கள் இத்தல இறைவனை தரிசித்தால் மீண்டும் நல்வாய்ப்புகள் கிடைக்கும்.

மேற்கு நோக்கிய குரு: இங்குள்ள தட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் மேற்கு நோக்கி அமர்ந்து அருள்வது கல்வி மற்றும் ஞானத்திற்கு மிகச் சிறந்தது.
பாவ விமோசனம்: தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களுக்காக இத்தல தீர்த்தமான 'அமிர்த தீர்த்தத்தில்' நீராடி இறைவனை வேண்டினால் மன அமைதி கிடைக்கும்.

 தேவாரம் பாடல் பெற்ற தலம்: திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற காவேரி வடகரைத் தலங்களில் இது 12-வது சிவத்தலமாகும்.

 கோயில் அமைந்துள்ள இடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் திருவெண்காட்டிற்கு மிக அருகில் (1 கி.மீ) கீழைத்திருக்காட்டுப்பள்ளி அமைந்துள்ளது.

அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் சிவபெருமான் வழங்கிய இடம் இதுதான் விழாக்கள்: சிவராத்திரி, கந்தசஷ்டி, ஆருத்ரா தரிசனம், விநாயகர் சதுர்த்தி போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
சிறப்பு: இழந்ததை திருப்பித் தரும் தலம், மற்றும் இங்குள்ள சன்னதியில் ஏழு லிங்கங்கள் உள்ளதாகவும் அறியப்படுகிறது
. ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, March 4, 2026

வியாக்ரபாதர் பயணித்த "நவ புலியூர்க் கோயில்கள்..

சிவன் காட்டிய மோட்சப் பாதை: வியாக்ரபாதர் பயணித்த "நவ புலியூர்க் கோயில்கள்" - ஒரு விரிவான ஆன்மீகத் தொகுப்பு! 
தமிழகத்தில் எண்ணற்ற சிவத்தலங்கள் இருந்தாலும், 'புலியூர்' என்ற பெயரோடு தொடர்புடைய ஒன்பது தலங்களுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்த ஒன்பது ஊர்களுக்கும் வியாக்ரபாத முனிவர் (புலிக்கால் முனிவர்) நேரில் சென்று சிவனை வழிபட்டதால் இவை "நவ புலியூர்க் கோயில்கள்" என்று போற்றப்படுகின்றன.

யார் இந்த வியாக்ரபாதர்? ஏன் இந்தப் பயணம்?
மகாபாரதக் காலத்தில் உபமன்யு முனிவரின் தந்தையான மத்யந்தினர், இறைவனுக்கு மலர் தூவி வழிபட விரும்பினார். வண்டுகள் தீண்டாத, அதிகாலையில் மலரும் தூய்மையான மலர்களைப் பறிக்க ஏதுவாக, மரங்களில் ஏறுவதற்கு ஏதுவாக 'புலியின் கால்களையும்', மலர்களைப் பறிக்க 'புலியின் நகங்களையும்' இறைவனிடம் வேண்டிப் பெற்றார். அதனால் அவர் வியாக்ரபாதர் (வியாக்ர - புலி, பாத - கால்) என்று அழைக்கப்பட்டார்.

இவரும், ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி முனிவரும் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைக் காண தவம் இருந்தனர். அவர்களுக்குத் தரிசனம் தந்த ஈசன், இந்த ஒன்பது புலியூர் தலங்களையும் தரிசித்துவிட்டு, திருவரங்கத்தில் யாத்திரையை முடிக்குமாறு ஆணையிட்டார்.
9 திருத்தலங்களின் சிறப்புகள்:
📍 1. பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்): இதுவே முதன்மையான தலம். பஞ்ச பூதங்களில் 'ஆகாயம்'. இங்கு நடராஜப் பெருமான் ஆடும் ஆனந்தத் தாண்டவத்தைக் காணவே வியாக்ரபாதர் தவம் இருந்தார். இன்றும் சிதம்பரத்தில் நடக்கும் பூஜைகளில் வியாக்ரபாதர் வகுத்த "புஷ்பார்ச்சனை" முறை பின்பற்றப்படுகிறது.

