Monday, October 31, 2022

இழந்த பதவி தரும் ஊட்டத்தூர் சிவன்

நமச்சிவாய வாழ்க

இழந்த பதவி தரும் ஊட்டத்தூர் சிவன்
வரலாறு :
***********
பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்ட இவ்வூர் தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது.

 ராஜராஜ சோழ மன்னர் ஊட்டத்தூரின் மேற்கு பகுதியில் சோலேச்சுவரர் என்ற மேட்டுக்கோவில் ஒன்றை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த அப்பகுதிக்கு ராஜராஜ சோழ மன்னரின் வருகை அவ்வப்போது நிகழ்வது உண்டு.

காயத்துடன் சிவலிங்கம் :
*******************************

ஒருமுறை அவரது வருகையையட்டி மன்னர் செல்லும் வழியில் இடையூறுகளை நீக்க வேண்டி புல் செதுக்கும் பணி நடைபெற்றது. அந்த தருணத்தில் ஓரிடத்தில் எதிர்பாராது ரத்தம் பீறிட்டெழுந்தது. உடனே பணியாட்கள் மன்னரிடம் செய்தியை தெரிவித்தனர். மன்னர் வந்து பார்த்தபோது ரத்தம் பீறிடுவது நின்று தடைபட்ட தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம் காட்சியளித்தது.

அந்த சிவலிங்கம் காணப்பட்ட இடத்திலேயே கோவில் கட்ட நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜராஜ சோழனால் குறிப்பிட்ட இடத்தில் எழுப்பப்பட்டதே ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ஆகும். இன்றும் லிங்கத்தின் தலைப்பகுதியில் பார்த்தால் மண்வெட்டி பட்ட காயம் தெரியும். 

கோவில் மூலஸ்தானத்தில் தீபாராதனை நடை பெறும்போது கற்பூர ஜோதி லிங்கத்தில் பிரதிபலிக்கும். இக்காட்சி மூலவர் ஜோதி வடிவானவர் என்றும், சுத்தரத்தினேஸ்வரர் தூயமாமணி என்றும், மாசிலாமணி என்றும் அழைக்கப்படுகிறார்.

அப்பர் பெருமான் தனது ஆன்மிக சுற்றுப்பயணத்தின் போது ஊட்டத்தூருக்கு செல்ல நினைத்து 5 கிலோ மீட்டர் எல்லையிலேயே திகைத்து மகிழ்ந்து நின்று விட்டார். காரணம், அந்த எல்லையில் இருந்து பார்த்தபோது வழியெல்லாம் சிவலிங்கங்கள் இருப்பதாக உணர்ந்தார்.

 சிவலிங்கத்தின் மீது அவரது பாதங்கள் படுவது சிவ குற்றம் என எண்ணி, எல்லையில் நின்றபடியே ஊட்டத்தூர் பெருமானை நினைத்து பதிகம் பாடியருளினார். இவ்வாறு எல்லையில் இவர் பாடியதால் அந்த இடம் பாடாலூர் என அழைக்கப்பட்டது.

இந்திரன் மீண்டும் பதவி பெற்ற திருத்தலம் :
*****************************************

ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவில் இது. சிறுநீரகம் சம்மந்தமான கோளாறுகளை நீக்கக்கூடியவர். இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது.

அந்தக நரிமணம் என்கிற வேர் பல கோடி கற்களில் ஒன்றை பிளக்கும். அப்படி பிளக்கக்கூடிய கற்கள்தான் பஞ்சநதன பாறை. ஆதலால் இவர் பஞ்சநதன நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு என்ன சக்தி என்றால், சூரியன் காலையில் புறப்படும்போது வெளிப்படுத்தும் கதிர்களை ஈர்க்கக்கூடிய சக்தி இங்கு உள்ள நடராஜருக்கு உண்டு.

ஆதலால் நாம் இவரை என்ன நினைத்து வணங்குகின்றோமோ அது அப்படியே நடக்கிறது. பிரம்மாவுக்கு இந்த ஊரில்தான் சாப விமோசனம் கிடைத்தது. ஆதலால் சிவன் எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. வேறு எந்த கோவிலிலும் சிவன் எதிரில் தீர்த்தம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கோவில் அமைப்பு :
**********************

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களிலும் சூரிய ஒளி கர்ப்பகிரகத்தில் உள்ள லிங்கத்தின் மேல் படுகிறது. இதேபோல் வைகாசி மாதம் விசாக திருவிழாவின்போதும் சூரியனின் கதிர்கள் சுத்தரத்தினேஸ்வரர் மீது 3 நிமிடங்கள் பட்டு வழிபடுகிறது.

மேற்கூரையில் நவக்கிரகங்கள்:
**************************************

ஊட்டத்தூர் சுத்தரெத்தினேஸ்வரர் கோவிலில் உள்ள இன்னொரு சிறப்பு அம்சமும் உள்ளது. அது கோவில் கொடி மரம் அருகே மேற்கூரையில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் செதுக்கப்பட்டு அவை பூமியை நோக்கி பார்க்கும்படி உள்ளது. அதன் அருகிலேயே 9 கிரகங்களும் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

பொதுவாக கோவில்களில் நவக்கிரகங்கள் மற்றும் ராசிகளின் அதிபதிகள் தனித்தனி சன்னதியாக தான் இருக்கும். ஆனால் ஊட்டத்தூர் கோவிலில் இவை அனைத்தும் பூமியை நோக்கி இருப்பதால் அதன் அடியில் வைத்து செய்யப்படும் யாக பூஜைகள் அனைத்திற்கும் உடனடி பலன் கிடைக்கும். எந்த ராசியை சேர்ந்தவர்களும் இதன் மூலம் முழு பயன் அடைய முடியும்.

இக்கோவிலில் சுத்தரத்தினேஸ்வரர், அகிலாண்டேசுவரி, பரிவாரங்கள், விநாயகர், சூரியன், தட்சிணாமூர்த்தி, ஐந்து நந்திகேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியர், 63 நாயன்மார்கள், கோடி விநாயகர், இரட்டை லிங்கம், அதிகார நந்தி, கஜலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, கோரப்பல்லுடன் கூடிய துர்க்கை, விஷ்ணு, சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, வீரபத்திரர், பைரவர், நவக்கிரகங்கள் மற்றும் மிக அழகான தோற்றம் உள்ள பல தெய்வங்களின் சிலைகளும் மிக சிறப்பாக அமைந்துள்ளது.

கிழக்கு நோக்கி நந்தி :
*****************************

மற்ற சிவ தலங்களில் இல்லாத விசேஷமாக இங்கு நந்திதேவர் கிழக்கு முகமாக படுத்து உள்ளார். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி, சிந்து, துங்கப்பத்திரா ஆகிய நதிகளில் யார் பெரியவர்? என்ற தகராறு ஏற்பட்டு இங்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டனர்.அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும்படி சிவ பெருமான் நந்திதேவருக்கு கட்டளையிட்டார்.

அதன்படி நந்திதேவர் 7 நதிகளையும் விழுங்கி விட்டு கிழக்கு நோக்கி படுத்து இருந்ததாகவும் அப்போது கங்கை மட்டும் வெளியே வந்ததாகவும், கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. இதனால் கோவில் அருகே ஓடும் சிறிய ஆறு நந்தியாறு என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் வடக்கு பகுதியில் இந்த நந்தியாறு கடலுடன் கலக்கிறது.
இங்கு உள்ள தட்சிணாமூர்த்தி சக்திமிக்க தெய்வங்களில் ஒன்று.

அபூர்வ நடராஜர் :
இந்த கோவிலில் உள்ள துர்க்கை கோரைப்பற்கள் வெளியில் தெரியுமாறு காட்சி அளிக்கிறார். இந்த துர்க்கைக்கும், விஷ்ணு துர்க்கைக்கும் 11 வாரங்கள் எலுமிச்சம்பழ மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி, வடைமாலை சார்த்தி, சர்க்கரைப்பொங்கல் அல்லது பாயாசம் வைத்து வழிபட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இந்த சிவாலயத்தில் ஒரு தடவை பிரதோஷ வழிபாடு செய்பவர்களுக்கு ஒரு கோடி புண்ணியம் கிடைப்பதாக அகஸ்தியர் பெருமான் தெரிவித்துள்ளார்.

அகிலாண்டேஸ்வரி காலபைரவர் சுரங்கப்பாதை:
********************************************

ஊட்டத்தூர் சிவன் கோவில் அருகிலேயே பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. இந்த கோவிலுக்கு பிரம்ம தீர்த்தத்தில் இருந்து தண்ணீர் எடுத்து சென்று பூஜைகள் செய்யப்பட்டதாகவும் கோவில் வரலாறுகள் கூறுகின்றன. இதற்காக சிவன் கோவிலில் இருந்து பெருமாள் கோவில் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு இருந்ததாகவும், தற்போது அந்த சுரங்கப்பாதை மூடப்பட்ட நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நோய் தீர்க்கும் தீர்த்தம் :
*****************************

உலகின் உள்ள அனைத்து தீர்த்தங்களையும் பிரம்மா ஊட்டத்தூருக்கு கொண்டு வந்து பிரம்ம தீர்த்தத்தில் சேர்த்து உள்ளார். இதனால் இந்த பிரம்ம தீர்த்த நீரை எடுத்துச்சென்று நோயுற்றவர்களின் உடலில் தெளித்தால் அவர்கள் குணமடைவதாக கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன.

இதற்கு சான்றாக ராஜராஜசோழன் உடல்நலம் இல்லாமல் இருந்தபோது ஊட்டத்தூர் வந்து பிரம்ம தீர்த்தத்தை உடலில் தெளித்து இறைவனை வழிபட்டு அடைந்து தனது ஆயுட்காலம் வரை நோய் நொடியின்றி வாழ்ந்ததை சான்றாக தெரிவிக்கின்றனர்.

தற்போதும் கோவில் மூலஸ்தானத்தில் இறைவனை வழிபட நிற்கும்போது தீபாராதனைக்கு முன்பாக, பக்தர்களின் கையில் பிரம்ம தீர்த்த நீரை ஊற்றி கையை கழுவிய பின்னரே கோவில் குருக்கள் வழிபாடு நடத்தும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

சக்தி வாய்ந்த காலபைரவர் :
**********************************

இந்த கோவிலில் உள்ள காலபைரவர் சக்திவாய்ந்த தெய்வங்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். கால பைரவருக்கு 11 வாரங்கள் தொடர்ந்து சகஸ்ரநாம வழிபாடு செய்தால் சிறு குழந்தைகளின் மன பயம் நீங்குவதாகவும், மாடுகளுக்கு வியாதிகள் தீர்வதாகவும் ஐதீகமாக நம்பப்படுகிறது.

சந்தன காப்பு அலங்காரம் :
*******************************

மேலும் அஷ்டமி திதியன்று கால பைரவருக்கு யாகம் நடத்தி, அபிஷேகங்கள், சந்தன காப்பு அலங்காரம் செய்து காலாஷ்ட மந்திரம் ஓதி வழிபாடு செய்தால் மரண பயம் நீங்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தீராத நோயினால் அவதிப்படுபவர்கள் இந்த சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறார்கள்.

ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவிலான இந்த கோவில் திருச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் உள்ளது.

இழந்த பதவி
தரும் ஊட்டத்தூர்
சிவன்

காகத்திற்கு ‘தீர்க்கத் துண்டன்’ என்ற பெயரிட்டுச் சிவகணங்களில் ஒன்றாக இருக்கச் செய்தார்.

நமசிவாய வாழ்க

 காகம் சிவகணங்களில் ஒன்றான கதை – அவிநாசி அற்புதங்கள் – 
*******************************************
இறைவன் மீது பக்தி செலுத்துவதில் மனிதர்களை விட சில சமயம் விலங்குகள் ஒரு படி மன்னிக்க பல படிகள் மேலே நிற்பதுண்டு. சில நேரங்களில் அறிந்தும் சில நேரங்களில் அறியாமலும் அவை பக்தி செலுத்தும். அதன் பலனாக நாம் ஆண்டுக்கணக்கில் தவமிருந்தாலும் பெற அரிதான சிவகடாக்ஷத்தை அவை எளிதாக பெற்றுவிடும்.

சிவ வழிபாட்டை பொறுத்தவரை அறிந்து செய்தாலோ அல்லது அறியாமல் செய்தாலோ அணுவளவு இருந்தால் கூட அதற்கு மலையளவு பலன் உண்டு. சிவ வழிபாடு ஒன்றுக்கு மட்டும் தான் இப்படிப்பட்ட தன்மை உண்டு.

வானரம் ஒன்று சிவலிங்கத்தின் மீது இலைகளை போட்டு விளையாடி அதன் பலனாக முசுகுந்த சக்கரவர்த்தியாக பிறந்ததும், சிவாலயம் ஒன்றில் அணையவிருந்த விளக்கின் திரியை தன்னையுமறியாமல் தூண்டிவிட்ட காரணத்தால் மூஷிகமானது அடுத்த பிறவியில் நாடாளும் மகாபலிச் சக்கரவரதியாக பிறந்ததும் இதற்கு உதாரணம்.

==================================

அப்படிப்பட்ட பட்டியலில் காகம் ஒன்றும் உள்ளது. அதுவும் நம் அவிநாசி தலத்துடன் தொடர்புடைய ஒன்று.
சிவானுக்கிரகத்தை பெற இந்த காகம் என்ன செய்தது?

கொ ங்கு நாட்டில் காவிரியும் பவானியும் கூடுமிடத்தில் சிவபூமி என்னும் ‘வதரிகாசிரம்’ என்ற ஒரு வனம் உள்ளது. அது தவசிகளுக்கு சிறந்த இடமாக திகழ்ந்தது. அங்கு துர்வாச முனிவர் சில காலம் தங்கியிருந்து சிவபூஜை முதலிய தவங்களை செய்யும்போது ஒரு நாள் காமதேனு பசுவானது சிவபூஜைக்கு பால் அளிக்க தாமதமாக வந்தது.

சினம் கொண்ட முனிவர் அதனை, “நீ மற்ற மிருகங்களை போல் திரியக் கடவாய்” என்று சபித்தார். உடனே காமதேனு மிக வருந்தி ‘நான் உய்யும் வகையினை அருளவேண்டும்’ என்றபோது முனிவர் ‘நீ பழனி மலை சென்று பூசித்தால் உய்யலாம்’ என்று கூறினார். அதன் பிறகு அவர் கந்தபுரி என்னும் திருமுருகன் பூண்டியை வந்தடைந்து திருமுருகநாதரை பூசித்தார்.

அருள்மிகு ஆவுடை நாயகி சமேத திருமுருகநாதர் திருக்கோவில், திருமுருகன்பூண்டி
கந்தபுரி பிதுர்க்கிரியை செய்வதற்கு சிறந்த இடம் என்பதை உணர்ந்தார்.

 மறுதினம் தை அமாவாசை புண்ணியகாலமாக இருந்தது. எனவே தை அமாவாசை விடியற்காலம் சிவதீர்த்ததில் ஸ்நானம் செய்து நியம அனுட்டானங்களை முடித்து ஆலயத்திற்கு அருகே நிருருதி திக்கிலுள்ள ஒரு பூந்தோட்டத்தில் சிவபூசை ஹோமம் முதலியவைகளை புரிந்து அன்னத்தை நிவேதனம் செய்து பிதுர்களுக்கு மந்திர பூர்வமாக உணவு அளிக்கும் முன்பு காகத்திற்கு பலி (சோற்றுருண்டை) வைத்தார். 

அப்போது ஒரு காகம் வந்து மற்றைய காகங்களையும் கூவி அழைத்துச் சாப்பிட்டு தன் குஞ்சுக்கு கொடுக்க வாயில் உணவை அடக்கிக் கொண்டு தன் இருப்பிடம் செல்ல அவிநாசிக் கடைவீதி வழியாக பறந்து சென்றது.
அச்சமயம் திருப்பிக்கொளியூர் என்னும் அவிநாசியிலுள்ள மற்றொரு காகம் அக்காகத்தை வந்து எதிர்த்து சோற்றைப் பறித்தது. அச்சோற்றில் ஒரு பருக்கை சோறு சிவவேடம் பூண்ட ஒரு பரதேசியின் பிட்சா பாத்திரத்தில் விழுந்தது. அதனை அவன் அறியாது ஒரு இடத்தில் போய் தங்கிச் அந்தச் சோற்றை உண்டு மகிழ்ந்தான்.

சோற்றை இழந்த காகம் வேறிடம் சென்று அன்னம் தேடி தன் குஞ்சுக்கு கொண்டு வரும்போது, ஒரு வேடன் சிறு வில்லில் களிமண் உருண்டையை வைத்து அக்காகத்தை அடித்தான். உடனே அது அலறிக் கீழே திருப்புக்கொளியூர் எல்லையில் விழுந்து இறந்தது.

அப்போது அந்த காகம் தேவவுருப் பெற்று தேவ விமானத்தில் திருக்கைலையை அடைந்து, உமாதேவியரோடு சிவபெருமான் எழுந்தருளிய சந்நிதியின் முன் நின்று வணங்கி எழுந்து கை குவித்து நின்றது.

