🌺 *தீராத நோய் தீர்க்கும் திருக்கோயில்கள்*
1. திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில், மருந்து லிங்கம் , சென்னை ✡️ 2. திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் . மருந்து லிங்கம். பிறவி நோய் உட்பட எல்லா நோயும் தீர்க்கும் பெரிய அருமருந்தாக ஈசன் விளங்குகிறார்.
3. விருத்தாச்சலம் விருத்த கிரீசுவரர் கோயில். விருத்த கிரி லிங்கம். ஆலகால விஷத்தால் முதியவள் ஆன உமை விருத்த கிரீசரைப் பூஜித்து முதுமை நீங்கி இளமை பெற்றாள். * 4. திருநீலக்குடி நீலகண்டர் திருக்கோயில். நீல கண்ட லிங்கம். பரமேசுவரனைப் பூசித்த அம்பிகை உடலில் பாய்ந்த ஆல கால விடத்தின் நீல நிறம் நீங்கப் பெற்றாள். ⚜ 5. வைதீசுவரன் கோயில். வைதிய லிங்கம். எல்லா வைதியர்களுக்கும் மேலான ஒரே பெரிய வைதியர் மருத்துவர் வைதீசுவரர். ருக் வேத மந்திரத்தால் வெண்மணல் சிவ லிங்கமான மண் தலம்.
💫 6. திருக்கோகரணம் மிருதேசுவரர் (மகா பல நாதர்) கோயில் . கோகர்ண லிங்கம். கர்நாடகத்தில் மங்களூருக்கு அருகே மிருதேசுவரம் தொடர் வண்டி நிலையத்திற்குப் பக்கம் உள்ளது. இராமனது பழி போக்கிய இராம லிங்கத்தை வழிபடுவதற்கு வட கயிலையிலிருந்து வந்த உமையவள் வழியில் கொல்லும் விஷ நோயால் தாக்கப்பட்டாள். திருக் கோகரணத்தில் அரன் நாமம் ஓதித் தீர்த்தத்தில் முழுகி எழுந்து கோகரண நாதரை வழிபட்டு ஈசனருளால் நோய் நீங்கினாள்.
🌳 *நல்ல மட மாதர் அரன் நாமமும் நவிற்றிய திருத்தம் முழுகக் கொல்ல விட நோய் அகல் தரப் புகல் கொடுத்து அருளு கோகரணமே* (சம்பந்தர்) என கோகரணரை வழிபட்ட பார்வதி விஷ நோய் நீங்கி நலம் அடைந்தாள். 🍁 7. மதுரை சுந்தரேசர் கோயில். சுயம்புச் சொக்க லிங்கம்.
🔴 *அருந்தமிழ் பழித்தனன் அடியேன்* 🌕 *வேண்டாது இகந்தேன் பிழைத்தேன்* ✡️ *மெய் எரிவு தீரப் பணித்து அருளு தேவாதி தேவனே* (நக்கீரர்) என அருமையான பாடலில் *அநாவசியமாகக் குற்றம் கண்டு விதண்டா வாதம் செய்த பாவத்தினால் நக்கீரருக்கு வெப்பு நோய்* உண்டானது. சுந்தரேசர் நாமம் ஓதிப் பொற்றாமரைக் குளத்தில் இறங்கிப் பதிகங்கள் பாடிய போது நோய் நீங்கி நலம் அடைந்தார்.
🙏 *பரா வணம் ஆவது நீறு*
🔔 *ஏல உடம்பு இடர் தீக்கும் இன்பம் தருவது நீறு* ஆலம் அது உண்ட மிடற்று எம் *ஆலவாயான் திருநீறே*
🌸 *தென்னன் உடல் உற்ற தீப் பிணியாயின தீரச் சாற்றிய பாடல்*
என கூன் பாண்டியனது வெப்பு நோயையும் பிறவிக் கூனையும் ஆலவாயான் ( சொக்க லிங்கம், வெள்ளியம்பல வாணர்) திருவருளால் *பரா பரனது நிறமான வெள்ளை வண்ண விபூதி மகிமையால்* திருஞான சம்பந்தர் தீர்த்து வைத்தார்.
🌷 8. திருவதிகை (பண்ணுருட்டி அருகே) திருவதிகை புரம் எரித்த வீரட்டானேஸ்வரர் கோயில். வீரட்டான லிங்கம்.
⚜ *சாவாமே காத்து என்னை ஆண்டாய்* (அப்பர்) என வீரட்டேசுவரர் திருநாவுக்கரசரின் தீராத சூலை நோயைத் தீர்த்து அருளினார்.
⭐ 9. திருவாசி (திருப் பாச்சிலாச்சிராமம், திருச்சி அருகே) மணிகண்டர் கோயில். மணிகண்ட லிங்கம்.