📍 2. திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்): கடலூர் மாநகரின் இதயப்பகுதியில் அமைந்துள்ள நடுநாட்டுத் தலம். அன்னை பார்வதி தேவி ஒற்றைக்காலில் நின்று தவம் புரிந்தபோது, இறைவன் பாதிரி மரத்தடியில் காட்சியளித்தார். வியாக்ரபாதர் வழிபட்டதால் இப்பெயர் பெற்றது.

📍 3. எருக்கத்தம்புலியூர் (ராஜேந்திரபட்டினம்): கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது. இங்கு இறைவனுக்கு 'நீலகண்டேஸ்வரர்' என்று பெயர். தேவாரப் பாடல் பெற்ற தலம். யாழ் மீட்டிப் பாடிய திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் அவதரித்த பெருமைக்குரிய ஊர் இது.

📍 4. ஓமாம்புலியூர்: சிதம்பரத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. ஈசன் குருவாக அமர்ந்து உமாதேவிக்கு 'ஓங்கார'ப் பொருளை (பிரணவ மந்திரம்) உபதேசித்த தலம். இங்கு தட்சிணாமூர்த்திக்கு மிக விசேஷமான சன்னதி உண்டு.

📍 5. சிறுபுலியூர் (மயிலாடுதுறை): முனிவர்கள் இருவருக்கும் இருட்டிவிட்டதால் வழி தெரியாமல் தவித்தபோது, இறைவன் ஒளியாக வந்து வழிகாட்டிய தலம். இங்கு சிவபெருமானும் அரங்கநாதப் பெருமாளும் ஒரே இடத்தில் காட்சியளிப்பது சிறப்பு.

📍 6. அத்திப்புலியூர் (கீழ்வேளூர்): நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. 'அத்தி' என்றால் யானை. யானையும் புலியும் (வியாக்ரபாதர்) சேர்ந்து வழிபட்ட தலம். இங்கு பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதருக்குத் திருமணக் கோலக் காட்சி கிடைத்தது.

📍 7. தப்பளாம்புலியூர் (திருவாரூர்): திருவாரூர் அருகே அமைந்துள்ளது. வியாக்ரபாத முனிவர் தனது புலிக்கால்கள் மாறி, மீண்டும் மனித உருவம் பெற்ற தலம் இது என்பார்கள். 'தப்பு' (பிழை) நீங்கிய இடம் என்பதால் தப்பளாம்புலியூர் எனப்படுகிறது.

📍 8. பெரும்புலியூர் (திருவையாறு): தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ளது. வியாக்ரபாதர் நீண்ட காலம் தங்கி பூஜித்த தலம். இங்குள்ள இறைவன் 'வியாக்ரபுரீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

📍 9. கானாட்டம்புலியூர்: காட்டுப் பகுதியில் அமைந்த தலம் என்பதால் 'கானாட்டம்புலியூர்' எனப்படுகிறது. பதஞ்சலி முனிவர் இங்கு தங்கி வழிபட்டதால், இத்தல இறைவன் 'பதஞ்சலிநாதேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

யாத்திரையின் நிறைவு:
ஒன்பது தலங்களையும் தரிசித்த முனிவர்கள், இறுதியில் ஸ்ரீரங்கம் சென்று அரங்கநாதரைத் தரிசித்தனர். ஹரியும் ஹரனும் ஒன்று என்பதை உலகிற்கு உணர்த்திய பிறகு, திருச்சி அருகே உள்ள திருப்பட்டூர் (பிரம்மபுரீஸ்வரர் கோயில்) சென்று அங்கு ஜீவ சமாதி அடைந்தனர்.

