Monday, November 28, 2022

திருச்சேறை ருணவிமோச்சன லிங்கேஸ்வரர் திருக்கோயில்

.
திருச்சேறை ருணவிமோச்சன லிங்கேஸ்வரர் திருக்கோயில்.
கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினை தீர திருச்சேறை ஸ்ரீரிணவிமோசன லிங்கேