Saturday, November 19, 2022

ஆதிசங்கரருக்கு ஞானம் புகட்டிய 🌙ஈசன்👣

🙏ஆதிசங்கரருக்கு ஞானம் புகட்டிய 🌙ஈசன்👣
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
🔹️ஒரு நாள் சங்கரரும் அவரது சீடர்களும் கங்கையில் நீராடி விட்டு, விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று கொண்டு இருந்தனர். அப்பொழுது நான்கு நாய்களுடன் எதிர் திசையில் வந்து கொண்டு இருந்த தீண்டத் தகாதவன் ஒருவன், அவர்களை நெருங்கினான். அவன் எங்கே தங்களை தொட்டு, தங்களது ஆசாரத்தை கெடுத்து விடுவானோ என்று பயந்த சீடர்கள் அவனை "விலகிப் போ" என்றனர். இதைக் கேட்ட அவன், விலகிப் போகிறேன் ஆனால் நீங்கள் விலகிப் போக சொன்னது என்னுள் வியாபித்து இருக்கும் எனது ஆத்மாவையா? அல்லது ரத்தத்தாலும், சதையாலும் ஆன இந்த உடலையா என்று மட்டும் சொல்லி விடுங்கள்!" என்றான் அமைதியாக.

இதை கேட்ட சங்கரரின் உடல் சிலிர்த்தது. நான்கு வேதங்களையும் நாய் உருவில் மாற்றி, சிவபெருமானே தாழ்ந்த குலத்தவனாக வந்து இருக்கிறார் என்று உணர்ந்து கொண்டார். சிவ பெருமானின் பாதங்களில் விழுந்து,"மணிஷ பஞ்சகம்" என்ற ஐந்து ஸ்லோகங்களால் அவரை அர்ச்சனை செய்தார். அத்துடன் அவரிடம் குடி கொண்டு இருந்த பேத பாவங்கள் அனைத்தும் அவரை விட்டு விலகின. அன்று முதல் சங்கரராக இருந்தவர் மக்களை நல்வழி படுத்தும் அவதார புருஷனான "ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர்" ஆக உதயம் ஆனார்.

"இவ்வுலகில் பிறவி எடுத்திருக்கும் ஒவ்வொரு ஜீவனிலும் இறைவன் நீக்கமற நிறைந்து இருக்கிறான். பல்வேறு வடிவங்களிலும், வித விதமான பெயர்களில் உலகில் உறையும் உயிர்கள் அனைத்தும் பரம்பொருளின் வடிவங்களே! சம்சார சக்கரத்தில் கிடந்து உழலும் ஜீவாத்மாக்களும், அவற்றை இயக்கும் பரமாத்மாவும் இருவேறு மாறுபட்ட பொருட்கள் அல்ல. இரண்டும் ஒரே பரம்பொருளின் பிம்பங்களே!" என்ற இரண்டற்ற நிலை எனப்படும், அத்வைத சித்தாந்தத்தை நிறுவி, அதை மக்களிடையே பரப்பி, அவர்களிடையே இருந்த ஏற்றத் தாழ்வுகளை போக்கினார். அனைவரையும் இறை நிலையை அடையச் செய்யும் முயற்சியில் நாடெங்கும் பயணம் மேற்கொண்டார். மத்தியப் பிரதேஷம், மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம் என பல ஊர்களுக்கு விஜயம் செய்தார் ஆதி சங்கரர்.

அறிஞர்கள், புத்த, ஜைன மதத்தவர்கள் எனப் பலரையும் வாதத்தில் வென்றார். அவர்களை தமது சீடர்கள் ஆக்கி, அத்வைத சித்தாந்தத்தை எங்கும் நிலை நிறுத்தினார். பெரும் ஞானிகளாக விளங்கிய தனது முக்கிய சீடர்களை தலைவர்களாகக் கொண்டு, தென்னகத்தில் சிருங்கேரியில் சாரதா பீடத்தையும்,மேற்கே துவாரகையில் துவாரகா பீடத்தையும்,வடக்கே ஜ்யோதிர்மட் என்ற இடத்தில் ஜ்யோதிர் பீடத்தையும்,கிழக்கே பூரியில் கோவர்தன பீடத்தையும் நிறுவினார்.🤚

ॐசிவ ஆனந்தமாக சிவ சிவ ॐ

No comments:

Post a Comment

Followers

புராதனவனேஸ்வரர் பட்டுக்கோட்டை தஞ்சாவூர்...

அருள்மிகு புராதனவனேஸ்வரர் திருக்கோயில் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம்.       இறைவன் :- புராதனவனேஸ்வரர் இறைவி :- பெரியநாயகி அம்...