Sunday, September 18, 2022

_பசுவிற்கு அகத்திக்கீரை வாழைப்பழம் கொடுப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்

_பசுவிற்கு அகத்திக்கீரை வாழைப்பழம்  கொடுப்பதால் பல தோஷங்கள் அகலும்

பசுவை ஆராதனை செய்து வழிபடுவோருக்கு அனைத்து தெய்வங்களை வழிபட்ட பலன் கிடைக்கும் .

ஒருவர் எதை கேட்டாலும் அதை தரும் வல்லமை காமதேனு என்ற இந்திரலோக பசுவிற்கு உள்ளது. பசுக்களை நாம் பூஜை செய்து வழிபடுவதன் மூலம் அற்புத  பலன்களை பெற முடியும்.

கோ பூஜை 

ஒரு நல்ல நாளில் பசுவை குளிக்க வைத்து . பிள்ளையாரை வேண்டிய பின்பு பசுவின் மீது பன்னீர் தெளித்து, நெற்றியிலும் பின் புறத்திலும் தூய்மையான மஞ்சள் குங்குமம் இட்டு  பசுவின் முன்பும் பின்பும் சாம்பிராணி மற்றும் தூப தீபம் காட்ட வேண்டும். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பதை நினைவில் கொண்டு பசுவின் பின்புறத்திற்கு உரிய மரியாதை அளிக்கவேண்டும். அதன் பிறகு பசுவை மூன்று முறை வலம் வந்து பசுவிற்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் போன்றவற்றை கொடுங்கள். 

நமது வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றும்படி கோமாதாவிடம் வேண்டிக்கொண்டு இறுதியாக பசுவிற்கு ஆரத்தி எடுத்துவிட்டு பசுவின் உரிமையாளருக்கு உங்களால் முடிந்த தட்சணையை கொடுங்கள். அன்றைய தினத்தில் பசுவின் கோமியத்தை வீடு முழுவதும் தெளியுங்கள்.
இந்த பூஜையை ஒருவரோ அல்லது பலரோ சேர்ந்து செய்யலாம். இந்த பூஜை செய்கையில் பசு தன் கன்றோடு இருந்தால் மேலும் சிறப்பு. இந்த பூஜையை   11 வாரங்களோ மாதங்களோ தொடர்ந்து செய்வது சிறப்பு.

இந்த பூஜையை செய்வதன் மூலம் வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரும், கடன் தொல்லை நீங்கி லட்சுமி கடாக்ஷம் பெருகும், துர் சக்திகள் இருந்தால் வீட்டை விட்டு நீங்கும், தோஷங்கள் மற்றும் சாபங்கள் நீங்கும். அனைத்து நல்ல காரியங்களும் கை கூடி வரும். கோமாதாவின் அருள் கிடைக்கும்

No comments:

Post a Comment

Followers

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் திருஆலவாய் மதுரை

*இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் - திருஆலவாய்( மதுரை)* *மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்).* பொதுவாக சிவ...