சிவபெருமான் புன்முறுவல் பூத்து, திருப்புக்கொளியூர் அவிநாசியில் வசித்து வந்த காகம் தனது மூக்கினால் கொத்தி விழுந்த சோற்றை ஒரு சிவனடியார் உண்டதனால், இக்காகம் இங்குவர ஏதுவாயிற்று என்று சிவகணங்களுக்கு கூறினார்.

 காகத்திற்கு ‘தீர்க்கத் துண்டன்’ என்ற பெயரிட்டுச் சிவகணங்களில் ஒன்றாக இருக்கச் செய்தார்.

சிவனடியாருக்கு ஒரு சோற்றுப் பருக்கையை தன்னையுமறியாமல் அளித்து திருப்புக்கொளியூரில் மரித்த ஒரு காக்கைக்கே இந்த நற்கதி என்றால்!

 சிவ வழிபாட்டின் மகத்துவத்தை என்னவென்று சொல்ல?

அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்?

*அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்?*
*************************************
கல்லினுள் தேரை முதல் கருப்பை உயிர்வரை எண்ணாயிரம் கோடி உயிர்களுக்கு உணவு அளிப்பவன் ஈசன். அதனை நினைவுகூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் *ஐப்பசி மாத பௌர்ணமி* நாளில் எல்லா சிவாலயங்களிலம் *அன்னாபிஷேகம்* நடத்தப்படுகிறது.
சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம். அதை ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் செய்ய வேண்டும்? மற்ற மாதங்களில் செய்யலாமே?
ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான்.
*அன்னத்தின் பெருமை*
***************************
ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது. அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்தமாக சமைக்கப்பட்ட சாதத்தால் இறைவனை அலங்கரிப்பது இதன் சிறப்பம்சமாகும்.
*“அன்னம் பரப்பிரம்மம்"* என்பர். உணவை இறைவனாகப் பார்க்கிறது ஆன்மிகம். உடலை வளர்ப்பதுடன், உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம் தான். இதனால் தான், ஐப்பசி பவுர்ணமி அன்று, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தப் படுகிறது. பிரசாதத்தை *“ப்ர+சாதம்"* என சொல்ல வேண்டும். “சாதம்" சாதாரண உணவு; “ப்ர" என்றால், கடவுள். அதுவே கடவுளுக்கு படைக்கப்பட்டு விட்டால், அதிலுள்ள தோஷங்கள் விலகி, “பிரசாதம்" ஆகி விடுகிறது. இதனால் தான், சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்தி, உணவளித் தனர்.
முனிவர் ஒருவர், ஒரு தேசத்தின் ராஜாவைச் சந்தித்தார். அவரை வரவேற்ற அவன், தனியறையில் தங்க வைத்து, சகல வசதிகளையும் செய்து கொடுத்து, சாப்பிட்டு விட்டுப் போகும்படி கட்டாயப்படுத்தினான்; முனிவர் மறுத்தார். இருப்பினும், நியமத்துடன் சமைத்துப் போடுவதாக வாக்களித்து, சமையலுக்கும் தனியாட்களை ஏற்பாடு செய்தான்; முனிவரும் சாப்பிட்டார். பலவகை உணவுகளால் வயிறு மந்தமாயிற்று; தூக்கம் வந்தது. சற்று நேரம் தூங்கி, பின் விழித்ததும், கண் எதிரே இருந்த சுவரில் ஒரு முத்துமாலை தொங்கியதைப் பார்த்தார். உள்ளே சென்ற உணவின் தாக்கமோ என்னவோ… அதை எடுத்து வைத்துக் கொண்டால் என்ன என்று முனிவருக்கு தோன்றியது. அதையெடுத்து தன் வஸ்திரத்தில் முடிந்து வைத்துக் கொண்டார்.
சற்று நேரம் கழித்து, ராஜாவிடம் விடைபெற்று, தன் ஆசிரமத்துக்குப் போய் விட்டார். அவர் சென்ற பிறகு தான், மாலை காணாமல் போன விஷயம் வெளிப்பட்டது. அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்தனர். அந்த அறைக்கு வந்து போன அப்பாவிகளுக்கெல்லாம் உதை விழுந்தது; ஆனால், அவர்களோ ஒரேயடியாக மறுத்தனர். முனிவர் மீது சந்தேகம் என்ற சிந்தனை கூட யாருக்கும் வரவில்லை. அவர் முற்றும் துறந்தவர் என்பதில் எல்லாருக்கும் முழு நம்பிக்கை.
அன்றிரவு, முனிவருக்கு வயிறு, “கடமுடா" என்றது; கடும் பேதி. வயிறு குறைய, குறைய மனசும் பழைய நிலைக்கு வந்து விட்டது. “அவசரப்பட்டு தப்பு செய்து விட்டோமே… விசாரணையில் அப்பாவிகளெல்லாம் அடி வாங்கியிருப்பரே… என்ன நடந்தாலும் பரவாயில்லை. ராஜாவிடம் இதை ஒப்படைத்து, கொடுக்கிற தண்டனையைப் பெற்றுக் கொள்வோம்" என்று சென்றார். ராஜாவிடம் உண்மையைச் சொல்லி, மாலையை ஒப்படைத்தார் .
“யாரோ ஒருவன் இதைத் திருடி உங்களிடம் ஒப்படைத்திருக்கிறான். அவனைக் காப்பாற்ற நீங்கள் திருடியது போல் நாடகமாடுகிறீர்கள். நீங்களாவது, திருடுவதாவது…இதைக் கேட்கவே மனம் சகிக்கவில்லை…" என்றான் ராஜா. அவ்வளவு நம்பிக்கை! முனிவரோ, தன் கருத்தில் விடாப்பிடியாய் நின்றார். ராஜா அவரிடம், “நீங்கள் சொல்வது உண்மையாயினும், அதற்கும் ஒரு காரணம் இருந்திருக்க வேண்டுமே…
அதுபற்றி ஏதாவது உங்கள் பேரறிவுக்கு புலப்படுகிறதா?" எனக் கேட்டான். “மன்னா… நேற்றைய உணவை சமைத்தது யார்? அதற்கு பயன்படுத்திய பொருட்கள் எந்த வழியில் வந்தன என சொல்…" என்றார். “சுவாமி… திருடன் ஒருவன் ஒரு அரிசிக் கடையை உடைத்து மூடையை தூக்கிச் சென்ற போது, பறிமுதல் செய்த அரிசி அது. அரிசிக்குரியவர் உரிய ஆவணம் தராததால், அரண்மனை கிட்டங்கியில் சேர்க்கப்பட்டது…" என்றான். *“பார்த்தாயா… திருட்டு அரிசியை சாப்பிட்டதால், திருட்டு புத்தி வந்துள்ளது…"* என்றார் முனிவர்.
*“அப்படியே இருந்தாலும் கூட, அப்படி ஒரு அரிசியை சமைக்க காரணமான நான் தான் குற்றவாளி…"* என்ற ராஜா, முனிவரை அனுப்பி விட்டான். உணவு பயிரிடும் விதம், பயிரிடுபவர், சமைப்பவர் இவற்றைப் பொறுத்தே சாப்பாட்டின் தரம் அமையும். அதைச் சாப்பிடும் போது, அந்த குணநலன்கள் மனிதனை தாக்கும். அதனால் தான், இறைவனுக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகிறோம். பயிரிடும் போதும், சமைக்கும் போதும், சாப்பிடும் போதும் நல்லதையே சிந்தித்தால், நாம் உண்ணும் உணவே பிரசாதம் ஆகிவிடும்.
*அது என்ன சாபம்?*
********************
தெரிந்த கதைதான். சந்திரன், அஸ்வினி முதல் ரேவதி வரையிலான தனது நட்சத்திர மனைவியருள் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பு செலுத்தி மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டியதால், மாமனார் தட்சனால் உடல் தேயட்டும் என்று சாபம்.
சந்திரனுக்கும் ஒவ்வொரு கலையாக தேய ஆரம்பித்தது. அவன் மிகவும் வருந்திக் கெஞ்சவே, திங்களூரில் சிவனை பூஜித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார், தட்சன். உடனே அவன் திங்களூர் வந்து சிவனை நோக்கி தவம் செய்யத் துவங்கினான். அவன் மேனியின் ஒளி நாளுக்கு நாள் மங்கத் துவங்கியது. மூன்றே மூன்று கலைகள் மிச்சமிருக்கும் போது சிவனார், அவன்பால் மனமிரங்கி அந்தப் பிறையைத் தனது தலையில் அணிந்து கொண்டார்.
கொடுத்த வாக்கை மீறிய அவனுக்கு பதினாறு கலைகளும் கிடைக்கப் பெற்றாலும் முழுப்பொலிவும் வருடத்தின் ஒருநாள் அதாவது ஐப்பசி பௌர்ணமி அன்று மட்டுமே கிடைக்கும். அது மட்டுமல்ல அவனது ஒளி தினமும் தேயும் முழுவதும் மறைந்து பின் படிப்படியாக வளரும். இது எப்போதும் நடக்கும் ஒரு சுழற்சியாக இருக்கும் என்று அருளிச் செய்தார் விடைவாகனர்.
திங்கள் முடிசூடியவருக்கு, மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு!
ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. அக்டோபர் (ஐப்பசி) மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானவியல்.
நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்தினார்கள்.
*அன்னாபிஷேகத்தின் சிறப்புகள்:*
*************************************
அம்பிகைபாகன் சதா அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே.
அன்னம் பிராணன் என்றும், அஹமன்னம் எனவும் வேதங்கள் போற்றுகின்றன. ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ அதைப் பொறுத்தே அவனது மனம் இருக்கும் என்கின்றன நமது உபநிடதங்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை கொஞ்சம் கூட வீணாக்கலாகாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக் காட்டவுமே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
அது மட்டுமல்ல, நமது பேரண்டம் நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு என்னும் பஞ்ச பூதங்களால் ஆனது. அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் என்ற திருமூலர் வாக்குப்படி நமது உடலும் பஞ்சபூதங்களுக்கும் தலைவன் சிவபிரான்.
அந்தப் பஞ்சபூதங்களை சரியான வகையில் செயல்படச் செய்து, உயிர்களுக்கு உணவும் நீரும் குறைவின்றிகிட்ட அருள் செய்த ஈசனுக்கு நன்றி சொல்லும் வகையிலும், நாட்டிலும் வீட்டிலம் எக்காலத்திலும் உணவுப் பஞ்சம் வராமல் இருக்கவும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தினர்.
அன்னம் என்பது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டாவது நிலத்தில் விழும் நெல், ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை நீரின் உதவியால் வளர்ந்து, காற்றினால் கதிர்பிடித்து, சூரியனின் வெப்பத்தீயினால் பால் இறுகி விளைச்சலைத் தருகிறது. காற்றின் உதவியுடன் கதிரடித்து எடுக்கப்படும் நெல், உமி நீக்கப்பட்டு அரிசியானபின் மண்ணால் ஆன பானையில் நீரில் இடப்பட்டு, காற்றின் துணையால் எரியும் நெருப்பில் வெந்து, அன்னமாகி ஆகாயத்தின் கீழுள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவாகிறது. அந்த அன்னத்தினால் செய்யப்படுவதால்தான், அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.
*அன்னாபிஷேகம் செய்யும் முறை:*
*************************************
ஐப்பசி மாத முழுநிலவு நாளில் முதலில் ஐந்து வகைப் பொருட்களால் இறைவனுக்க அபிஷேகம் செய்து, பின்னர் நன்கு வடித்து ஆறவைத்த அன்னத்தைக் கொண்டு (தேவையானால் சற்று நீர் கலந்து) அன்னாபிஷேகம் செய்யப்படும். சமீபகாலமாக அன்னாபிஷேகத்தின் போது அப்பம், வடை உள்ளிட்ட பலகாரங்களையும் காய்கறி, கனி வகைகளையும் கொண்டு லங்காரம் செய்வது வழக்கமாயிருக்கிறது.
சிவலிங்கத் திருமேனியின் மேலிருந்து அன்னத்தை வைத்துக் கொண்டே வருவார்கள். சிவலிங்கத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். கீழ்ப்பகுதி, பிரம்ம பாகம். நடுப்பகுதி, விஷ்ணு பாகம். இதுவே ஆவுடை. மேற்பகுதி பாணம், சிவபாகம். அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனியின் எல்லா பாகங்களுக்குமாக முழுமையாகவே செய்யப்படும்.
இந்த அபிஷேகம் மட்டும்தான் இரண்டு நாழிகை நேரம், அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அந்தச் சமயத்தில் யஜுர் வேத பாராயணமும், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும். 
நாழிகை நேரம் முடிந்த உடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள். பின்னர் மீதமிருக்கும் ஐந்து வகைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும்.
லிங்கத்தின் ஆவுடையிலும் பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னம் மிகவும் கதிர்வீச்சுடன் இருக்கும். எனவே அதனை எவரும் உண்ணாமல் அப்படியே எடுத்துச் சென்று கோயில் குளத்திலோ இல்லை ஆற்றிலோ கொண்டு கரைப்பார்கள். நீர்வாழ் உயிர்களுக்கு உணவு!
நமது இந்து மதம் எப்போதும் மனிதனை மட்டுமே முன்னிறுத்தி எதையும் இறைவனிடம் வேண்டுவதில்லை. எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் தான் மனிதனுக்குத் தேவையான உணவு தடையின்றிக் கிடைக்கும் என்பதை இயற்கையின் சமன்பாட்டு விதியை நன்கு அறிந்திருந்தனர் நம் முன்னோர்.
அதனால்தான் அன்னாபிஷேகப் பிரசாதம் நீரில் வாம் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு நீரில் கரைக்கப்படுகிறது.
நல்ல அதிர்வுகளும், உடலுக்குத் தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் பிரும்ம பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம் மனிதர்களுக்கே அளிக்கப்படுகிறது. ஏனெனில் அவற்றைத் தாங்க சிறு உயிர்களால் முடியாது என்ற ஜீவகாருண்யமே காரணம்.
பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்படும் அன்னத்தில் சில கோயில்களில் தயிர் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம்.
*சோற்றுக்குள் சொக்கன்*
****************************
'சோறுதான் சொக்கநாதர்' 'சோறுகண்ட இடம் சொர்க்கம்' என்று இன்றும் மக்கள் சொல்வதுண்டு. நாம் உண்ணும் அன்னமே ஆண்டவன். அவனே இதில் இருக்கிறான். நமக்கு படியளப்பவன். சிவலிங்கத்தின் மீது வடித்த சாதத்தை அப்பிவைத்து, பல வித காய்கள் கனிகள் எல்லாம் அலங்காரம் செய்து வைப்பார்கள். ருத்ரம் சமகம் பாராயணம் செய்தபின், தீபாராதனைக் காட்டுவார்கள்.
சிவலிங்கத்தின் மேல் பகுதியில் மனிதனால் தாங்கமுடியாத அதிர்வுகள் அதிகம் இருக்கும் என்று கருதுவதால், அதை பிரித்து குளத்தில் மீன்களுக்கும், பட்சிகளுக்கும், பசுவுக்கும் கொடுத்தபின், எஞ்சிய அடிபாகம் சோறு மனிதன் தாங்கவல்ல அதிர்வுகளை    பெற்றுள்ளதால் அதைத்தான் நமக்கு பிரசாதமாக விநியோகம் செய்வார்கள் என்பது ஐதீகம். 
ஈசனை அன்னாபிஷேகத்தில் வழிபட்டால் உணவுக்கு குறைவின்றி படியளப்பான். நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அன்னாபிஷேக ஈசனை மனதில் எண்ணிக்கொள்ளுங்கள். (பிக்ஷாண்டார்) ஈசனுக்கே படியளந்த அன்னபூரணியின் ஆசிகள் கிட்டும். சற்றுமுன் கோயிலில் சிவதரிசனம் செய்து மகிழ்ந்தேன்.
*"ஊனுடம்பில் குடிகொண்டவனே*
 *ஊழ்வினை பாராது படியளந்திடு"*
மாமன்னன் ராஜராஜ சோழன் தஞ்சை பெரியகோயிலைக் கட்டியபோது அன்னாபிஷேகத்தைத் தொடங்கி வைத்தான் என்பது கல்வெட்டில் உள்ளது. 
*சமையல் ஒரு தவம்!*

**********************

சிவாலயங்களில், ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று அன்னாபிஷேகம் நடைபெறும். பால், தயிர், எண்ணெய், தேன், சந்தனம், திருநீறு, இளநீர் போன்றவற்றால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால், வடித்த சோறு கொண்டு அபிஷேகம் செய்வது எதற்காக?
மனிதன் உண்ணும் உணவுப்பொருளில் முக்கிய இடம் பிடிப்பது சோறு; இதை சுவாமிக்கு படைக்கும் போது, பிரசாதம் ஆகிறது. 'ப்ர' என்றால் தெய்வத்தன்மை; தெய்வத்தன்மை பொருந்திய சோறு என்பது இதன் பொருள்.
ஒரு வீட்டில் துறவி ஒருவரை சாப்பிட அழைத்தனர்; துறவியும் சாப்பிட்டார். பின்பக்கம் சென்று கையைக் கழுவப் போனவர், வீட்டுக்குள் திரும்ப வரவில்லை; எல்லாரும் தேட ஆரம்பித்தனர். பின்பக்க கதவு திறந்து கிடந்தது; அங்கே கட்டியிருந்த பசுவையும், கன்றையும் காணவில்லை.
அப்போது ஒருவன் ஓடி வந்து, 'ஐயா... உங்கள் வீட்டுப் பசுவை சாமியார் ஒருவர் ஓட்டிக்கொண்டு செல்கிறார்...' என்றான்.
உரிமையாளர் பதறியடித்து ஓடினார். துறவியை வழி மறித்து விட்டார்.
'துறவியான உமக்கு இது அழகா... அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?' என்று கேட்டார்.
அப்போது தான் துறவிக்கே புரிந்தது; தான் ஒரு மாட்டையும், கன்றையும் கையில் பிடித்திருக்கிறோம் என்பது! உடனே, 'ஓ'வென்று அழ ஆரம்பித்து விட்டார்.
'ஏன் அழுகிறீர்...' என்று சுற்றியுள்ளவர்கள் கேட்க, 'ஐயையோ... இவர் வீட்டைப் பற்றி விசாரிக்காமல் சாப்பிட்டு விட்டேனே... இவர் வீட்டில் யாரோ ஒருவர் பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணத்துடன், சமையல் செய்திருக்கிறார். அந்த உணவை சாப்பிட்டதால், எனக்கும் திருடும் புத்தி வந்து விட்டது...' என்றார்.
உண்மையில், அன்னதானம் அளித்தவரின் மனைவி, அன்று சமையல் செய்யும் போது, அடுத்த வீட்டுக்காரி அசந்திருக்கும் சமயத்தில், அவள் அடிக்கடி அணியும் நகையை எப்படியாவது திருடி வந்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் சமைத்துள்ளாள்.
உணவு சமைக்கும் போது, நல்ல எண்ணத்துடன் சமைக்க வேண்டும்; இது எல்லாருக்கும் சாத்தியமல்ல தான். ஆனாலும், எப்படி சமைத்தாலும், அதை ஆண்டவனுக்கு படைத்த பின் சாப்பிட்டால், அது, புனிதமடைந்து விடுகிறது; அதைப் பிரசாதமாக நாம் சாப்பிடலாம்.
இந்த அடிப்படையில் தான் சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து, அதில் தயிர் சேர்த்து சாப்பிடுகின்றனர்.
வீட்டில் சமைக்கும் போது, நல்ல எண்ணத்துடன் சமையுங்கள். 'டிவி'யில் கண்ட கண்ட தொடர்களை பார்த்துக் கொண்டே சமைக்காதீர்கள். இதனால், உடலும், மனமும் கெட்டுப் போகும். இன்று மனிதர்களின் ஆரோக்கியம் கெட்டுப் போனதற்கு காரணமே, சமையல் செய்யும் போது, எரிச்சலுடனும், பொறுமையில்லாமலும் சமைப்பதுதான்.
*சமையல் ஒரு தபஸ்(தவம்).* இதனால் தான் சமையல் செய்பவரை, *'தவசுப்பிள்ளை'* என்று சொல்வர். மனதை ஒருநிலைப்படுத்தி சமையல் செய்வதால் தான் சமையல் தவம் ஆகிறது. இதன் காரணமாகவே, அன்னாபிஷேகம் போன்ற விழாக்களை முன்னோர் ஏற்படுத்தினர்.
அன்னாபிஷேகத் திருநாளில் மட்டுமல்ல என்றுமே நல்ல எண்ணங்களுடன் சமையுங்கள்; ஆரோக்கிய வாழ்வைப் பெறுங்கள்

_மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சக்தி பீடமான மகா விஷ்ணுவிற்கு தாயான மஹுர்காட் ரேணுகாதேவி திருக்கோயில் வரலாறு:_

_மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சக்தி பீடமான மகா விஷ்ணுவிற்கு தாயான மஹுர்காட் ரேணுகாதேவி திருக்கோயில் வரலாறு:_




மகாராட்டிரத்தில் மாகுர் என்ற இடத்திலுள்ள ரேணுகா கோவில் சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது .

ரேணுகா அல்லது ரேணு  என்பது இந்திய மாநிலங்களான கர்நாடகா, மகாராட்டிரம், தெலுங்கானா, ஆந்திரா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு முக்கியமாக வழிபடப்படும் சக்தி தெய்வம் ஆகும். 

வெவ்வேறு பெயர்கள்:

ரேணுகா / ரேணு அல்லது யெல்லம்மா அல்லது எக்விரா அல்லது எல்லை அம்மன் அல்லது எல்லாய் அம்மா (மராத்தி: रेणुका /, கன்னடம் : தெலுங்கு: శ్రీ రేణుక / ఎల్లమ్మ, தமிழ் : ரேணு / ரேணு) தெய்வம், தேவி போன்ற பல்வேறு பெயர்களில் இந்து மதத்தில் வணங்கப்படுகிறார். தென்னிந்திய மாநிலங்களான தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாட்டின் காவல் தெய்வம் யெல்லம்மா என்பதாகும். அவளுடைய பக்தர்கள் அவளை "பிரபஞ்சத்தின் தாய்" அல்லது " ஜெகதம்பா" என்று போற்றுகிறார்கள்.

*வரலாறு:*

ரேணுகாவைப் பற்றிய புனைவுகள் மகாபாரதம், ஹரிவம்சம் மற்றும் பகவத புராணங்களில் உள்ளன .

ஆரம்பகால வாழ்க்கை:

ரேணுகா என்ற நாட்டின் அரசன் (ரேணுகா தந்தை) அமைதி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை வேண்டி ஒரு வேள்வியை செய்கிறார். இந்த வேள்வியின் பயனாக நெருப்பிலிருந்து ரேணுகா என்ற ஒரு மகள் அவருக்கு தோன்றினார். ரேணுகா ஒரு பிரகாசமான மற்றும் சுறுசுறுப்பான குழந்தை மற்றும் அவரது பெற்றோரின் மிகவும் பிரியமான குழந்தையாக இருந்தார்.

ரேணுகா நாட்டின் அரசனின் குருவாக அகஸ்தியர் இடம்பெற்றிருந்தார், அவரது மகளுக்கு ஜமதக்னி என்பவருடனான நடக்கவுள்ள திருமணத்திற்கு செல்ல ரேணுகாவை அறிவுறுத்துகிறார். அங்கே சென்ற ரேணுகா பூப்பெய்துகிறார். ஜமதக்னி ருச்சிக முனிவருக்கும் சத்தியாவதிக்கும் மகனாவார், மேலும் கடுமையான தவம் செய்து கடவுள்களின் ஆசீர்வாதங்களைப் பெற்றவர். ரேணுகா மற்றும் ஜம்தக்னி முனிவர் ஆகியோர் பெல்காம் மாவட்டத்தின் இன்றைய சவாடட்டி பகுதிக்கு அருகிலுள்ள ராம்ஷ்ரங் மலைகளில் வசித்து வந்தனர். ரேணுகா ஜமதக்னி முனிவருக்கு பல்வேறு சடங்குகள் மற்றும் பூஜைகள் செய்யும் அனைத்து பணிகளிலும் உதவினார். படிப்படியாக அவள் ஜமதக்னிக்கு நெருக்கமாகவும் அன்பாகவும் ஆனாள். சிறிது நாள் கழித்து ரேணுகாவுக்கு அஞ்சனா (அஞ்சனா தேவி) என்ற மற்றொரு மகள் பிறந்தாள். ரேணுகா அதிகாலையில் எழுந்து மலபிரபா ஆற்றில் குளித்து முழு ஈடுபாட்டுடனும் பக்தியுடனும் இருப்பார். அவளுடைய பக்தி மிகவும் சக்தி வாய்ந்தது, ஒவ்வொரு நாளும் சுடாத மணலால் தயாரிக்கப்படும் புதிய பானையை கொண்டு தண்ணிரை சேமிப்பாள். அவள் இந்த பானையில் ஆற்றின் அருகிலிருந்த ஒரு பாம்பைப் பயன்படுத்தி நீரை நிரப்பி பாம்பை ஒரு கயிறு போன்ற சுருட்டி அவள் தலையில் வைப்பாள், அதனால் அது பானையை கெட்டியாக பிடித்திருக்கும். இவ்வாறு, ஜம்தக்னியின் சடங்குகளுக்காக அவள் தண்ணீரைக் கொண்டு வந்தாள். ("ரேணுகா" என்ற வார்த்தை சமஸ்கிருத வார்த்தையான "மணலிருந்து" பெறப்பட்டது. ) ரேணுகாவின் மற்றொரு கோயில் காசிப்பூரின் ஜமானியா அருகே அமைந்துள்ளது. 

பிற்கால வாழ்வு:

ரேணுகா ஐந்து மகன்களைப் பெற்றெடுத்தார்: வாசு, விஸ்வா வாசு, ப்ரிஹுத்யானு, புருத்வகன்வா மற்றும் ராம்பத்ரா. இளையவரான ராம்பத்ரா அவருக்கு மிகவும் பிரியமானவர், சிவன் மற்றும் பார்வதியின் தயவைப் பெற்றவர், எனவே அவர் பரசுராமர் ( விஷ்ணுவின் ஆறாவது அவதாரம்) என்று அழைக்கப்பட்டார். ஒரு நாள் ரேணுகா ஆற்றுக்குச் சென்றபோது, காந்தர்வர்கள் விளையாடுவதைக் கண்டாள். இந்த இளம் தம்பதிகள் நீரில் மிதந்து விளையாடுவதைக் கண்ட ஒரு கணம், தன் கணவனிடம் இருந்த செறிவு மற்றும் பக்தியிலிருந்து ஒரு கணம் தடுமாறினாள். அவள் திசைதிரும்பியதால், அவள் கற்புத்தன்மையிலிருந்து பெற்றிருந்த, சுடப்படாத பானைகளில் தண்ணீரை சேகரிக்கும் சக்தியை இழந்தாள். அவள் சேகரித்த தண்ணீரை இழந்தாள். இதனால் ஏமாற்றமடைந்த அவள் வெட்கத்துடன் ஆசிரமத்திற்குத் திரும்பினாள். ரேணுகா வெறுங்கையுடன் திரும்பி வருவதைக் கண்ட ஜமதக்னி கோபமடைந்து கோபத்துடன் அவளை விட்டு வெளியேறும்படி கட்டளையிட்டார்.

கணவனால் சபிக்கப்பட்ட பின்னர், ரேணுகா கிழக்கு நோக்கிச் சென்று காட்டில் அமர்ந்து தியானம் செய்தார். அவள் தவத்தில், ஏக்நாத் மற்றும் ஜோகிநாத் என்ற புனிதர்களை சந்தித்தாள் . அவள் அவர்களிடம், தன் கணவனின் கருணையைப் பெற்றுத்தரும்படி கேட்டாள். அவர்கள் முதலில் அவளை ஆறுதல்படுத்தினார்கள், பின்னர் சொன்னதைப் போலவே அவர்களுடைய ஆலோசனையைப் பின்பற்றும்படி அவளுக்கு அறிவுறுத்தினார்கள். அவர்கள் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும்படி சொன்னார்கள், முதலில் அருகிலுள்ள ஏரியில் குளிக்கவும், பின்னர் அவர்கள் அவளுக்குக் கொடுத்த சிவலிங்கத்தை வணங்கவும் சொன்னார்கள். அடுத்து, அவள் அருகிலுள்ள ஊருக்குச் சென்று வீடுகளிலிருந்து அரிசி பிச்சை எடுக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். ("ஜோகா பெடோடு" என்று அழைக்கப்படும் இந்த சடங்கு, கர்நாடகாவில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் / மராத்தியில் "ஜோகாவா", "யெல்லம்மா ஜொகு" தெலுங்கானா).

அரிசியைச் சேகரித்தபின், அவள் புனிதர்களுக்கு பாதியைக் கொடுத்து, மீதமுள்ள பாதியை சமைக்க வேண்டும், வெல்லம் சேர்த்து, சமைத்த அரிசியை முழு பக்தியுடன் சாப்பிடவேண்டும். அவர் இந்த சடங்கை மூன்று நாட்கள் செய்தால், நான்காவது நாளில் அவள் கணவரைப் பார்க்க முடியும் என்று அவர்கள் சொன்னார்கள்.

ஜமதக்னியின் கோபத்தை அறிந்த அவர்கள், அவரால் முழுமையாக மன்னிக்கப்பட முடியாது என்றும், அவள் வாழ்க்கையின் மிகக் கடினமான நேரத்தை சில நிமிடங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். அதற்குப் பிறகு, "நீங்கள் மதிக்கப்படுவீர்கள், உங்கள் கணவருடன் சேர்வீர்கள். இனிமேல் நீங்கள் எல்லா மக்களாலும் வணங்கப்படுவீர்கள். " அவளை இப்படி ஆசீர்வதித்த பிறகு, அவர்கள் மறைந்து போனார்கள். ரேணுகா அவர்களின் அறிவுறுத்தல்களை பக்தியுடன் பின்பற்றி சிவலிங்கத்தை முழு அக்கறையுடனும் பயபக்தியுடனும் வணங்கினார். நான்காம் நாள், அவள் கணவனைப் பார்க்கச் சென்றாள்.

தண்டனை மற்றும் உயிர்த்தெழுதல்:

ஜமதக்னி ரேணுகா மீது கோபம் கொண்டு தனது மகன்களைத் தங்கள் தாயைத் தண்டிக்கும்படி கட்டளையிட்டார். ஒவ்வொருவராக, அவர்களில் நான்கு பேர் அச்செயலைச் செய்ய மறுத்துவிட்டனர். தனது ஒரே தோற்றத்தால் யாரையும் சாம்பலாக எரிக்கும் சக்தியைக் கொண்டிருந்த ஜமதக்னி, தனது நான்கு மகன்களையும் சாம்பலாக மாற்றினார். இது நடந்தபோது அங்கு இல்லாத பரசுராமர், அவர் வந்தபோது சாம்பல் குவியல்களால் அவரது தாயார் அழுதுகொண்டிருப்பதைக் கண்டார், மேலும் அவரது தந்தை இன்னும் கோபம் தனியாமல் இருப்பதைக் கண்டார். என்ன நடந்தது என்று ஜமதக்னி அவரிடம் சொன்னார், மேலும் அவளது துரோகத்திற்காக தனது தாயின் தலை துண்டிக்க உத்தரவிட்டார். பரசுராமர் விரைவாக சிந்தித்தார். தந்தையின் சக்தியையும் கோபத்தின் அளவையும் அறிந்த பரசுராமர் உடனடியாக தனது கோடரியைப் பயன்படுத்தி தந்தையின் சொல்லுக்கு கீழ்ப்படிந்தார்.

அவரது தந்தை பரசுராமருக்கு ஒரு வரத்தை வழங்கினார், அவர் தனது தாயையும் சகோதரர்களையும் மீண்டும் உயிர்ப்பிக்கும்படி கேட்டார். எல்லோருக்கும் ஆச்சரியமாக, ரேணுகாவின் ஆன்மா பெருகி வெவ்வேறு பகுதிகளுக்கு நகர்ந்தது. ரேணுகாவும் ஒட்டுமொத்தமாக திரும்பி வந்தாள். இந்த அதிசயம் அவளுடைய மகன்களையும் மற்றவர்களையும் அவளைப் பின்பற்றுபவர்களாகவும், அவளை வணங்கவும் தூண்டியது.

 
ஓம் சக்தி. ..

உடலில் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இங்கே புதனை வழிபட நிவர்த்தி பெறலாம்.

திருவெண்காடு புதன் வழிபாடு நரம்பு சம்பந்தமான நோயை குணமாக்கும் திருவெண்காடு கோவில்

உடலில் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இங்கே புதனை வழிபட நிவர்த்தி பெறலாம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.இன்று புதன்கிழமை 2/10/2019 அன்று திருவெண்காடு கோயில் பற்றி அறிந்து கொண்டு வழிபடுவோம் . திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் திருவடிகளே போற்றி

நரம்பு சம்பந்தமான நோயை குணமாக்கும் திருவெண்காடு கோவில்

திருவெண்காடு கோவில் அந்த ஊருக்கு நடுநாயகமாய் அமைந்து விளங்குகிறது. கோவில் திருமதிலைச் சுற்றி மடவளாகமும், அதனைச் சுற்றி நான்கு அகன்ற தேரோடும் திரு வீதிகளும் அமைந்துள்ளன.

