திருப்போரூர் முருகன் கோவில் கோபுர தரிசனம்
தேவையற்ற பயம் நெஞ்சை ஆட்கொண்டிருக்கிறதா? இதோ! இந்தப் பாடலைப் படியுங்கள்.
குமரா நம என்று கூறினார் ஓர்கால்
அமராவதி ஆள்வர் அன்றி -யமராஜன்
கைபுகுதார் போரூரன் கால்புகுவார் தாய் உதரப்
பைபுகுதார் சேரார் பயம்.
பொருள்: "குமராயநம' என்னும் ஆறெழுத்து மந்திரத்தை, ஒருமுறை பக்தியுடன் ஓதுபவர்கள், தேவர்கள் வாழும் அமராவதி நகரத்தில்
வாழும் பேறு பெறுவர். உயிர்களைப் பறிக்கும் எமனின் கையில் அகப்பட்டு அடையும் துன்பம் வராது. இவர்கள் போரூரில் அருள்செய்யும் முருகப் பெருமானின் திருவடியில் தங்கிஇருப்பர். இனி எந்த தாயின் வயிற்றிலும் பிறவி எடுக்க மாட்டார்கள். அவர்களை பயம் அணுகவே அணுகாது.
சென்னை அருகிலுள்ள போரூர் முருகன் குறித்த பாடல் இது
🦚🦚🦚
No comments:
Post a Comment