கொல்லி மழவன் மகளுக்கு உண்டான முயலகன் என்ற முடக்கு வாத நோயை நஞ்சினை அமுதம் ஆக்கிய மணிகண்டர் திருவருளால் திருஞான சம்பந்தர் தீர்த்து அருளி எழுந்து நடமாட வைத்தார். 🔯 10. குத்தாலம் (திருத்துருத்தி ) உத்தர வேதீஸ்வரர் (சொன்னவாறு) அறிவார்) கோயில் . உத்தர வேத லிங்கம். கும்ப கோணம் --- மயிலாடுதுறை பாதையில். சுந்தரருக்கு உண்டான உடல் நோய் இக்கோயில் திருக்குளத்தில் ஈசன் நாமம் ஓதி முழுகிய போது நீங்கி மீண்டும் மேனியழகு பெற்றார். ⚜️ 11. திருந்து தேவன் குடி கற்கடகேஸ்வரர் கோயில் . கும்ப கோணம் அருகே. *சுயம்பு லிங்கம் அருமருந்தாக உள்ளது*. 🔯 *திரு மருவும் பொய்கை* சூழ்ந்த தேவன் குடி *அருமருந்து ஆவன அடிகள் வேடங்களே* (சம்பந்தர்) என தெய்வீகத் தீர்த்தம் உடைய நோய் தீர்க்கும் *அரிய மருந்தாக உள்ள சிவ வடிவங்களை* தெய்வ மழலையார் துதிக்கிறார். நண்டான பராசக்தி சிவ பூஜை செய்து அரு மருந்தீஸ்வரர் அருளால் மீண்டும் அம்மன் ஆன கோயில். இவ்வாறு நோய் தீர்க்கும் தலங்கள் இன்னும் பலப்பல. *காய்ச்சல் போக்கும் மூன்று முகம், மூன்று கரம், மூன்று கால் கொண்ட சிவபெருமானுக்கு ஜுர ஹரேஸ்வரர்* என்று அருள் நாமம். வைதீஸ்வரன் கோயில், திருவாரூர் தியாக ராஜர் கோயில், முக்கூடல் பவானி சங்கமேஸ்வரர் கோயில் மற்றும் பல கோயில்களில் ஜுர ஹரேஸ்வரருக்குத் தனிச் சந்நிதி உள்ளது. *ஈசனுக்கு அணிவிக்கப்பட்ட அபிஷேகம் செய்யப்பட்ட விபூதியே எல்லா நோயையும் தடுக்கும் கவசமாக உள்ளது. முதல் மருந்தாக* உள்ளது. 🌷 *ஆன நீற்றுக் கவசம்* அடையப் புகுமின்கள் என்பது திருவாசகம். 🏵 *கங்காளன் பூசும் கவசத் திருநீறு* என்பது திருமந்திரம் 🔴 *அருத்தம் ஆவது அவலம் அறுப்பது நீறு* *வருத்தம் தணிப்பது நீறு* வானம் அளிப்பது நீறு பொருத்தம் ஆவது நீறு *புண்ணியர் பூசும் வெண்ணீறு* திருத்தகு மாளிகை சூழ்ந்த *திரு ஆலவாயான் திருநீறே* (சம்பந்தர்) . 🔥 *மூல நோயான ஆணவ மலம் கர்ம மலம் ஆகிய எல்லா நோயும் தீர்த்துப் பிறவாப் பேரின்பம் அருள்பவர்* பரமேஸ்வரன் . ⚜️ *மூல நோய் தீர்க்கும் முதல்வன்* என்பது திருநாவுக்கரசர் தேவாரம்.
Tuesday, June 15, 2021
நோய் நீங்க வணங்க வேண்டிய தெய்வங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Followers
திருமுறைகள் கிடைக்க காரணமான ராஜ ராஜ சோழன்...
சைவ திருமுறைகளை தொகுத்து வழங்கிய ராஜ ராஜசோழன்.. ராஜ ராஜ சோழன் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவர் செய்த எண்ணற்ற பராக்கிரம காரிய...
-
கடலூர் மாவட்டம் ஆற்று திருவிழா அன்று விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த காய்கறிகள், சிறுகிழங்கு, கரும்பு உள்ளிட்ட பொருட்க...
-
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம்,திருக்கண்டேஸ்வரம் சிவன்கோயில் Thirukandeswaram sivan temple கடலூர்-பண்ருட்டி சாலையில் பத்தாவத...
-
பிறப்பு முதல் இறப்பு வரை மர்மம் நிறைந்த முக்கோண சிவாலயங்கள் (3 sivan temples secrets) எங்கே இருக்கு தெரியுமா ? உலகுக்கெல்லாம் ஒப...
No comments:
Post a Comment