 

கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரமும், மேற்கே ஐந்து நிலை கோபுரமும் அமைந்துள்ளது. இக்கோவில் கிழக்கு மேற்காக 792 அடி நீளமும், வடக்கு தெற்காக 310 அடி அகலமும் கொண்டு அமைந்துள்ளது. வெளிப்பிரகாரத்திலிருந்து உட்பிரகாரம் செல்லும் கிழக்கு மேற்கு வாயில் களிலும் இரண்டு மூன்று நிலைக்கோபுரங்கள் உள்ளன. இக்கோவில் மூன்று பிரகாரங்களுடன் அமைந்துள்ளது.

கீழக்கோபுரம் வழியே உள்ளே நுழைய வேண்டும். கொடி மரத்துப் பிள்ளையார், பலிபீடம், கொடிகம்பம் நந்தி இவை களை வழிபட வேண்டும். இந்த இடத்திற்குத் தெற்கே அக் கினி தீர்த்தமும், அதன் கிழக்கே அக்கினீசுவரர் கோவிலும் உள்ளன.

அக்கினி தீர்த்தக் கரையில் ஊஞ்சல் மண்டபமும், மெய்கண்டார் சன்னதியும் உள்ளன. தெற்கு வெளிப்பிரகாரம் வழியே செல்கையில் சூரியன் கோவிலையும், சூரிய தீர்த்தத் தையும் காணலாம். வெளிப்பிரகாரத்தின் தென் மேற்கில் கோவில் அலுவலகம், களஞ்சியம், நந்தவனம் ஆகியன அமைந்துள்ளன.

மேற்கு வெளிப்பிரகாரத்தில் மேற்கே ஐந்து நிலைக் கோபுரத்திற்கு உட்புறம் வடபால் ஆறுமுகப் பெருமான் கோவில் தனியாக பெரிய சன்னதியுடன் அமைந்துள்ளது. அதனுடன் நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளது. நூற்றுக் கால் மண்டபம் சமயச் சொற்பொழிவுகள், இன்னி சையரங்குகள், சிவாகமச் சித்தாந்தப் பயிற்சி வகுப்புகள் முதலியவை நடைபெறப் பயன்படுகின்றது. முருகன் கோவிலுக்கு மேற்கே வீரபாண்டியன் என்னும் சிவலிங்கம் உள்ளது.

வெளிப்பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் பிரம்ம வித்யாம்பிகை அம்மன் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சிறிய கோபுரத்துடன் தனி உட்பிரகாரத்துடன் உள்ளது. அம்மன் கோவிலிலுள்ள முன் மண்டபம் முழுவதும் கருங்கல் திருப்பணியாகும்.

அம்மன் கோவில் மண்டபத்தின் இடது புறம் புதனுக்குத் தனி கோவில் உள்ளது. அதற்கு இடப்பகுதியில் பிரம்மசாது சமாதியும், ஸ்தலவிருட்சம் வில்வம், திருவெண்காட்டு நங்கை நந்தவனமும் உள்ளன.

அதன் அருகில் சிறப்பு ஹோமங்கள் செய்வதற்கான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அம்மன் சன்னதிக்கு எதிரில் சந்திர தீர்த்த திருக்குளம் அமைந்துள்ளது. அதன் தென்கரையில் கொன்றை மரமும், கீழ்ப்பால் வடவாலவிருட்சமும், சந்திரேசுவர் கோவிலும் உள்ளன.

கோவிலின் வடகிழக்கில் அரசும் வேம்பும் இணைந்துள்ள மேடை உள்ளது. நூற்றுக் கணக்கான நாகர் சிலைகள் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அம்மன் கோவிலுக்கு மேற்கே ருத்ர பாதம் மற்றும் சம்பந்த விநாயகர் கோவில் உள்ளது. வடகிழக்கு மூலையில் யாகசாலை இருக்கிறது.

கிழக்கு வெளிப்பிரகாரத்தில் இருந்து உட்பிரகாரம் செல்வதற்கு முன் வடக்கே அலங்கார மண்டபமும், வாகன மண்டபமும் உள்ளது. மூன்று நிலைக்கோபுரத்தை ஒட்டி அழகிய திருக்கல்யாண மண்டபமும் அமைந்துள்ளது. அதன் வழியாகத் திருக்கோவிலின் உள்ளே நுழைந்தால் திருக்கல்யாண மண்டபத்தில் நடராஜரின் பல்வேறு ஆடல்களைக் சித்திரமாக எழுதியுள்ளனர்.

உட்பிரகாரத்தின் தென் பகுதியில் பெரியவராணப் பிள்ளையாருக்கும், சோமாஸ்கந்தருக்கும் தனித்தனிச் சன்னதிகள் உள்ளன. தென் திருமாளிகைப் பத்தியில் அறுபத்துமூவர், பத்திரகாளி, வீரபத்திரர், இடும்பன், சுகாசனமுர்த்தி, சோலையப்ப முதலியார், மந்திரி ஆகிய மூர்த்திகள் உள்ளன.

மேற்குத் திருமாளிகைப் பத்தியில் நாகேசுவரர், விநாயகர், யோகமாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஆவுடையார் பத்திரபீடம், விசுவேசுவரர், விசா லாட்சி, அங்காள பரமேஸ்வரி, சுவேதவன பெருமாள், பஞ்சலிங்கம் பாலசுப்பிரமணியர், அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, சரஸ்வதி, தனி விநாய கர் முதலிய சன்னதிகள் உள்ளன.

மேற்கு உட்பிரகாரத்தில் தெற்கு நோக்கிய ஸ்ரீநடராஜ சபை உள்ளது. வடக்கு உட்பிரகாரத்தில் ஸ்ரீஅகோரமூர்த்தி மூவருக்கும், உற்சவருக்கும் தனித்தனிக் கோவில்கள் உள்ளன. காட்சி நாயனார், சண்டேசுவரர், சுவேதலிங்கம் ஆகிய சந்நிதிகளும் உள்ளன. கிழக்கு உட்பிரகாரத்தில் பைரவர், காசித்துண்டி விநாயகர், துர்க்கை நவக்கிரகங்கள் முதலியன உள்ளன. நவக்கிரகங்கள் மற்ற தலங்களில் இருப்பது போன்ற அமைப்பில் இல்லாமல் வரிசையாக இருக்கின்றன.

நடுவில் சுவேதாரண்யேசுவரர் திருச்சன்னதி உள்ளது. நிருத்த மண்டபம், மகா மண்டபம், அர்த்தமண்டபங்களுடன் கூடிய பெரிய சன்னிதி இது. இதன் வாயிலில் துவார பாலகர் களும் கோஷ்டத்தில் தட்சிணா மூர்த்தி, லிங்கோத் பவர், பிரம்மா ஆகியோரும் உள்ளனர். தெற்கு கோஷ்டத்தில் சட்டைநாதர் சுதை வடிவிலும், ஐராவதமும் சிவப்பிரியரும் புடைப்புச்சிற்பமாகவும் உள்ளனர். மூலஸ்தானத்தில் திருவெண்காடர் மகாலிங்கமூர்த்தமாக எழுந்தருளி உள் ளார்.

திருவெண்காடு தலத்துக்கு செல்வது எப்படி?

திருவெண்காடு ஆலயம் சீர்காழிக்கு மிக அருகில் உள்ளது. வெளியூர்களில் திருவெண்காடுக்கு செல்ல விரும்புபவர்கள் சீர்காழியை சென்றடைய தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பஸ், ரெயில் வசதிகள் உள்ளன.

சீர்காழியில் பக்தர்கள் தங்கிச் செல்வதற்கு உரிய லாட்ஜ் வசதிகள் உள்ளன. அங்கு தங்குவதற்கு விருப்பம் இல்லாதவர்கள் அருகில் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு செல்லலாம்.

வைத்தீஸ்வரன் கோவிலில் கூடுதல் வசதிகளுடன் தங்குவதற்கு உயர்ரக தங்கும் விடுதி இருக்கிறது. அங்கு அறைகள் கிடைக்காதபட்சத்தில் மயிலாடுதுறைக்கு செல்லலாம். மயிலாடுதுறையில் நிறைய லாட்ஜ் வசதிகள் இருக்கின்றன. உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப அங்கு தங்கும் விடுதிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

மயிலாடுதுறையில் தங்குவதில் மற்றொரு பலனும் இருக்கிறது. அங்கிருந்து திருவெண்காடு தலத்துக்கு மட்டுமல்ல மற்ற பாடல் பெற்ற தலங்களுக்கும் மிக எளிதாக சென்று வரலாம்.

சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் நகர்ப்பேருந்து எண்கள் - 5, 5பி, 5சி. சீர்காழியிலிருந்து பொறையாறு செல்லும் ஒரு பேருந்தும் இவ்வூர் வழியாகச் செல்கிறது.

மயிலாடுதுறையிலிருந்து நாங்கூர் செல்லும் பேருந்து எண்.28, மங்கைமடம் செல்லும் பேருந்து எண்.12, பெருந்தோட்டம் செல்லும் பேருந்து எண்.34 (ஆனந்த்) ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளும் திருவெண்காட்டின் வழியாகச் செல்கின்றன.

நாகையிலிருந்து வருவோர் கருவி முக்கூட்டில் இறங்கி திருவெண்காட்டிற்கு வரும் பேருந்தில் வரவேண்டும். பூம்புகார் மேலையூரில் இறங்குவோர் திருவெண்காடு வழியாகச் செல்லும் பேருந்துகளில் வரலாம்.

சென்னையில் இருந்து செல்ல விரும்புபவர்கள் சீர்காழி சென்றடைய ஏராளமான அரசுப் பேருந்துகள் உள்ளது. சீர்காழியில் இறங்கி அங்கிருந்து வாடகை கார் பிடித்து சென்று வரலாம். சென்னையில் இருந்து காரில் செல்லும் வசதி உடையவர்கள் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் கடந்து சீர்காழியை அடையலாம் காரில் செல்பவர்கள் சீர்காழி நகருக்குள் செல்வதை தவிர்ப்பது நல்லது.

நாகை-காரைக்கால் பைபாஸ் சாலையில் சென்று திருவெண்காடுக்கு எளிதில் செல்லலாம். பஸ்சில் செல்பவர்கள் திட்டமிட்டு பயணத்தை அமைத்து கொள்ள வேண்டும். சென்னையில் இருந்து அதிகாலையிலேயே புறப்பட்டு விட்டால் 11 மணிக்கெல்லாம் சென்று சேர்ந்து விடலாம். மதியம் 1 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

அதற்குள் வழிபாடுகளை முடித்து விட்டு, மதியம் ஆலயத்தில் சற்று ஓய்வு எடுத்து விட்டு பிற்பகலில் புறப்பட்டால் இரவில் சென்னை வந்து சேர்ந்து விடலாம். ஆனால் பயணத்துக்கான திட்டமிடல் சரியாக இருத்தல் வேண்டும்.

திருப்பணிகள்

முதலாம் இராசராச சோழன் காலத்தில் (கி.பி. 985-1014) கல்வெட்டு இங்குள்ளதால் இக்கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கற்றளியாகி இருத்தல் வேண்டும். அதற்கு முன் செங்கல் கோவிலாக இருந்திருத்தல் வேண்டும். மூலஸ்தானமும் சுற்றுக்கோவில்களும் கருங்கல்லால் கட்டப்பெற்றவை. மூலஸ்தான விமானம் ஒரே கருங்கல்லால் ஆனது. திரிபுவனச் சக்ரவர்த்தி கோனேரின்மை கொண்டான் காலத்தில் வைத்தியச் சக்ரவர்த்தி என்பவர் அரசன் பெயரால் வீரபாண்டீச்சுரம் உடையார் கோவிலும் வேயனதோளி நாச்சியார் கோவிலும் கட்டியதை ஒரு கல்வெட்டால் அறிகிறோம். விக்கிரமசோழன் மண்டபம் விக்கிர சோழனால் கட்டப்பட்டிருக்கலாம்.

தஞ்சாவூர் மகாராட்டிர மன்னர் துக்கோஜி காலத்தில் (கி.பி. 1730) ஸ்ரீ தண்டாயுதபண்டாரம் என்பவர் பெரிய நாயகி அம்மன் கோவிலின் மதில்சுவரைக் கட்டி உள்ளார். தருமை ஆதீனத்தைச் சேர்ந்த வெள்ளியம்பல வாணத்தம்பிரான் சுவாமிகளால் நடராச சபை கட்டப்பெற்றுள்ளது. தேவக்கோட்டை மு.இராம.சுப.சுப்ரமணியன் செட்டியார் அவர்களால் பெரியநாயகி அம்பாள் திருக்கோவில் திருப்பணி 21.6.1937 அன்று தொடங்கப் பெற்று அவர்களுடைய குமாரர்கள் வெங்கடாசலம் செட்டியார், சுவாமிநாதன் செட்டியார் ஆகியோர்களால் நிறைவு செய்யப் பெற்றுள்ளது. 16.6.1940-ல் திருக் குடமுழுக்கு நடத்தப்பெற்றுள்ளது. பிற கோவில்களும் விமானங்களும் புதுப்பிக்கப் பெற்ற குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

1959-ல் திருக்கல்யாண மண்டபம் ரூ. 26,000 செலவில் கட்டப்பெற்றது. 1961-ல் அகோரமூர்த்தி உற்சவருக்கும் மெய்கண்டாருக்கும் கோவில்கள் கட்டப்பெற்றன. 26.3.1991-ல் திருக்குடமுழுக்கு நடைபெற்றது.

இராசகோபுரங்களைத் திருப்பணி செய்து அனைத்து சன்னதிகளையும் செப்பணிட்டு மீண்டும் குடமுழுக்கு 13-7-86 அன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 2016-ல் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

வழிபாடு செய்வது எப்படி?

1. முதலில் ஐந்து நிலைகளையுடைய கிழக்கு வாசல் ராஜகோபுரத்தை தரிசனம் செய்து, இருகரம் கூப்பி வணங்கி, நிலைப்படி யில் சூடம் வைத்துத் தொட்டு வணங்கி ஆலயத் தின் உள்ளே நுழைய வேண்டும்.

2. பிறகு தெற்குப் பக்கத்திலுள்ள அக்கினி தீர்த்தத்தில் நீராடி, பிறகு கரையில் உள்ள விநாயகரிடம் வழிபட்டுப் பணிவுடன் விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும். “எனது இந்த பரிகார வழிபாடு நல்ல முறையில் அமைய அருள் புரிய வேண்டும்!” என வேண்டி, அடுத்து அங்குள்ள அக்கினி பகவானையும், மெய்கண்ட தேவரையும் வழிபட வேண்டும்.

3. அடுத்தபடியாகச் சூரிய பகவானை வேண்டி, சூரிய தீர்த்தத்தில் நீராட வேண்டும்.

4. பிறகு மேலக் கோபுர வாயிலில் உள்ள ஆறுமுகப் பெருமானை வணங்கிட வேண்டும்.

5. பின் அம்பாள் சந்நிதியில் உள்ள பிள்ளையிடுக்கி அம்மனை வழிபட்டு, பள்ளியறைக்கு வந்து தாலாட்டுப் பாடித் தொட்டிலை ஆட்டிவிட்டு வணங்கி வெளியே வர வேண்டும்.

6. இதன்பின் கிழக்குக் கோபுர வாயிலின் வலது பக்கம் உள்ள தீர்த்தக் கிணறு தீர்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு, எதிரே உள்ள கொடி மரத்தை தொட்டு வணங்கி, அடுத்துள்ள பலிபீடத்து முன் சென்று நமது அகந்தை, கோபம், ஆசை என்னும் மும்முலங்களையும் இங்கு பலியிடுகிறேன் என சங்கல்பம் செய்து கொண்டு, அடுத்து நந்திதேவரிடம் வணங்கி, பணிவாக அவரது இடது காதில், ‘உள்ளே செல்ல அனுமதி அளியுங்கள்!’ என்று கேட்டு, ஓம் என்னும் மந்திரத்தை ஓதி உள்ளே செல்ல வேண்டும்.

7. அதன்பிறகு இடது பக்கம் திரும்பி நாயன்மார் அறுபத்து மூவர், பெரியவாரணப் பிள்ளையார்,சோமஸ்கந்தர், பத்திரகாளி, திருமால், லட்சுமி, சரசுவதி, அகோரமூர்த்தி, நடராஜர் தரிசனம், அகோரமூர்த்தி உற்சவர், நடராஜர் சன்னிதியில் ஸ்படிக லிங்கம், சிதம்பர ரகசியம் முதலியவற்றை தரிசித்து, பின் சுவேதலிங்கம், துர்கை அம்மன், நவக்கிரகம் முதலியவற்றை வேண்டி வழிபட்டு வர வேண்டும்.

8. இதன் பின் மூலவர் சன்னதிக்குச் சென்று இரு பக்கத்திலும் உள்ள துவார பாலகர்களை வழிபட்டு, உள்ளே சென்று மேலே கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோரை வழிபட்டு, தெற்கு பகுதியில் மேலே, கோஷ்டத்தில் அதே வடிவில் உள்ள சட்டைநாதரையும் வழிபட வேண்டும்.

