Monday, November 14, 2022

மகத்துவம் வாய்ந்த ஆத்ம விளக்கை நீங்கள் வைத்திருந்தால் இந்த முறையில் ஏற்றி வழிபடுவது சிறப்பு

_ஆத்ம விளக்கு இதை ஏற்றுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்? எப்படி ஏற்ற வேண்டும்?_


பொதுவாக எல்லோருடைய வீடுகளிலும் இருப்பது காமாட்சி அம்மன் விளக்கு ஆகும். காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றி வைத்தால் எல்லா தெய்வங்கள் உடைய ஆசீர்வாதமும் ஒருசேர கிடைக்கும் என்பது நம்பிக்கை. அது போல மகா லட்சுமியின் அருள் கிடைக்க குத்து விளக்கை ஏற்றி வைப்பார்கள். முக்கிய விசேஷ நாட்களில் குத்து விளக்கை ஏற்றுவது விசேஷமாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆத்ம விளக்கு எதற்காக வைத்திருக்கிறோம்? என்றே சிலருக்கு தெரியாது.

எல்லாம் விளக்குகளுக்கு திரி எரிய வேண்டிய திசை மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. தெற்கு நோக்கி விளக்கு ஏற்றக் கூடாது என்பது நியதி. ஆனால் இந்த ஆத்ம விளக்கில் நடுவில் திரி போடுவதால் எல்லா திசைகளிலும் ஒளிரும் என்பதால் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆத்ம விளக்கு எதற்காக ஏற்றப்படுகிறது? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? இதனை எப்படி ஏற்ற வேண்டும்? எப்போது ஏற்ற வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

ஆத்ம விளக்கு ஏற்றும் பொழுது நம் உடலில் இருக்கும் ஜீவாத்மாவும், பரம் பொருளாக இருக்கும் கடவுளான பரமாத்மாவும் இணைந்து செயல்படுவதாக ஐதீகம் உண்டு. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆத்ம விளக்கு சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் மூலமாக ஏற்றப்பட்டு வந்துள்ளது. ஆத்ம விளக்கு ஏற்றும் பொழுது மனம் ஒன்றுபடும் என்றும், இறைவனிடம் நாம் உரையாட முடியும் என்பதும் நம்பிக்கை.

ஆத்ம விளக்கு ஏற்றும் பொழுது எரியும் ஜோதியானது நாம் தியானம் செய்யும் பொழுது நமக்குள் நம் புருவ மத்தியில் இருக்கும் சக்கரத்தில் ஒளிரும் ஜோதியை போல பிரதிபலிக்கும். உடலில் இருக்கும் சக்ராக்கள் நல்ல படியாக இயங்க இந்த ஆத்ம ஜோதியை நாம் தரிசிப்பது சிறப்பு! ஆத்ம விளக்கு ஏற்றும் பொழுது எப்பொழுதும் ஒற்றைப்படையில் ஏற்ற வேண்டும். ஒரு ஆத்ம விளக்கு ஏற்ற வேண்டும். இரண்டு விளக்குகள் வைத்திருந்தால் உடன் ஒரு அகல் விளக்கை ஏற்றி வைப்பது  நல்லது

ஆத்ம விளக்கு ஏற்ற நினைப்பவர்கள் எப்பொழுதும் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்றுவது மிகுந்த பலன்களை கொடுக்கும். பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்ற முடியாதவர்கள் மாலையில் 6 மணிக்கு ஏற்றலாம். ஆத்ம விளக்கை ஏற்றி வைத்து விட்டு நாம் அமைதியாக ஒரு பத்து நிமிடமாவது தியானம் மேற்கொள்ள வேண்டும். உங்கள் இஷ்ட தெய்வம், குலதெய்வம் என்று ஏதாவது ஒரு தெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு உங்கள் மனம் எந்த வேண்டுதல்களும் இன்றி இறை சிந்தனையுடன் மட்டுமே வையித்யிருக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு விஷயத்தை நோக்கிய பயணத்தில் ஈடுபட்டு இருக்கிறோம். படிப்பவர்களுக்கு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்கிற மனலட்சியங்களுடன் இருக்கும். வீடு கட்ட வேண்டும் கடன் அடைக்க வேண்டும்  வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டும் அரசாங்க வேலை கிடைக்க வேண்டும்
என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான லட்சியத்தில் வெற்றியடைய வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். இந்த எண்ணத்தை எளிதாக பூர்த்தி செய்யக்கூடிய வகையில் ஆத்ம விளக்கு நமக்கு உறுதுணையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மனம் ஒருமுகப்பட்டு நம் உடலில் இருக்கும் ஜீவாத்மாவும், பரமாத்மாவும் இணைந்து செயல்பட்டு நமக்கு வெற்றியை தேடித்தரும் எனவே இத்தகைய மகத்துவம் வாய்ந்த ஆத்ம விளக்கை நீங்கள் வைத்திருந்தால் இந்த முறையில் ஏற்றி வழிபடுவது சிறப்பு!

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...