இந்த நவ புலியூர் தலங்களை ஒரே பயணமாகவோ அல்லது ஒவ்வொன்றாகவோ தரிசிப்பது மன அமைதியையும், மோட்சத்தையும் தரும் என்பது ஐதீகம்.

 

Tuesday, March 3, 2026

ராஜராஜன் கட்டிய பிரம்மதேசம் பாடலீஸ்வரர் கோயில்.

ராஜராஜன் கட்டியெழுப்பிய பிரம்மதேசம் பாடலீஸ்வரர் கோயில்... வரலாற்றுப் பொக்கிஷம்!
கருவறையில் இருக்கும் இறைவனை நாம் அர்த்தமண்டபத்தில் இருந்து தரிசனம் செய்வதுவே சிறந்தது அப்போதுதான் இறைவனின் தரிசனத்தையும் முழுமையாகப் பெறமுடியும் ஆனால் ஒரு கோயிலில் கருவறைக்கு அருகே நின்றாலும் தரிசனம் கொடுக்காத இறைவனின் பிரமாண்ட திருமேனி கோயிலுக்கு வெளியே இருக்கும் சுற்றுச் சுவரின் சிறு துவாரம் வழியே காணும்போது முழு தரிசனமும் கிடைக்கும் என்று சொன்னால் நம்பமுடிகிறதா  தமிழர் கட்டடக் கலையின் அற்புதக் கலைப்படைப்பாக உயர்ந்து நிற்கிறது விழுப்புரம் அருகேயுள்ள பிரம்மதேசம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்  திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் ‘பேரணியில்’ இருந்து 10 கிலோ மீட்டர் உட்புறமாக அமைந்துள்ளது ‘பிரம்மதேசம்’ எனும் கிராமம் இங்குதான் 1000 ஆண்டுத் தொன்மை வாய்ந்த சிவன் ஆலயங்கள் இரண்டு அமைந்துள்ளனஒன்று இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ள பாதாலீஸ்வரர் திருக்கோயில் மற்றொன்று  ஊரின் வடமேற்கு திசையில் ஏரிக்கரையின் ஓரமாக உள்ளது பிரமாண்டமான ‘பிரம்மபுரீஸ்வரர்’ ஆலயம் பாடலீஸ்வரர் ஆலயம்சோழ மன்னனான ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்ட இந்த ஆலய கல்வெட்டுகளில்  ‘பாதாலீஸ்வரர் ஆலயம்’ என்று குறிப்பிடப்படுகிறது ஆயிரம் ஆண்டுகள் பழைமையான  இந்த ஆலயத்தில் மகாமண்டபம்  காலப்போக்கில இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிட்டது ராஜராஜன்  ‘பிடாரிபட்டு’ என்னும் கிராமத்தில் உள்ள ‘சப்தமாதர்கள்’ (ஏழுகன்னியர்) ஆலயத்துக்கு தானம் கொடுத்ததற்கான கல்வெட்டுகளும் இந்த ஆலயத்தில் காணப்படுகின்றன ஆலயத்தின் கருவறை வாயிலில் உள்ள 6 அடி உயரம் கொண்ட  இரண்டு சிலைகள் பச்சை வண்ண கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன ஆலயத்தின் விமானம் வட்ட வடிவில் அமைந்துள்ளது கருவறையின் சுற்றுச்சுவர் முழுவதும் சிற்பங்களும் கல்வெட்டுகளும் நிறைந்து ஆலயத்தின் தொன்மையை விளக்குகின்றனஇந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தை மீண்டும் பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கி நடந்துவருகின்றன எனவே இங்கு வழிபாடுகள் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளனபிரம்மபுரீஸ்வரர் ஆலயம்சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் விரிந்து உயர்ந்த மதில்களோடு காணப்படும் இந்த ஆலயம் பாதாலீஸ்வரர் ஆலயத்தோடு ஒப்பிடுகையில் பிந்தைய காலத்தைச் சேர்ந்ததாகச் சொல்லப்படுகிறது ஆலயத்தினுள் நுழையும்போது தரைப்பரப்பில் இருந்து 6 அடி பள்ளத்தில் இறங்கித்தான் நாம் உள்ளே செல்ல வேண்டும் பெரிய மதில் சுவரினைக் கடந்து உள்ளே சென்றவுடன் சற்று இடதுபுறமாக வளைந்து சென்றால் மகாமண்டபத்தின் மிகப்பெரிய நுழைவு வாயில் காணப்படும்ஆலயத்தின் கருவறையைச் சுற்றியிருக்கும் மண்டபம் 100-க்கும் மேற்பட்ட தூண்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது வழக்கமாகத் தூண்களில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகள் இன்றி உருளை வடிவ கற்களால் இந்தத் தூண்கள் வடிக்கப்பட்டுள்ளன  இடதுபுறத்தில் உள்ள ஒரு பெரிய அறை அந்தக் காலத்தில் மாணவர்களுக்கு வேதக்கல்வி பயிற்றுவித்த இடமாக இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது வலப்புறம் காணப்படும் ஒரு முக மண்டபத்தில் சிலைகள் ஏதும் தற்போது இல்லை ஆலயத்தின் அம்மன் சந்நிதியாக  