Monday, November 14, 2022

இந்த மூலிகை துப பொடியை தயார் செய்து, நீங்களும் உபயோகித்து பலன்களைபெறலாம்....

_மூலிகை சாம்பிராணி தூபம். 
சந்தனதத்தில்-  தூபமிட *தெய்வ கடாட்சம் உண்டாம்.*

சாம்பிராணியில்-  தூபமிட *கண் திருஷ்டி பொறாமை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.*

ஜவ்வாது - தூபமிட *திடீர் அதிர்ஷ்டம் கிட்டும்.*

அகிலி  - தூபமிட *குழந்தை பாக்கியம் உண்டாகும்.*

துகிலி - தூபமிட *குழந்தைகளுக்கு நற்ஆயுள் அழகு ஆரோக்கியத்தினை உண்டாகும்.*

துளசி தூபமிட - *காரியத்தடை திருமணத்தடை நீங்கி விரைவில் நடந்தேறும்.*

தூதுவளை - தூபமிட *எந்நாளும் வீட்டில் தெய்வங்கள் அருள் புரியும்.*

வலம்புரிக்காய் -  தூபமிட *பன்னிரண்டு வகையான பூத கணங்களும் நீங்கும்.*

வெள்ளைகுங்கிலியம் -  தூபமிட *துஷ்ட ஆவிகள் இருந்தவிடம் தெரியாது நீங்கிவிடும்.*

வெண்கடுகு -  தூபமிட *பகைமை எதிர்ப்புகள் விலகும்.*

நாய்கடுகு -  தூபமிட *துரோகிககள் நம்மை கண்டு ஓடுவர்.*

மருதாணிவிதை- தூபமிட *சூனிய கோளாறுகளை நீக்கும்.*

கரிசலாங்கன்னி - தூபமிட *மகான்கள் அருள்கிட்டும்.*

வேப்பம்பட்டை - தூபமிட *ஏவலும் பீடையு நீங்கும்.*

நன்னாரிவேர் - தூபமிட *இராஜவசியம் உண்டாக்கும்.*

வெட்டிவேர் - தூபமிட *சகல காரியங்களும் சித்தியாகும் .*

வேப்பஇலைதூள் -தூபமிட *சகலவித நோய் நிவாரணமாகும்.*

மருதாணிஇலைதூள் - தூபமிட *இலட்சுமி கடாட்சம் உண்டாகும்.*

அருகம்புல்தூள்- தூபமிட *சகல தோஷமும் நிவாரணமாகும்.*

தினமும் வீடு, கடை, தொழிற்சாலை, பாடசாலை, அலுவலகம் போன்ற இடங்களில் இறைவனை நினைத்து தூபமிட்டாலே அவ்விடத்தில் அமைதியும் நற்சூழலும் அமைந்து அங்கு நடக்கும் நடைபெறும் செயல்கள் யாவும் சிறப்பாக அமையப்பெறும்.


*55 மூலிகை தூப பொடி கலந்துள்ள மூலிகைகள்*

1. கட்டிசாம்பிராணி
2.விலாமிச்சை வேர்
3.தும்பை                                                                         4.தேவதாறு                                                                      5.அருகம்புல் 
6. வெள்ளைகுங்கிலியம்                       
7.வேப்ப இலை                                                                              8.நொச்சி இலை                                                                                      9.வில்வ இலை                                                                                 10.வெண்கடுகு                                                                          11.கருங்காலி
12.நன்னாரி                                                                       13.வெட்டிவேர்                                                                    14.நாய்க்கடுகு                                        
15.ஆலங்குச்சி                                                             16.அரசங்குச்சி                                
17,நாவல் குச்சி                                                                            18.மருதாணி விதை பூ
19, வெள்ளருக்கு குச்சி
20,சந்தன பொடி 
21,தசங்கம் பொடி
22,ஏலக்காய் 
23,கிராம் 
24,சுருள்பட்டை 
25,பச்சைக் கற்பூரம் 
26,பிரிஞ்சி இலை 
27,வசம்பு
28,நூறு வருட வேப்ப மரத்தின் பட்டை புல்லுருவி 
29,சந்தனப் புல்லுருவி 
30,அரசமரப் புல்லுருவி 
31,ஆலமரப் புல்லுருவி 
32, வில்வ மரப் புல்லுருவி
33,தொட்டால்சிணுங்கி 
34,துளசி விதை பூ
35,திருநீற்றுப்பச்சிலைவிதைபூ
36,கற்பூரவள்ளி 
37,தர்ப்பைபுல் 
38,வெட்டிவேர்
39, வெள்ளருக்கு புல்லுருவி வெள்ளருக்கு பட்டை வேர் பூ
40, வெள்ளை விஷ்ணு கிரந்தி 41,கருந்துளசி 
42,கரு ஊமத்தை
43,சாதிக்காய் 
44,கடுக்காய்
45,தன்றிக்காய் 
46,ஆரஞ்சு தோல் 
47,மாதுளை தோல்
48,எலுமிச்சை தோல்
49, நிலக்கரி 
50,அன்னாசி பூ 
51கருங்காலி தூள்
52,மல்லிகைப்பூ 
53,ரோஜா பூ
54,வலம்புரி காய் 
55,இடம்புரி காய்

55, வகையான மூலிகைகளை தனித்தனியாக பொடித்து சம அளவு எடுத்து கலந்து காற்று புகாத பாத்திரத்தில் சேமித்து வைத்து உபயோகபடுத்தலாம்.  
இந்த மூலிகை கலவையை கொண்டு தூபம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் சித்தர்கள் கூறியது, முன்னோர்கள் வழிகாட்டியது சோதித்து பார்க்கப்பட்டது மேலும் பரிசோதனைக்கு உட்பட்டது

1.கணபதி மற்றும் நவ கிரக ஹோமம் மற்றஹோமங்கள் செய்த பலனை எளிமையாக பெறலாம் தடைகள் விலகும்,எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும், ஏவல், பில்லி சூனியம் போன்ற தடைகள் நீங்கும், நவ கிரக தோஷங்கள் நீங்கிவிடும் , எதிரிகள் தொல்லை, இறந்தவர்களின் சாபம் போன்றவை போய் விடும்

2. கடை மட்டும் தொழில் நிலையங்களில் உபயோக படுத்த வியாபாரம் பெருகும், எதிரிகள் தொல்லை விலகும்.

3. வீட்டில் நல்ல சக்திகள் நிலை பெரும், வீண் சண்டை , அமைதி இன்மை , தூக்கமின்மை போன்றவை அகலும்.

4. நோய் தொல்லை நீங்கும் , எந்த விஷ கிருமிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டில் தங்காது.

பொதுவாக அறிவியல் ரீதியாக சாம்பிராணி தூபம் போடுவதால், வீடு மட்டும் கடைகளில் உள்ள அனைத்து இடங்களில் உள்ள கெட்ட காற்றை அகற்றும் மேலும் விஷ ஜந்துக்களை அண்ட விடாமல் வெளியேற்றும் , எதிர்மறை எண்ணங்களை குறைக்கும். மழை காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை குறையாமல் அதிகரிக்கும்.

இந்த மூலிகை துப பொடியை தயார் செய்து, நீங்களும் உபயோகித்து பலன்களை
பெறலாம்....

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...