9. இதன்பின் சந்திர குளத்தில் நீராடி விட்டு, பின் மேற்கு நோக்கி உள்ள மூலவர் அவேதாண் யேசுவரரை அபிஷேகம், அர்ச்சனை செய்வித்து, அதன் பிறகு அம்பாள் சன்னதிக்குச் சென்று பிரம்ம வித்யாம்பிகைக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்விக்க வேண்டும். அதற்கு முன் அங்குள்ள விநாயகரையும் வழி பட்டுக் கொள்ள வேண்டும்.

10. இதன் பிறகு பிரம்மா சமாதி, வில்வ தலமரம், கொன்றை தல மரம் வழிபட்டு, சந்திர பகவான் வழிபட்ட சோமேச லிங்கத்தை வழிபட்டு, அங்குள்ள விநாயகரையும் வழிபட்டு, தலமரமாகிய வடவால் மரத்தை வலம் வந்து, ருத்ர பாதத்தையும் வழிபட வேண்டும்.

11. பின் புதன் பகவானின் தந்தையாகிய சந்திர பகவானை வழிபட்டு விட்டு, இறுதியாக நாம் பரிகாரம் செய்ய வேண்டிய புதன் பகவானை வழிபடுதல் வேண்டும், அவருக்கு அபிஷேக ஆராதனை செய்வித்து, அவருக்குரிய பரிகாரங்களையும் செய்வித்து, புதன் பகவானை மனம் குளிர வழிபட வேண்டும்.

12. பிறகு புதன் பகவானுக்கு 17 தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.17 தடவை வலம் வர வேண்டும்.

13. அடுத்ததாகச் சண்டீசுவரரை வழிபட்டு விடை பெற வேண்டும்.

14. அடுத்தபடியாகக் கிழக்கு வாசல் முன்பு வந்து, கொடி கம்பத்தின் முன்பாக, வடக்கு பக்கம் தலை வைத்து, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்ய வேண்டும்.

15. பின்னர் ஆலயத்தின் ஒரு பகுதியில் அமர்ந்து, விநாயகர், இறைவன், அம்பாள், நடராஜர், சந்திர பகவான், புதன் பகவான், அகோரர் போன்ற அங்குள்ள அனைத்து கடவுள்களையும் தியானித்து நம் வேண்டுகோளை ஏற்று, நமது குறைகளை போக்கி, அருள் புரிய வேண்டும் எனப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

16. இதன் பிறகு கிழக்குக் கோபுர வாசலை விட்டு வெளியே வந்து அங்குள்ள சாதுக்களுக்கு முடிந்தளவு தான, தர்மங்கள் செய்து, நமது தோஷங்கள் யாவும் நீங்கியதாக மன நிம்மதியுடன் ஆலயத்தை விட்டு வர வேண்டும்.

பக்தர்கள் கவனத்திற்கு

திருவெண்காடு ஆகிய இத்திருத்தலம் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் பாதையில் உள்ளது. சீர்காழிக்குத் தென் கிழக்கே 17 கி.மீ. தூரத்திலும், பூம்புகாருக்கு மேற்கே 10 கி.மீ. தூரத்திலும், வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து தென்கிழக்கே 11 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. மயிலாடு துறையில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. கும்ப கோணத்தில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ளது.

மூன்று தல விருட்சங்கள்

பழங்காலத்தில் மக்கள் மரங்களின் அடியிலேயே தெய்வங்களை வைத்து வழிபட்டனர். பின்னர் களிமண், செங்கல், மரம் இவைகளால் கோவில் அமைத்தனர். அவை அழிந்துபோகும் பொருள்கள் என்பதால் கற்பாறைகளைக் குடைந்து கோவில் அமைத்தனர்.

அந்தகுடை கோவில்களையே குகைக்கோவில்கள் என்று அழைக்கலாயிற்று நாளடைவில் கற்பாறைகளை உடைத்து அவைகளைக்கொண்டு கருங்கற்கள் கொண்டு கோவில்கள் கட்டினர்.

மரங்களின் அடியில் ஆதியில் கோவில்கள் ஏற்பட்டதால் அந்த மரங்களைப் புனிதமாகக்கருதி அவைகளைத்தலவிருட்சங்கள் எனப்பெயரிட்டு அழைத்தனர். அந்த மரங்களின் பெயர்களாலேயே பல தலங்களின் பெயர்களும் ஏற்பட்டன.

தில்லைவனம் (சிதம்பரம்), கடம்பவனம் (மதுரை), சண்பகவனம் (திருமுருகன்பூட்டி), வேணுவனம் (திருநெல்வேலி), திருஆலங்காடு, கச்சி நெறிக்காரைக்காடு, பனங்காடு, பனையூர், வேற்காடு முதலியவை அத்தகையன. திருவெண்காட்டு தலத்துக்கும் வில்லவனம் என்ற ஒரு பெயருண்டு.

சாதாரணமாக, பெரும்பாலான தலங்களில் ஒரே ஒரு தலவிருட்சம்தான் இருக்கும். ஆனால் திருவெண்காட்டில் மூன்று தலவிருட்சங்கள் உள்ளன. அவை வடவால், கொன்றை, வில்வம் அகியவையாகும். இந்த மூன்று தல விருட்சங்களில் உள்ள சிறப்புகள் வருமாறு:-

வடவால் விருட்சம்: சந்திர தீர்த்தத்தின் அருகில் இந்த தல விருட்சம் இருக்கிறது. தழைத்து நிழல் பரப்பி அழகுடன் விளங்குகிறது. கயாசேத்திரத்திலுள்ளது போலவே இது அஷயவடம் என்னும் அழியாத ஆலமரம். கயாவை விஷ்ணுபாதம் என்றும் திருவெண்காட்டில் உள்ளதை ருத்ரபாதம் என்றும் கூறுவர். இந்த ஆலமரத்தின் அடியில் இருக்கும் இருபாதங்கள் பக்கத்தில் ருத்ரபாதம் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இம்மரத்தடியில் மக்கள் பிதிர்க்கடன் செய்து செல்கின்றார்கள்.

வில்வமரம்: அம்பிகை கோவிலுக்கு வடக்கேயுள்ள பிரம சமாதியின் அருகே இருக்கிறது. கொன்றை மரம்: வெளிப் பிரகாரத்தில் அகோரமூர்த்தியின் பின்புறம் சந்திர தீர்த்தத்தின் தென்கரையில் இருக்கிறது.

பிள்ளையிடுக்கி அம்மன்

திருஞான சம்பந்தர் திருவெண்காட்டின் வட எல்லைக்கு வந்த போது அவருக்க ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. ஆதலின், இத்தலத்தை மிதித்தற்கஞ்சி அம்மா என்று அழைத்தார். அது கேட்டுப் பெரிய நாயகி அம்மை அங்குத் தோன்றி ஆளுடைய பிள்ளையை இடுப்பில் கோவிலுக்கு எடுத்து வந்தார். பிள்ளையைத்தம் இடுப்பில் தாங்கிய வடிவில் உள்ள அம்பாளின் சிலை பிரம்மவித்தியாம்பிகை கோவிலின் மேற்கு உட்பிரகாரத்தில் உள்ளது. சம்பந்தர் அம்பாளைக் கூப்பிட்ட இடத்திலுள்ள குளத்தைக் கூப்பிட்டான் குளம் என்பர், அது இன்று கேட்டான் குளம் என்று வழங்குகிறது. அங்குள்ள விநாயகரின் பெயர் ஞானசம்பந்த விநாயகர்.

விலங்கு தறித்த விநாயகர்

இத்தொல்பதியின் தென்மேற்குத் திசையில் எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீ விலங்கு தறித்த விநாயகர். துறவி பூண்ட பட்டினத்தடிகள் தம் சொத்துக்களை ஊரார் எடுத்துச் செல்லும்படி நிதியறையைத் திறந்துவிடுமாறு தம் கணக்கர் சேந்தனாருக்கு ஆணையிட்டார். அதன்படிச் செய்த சேந்தனாரை, இழந்த பொருட்களுக்குக் கணக்குக் காட்ட வேண்டும் என்று கூறி, அரசன் விலங்கு பூட்டிச் சிறையில் அடைத்தான். சேந்தனாரின் மனைவி மக்கள் அதனைப் பட்டினத்தடிகளிடம் சென்று கூறினர். பட்டினத்தடிகள் வெண்காட்டு இறைவனிடம்,

மத்தளைத் தயிருண்டானும் மலர்மிசை மன்னினானும்நித்தமும் தேடிக்காணா நிமலனே யமலமுர்த்தி செய்தளைக் கயல்பாய் நாங்கூர்ச் சேந்தனை வேந்தனிட்ட கைத்தளை நீக்கியென் முன் காட்டு வெண் காட்டுளானே என வேண்டினார்.

சிவபெருமான் கட்டளைப்படி விநாயகர் சேந்தனாரின் விலங்கைத் தறித்து (உடைத்து) அவரைச் சிறையினின்று விடுவித்தார். அதனால் விலங்கு தறித்த விநாயகர் என்னும் பெயர் பெற்றார். இன்றும் பட்டினத்தடிகள் சிவதீட்சைக்காகத் திருவெண்காட்டிற்கு எழுந்தருளும்போது விலங்கு தறித்த விநாயகரை வந்து வணங்கிச் செல்லுகிற விழா நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

எல்லாமே மூன்று  :

இத்தலத்தின் சிறப்பு மூன்று மூர்த்திகள், மூன்று சக்திகள், மூன்று தல விருட்சங்கள், மூன்று தீர்த்தங்கள் என்பனவாகும். ‘சுவேதாரண்யர்’, ‘அகோரர்’, ‘நடராசர்’ என்பவர் மும்மூர்த்திகள். ‘பிரம்மவித்யா நாயகி’, ‘துர்க்கை’, ‘காளி’ என்பவை மூன்று சக்திகள். வடஆலமரம், கொன்றை, வில்வம் என்பன மூன்று தல விருட்சங்கள். அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் மூன்று தீர்த்தங்கள்.

ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை :

மாசி மாதம், கிருஷ்ணபட்சம், பிரதமை திதி, பூர நட்சத்திரம், ஞாயிற்றுக்கிழமை, இரவு 12 மணிக்கு அகோரமூர்த்தி தோன்றினார். இதே காலத்தில் ஆண்டு தோறும் அகோரமூர்த்தி மருத்துவாசுரனை அடக்கும் ஐந்தாம் திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு மேல், இரண்டாங் கால முடிவில், அகோர பூசை நடைபெற்று வருகின்றது. கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக் கிழமைகளில் மிக விசேஷமாகப் பூசை நடைபெறுகிறது.

ஆலயத் திருவிழாக்கள் :

சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை 12 மாதங்களிலும் திருவிழா கொண்டாடும் சிறப்புடைய திருத்தலம் இது. அதன் விவரம் இதோ:

சித்திரை மாதம்:- திருவோண நட்சத்திரத்தில் நடராஜர் அபிஷேகம்.

வைகாசி மாதம்:- அமாவாசையில் சிவப்பிரியர் மணிகர்ணிகையில் தீர்த்தமாடுதல், வெள்ளை யானைக்குச் சாப விமோசனம்.

ஆனி மாதம்:- உத்திர நட்சத்திரத்தில் நடராசருக்கு அபிஷேகம்.

ஆடி மாதம்:- பட்டினத்தார் சிவ தீட்சை பெறத் திருவெண்காட்டிற்கு வருதல். சிவபெருமான் பிட்சாடனர் வடிவில் மணிகர்ணிகையில் தீர்த்தம் கொடுத்தல்.

சிவபூஜை செய்வித்தல், இரவு ரிஷப வாகனராய்க் காட்சி தருதல், அம்பாளுக்கு ஆடிப்பூரம் பத்து நாள் விழா. ஆடி அமாவாசைக்குச் சங்கமத்திற்கு சுவாமி எழுந்தருளல்.

ஆவணி மாதம்:- வளர்பிறை சதுர்த்தசியில் நடராசருக்கு அபிஷேகம். கோகுலாஷ்டமி பெருமாள் சேவை. விநாயகர் சதுர்த்தி. ஆவணி மூலம் அன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு.

புரட்டாசி மாதம்:- வளர்பிறைச் சதுர்த்தசியில் நடராஜர் அபிஷேகம். நிறைபணி. தேவேந்திர பூசை. நவராத்திரி விழா. விஜயதசமியன்று சுவாமி மணிகர்ணிகை தீர்த்தக் கரையில் அம்பு போடல். அம்பாளுக்கு லட்சார்ச்சனை முதலிய விழாக்கள் நடைபெறுகின்றன.

ஐப்பசி மாதம்:- அசுவினி நட்சத்திரத்தில் அன்னாபிஷேகம். வளர்பிறை பிரதமை தொடங்கி கந்தசஷ்டி விழா முதலியன சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

கார்த்திகை மாதம்:- ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் ஸ்ரீஅகோரமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், பூசையும் நடைபெறும். மூன்றாவது ஞாயிறன்று மகாருத்ராபிஷேகமும், விபூதி அலங்காரமும் நடைபெறும். சோமவாரம் (திங்கள்கிழமை) தோறும் சுவேதாரண்யேசுவரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும். பரணி, கார்த்திகை தீப விழாக்கள் கொண்டாடப்படுகிறது.

மார்கழி மாதம்:- தனுர்மாத பூஜை, சதயத்தன்று மாணிக்க வாசகர் விழா, டோலோற்சவம் திருவாதிரையில் ஸ்ரீநடராஜர் தரிசனம் நடைபெறும்.

தை மாதம்:- சங்கராந்தி, மறுநாள் அம்பாள் கனுகுளிக்க மணிகர்ணிகைக்குப் போதல், மாலை சுவாமி குதிரை வாகனத்தில் பரிவேட்டைச் செல்லுதல். ஐயனாருக்குப் பத்து நாட்கள் விழா, பிடாரிக்குப் பத்து நாட்கள் விழா.

மாசி மாதம்:- முதல் நாள் இந்திரப் பெருவிழா, வளர்பிறை துவாதசி புனர்பூசத்தில் கொடியேற்றம். 2-ம் நாள் திருவிழா. 3-ம் நாள் திருவிழா. சுவேகேதுவைப் பிடித்த எமனை எரித்தல். பூ வாகனம் மொட்டைச் சப்ரம். 4-ம் நாள் திருவிழா மகம் பவுர்ணமி திதியில் காவிரி சங்கமத்துறைக்குச் சுவாமி எழுந்தருளல். 5-ம் நாள் திருவிழா. பூர நட்சத்திரம், ஸ்ரீஅகோரமூர்த்தி எழுந்தருளல். இரவு மருத்துவாசுர சங்காரம் ரிஷப வாகனக் காட்சி, தெருவடைச்சான்.

6-ம் நாள் திருவிழா யானை வாகனம். 7-ம் நாள் திருவிழா திருக்கல்யாணம். புஷ்ப பல்லக்கு. 8-ம் நாள் திருவிழா பிட்சாடனர் விழா. அறுபத்து மூவர் வீதி உலா. 9-ம் நாள் திருவிழா. திருத்தேர். 10-ம் நாள் திருவிழா காலை ஸ்ரீநடராஜர் வீதியுலா. முக்குளத்தீர்த்தம் கொடுத்தல் மாலை பஞ்ச மூர்த்திகள் ரிஷப வாகனத்தில் மணிகர்ணிகைக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல். 11-ம் நாள் திருவிழா தெப்பத் திருவிழா.

பங்குனி மாதம்:- சுக்லபட்சப் பிரதமையில் ஸ்ரீஅகோரமூர்த்திக்கு லட்சார்ச்சனை ஆரம்பம். பங்குனி உத்திரத்தில் (பவுர்ணமியில்) பூர்த்தி, மறுதினம் விடையாற்றி.

தினமும் 50 பேருக்கு அன்னதானம்

தானத்தில் சிறந்தது அன்ன தானம் என்ற முதுமொழிக்கேற்ப நன் கொடையாளர்கள் பங்கேற் புடன் கூடிய மதிய உணவு வழங்கும் அன்னதானத் திட்டம் தமிழக முதல் வரின் ஆணைக்கிணங்க இத் திருக்கோவிலில் 15-2-2002 முதல் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. தினமும் சுமார் 50 பக்தர்களுக்குக் குறையாமல் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டச் செலவுக்காக நாள் ஒன்றுக்கு ரூ.1000 செலுத்தித் தாங்களும் இத்திட்டத்தில் நன்கொடையாளராய்ப் பங்கேற்று அன்னதானம் செய்யலாம்.

இதனையே நிரந்தர வைப்பு நிதியாக ஒருமுறை ரூ.15000-ம் முதலீடு செய்து கட்டளை ஏற்படுத்தி தாங்கள் விரும்பும் நாட்களில் பிறந்த நாள், திருமண நாள் என வாழ்நாளின் முக்கிய நாட்களில் ஏதேனும் ஒருநாளில் அன்னதானம் செய்து மன நிறைவும், இறையருளும் பெறலாம்.

அன்னதானத்திட்டத்திற்கு மளிகைப் பொருட்களாகவோ, அரிசியாகவோ, காய்கறியாகவோ, ரொக்க மாகவோ, வங்கி வரை வோலை-காசோலையாகவோ வழங்கலாம். தாங்கள் வழங்கும் தொகைக்கு (சட்டப்பிரிவு 80ஜி) படி வருமானவரி விலக்கு பெறப்பட்டுள்ளது.