இருந்திருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்பெரியநாயகிமுக மண்டபத்தின் தெற்கு திசையின் அன்னை பிரஹன்நாயகி (பெரியநாயகி) நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் திருக்காட்சியருளுகிறாள்  மேல் வலது கரத்தில் அல்லி மலர் மேல் இடது கரத்தில் தாமரை கீழ் வலது கரத்தில் அபயஹஸ்தம் கீழ் இடது கரத்தில் வரத முத்திரை என அன்னை எழிலுறக் காட்சிகொடுக்கிறாள் அன்னை இந்தத் திருக்கோலத்தில் தரிசனம் தருவது இந்தத் தலத்தில் மட்டுமே சதுர வடிவ கருவறையில் பிரமாண்ட திருமேனியோடு கிழக்கு நோக்கி பாணலிங்கமாக பிரம்மபுரீஸ்வரர் எழுந்தருளியிருக்கிறார் கருவறை சுற்றுச்சுவரில் வடக்கில் சண்டிகேஸ்வரும் பிரம்மனும் தெற்கில் தட்சிணாமூர்த்தியும் மேற்கில் லிங்கோத்பவரும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு குறித்து ஆலயத்தின் சுப்பிரமணிய குருக்கள் பேசியபோது ``கருவறையிலிருக்கும் பிரமாண்ட வடிவிலான பிரம்மபுரீஸ்வரரை கருவறை மண்டபத்தில் இருந்து பார்த்தாலும் சிறு பகுதியேனும் மறைவுரும் ஆனால் இந்த ஆலயத்தில் கருவறை எதிர்ப்புற மதில்சுவரின் உள்ள சதுர வடிவ சிறு துளை வழியே பார்த்தால் பிரம்மபுரீஸ்வரர் முழு வடிவத்தோடு காட்சியளிப்பார் அவ்வாறு இந்த ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறி வியப்பில் ஆழ்த்தினார் இந்த ஆலயத்தில் பல்வேறு கல்வெட்டுகள் காணப்படுகின்றன இவற்றைக் குறித்து ஆய்வு மேற்கொண்ட முனைவர் ரமேஷிடம் பேசினோம்``இந்த ஆலயத்தில் இதுவரை 42-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டறிந்துள்ளோம் இந்தக் கல்வெட்டுகளில் மிகவும் தொன்மையான கல்வெட்டு குலோத்துங்க சோழனின் கல்வெட்டு இங்கு ஆய்வு மேற்கொண்டபோது கிடைத்த துர்கை சிலை பல்லவர்கள் காலத்தை சேர்ந்ததாக அறியப்படுகிறது  அப்படிப் பார்த்தால் இந்த ஆலயத்தின் தொன்மை 1000 ஆண்டுகளைவிடவும் அதிகமாக இருக்கலாம் விக்கிரமசோழன் இரண்டாம் ராஜராஜன் ராஜாதிராஜன் இரண்டாம் குலோத்துங்கன் மூன்றாம் குலோத்துங்கன் தம்புராயர்கள் விஜயநகர மன்னன் மற்றும் பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளும் இந்த ஆலயத்தில் உள்ளனசோழர்கால கல்வெட்டுகளில் சோழர்கள் காலத்தில் செய்யப்பட்ட தானங்கள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன இங்கு மடம் ஒன்று செயல்பட்டு துறவிகளுக்கு உணவு அளிக்கப்பட்டதற்கான சான்றுகள் காணப்படுகின்றன பாண்டியர் கால கல்வெட்டுகளில் மக்களுக்கும் வணிகர்களுக்கும் விதிக்கப்பட்ட கொசக்காணம் கல்யாணக்காணம் செக்குவரி அழுகல்சரக்குவரி அங்காடிபாட்டம் தட்டாரபாட்டம் குயவர் செலுத்துவரி போன்ற வரிகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளனவிஜயநகர மன்னன் ஆட்சியின்போது பெரும் மழை ஒன்று பொழிந்து இங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது கோயிலின் பலபகுதிகள் சிதிலமடைந்தது மீண்டும் அவை புனரமைக்கப்பட்ட விதத்தையும்  கல்வெட்டுகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன” என்று கூறினார் நிறைவேறும் வேண்டுதல்கள்பிரம்மபுரீஸ்வரரை வழிபடுவதன் மூலம் காசிக்குச் சென்று காசிவிஸ்வநாதரை வழிபட்ட பலனைப் பெறலாம் என்று சொல்லப்படுகிறது எந்த ஒரு போட்டிக்குச் செல்லும் நபரும் பிரம்மபுரீஸ்வரரை வழிபட்டுச் செல்ல காரியசித்தி ஏற்பட்டு வெற்றியோடு திரும்பலாம் திருமணத்தடை உள்ளவர்கள் மகப்பேறு வேண்டுவோர் ஆகியோர் பிரதோஷ நாள்களில் இங்கு வந்து இறைவனை வழிபடக் குறைகள் நீங்கும் என்பது ஐதீகம் பிரமாண்டமான இந்த ஆலயத்துக்கு ஒரு முறை வந்து மனமுருகி வேண்டிக்கொள்ள மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் விலகி அமைதியும் நல்ல எண்ணங்களும் பெருகும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Monday, March 2, 2026