நித்திய பூஜைகள்

திருவெண்காடு கோவிலில் தினசரி ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. அவையானவை

1. திருப்பள்ளி எழுச்சி    காலை    6.00    - 7.00

2. காலசந்தி    காலை    8.30    - 10.00

3. உச்சிகாலம்    பகல்    11.00    - 12.00

4. சாயரட்சை    மாலை    5.30    - 6.30

5. இரண்டாம் காலம்    இரவு    7.30    - 8.30

6. அர்த்தசாமம்    இரவு    8.30    - 9.30

கோவில் நடைமுறையில் உள்ள கட்டணங்கள்

1. அஷ்டோத்திரம் - ரூ. 5.00

2. சகஸ்ரநாமம் - ரூ. 3.00

3. புதன் கவசம் சார்த்த - ரூ. 100.00

4. ஸ்ரீஅகோரமூர்த்தி கவசம் சார்த்த - ரூ. 500.00

5. அருள்மிகு புதன் கட்டளைஅர்ச்சனை (ஒரு வருடம்) - ரூ. 600.00

6. அருள்மிகு புதன் பால் அபிஷேகம் - ரூ. 300.00

7. அருள்மிகு புதன் பரிகாரம் - ரூ. 200.00

8. அருள்மிகு புதன் ஹோமம் - ரூ. 2000.00

9. அருள்மிகு புதன் திரவிய அபிஷேகம் - ரூ. 750.00

10. அருள்மிகு ஸ்ரீஅகோரமூர்த்தி அபிஷேகம் - ரூ. 1500.00

11. திலஹோமம் - ரூ. 500.00

12. திதி கட்டணம் - ரூ. 100.00

13. தர்ப்பன கட்டணம் - ரூ. 100.00

14. வஸ்திர கட்டணம் - ரூ. 5.00

15. அன்னதானம் 100 நபருக்கு நாள் ஒன்றுக்கு கட்டணம் - ரூ. 2000

16. அன்னதான கட்டளை (நிரந்தர முதலீடு) - ரூ. 20000.00

17. ஒருமுறை அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்ப - ரூ. 50.00

18. 10 வாரம் அர்ச்சனை செய்ய - ரூ. 500

நித்ய ஆராதனை கட்டளை திட்டம்

இத்திருக்கோவிலில் நித்ய ஆராதனையில் பலரும் பங்கேற்கும் வகையில் நித்திய ஆராதனை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பக்தர்கள் இத்திட்டத்தில் பங்கேற்க ரூ.2,000, ரூ.5,000, ரூ.10000 அல்லது அதற்கு மேலும் நிதியாக அளித்து இத்திட்டத்தில் பங்கேற்கலாம். தாங்கள் விரும்பும் நாளில் சுவாமிக்கு ஆராதனை அர்ச்சனை செய்து விபூதி, குங்குமம் பிரசாதம் தபால் மூலம் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

நன்கொடைகள் அனுப்ப வேண்டிய முகவரி :

செயல் அலுவலர்

அருள்மிகு சுவேதாரண்யேஸ்வர சுவாமி திருக்கோவில்

திருவெண்காடு-60-9 114.

சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்,

போன் : 04364 - 256424

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் திருவடிகளே போற்றி

_ஏன் பூரி ஜெகநாதர் கோவிலில் பறவைகள் பறப்பதில்லை

_ஏன் பூரி ஜெகநாதர் கோவிலில் பறவைகள் பறப்பதில்லை என்பது இதுவரை அறியப்படாத அமானுஷ்யமாகும்..!!என்பதை - விளக்கும் எளிய கதை


”பூரி ஜெகநாதர் கோவிலில் இருக்கும் மடப்பள்ளி உலகிலேயே பெரிய மடப்பள்ளியாக விளங்குகிறது. இந்த கோவிலில் சமைக்கும் பிரசாதம் எப்போதும் ஒரே அளவில் தான் இருக்கும் .

ஆனால், பக்தர்களின் வருகை கூடினாலும், குறைந்தாலும் தயாராகும் பிரசாதம் ஒருபோதும் பக்தர்களுக்கு பற்றாமல் போனதில்லை; அது போல மீதமும் ஆவதில்லை . இந்த அதிசயம் யாருக்கும் விளங்கவில்லை.

இந்த கோவில் கோபுரத்தில் அமைந்துள்ள சுதர்சன சக்கரம், நகரின் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் உங்களை நோக்கி பார்ப்பது போலவே காட்சி அளிக்கும். அப்படி ஏன் தெரிகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.

அதே போல் அந்த சக்கரத்தின் மேலே ஒரு கொடி பறந்து கொண்டு இருக்கும். உயரம் 214 அடி. அபரிமிதமான மழை என்றாலும், குளிர் என்றாலும், வெயில் என்றாலும், மூன்று பேர் கொண்ட குழு எவ்வித கஷ்டமும் இன்றி உச்சிக்குச் சென்று தினமும் கொடி ஏற்றுவர்.

இது சாதரணக்கொடி அல்ல, ஏன் என்றால் இந்த கொடியானது காற்று எந்த பக்கம் வீசுகிறதோ, அதற்கு எதிர் திசையில் பறக்கும். அது ஏன் என்று இன்று வரை மிகப்பெரிய விஞ்ஞானிகளால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த ஜகன்நாதர் கோபுரத்தின் நிழல் எந்த நேரத்திலும் தரையில் படுவதில்லை.

இந்த கோவில் அமைந்துள்ள பகுதிக்கு மேல் விமானங்களோ, பறவைகளோ பறப்பதில்லை.

சாதாரணமாக பறவைகள் கோவில் கோபுரங்களில் கூடு கட்டி வாழும், பல பறவைகள் கோவில் கோபுரத்தில் அமரும் , ஆனால் இந்த கோவிலில் எதிர்மறையாக ஒரு பறவையை கூட பார்க்க முடியாது. அப்படி ஏன் பூரி ஜெகநாதர் கோவிலில் பறவைகள் பறப்பதில்லை என்பது இதுவரை அறியப்படாத அமானுஷ்யமாகும்.

கடற்கரையை ஒட்டி ஜெகந்நாதர் இருந்தாலும், கோவிலின் முதல் படியை தாண்டினால் கொஞ்சமும் கடல் அலைகளின் சத்தம் கேட்பதில்லை.

மடப்பள்ளியில் இன்று வரை விறகு அடுப்பு வைத்து, மண் பானைகளை கொண்டு தான் சமைக்கிறார்கள். இந்த மண் பானைகளை ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு அடுக்குகள் வைத்து கீழே தீ மூட்டுகிறார்கள்.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் கீழ் பானையில் உள்ள அரிசி கடைசியாகவும் மேல் பானையில் உள்ள அரிசி முதலாவதாகவும் வேகும். இது எப்படி சாத்தியம் என்றால் பதில் அந்த ஜகன்னதருக்கு தான் தெரியும்*.

*ஜெய் ஜகன்னதா ஜெய்.. ஜெய் ஜகன்னதா*

Sunday, October 30, 2022

ஒரு கட்டத்தில் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை நளன் வணங்கினான். அப்போது சனி அவனை விட்டு நீங்கியது

சிவாயநம
நமசிவாய

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயம்.

எல்லாம்வல்ல எம்பெருமான் ஈசன் திருவருளால் உலகசிவனடியார்கள் திருக்கூட்ட சிவனடியார்களுடன் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயதரிசனம்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வட்டம்
காரைக்காலில் இருந்து மேற்கே 5 கி.மீ தூரத்தில் உள்ள  சுமார் 1000-2000  வருடங்களுக்கு மேல்  மிக பழமை வாய்ந்த,
காவிரி தென்கரைத்தலங்களில் 52 வது தலமாகவும்
தேவாரபாடல் பெற்ற  276 தலங்களில் 115 வது தலமாகவும் விளங்கும்,

நிடதநாட்டு மன்னன் நளன் சேதி நாட்டு இளவரசி தமயந்தியை திருமணம் செய்தான். இப்பெண்ணை தேவர்கள் மணக்க விரும்பினர். ஆனால், நளனை அவள் திருமணம் செய்ததால் பொறாமை கொண்டு, சனீஸ்வரனை நாடினர். சனீஸ்வரன் நளனின் தூய்மையான மனநிலையை அவர்களுக்கு உணர்த்த, அவனை ஏழரை ஆண்டுகள் பிடித்து துன்பப்படுத்தினார். மனைவி, மக்களையும், உடுத்தும் துணியைக் கூட இழந்து அவஸ்தைப்பட்ட மன்னன் நளன் எதற்கும் கலங்கவில்லை.

ஒரு கட்டத்தில் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை நளன் வணங்கினான். அப்போது சனி அவனை விட்டு நீங்கியது. அவனது வேண்டுகோளின் படி இதே தலத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து ஈஸ்வர பட்டத்துடன் "சனீஸ்வரன்' என்ற பெயர் தாங்கி அருள்பாலித்தார். கிழக்கு நோக்கிய சனீஸ்வரன் என்பதாலும், சிவனருள் பெற்றவர் என்பதாலும், இவரை வழிபட்டு, சனியினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கப் பெறலாம். நளசரிதம் படித்தவர்களும் சனித்தொல்லை நீங்கப் பெற்று, வாழ்வில் தன்னம்பிக்கை பெறுவர்.

 இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கியிருப்பதைக் காணலாம். இடையன் ஒருவன் அரசன் ஆணைப்படி கோயிலுக்குப் பால் அளந்து கொடுத்துவந்தான். கணக்கன் அப்பாலைத் தன்வீட்டுக்கு அனுப்பிப் பொய்க்கணக்கு எழுதி, இடையனையும் அச்சுறுத்தி வந்தான். செய்தியறிந்த மன்னன் கோபம் கொண்டான். அப்போது இறைவன், இடையனைக் காக்கவும், கணக்கனைத் தண்டிக்கவும் எண்ணி தம் சூலத்தை ஏவினார். அந்த சூலத்திற்கு வழிவிடவே இக்கோயிலில் பலிபீடம் சற்று விலகியுள்ளது. சூலம் கணக்கன் தலையைக் கொய்தது. இடையனுக்கு இறைவன் காட்சி தந்து அருள்புரிந்ததாக
தலவரலாறு கூறும்
தலமாக திகழும்

மூவரால்  பதிகம் பாடப் பெற்ற தலமாகவும் விளங்கும் 

திருநள்ளாறு
என்னும் ஊரில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்தரும்  போகமார்த்த பூண்முலையாள் (பிராணாம்பிகை)
அம்பாள் உடனுறை அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தை தரிசிக்கும் பாக்கியத்தை எம்பெருமான் அடியேனுக்கு அளித்தார்.

மேலும் அடியார்பெருமக்கள் அனைவரும் இங்கு வந்து இந்த ஈசனை வழிபட்டு இவரின் திருவருளை பெற இறைவனிடம் விண்ணப்பம் செய்கிறோம்.

திருச்சிற்றம்பலம்.

🙏உழவாரப்பணி என்றால் என்ன

*🙏உழவாரப்பணி என்றால் என்ன?*
*இதைவிடச் சிறந்த புண்ணியம் வேறில்லை.கோயிலுக்கு நடத்துவதை விட மேலான புண்ணியத்தை உழவாரப்பணி தரும்*

*உழவார பணி என்றால் என்ன?*

* ஆலயத்திற்குள் சென்றவுடன் இறைவன் நமக்கு தரும் அல்லது உணர்த்தும் பணியே உழவாரப்பணி எனப்படும்*

*அவையாவன:*

*1. பக்தர்கள் கோயிலில் போடும் குப்பைகளை எடுத்து குப்பை கூடங்களில் போடுவது*

*2. பக்தர்கள் இறைவன் அருள் வேண்டாம் என சொல்லி தூண்களில் கொட்டும்  திருநீறு குங்குமம் போன்றவற்றை சுத்தம் செய்வது*

*3. இறைவனுக்கு சாற்றப்படும் நிர்மால்ய பூக்களை எடுத்து நந்தவனத்தில் போடும் பணி.*

*4. திருக்கோயில்களில் சூழ்ந்திருக்கும் ஒட்டடைகள் அழுக்குகள் ஆகியவைகள் நீக்குவது..*

*5. சுவாமியின் ஆடைகளை துவைப்பது.*

*6. அழுக்கு படிந்த விளக்குகளை தூய்மையாக்குவது.*

*7. நந்தவனத்தை தூய்மைபடுத்துவது.*

*8. தேங்கியிருக்கும் தண்ணீரை சுத்தப்படுத்துவது*

*9. கோபுரங்களில் முளைத்திருக்கும் செடி கொடிகளை அகற்றுவது.*

*10. சிவாச்சாரியார்களின் அனுமதி பெற்று திருக்கோயிலின் கொடிமரம் உற்சவ மூர்த்திகளை இயற்கை மூலிகை கொண்டு தூய்மைபடுத்துவது.*

*11. அறுபத்து மூவர் மற்றும் கல் திருமேனிகளுக்கு மாவு , தயிர் சாற்றி அதன்மீது படிந்திருக்கும் அழுக்குகளை நீக்குவது.*

*12. திருக்கோயில்களில் உள்ள மின்விளக்குகளை சரிசெய்வது.*

*13. வாரம் ஒரு முறை திருக்கோயிலை பசுஞ்சாணம் இட்டு மெழுகிடுவது.*

*14. திருக்கோயிலை சுற்றி கோலமிடுவது.*

*15. கோயிலில் படிந்திருக்கும் எண்ணை பிசுபிசுப்பை எடுப்பது.*

*16. கற்பூர புகையால் படிந்திருக்கும் கரும்புகைகளை துடைப்பது..*

*17.கோவில் சுற்றுச்சுவர் அல்லது மதில் சுவரை, சுத்தம் செய்து வெள்ளை அடிப்பது.போன்ற பணிகளே உழவாரப் பணி ஆகும்.*

*இப்பணிகளை குறைந்தது மாதம் ஒரு நாள் செய்வோமானால் உடலும் , மனதும் வலிமை பெறும்.*

*உழவாரம் செய்வீர் இறைவன் அருள் பெறுவீர்.*

*உழவாரப்பணி செய்யும் அன்பர்கள் பெரும்பாலும் மருத்துவமனைக்கு செல்வதில்லை* என்பது அடியார்களின் அனுபவம்.

*அடுத்த முறை உங்கள் அருகில் ஏதாவது உழவாரப்பணி நடைப்பெற்றால், தவறாமல் கலந்து கொண்டு அருள் பெறுங்கள்*!

திருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள்...

*"ஓம் முருகா"  இதை அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்*

திருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள்...
*திருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை.*

1. திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். 

*2. திருச்செந்தூரில் வீரவாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு.*

3. திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.

*4. மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்.*

5. மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங்கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்பறை என்றும் ஒரு பெயர் உண்டு. 

*6. திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.*

7. திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள். 

*8. திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.*

9. திருச்செந்தூர் முருகனே போற்றி என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 83-திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். 

*10. திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது.*

11. மூலவருக்கு பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்க அங்கி அணிவித்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைர வேல் அணிவிக்கப்படும்.

*12. திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.*

13. திருச்செந்தூர் கோவில் மூலவர் முன் உள்ள இடம் மணியடி எனப்படுகிறது. இங்கு நின்று பாலசுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. 

*14. நாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் உள்ளது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.*

15. திருச்செந்தூர் கோவில் திருப்பணிக்காக மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர். அவர்களது சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது. 

*16. தமிழகத்தில் முதன் முதலில் நாகரீகம் தோன்றிய நகரங்களுள் திருச்செந்தூரும் ஒன்று.*

17. முருகப் பெருமானோடு போரிட்ட படை வீரர்கள் அய்யனார்கள் என்று அழைக்கப்பட்டார்கள். 

*18. திருச்செந்தூர் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைபெற்று இருப்பதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.*

19. இத்திருத்தலம் மன்னார் வளைகுடாக் கடலின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திருப்பதால், அலைவாய் என்று அழைக்கப்பட்டது. பின்னர், திரு என்றும் அடைமொழி சேர்க்கப்பட்டு, ‘திருச்சீரலைவாய்’ என்று அழைக்கப்படுகின்றது. 

*20. இக்கோயிலுக்குச் செல்லும் வழியில், தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இவ்விநாயகரை வணங்கிய பின்னர்தான் முருகப் பெருமானை வணங்கச் செல்ல வேண்டும்.*

21. இத்திருக்கோயிலில் பன்னிரு சித்தர்களில் எட்டுச் சித்தர்கள் சமாதியாகி உள்ளதாகக் கூறப்படுகின்றது. 