ராஜராஜ சோழனுக்கு தஞ்சை பெரிய கோவில் கட்ட இடம் காட்டிய வராகி அம்மன்.

ராஜராஜ சோழனுக்கு தஞ்சை பெரிய கோவில் கட்ட இடம் காட்டிய வராகி அம்மன்* 
சப்தகன்னியரில் ஒருவரான வராகி அம்மன், திருமாலின் வராக அம்சமாக கருதப்படுகிறார். இவர் வராகமெனும் பன்றி முகத்தையும், எட்டு கரங்களையும் உடையவர்.

மாமன்னர் ராஜராஜ சோழனின் குலதெய்வம் வராகி அம்மன். தஞ்சை பெரிய கோவின் தெற்கு பிரகாரத்தில் வராகி அம்மனுக்கு தனிக் கோவில் இருக்கிறது. வராகி அம்மன்,வலது கையில் உலக்கையுடனும், இடது கையில் கலப்பையுடனும் காட்சி தருகிறார்.

ராஜராஜ சோழன் போருக்கு செல்லும் முன்பு வராகி அம்மனை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் இந்த அன்னையின் அருள் பெற்றுதான் எந்த செயலையும் தொடங்குவார். ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு பல இடங்களை தேர்வு செய்தார். ஆயினும் இறைவனிடமிருந்து உத்தரவு கிடைக்க தாமதமானது. 

அப்போது ஒரு நாள் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு இடத்தில் மன்னருக்கு முன்பு ஒரு பன்றி எதிர்த்து நின்றது. அதனை துரத்திச் சென்றபோது போக்கு காட்டி பல இடங்களுக்கு சென்று ஒரு பெரிய திடலில் சுற்றி சுற்றி வந்து படுத்துக்கொண்டது . இது ராஜராஜ சோழனுக்கு வியப்பை அளித்தது.

வராகமாக இருப்பதனால் அதனை கொல்லாமல் துரத்தினார். ஆனால் அது எழுந்து நின்று தன் காலால் தரையை உதைத்து பூமியை தோண்டியது. 

அரண்மனை திரும்பிய ராஜராஜ சோழன் ஜோதிடரை அழைத்து விவரம் கேட்டார். கோவில் கட்ட அந்த இடத்தினை வராகி தேவி தேர்ந்தெடுத்து கொடுத்து இருப்பதை தெரிவித்தார் ஜோதிடர் .அந்த இடத்தில் பெரிய கோவில் கட்டும் முன்பு வெற்றி தேவதை வராகிக்கு சிறிய தனித்த ஒரு சன்னதியை அக்னி மூலைக்கு அருகில் அமைத்து வழிபட்டு பின்னர் பணியை தொடங்கினார். அந்த வராஹி தேவியின் அருளால் உலகம் போற்றும் ஆலயமாக பெரிய கோவில் மாறி நிற்கிறது. 

ராஜ ராஜ சோழன் கடைபிடித்த முறையிலேயே தற்போதும் எந்த ஒரு நிகழ்ச்சியை தொடங்குவதானாலும் முதலில் வராகி அம்மனுக்கு பூஜை செய்த பின்னரே தொடங்கும் வழக்கம் பெரிய கோவிலில் உள்ளது.
பிரார்த்தனை பஞ்சமி திதியில் வராகி அம்மனை வழிபட்டால் வறுமை, பிணி, பில்லி, செய்வினைகள் அகலும். எதிரிகள் விலகுவர் என்பது ஐதீகம். 

வழக்குகளிலிருந்து விடுபட வராகியின் அருள் கட்டாயம் தேவை. வராகி உபாசனை செய்பவருடன் வாதாடாதே என வழக்கு மொழியே உள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Sunday, March 1, 2026

மார்பில் மரு… காலில் தழும்பு… விரல்களில் நகங்கள்…உயிரோட்டமாக அதிசய நடராஜர்

மார்பில் மரு… காலில் தழும்பு… விரல்களில் நகங்கள்…
உயிரோட்டமாக நின்று அருளும் அதிசய நடராஜர் – எங்கே?
தமிழகத்தில் எண்ணற்ற சிவாலயங்கள் இருந்தாலும்,
“இங்கே நடராஜர் உயிரோடு நின்றிருக்கிறார்”
என்று பக்தர்கள் சிலிர்ப்புடன் கூறும் ஒரு திருத்தலம் உண்டு.

அது –
கோனேரிராஜபுரம்
கும்பகோணம் அருகே அமைந்துள்ள இந்த ஊர்,
திருநல்லம் என்ற பழம்பெயராலும் அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் அருள்பாலிக்கும்
உமா மகேஸ்வரர் திருக்கோயில்
தமிழகத்தின் மிக முக்கியமான சிவத்தலங்களில் ஒன்று.
இங்கே காணப்படும் நடராஜர் –
சாதாரண விக்கிரகம் அல்ல…
சுயம்பு நடராஜர்!