*22. முருகப்பெருமானின் வெற்றி வேல் மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில், கடற்கரை ஓரமாக உள்ள மாப்பாடு என்ற இடம் ஆகும். இப்பகுதி தற்போது, மணப்பாடு என்று அழைக்கப்படுகின்றது.*

23. அலைவாய், திரச்சீரலைவாய், வெற்றி நகர், வியாழ சேத்திரம், அலைவாய்ச் சேறல், செந்தில், திரிபுவளமாதேவி சதுர்வேதி மங்கலம், சிந்துபுரம், ஜெயந்திபுரம், வீரவாகு பட்டி னம், என்றெல்லாம் திருச்செந்தூர் முன்பு அழைக்கப்பட்டது.

*24. முருகனின் அறுபடை வீடுகளில் இது 2-வது படை வீடு எனப்படுகிறது. ஆனால் இதுதான் முதல் படை வீடு என்ற குறிப்புகளும் உள்ளன*

25. முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே முருகனின் தலங்களில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும்.

*26. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகப்பெரிய கோவில் கொண்ட தலம் என்ற சிறப்பும் திருச்செந்தூர் கோவிலுக்கு உண்டு.*

27. முருகன் சிவந்த நிறம் உடையவன். அவன் உறைந்துள்ள தலம் என்பதால்தான் இத்தலத்துக்கு செந்தில் என்ற பெயர் ஏற்பட்டது.

*28. திருச்செந்தூர் ஊர் மத்தியில் சிவப்கொழுந்தீசுவரர் கோவில் உள்ளது. இதுதான் ஆதிமுருகன் கோவில் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.*

29. கிறிஸ்தவ மீனவர்கள் திருச்செந்தூர் முருகனை உறவுமுறை சொல்லி அழைக்கிறார்கள். திருச்செந்தூர் கோவில் திருப்பணிகளுக்கு காயல்பட்டினத்தில் வசித்த சீதக்காதி எனும் வள்ளல் நன்கொடை அளித்துள்ளார். எனவே திருச்செந்தூர் முருகன் ஆலயம் சமய ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.

*30. அருணகிரி நாதர் தன் பாடல்களில் பல இடங்களில் திருச்செந்தூரை குறிப்பிட்டுள்ளார். அவர் திருச்செந்தூரை மகா புனிதம் தங்கும் செந்தில் என்று போற்றியுள்ளார்.*

31. திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.

*32. திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் விசுவரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக, மிக முக்கியமான பூஜையாகும்.*

33. குமரகுருபரர், பகழிக் கூத்தர், ஆதி சங்கரர், உக்கிரபாண்டியனின் மகள் உள்பட ஏராளமானவர்கள் திருச்செந்தூர் முருகனின் நேரடி அருள் பெற்றனர்.

*34. முருகன், மால், ரங்கநாதப் பெருமாள் ஆகிய சைவ, வைணவ மூர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன.*

35. செந்திலாண்டவருக்கு ஆறுமுக நயினார் என்றும் பெயர் உள்ளது. திருச்செந்தூர் தாலுகா பகுதியில் வாழும் பலருக்கு நயினார் எனும் பெயர் சூட்டப்பட்டிருப்பதை காணலாம். இசுலாமியரும் நயினார் எனும் பெயர் சூட்டிக் கொண்டுள்ளனர்.

*36. வீரபாண்டிய கட்ட பொம்மனும் அவர் மனைவி சக்கம்மாவும் செந்திலாண்டவருக்கு ஏராளமான தங்க நகைகள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.*

37. மூலவர் தவக் கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.

*38. முருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருள்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, பேரீச்சம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியன இடம் பெறுகின்றன.*

39. உச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச் சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்குவார்கள்.

*40. இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகியன நிவேதனம் செய்வர்.*

41. சண்முகருக்கு ஆண்டுக்கு 36 திருமுழுக்கு மட்டுமே நடைபெறுகிறது.

சித்திரை, ஐப்பசி, தை    - 3
ஆடி, தை அமாவாசை    - 2
ஆவணி, மாசித் திருவிழா    - 10
ஐப்பசி, பங்குனி திருக்கல்யாணம்    - 2
மாத விசாகம்    - 12
ஆனி தை வருடாபிஷேகம்    - 3
தீபாவளி, மகாசிவராத்திரி    - 4
மொத்தம் = 36

*42. திருச்செந்தூர் முருகன் கோவிலின் ஆண்டு வருமானம் தற்போது சுமார் ரூ.30 கோடியாக அதிகரித்துள்ளது.*

43. திருச்செந்தூர் கோவிலில் தர்ம தரிசனம் எனப்படும் பொது தரிசனம், சிறப்பு தரிசனம் எனப்படும் ரூ.10, ரூ.20 கட்டண தரிசனம், வி.ஐ.பி.க்களுக்கான விரைவு தரிசனம் எனப்படும் ரூ.100, ரூ.250, ரூ.500 கட்டண தரிசனம் ஆகிய 3 வகை தரிசனங்கள் நடைமுறையில் உள்ளன.

*44. திருச்செந்தூர் கோவிலுக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.*

45. இத்தலத்தில் கோவில் வெளிப் பிரகாரங்களில் தூண்களில் கந்த சஷ்டி கவசம் எழுதப்பட்டுள்ளது. அதுபோல உள்பிரகாரங்களில் தல வரலாற்றை கூறும் வரை படங்களை அமைத்துள்ளனர்.

*46. திருச்செந்தூரில் உச்சிக்கால பூஜை முடிந்ததும் மணி ஒலிக்கப்பட்ட பிறகே வீரபாண்டிய கட்டபொம்மன் சாப்பிடுவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 250 ஆண்டு பழமையான, அந்த 100 கிலோ எடை கொண்ட அந்த பிரமாண்ட மணி தற்போது ராஜகோபுரம் 9-ம் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.*

47. சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகன் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார். அதை உணர்த்தும் வகையில் இன்றும் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் உள்ளது. முதல் 6 நாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம் நடைபெறும். 7-ம் நாள் முருகன்-தெய்வானை திருமணம் நடைபெறும். அதன் பிறகு 5 நாட்கள் கல்யாண ஊஞ்சல் சேவை நடைபெறும்.

*48. திருச்செந்தூரில் கருவறைக்கு எதிரில் இரண்டு மயில்கள் மற்றும் ஒரு நந்தி இருக்கின்றன. அது ஏன் தெரியுமா? முருகனுக்கு ஏற்கனவே ஒரு மயில் வாகனமாக இருந்து வருகிறது. பின்னர் சூரனைப்பிளந்தும், ஒரு பகுதி மயிலாகவும், மற்றொரு பகுதி சேவல் கொடியாகவும் ஆனதல்லவா? சூரசம்ஹாரம் முடிந்ததும், ஏற்கனவே இருந்த மயிலோடு, இந்த மயிலும் (சூரன்) சேர்ந்து வந்து செந்தூரில் இரண்டு மயில்களாக நின்றுவிட்டன. சூரசம்ஹாரத்திற்கு முன்புவரை இந்திரனே முருகனுக்கு மயில் வாகனமாக இருந்தான். முருகன் சூரனை வென்றபின் இந்திரனுக்கு தேவலோக தலைமை பதவியை கொடுத்து அனுப்பிவிட்டு, மயிலாக மாறிய சூரனையே தன் வாகனமாகக் கொண்டார்.பஞ்சலிங்ககளை வைத்து முருகன் பூஜை செய்யும் கோலத்தில் சிவனுடன் இருக்கிறார். எனவே, சிவனுக்குரிய நந்தி, மயில்களுடன் சேர்ந்து கருவறைக்கு எதிரே இருக்கிறது.*

49. ஆவணி திருவிழாவின்போது முருகப்பெருமான், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.

*50. திருச்செந்தூரில் தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு, மேளதாளத்துடன் சென்று கடலில் கரைப்பார்கள். இதற்கு கங்கை பூஜை என்று பெயர்.*

51. மூலவருக்கு போற்றிமார், சண்முகருக்கு திரிசுதந்திரர், திருமாலுக்குத் வைணவர்கள், தனித்தனியே 3 இடங்களில் நைவேத்தியம் தயாரிக்கின்றனர்.

*52. கோவில் திருப்பணி செய்த துறவிகளில் காசி சுவாமி கி.பி. 1882-ல் வசந்த மண்டபம் கட்டினார். மவுன சாமி 1895-ல் மண்டபத்தை கட்டி முடித்தார். வள்ளிநாயக சுவாமி - கிரிப்பிரகாரத்துக்கு தகரக் கொட்டகை அமைத்தார். ஆறுமுக சுவாமி - கோவிலுக்குள் கருங்கல் தூண்கள் அமைத்தார். தேசியமூர்த்தி சுவாமி - ராஜகோபுரத்தை கட்டினார்.*

53. திருச்செந்தூர் கோவில் தங்க தேரில் அறுங்கோண வடிவில் அறுபடை வீட்டு முருகன் சிலைகள் உள்ளன.

*54. சஷ்டித் தகடுகளில் எழுதப்பட்ட மந்திரம் ஓம் சரவணபவ என்பதாகும்.*

55. திருச்செந்தூர் தலத்தில் பழங்காலத்தில் பல மணற் குன்றுகள் முருகனது சிறிய சந்நிதியைச் சூழ்ந்திருக்க வேண்டும். அவற்றுள் பெரிய மணற்குன்று ஒன்றைக் கந்த மாதன பர்வதம் என்ற பெயரால் குறித்திருக்க வேண்டும். நாளடைவில் மணற் குன்றுகள் தேய்ந்து தேய்ந்து பிராகாரங்கள் ஆகியிருக்க வேண்டும். வடக்குப் பக்கத்தில் மணற்குன்றே ஒரு மதிலாக அமைந்து இருப்பதை இப்போதும் காணலாம். இம்மணற்குன்றின் தாழ்வரையில்தான் இரங்கநாதப் பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார்.

*56. கந்த சஷ்டி என்றால், கந்தவேலுக்குரிய ஆறாவது நாள் என்று பொருள்.*

57. மாறாத உடல் அழகும் மாறாத உள்ளத்தழகும் என்றும் இளமை நிலையும் கொண்டருள்பவன் திருமுருகன்.

*58. சிவப்பு, கருப்பு, மஞ்சள், நீலம், பச்சை ஐந்து நிறங்கள் கொண்ட வண்ண மயில் ஏறி வருபவன் திருமுருகன்.*

59. யோகம், போகம், வேகம் என மூவகை வடிவங்களைக் கொண்டருள்பவன் திருமுருகன்.

*60. திருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை. இச்சரிதத்தை எழுதுவோரும் படிப்போரும் கேட்போரும் நீங்காத செல்வங்களைப் பெற்று வாழ்ந்திருப்பர் என்று சூதம முனிவர் உரைத்தருளி உள்ளார்...*

Saturday, October 29, 2022

⛩️⛩️🤲சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு....🌷⛩️கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம்..!!

⛩️⛩️🤲சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள்  கவனத்திற்கு....🌷⛩️

கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம்..!!
 காடாம்புழா  பகவதி கோயில்
 காலை : 5am ➖ 11am
 மாலை : 3:30Pm ➖ 7pm

 குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணகோயில்
 காலை : 3 மணி ➖ 1 மணி
 மாலை 1 மணி ➖ இரவு 9 மணி

 திருப்ராயர் ஸ்ரீராமசுவாமிகோயில்

 காலை : 4.30AM ➖ 12pm
 மாலை : 4.30Pm ➖ 8:30pm

 கொடுங்களூர் பகவதி கோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை : 4.30Pm ➖ 8pm

 சோட்டானிக்கரை பகவதி கோயில்
 காலை : 3:30AM ➖ 12pm
 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

 கீழ்க்காவு குருதி
 இரவு: 8.30 மணி

 வைக்கம் மகாதேவர் கோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

 கட்டுருத்தி மகாதேவர் கோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

 மல்லியூர் கணபதிகோயில்
 காலை : 4.30AM ➖ 12:30pm
 மாலை : 4.30Pm ➖ 8pm

 ஏட்டுமானூர் மகாதேவர்கோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

 கிடங்கூர் சுப்ரமணியகோயில்
 காலை : 5AM ➖ 11:30am
 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

 கடப்பட்டூர் மகாதேவகோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

 எருமேலி வாவர்பள்ளி சாஸ்தாகோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

 நிலக்கல் மகாதேவர் கோயில்
 காலை : 4 மணி ➖ 12 மணி
 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

 பம்பா கணபதிகோயில்
 காலை : 3 மணி ➖ 1 மணி
 மாலை 4 மணி ➖ 11 மணி

 சபரிமலை சன்னிதானம்
 நெய்யபிஷேகம் : 3.20Am ➖ 11.30am
 ஹரிவராசனம் : இரவு 10.50

 நிலக்கல் பம்பை KSRTC கட்டணம்
 ஆர்டினரி - ரூ40
 ஏசி லோஃப்ளோர் - ரூ90
 பேட்டரி - ரூ100

 வெர்ச்சுவல் க்யு வெரிஃபிகேஷன் பம்பை  ஹனுமான் கோயிலுக்கு முன்னால் செயல்படுகிறது.

ப்ளாஸ்டிக் பாட்டில்கள் அனுமதி இல்லை..  

 பிளாஸ்டிக் அதிகபட்சம் தவிர்த்து
 புண்ணியம் பூங்காவனம் தூய்மையை காக்கவும்

 மருத்துவ மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்..

 உரக்குழி தீர்த்தத்திற்கு மாலை 4 மணி
 வரை மட்டும் அனுமதிக்ககப்படும்

 எல்லாக் கோயில்களிலும்
 பம்பையிலும் இலவச அன்னதானங்கள் நடைபெறும் சந்நிதானத்தில் மாளிகப்புரம்கோயில்க்குப் பின்னால் பெரிய (TDB)அன்னதானமண்டபம் உள்ளது.  

 நல்ல தீர்த்தாடன கால வாழ்த்துக்கள்...

⛩️⛩️ஓம்_சுவாமியே… ⛩️சரணம்_ஐயப்பா 🙏🙏. நற்பவி 💕Sv

""உனக்குக் குழந்தை உண்டாகும். ஒரு அழகிய மகளைப்பெறுவாய். அவனை எனக்கு மனைவியாகத் தருவாயாக" என்றுஅகஸ்தியர் அந்த அரசனுக்கு வரம் தந்தார்.

_அகஸ்தியர் வாழ்க்கை வரலாறு
வியாசர் விருந்து அகஸ்தியர்

இந்திரப்பிரஸ்தத்தில் யுதிஷ்டிரனைப் பூஜித்து வந்த பிரா மணர்களின் கூட்டம், வனவாசத்திலும் கூடவே இருந்துகொண்டு வந்தது. பரிவாரத்தைச் சமாளித்துக்கொண்டு காலம் கழிப்பது கஷ்டமாகவே இருந்தது. அருச்சுனனைத் தவம் செய்ய அனுப்பி விட்டபிறகு, ஒருநாள் லோமசர் என்கிற பிரம்மரிஷி பாண்டவர் களைக் காணவந்தார். இந்தப் பரிவாரத்தைக் குறைத்துக் கொண்டு தீர்த்த யாத்திரை செய்யுங்கள். லகு பரிவாரமானால் தான் இஷ்டப்படி பிரியாணம் செய்ய முடியும்" என்று லோமச முனிவர் சொன்ன யோசனையை ஒப்புக் கொண்டு யுதிஷ்டிரன் அனைவருக்கும் தெரியப்படுத்திவிட்டான்.

**ஆயாசம் தாங்கமாட்டாதவர்களும், நல்ல போஜனம் விரும் பிச் சமையற்காரனை அண்டி நிற்பவர்களும்,ராஜ பக்தியை மட்டும் முன்னிட்டு என்னிடம் வத்திருப்பவர்களும் எல்லாரும் திருதராஸ் டிர மகாராஜாவைப் போய் அடையலாம். அவர் ஆதரிக்காவிட் டால் பாஞ்சால ராஜன் நுருபதனிடம் போகலாம்" என்று சமர் தானப் படுத்தித் தன் பரிவாரத்தைச் சுருக்கிக் கொண்டான்,

பிறகு பாண்டவர்கள் புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு யாத் திரை போனார்கள். அங்கங்கே அவர்கள் கண்ட இடங்களின் பூர்வ கதைகளைக் கேட்டுக்கொண்டே சென்றார்கள். இவ்வாறு சொல் லப்பட்ட கதைகளில் அகஸ்தியர் கதை ஒன்று. 

அகஸ்தியர் ஒரு சமயத்தில் சில பித்ருக்கள் தலைகீழாகத் தொங்கிக்கொண்டு துன்ப நிலையில் இருப்பதைக் கண்டார். 'நீ'ங் கள் யார்? ஏன் இந்தக் கடுமையான தவம் புரிகிறீர்கள்?'' என்றுஅவர் கேட்டதற்கு, அந்த ஜீவன்கள், “மகனே! நாங்கள் உன்னுடைய முன்னோர்களாவோம்.விவாகமில்லாமலிருப்பதால்உனக்குப் பின் எங்களுக்குப் பிண்டம்தருபவர்கள்இல்லாமல்போவார்கள். அதற்காக இந்தத் தவம் செய்கிறோம். நீ புத்திசசந்தானம் பெறுவதற்கு வழி தேடினாயானால் நாம் இந்த நிலையிலிருந்து தப்புவோம்" என்றர்கள், 

இதைக் கேட்ட அகஸ்தியர் விவாகம் செய்துகொள்ளத் தீர் மானித்தார்.