 பூமாதேவி பூஜித்த தலம் – திருநல்லம்

புராண காலத்தில்,
இரண்யாக்ஷன்
என்ற அசுரன்,
பூமாதேவியை பாதாள உலகிற்கு தூக்கிச் சென்றபோது,

வராக அவதாரம்
எடுத்து மகாவிஷ்ணு,
பூமாதேவியை மீட்டு உலகிற்கு கொண்டு வந்தார்.

அப்போது,

“இனி எந்த அசுரத்தாலும் உனக்கு ஆபத்து வராமல் இருக்க,
சிவபெருமானைத் தொடர்ந்து பூஜை செய்”

என்று பூமாதேவிக்கு உபதேசித்தார் மகாவிஷ்ணு.

🌿 காவிரிக் கரையில் கண்டெடுக்கப்பட்ட தெய்வ பூமி

சிவனை வழிபட ஏற்ற இடத்தைத் தேடி வந்த பூமாதேவி,
காவிரி நதி
கரையில்,
திருவீழிமிழலை
வடமேற்கே ஒரு புனிதமான இடத்தை கண்டடைந்தார்.

அங்கே:

பெரிய அரசமரம்

பிரம்மாவால் தோற்றுவிக்கப்பட்ட பிரம்ம தீர்த்தம்

இருந்தன.

இது சிவ வழிபாட்டிற்கு உகந்த தலம் என்று உணர்ந்த பூமாதேவி,
தேவ சிற்பியான
விஸ்வகர்மா
அவர்களிடம் ஆலயம் அமைக்கச் சொன்னார்.

அந்த ஆலயத்தில்,
தேவகுரு
பிரகஸ்பதி
மேற்கு நோக்கி
உமா–மகேஸ்வரரை பிரதிஷ்டை செய்தார்.

பூமாதேவி தொடர்ந்து பூஜை செய்து அருள் பெற்றார்.
உலக உயிர்கள் பயன்பெற,
அவள் உருவாக்கியதே –
பூமி தீர்த்தம்.

🔱 சுயம்பு நடராஜர் – வேறு எங்கும் இல்லாத அதிசயம்

இனி,
இந்தத் தலத்தின் உச்ச அதிசயமான
நடராஜர் பெருமானின் வரலாறு.

இங்கே காணப்படும் நடராஜர்:

மிகவும் உயரமான வடிவம்

சுயம்புவாக தோன்றியவர்

விக்கிரகத்தில் மனித உடல் இலக்கணங்கள்

👉 மார்பில் மரு
👉 மருவில் ரோமம்
👉 விரல்களில் நகங்கள்
👉 காலில் வெட்டுத் தழும்பு

இவை அனைத்தும் இன்றும் தெளிவாக காணப்படுகின்றன.

👑 சோழ மன்னனின் கனவு

ஒரு சோழ மன்னனின் கனவில்
ஈசன் தோன்றி,

“கோனேரிராஜபுரம் ஆலயத்தில்
எனக்கொரு நடராஜர் விக்கிரகம் அமைக்க வேண்டும்”

என்று கட்டளையிட்டார்.

மன்னன் உடனே சிறந்த சிற்பியை அழைத்து,

“மூன்று மாதங்களில்
பஞ்சலோகத்தால்
அற்புதமான நடராஜர் விக்கிரகம் செய்ய வேண்டும்”

என்று உத்தரவிட்டார்.

🔥 சிற்பியின் சோதனை

மிகுந்த சிவபக்தியுள்ள அந்தச் சிற்பி,
ஈசனைத் தியானித்து பணியில் இறங்கினார்.

ஆனால்,
ஒவ்வொரு முறையும் பஞ்சலோக கலவையை உருக்கி வார்க்கும்போது,
ஏதோ ஒரு குறை!

நாட்கள் சென்றன…
விக்கிரகம் முழுமை பெறவில்லை.

அரசர் வந்து பார்த்து,

“இன்னும் இரண்டு நாட்களில் விக்கிரகம் தயாராகவில்லை என்றால்
உன் தலை உருளும்!”

என்று கோபத்துடன் சென்றார்.