விதர்ப்ப தேசத்து அரசன் தளக்குக் குழந்தை உண்டாக வில்லையென்று துயரப்பட்டுக் கொண்டிருந்தான். அதற்காக அவன் அகஸ்தியரை வணங்கி முனிவருடைய ஆசியைக் கேட் டான்.

""உனக்குக் குழந்தை உண்டாகும். ஒரு அழகிய மகளைப்பெறுவாய். அவனை எனக்கு மனைவியாகத் தருவாயாக" என்றுஅகஸ்தியர் அந்த அரசனுக்கு வரம் தந்தார்.

உலகத்திலுள்ள ஸ்திரீ லக்ஷ்ணங்களை யெல்லாம் சேர்த்து மிக்க சௌந்தரிய ரூபத்தை மனத்தில் நிருமாணித்துக்கொண்டு அரசனுக்கு அகஸ்தியர் இந்த வரம் தந்தார். அரசனுடைய பாம் யையும் கருப்பம் தரித்துப் பெண் குழந்தையைப் பெற்றாள். குழந் தையின் பெயர் லோபாமுத்திரை. லோபாமுத்திரை அகஸ்தி யர் மனத்தில் கற்பனை செய்து கொண்ட லக்ஷணங்களுடன் நிகர
ஏற்ற அழகு வாய்ந்தவளாக வளர்ந்து விவாகத்துக்குத் தகுந்த பருவம் அடைந்தாள், விதர்ப்பராஜனுடைய மகனின் ரூபலாவண்ணியம் க்ஷத்திரிய

உலகத்தில் பிரசித்தியா யிருந்தாலும், அகஸ்தியருக்கு பயந்து எத்த ராஜகுமாரனும் அலளை வரிச்சு வரவில்லை. பிறகு ஒருநாள் அகஸ்திய முனிவர் விதர்ப்பதேசம் வந்து அரசனைக் கண்டு "என்னுடைய பித்ருக்களுக்குத் திருப்தி செய்

புத்திரனை விரும்புகிறேன். வாக்குத் தந்தபடி உன் மகளை

எனக்குத் தருவாயாக” என்று கேட்டார்.

நூற்றுக் கணக்கான கன்னிசுைகளால் சூழப்பட்டுத் தாதி மார்களின் பனிவிடையைப் பெற்று வளர்ந்த தன் அருமை மகளை வனவாசம் செய்யும் முனிவருக்குக் கொடுத்துவிட அரசனுக்கு மனம் வரவில்லை. ஆனால் முன் செய்த வாக்குத்தத்தத்தை நினை த்து ரிஷியின் கோபத்துக்குப் பயந்தான்.

ராஜாவும் தாயாகும் துயரத்தில் முழுகி வருந்துவதை லோ பாமுத்திரை பார்த்தாள். "ஏன் வருந்துகிறீர்கள்? என் நிமித்தம் நீங்கள் சாபம் அடையலாகாது. என்னை முனிவருக்கே கொடு த்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். துயரம் வேண்டாம், இதுவே என் பிரியமும்" என்றாள்.

லோபாமுத்திரையின் சொல்லைக்கேட்டு அரசன் சமாதானம் அடைந்தான். முறைப்படி அவரை அகஸ்தியருக்குக் கொடுத்து விவாகமும் முடிந்தது.

முனிவருடன் போக ராஜகுமாரி புறப்பட்டாள். " இந்த உவர்ந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் கழற்றி விடு என் றார் அகஸ்தியர்.

உடனே லோபாமுத்திரை தன் அழகிய ஆபரணங்களையும்

வஸ்திரங்களையும் கழற்றி அவற்றைத் தன் தாதிகளுக்கும் கன்னி

களுக்கும் கொடுத்துவிட்டு மரவுரியும் தோலும் சுட்டிக்கொண்டு

முனிவருடன் சந்தோஷமாக வனம் சென்றாள்.

கங்க துவாரத்தில் லோபாமுத்திரை அகஸ்தியருடன் அநேக நாள் விரதங் காத்துப் பணிவிடை செய்து முனிவருடைய அன்பைப் பூரணமாகச் சம்பாதித்தாள்.

ஒரு நாள் பிரியம் மேலிட்டு முனிவர் மனைவியைச் கருப்பம் வகிக்க அழைத்தார். லோபாமுத்திரை ஸ்திரீகளுக்கு இயற்கை வான வெட்கம் மேலிட்டுத் தலை வணங்கிக் கைகூப்பி ஸ்வாமி! நான் கடமைப் பட்டிருக்கிறேன். ஆயினும் என்னுடைய பிரீ தீயை நீங்கள் செய்யவேண்டும்"" என்றான்.

அவளுடைய ரூபசௌந்தரியத்தினாலும் சிலத்தினாலும் முற்றிலும் மனம் கவரப்பட்ட முனிவர், "அப்படியே!'" என்றார்.

"பிதாவினுடைய வீட்டில் இருந்த காலத்தில் நான் படுத்த படுக்கையும் அணிந்த வஸ்திராபரணங்களையும் போன்று இல் விடத்திலும் உம்மால் தான் அடைந்து, நீங்களும் நில்பாலங் காரங்களை அணித்து சந்தோஷமாக என்னைச் சேரவேண்டு மென் பதே என் விருப்பம்" என்றன்.

'நீ சொல்லியபடி செய்ய எனக்குச் செல்வம் ஏது. சௌகரியமேது, நீயும் நானும் வனத்தில் வசிக்கும் தரித்திரர்கள் அன்றே?” என்றார் அகஸ்தியர். "சுவாமி! நீர் தவப் பெருமையினால் எல்லாம் படைத்தன

ராவீர்! ஒரு நிமிஷத்தில் உலகத்திலுள்ள செல்வம் அனைத்தும்

நீர் சம்பாதிக்க முடியும்" என்றான்.

'"அவ்வாறு நான் சம்பாதித்தால் அது தவற்றின் பயனை அழி

த்து விடும்! இது உனக்கு விருப்பமா?" என்றார்.

அதை நான் விரும்பவில்லை. தலத்தைச் செலவழிக்கா மல் போதிய தனம் எங்கேயாவது சம்பாதித்துக்கொண்டு வர வேண்டும் என்றேன்" என்றாள். ''பாக்யவதியேரி அப்படியே செய்கிறேன்" என்று அகஸ் தியர் மனைவிக்குச் சொல்லிவிட்டு, சாநாரணப் பிராமணனைப்

போல் அரசர்களை யாசிக்கப் புறப்பட்டார்.

மிக்க செல்வம் படைத்தவன் என்று பிரசித்தி பெற்ற ஒரு

அரசவிடம் அகஸ்தியர் சென்றார்,

"தனம் வேண்டி வந்தேன். பிறருக்குக் குறைவாவது துன் பமானது ஏற்படாமல் எனக்குத் தாலம் தரவேண்டும்!" என்றார். அந்த அரசன் தன் ஆட்சியின் வரவையும் செலவையும் ஒன் றும் மறைக்காமல் முனிவரிடம் கணக்கை ஒப்புவித்தான். 'பார் த்து எடுத்துக்கொள்ளுங்கள்" என்றான், ராஜ்யத்தின் வரவு செலவுக் கணக்கைப் பார்த்ததில் மிச்சம் ஒன்றும் இவ்லை.

சாங்கங்சுளில் வரவுக்குச் சரியாகவே செலவு எப்போதும் ஏற்பட்டு

விடுகிறது. முன்னாட்களிலும் இப்போ தைப் போலவே நான். இதைக்கண்டு, "இல்விடம் நான் தானம் பெற்றும் பிரஜை ளுக்குத் துல்பமாகும். வேறே எங்கேயாவது பார்க்கிறேன்" நு அசுஸ்தியர் புறப்பட்டார். அந்த அரசன், "நானும் கூட றேன்'' என்று அவனும் முனிவருடன் கூடச் சேர்ந்து இரு வரு வரும் மற்றொரு ராஜாவிடம் போய்க் கேட்டார்கள். அவ்லிடந் நிறும் அதே நிலைமையாக இருந்தது.

நியாயமான செலவுக்கு எவ்வளவு வேண்டுமோ அந்த அள வுக்குத்தான் அரசன் பிரஜைகளிடமிருந்து வரி வரும் செய்ய வேண்டும் என்கிற தத்துவத்தை வியாசர் இதன் மூலம் எடுத் துக் காட்டுகிறர். நியாயமான வரிகள் பெற்றுக் கடமைகளைப் பூரணமாகச் செய்து தரும சாஸ்திரபடி நடந்து வரும் எந்த அர சனிடத்திலாவது தானம் பெற்றால் அவனுடைய பிரஜைகளுக்கு அந்த அளவில் நஷ்டமும் துன்பமும் உண்டாகும் என்று அத தியர் உணர்ந்தார். அதன்மேல் எல்லோருமாகச் சேர்ந்து இல் வலன் என்கிற ஒரு கொடிய அசுரனிடம் போய் அவனைக் கேட் யது உசிதம் என்று தீர்மானித்தார்கள்.

இல்வலன் என்ற அகரனும் அவன் தம்பி வாதாபியும் பிரா மணர்கள்மேல் தீராத துவேஷம் கொண்டவர்கள். பிராமணர் க ைவிருந்துக்கு இவ்வலன் அழைப்பான், மாறையால் தம்பி வாதாபியை ஆட்டின் உருவம் எடுக்கச் செய்து. ஆட்டைவெட்டிப் பக்குவம் செய்து, வந்த பிராமணர்களை உண்ணச் சொல்லுவான், அத்தக் காலத்தில் பிராமணர்கள் மாமிசம் உண் பார்கள். விருந்து முடிந்தவுடன். இல்வலன் "வாதாபி! வா!' என்று கூவுவால். தான் கொன்றவர்களை யமலோகத்திலிருந்து திரும்பி வரவழைக்கும் வரத்தை இவ்வலன் பெற்றிருந்தான். வெட் டப்பட்டு இறந்த வாதாபி மறுபடி உயிர் கொண்டு பிராமணர் களுடைய வயிற்றைப் பிளந்து விட்டு அசுரச் சிரிப்புச் சிரித்துக் கொண்டு வெளியே வருவான், இவ்வாறு பல் பிராமணர்கள் வாதாபியின் செயலால் வயிறு கிழிக்கப்பட்டு மாண்டார்கள்.

தருமத்தையே ஏமாற்றி இவ்வாறு பிராமணர்களைக் கொன்று

தங்கள் எண்ணத்தை நிறைவேற்றி வருவதாகப் பாபிஷ்டர்

களாகிய அந்த அசுரர்களுடைய கருத்து,

அகஸ்தியர் வந்ததாகத் தெரிந்ததும் நல்ல பிராமணர் சிக் கினார் என்று இல்வலன் மிக்க மகிழ்சி யடைந்து அவரை வரவே ற்று வழக்கப்படி விருந்து வைத்தான். வாதாபியை ஆடாகச் சமைத்துப் பரிமாறி. ''இந்த முனிவர் இறந்தார்" என்று மனதில் எண்ணிக்கொண்டு அகஸ்தியரை உண்ணச் செய்தான்.

விருந்து முடிந்தபின் இல்வலன். ''வாதாபி! சீக்கிரம் வெளி

யே வா! தாமதித்தாயானால் முனிவர் உன்னை மீறுவார்!'' என்று சொன்னான். முனிவர். "வாதாபியே! உலகம் சாந்தி அடைக! நீ ஜீர ணம் செய்யப்பட்டாய்" என்று சொல்லித் தம்வயிற்றைத் தடவிக் கொடுத்தார். இல்வலன், "வாதாபி ! வா! வாதாபி! வா!'" என்று

பன்முறை பயந்து கத்தினான்.

பயனில்லை! "வாதாபி ஜீர்ணமாய் விட்டான். ஏன் விணாக அழைக்கிறாய்?" என்றார் முனிவர்.

அசுரன் கை கூப்பி அகஸ்தியரை வணங்கி அவர் கோரிய தனங்களைக் கொடுத்து அனுப்பினான். லோபாமுத்திரையை அகஸ்தியர் திருப்தி செய்தார்.

''உனக்குப்பத்து நல்ல மக்கள் வேண்டுமா? அல்லது பத்துப் பேரை வெல்லக்கூடிய ஒரு மகன் வேண்டுமா?' என்று அகஸ் தியர் மனைவியைக் கேட்டதாகவும், 'பகவானே, புகழுக்குரிய அறிவைப்படைத்தவனும் தருமத்தில் நிலை கொண்டவனுமான ஒரு மகனையே விரும்புகிறேன்'' என்று லோபாமுத்திரை சொல்ல அவ்வாறே பெற்றதாகவும் கதை.

ஒரு சமயம் விந்திய மலையானது மேரு மலையின்மேல் பொ றாமை கொண்டு, தானும் மேருவைப்போல் வளர்ந்து சூரிய சந் திராதிகளைத் தடுத்துவிடப் பார்த்ததாம். இந்தச் சங்கடத்தைத் தீர்த்துக்கொள்ள முடியாமல் தேவர்கள் அகஸ்தியரை வேண்டி னார்கள். அவர் விந்திய மலையண்டைசென்று, "பருவதோத்த மனே! எனக்கு வழி விடக் கடவாய்! ஒரு காரியத்துக்காக நான் தெற்கே செல்ல வேண்டியதாக இருக்கிறது. நான் திரும்பியபின் நீ இஷ்டப்படி வளரலாம். நான் வரும் வரையில் பொறுத்தி ருப்பாயாக!" என்று சொன்னார்.

அகஸ்தியரிடம் விந்திய பருவதம் வைத்திருந்த கௌரவத் தினால், '"அப்படியே!'' என்று மலை ஒப்புக்கொண்டு நமஸ்கரித் ததாகவும், அகஸ்தியர் தெற்கே போனவர் திரும்பி வரவில்லை என்றும் இந்த ஒப்பந்தபடி வித்திய மலையும் வளராமல் இதுவரை யில் படுத்துக்கிடக்கிறது என்றும், 'அதிலிருந்து அகஸ்தியர் தென்னாட்டிலேயே இருந்துவிட்டாா என்றும் கூறுகிறது பாரதக்கதை,

Friday, October 28, 2022

. கந்தசஷ்டி... சூரசம்ஹாரம்... கொண்டாடப்படுவது ஏன்?

கந்தசஷ்டி.. சூரசம்ஹாரம்.. கொண்டாடப்படுவது ஏன்? வாங்க பார்க்கலாம்...!!
                கந்தசஷ்டி... சூரசம்ஹாரம்... கொண்டாடப்படுவது ஏன்?


முருகப்பெருமானை வழிபட சிறந்த நாள் என்றால் அது கந்தசஷ்டி நாளாகும். இந்நாளில் முருகனை விரதம் இருந்து வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். முக்கியமாக குழந்தை பாக்கியம் வேண்டி முருகனை நினைத்து விரதம் இருந்தால் அந்த கந்தனே குழந்தையாக பிறப்பார் என்பது நம்பிக்கை.

மும்மூர்த்திகளின் அம்சம் :

முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். 

ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். 

சூரனை சம்ஹாரம் செய்து, பின் இந்திரனின் மகளை மணந்து கொண்டவர்.

இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக இருக்கிறார். இதனை உணர்த்தும் விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.

👆👆👆
கந்தசஷ்டி கொண்டாடப்படுவது ஏன்?

சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்தசஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம் மற்றும் கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

முதல் காரணம் :

ஒரு சமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன.

அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.

இரண்டாவது காரணம் :

கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் மற்றும் தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறு நாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருள செய்து நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள் செய்தார்.

இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.

சூரசம்ஹாரம் ஏன் கொண்டாடுகிறோம்?

காசியப்ப முனிவர், மாயை என்ற தம்பதியருக்கு பிறந்தவன் சூரபத்மன். இவர் வளர்ந்த பிறகு சிவபெருமானை நோக்கி தவமிருந்து இந்திர ஞாலம் எனும் தேரையும், பெண்ணால் பிறக்காத குழந்தையால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்ற வரத்தையும் பெற்றான்.

இந்த வரத்தால் தேவர்களையும், நல்லுயிர்களையும் துன்புறுத்தினான் சூரபத்மன். இதை தடுக்க அவதாரம் எடுத்த முருகன், பார்வதியிடம் வேலை பெற்று, சூரபத்மனை போரில் அழித்தார். அதன் நினைவாக முருகனுடைய கோவில்களில் இந்த நிகழ்வினை விழாவாக கொண்டாடுகிறார்கள்l

Followers

மனிதனை மாமனிதனாக்குகிறது தியானம்

தூங்காமல் தூங்கி சுகம் பெறுதல் ஞான வழி என்ற தியானம் “தூங்கிக்கண்டார் சிவலோகமும் தம்உள்ளே தூங்கிக்கண்டார் சிவயோகமும் தம் உள்ளே ...