🕯️ முதிய சிவனடியாரின் வருகை

மனமுடைந்த சிற்பி,
ஈசனிடம் கதறி அழுது,
மீண்டும் உலையில் கலவையை காய்ச்சி கொண்டிருந்தபோது,

வாசலில் ஒரு முதிய சிவனடியார்:

“ஐயா… மிகவும் தாகமாக இருக்கிறது.
சுடுநீர் கிடைக்குமா?”

என்று கேட்டார்.

மன வேதனையில் இருந்த சிற்பி,
எரிச்சலுடன்:

“உள்ளே உலையில் சுடுநீர் கொதிக்கிறது.
வேண்டுமானால் அதையே குடியுங்கள்”

என்று சொல்லிவிட்டார்.

✨ அந்த நொடியில் நிகழ்ந்த அதிசயம்

முதிய சிவனடியார்,
உலையில் கொதித்துக் கொண்டிருந்த
பஞ்சலோக கலவையை
அப்படியே குடித்தார்!

⚡ அடுத்த நொடியில்…
அங்கேயே
நடராஜர் விக்கிரகமாக உறைந்து நின்றார்!

😱 உண்மையை உணர்ந்த சிற்பி

உள்ளே சென்று பார்த்த சிற்பி,
ஸ்தம்பித்துப் போனார்.

விக்கிரகத்தின்:

மார்பில் இருந்த மரு

அதில் ரோமம்

கைகளில் நகங்கள்

அனைத்தும்
முதிய சிவனடியாரின் உடலில் அவர் பார்த்த அதே அடையாளங்கள்!

“சிவனடியாராக வந்து
என் மனக்குறையை தீர்த்தது
ஆடல்வல்லானே!”

என்று உணர்ந்து
கண்ணீர் மல்க சரணடைந்தார்.

⚔️ அரசரின் அவசரம் – தெய்வ தண்டனை

அரசர் வந்து விக்கிரகத்தை பார்த்தார்.
உயிரோட்டமான சிற்பத்தைக் கண்டு வியந்தார்.

சிற்பி நடந்ததை சொன்னபோது,
அரசர் நம்பவில்லை.

கோபத்தில் வாளை உருவி,
சிற்பியை வெட்ட முயன்றார்.

⚡ ஆனால் வாள் பட்டது –
நடராஜர் சிலையின் வலது பாதத்தில்!

அந்த இடத்தில் இருந்து
ரத்தம் பீறிட்டது!

அந்தக் கணமே
அரசருக்கு தொழுநோய் பிடித்தது.

🩺 வைத்தியநாத சுவாமியின் அருள்

அரசர் தன் தவறை உணர்ந்து சரணடைந்தார்.
அப்போது ஈசன் அருளினார்:

“இந்த ஆலயத்தில் அருளும்
வைத்தியநாத சுவாமி
அவருக்கு 48 நாட்கள் பூஜை செய்”

அரசர் அவ்வாறே செய்து
முழுமையாக குணமடைந்தார்.

இன்றும்,
இத்தல வைத்தியநாத சுவாமி
தீர்க்க இயலாத நோய்களையும் தீர்க்கிறார்
என்று பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

🔥 இன்றும் காணலாம் அந்த சாட்சி

மிகப் பெரிய சுயம்பு நடராஜராக
இத்தலத்தில் அருளும் ஈசனின்
வலது பாதத்தில்,
மன்னனின் வாளால் ஏற்பட்ட
வெட்டுத் தழும்பு
இன்றும் தெளிவாகக் காணப்படுகிறது. 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

கும்பகோணம் நாகேஸ்வரர், நாகநாதர்.

குடந்தைக் கீழ்க்கோட்டம்  (நாகேசுவரசுவாமி திருக்கோயில்)இறைவர் திருப்பெயர்:   நாகேஸ்வரர், நாகநாதர்.  இறைவியார் திருப்பெயர்: பிருக...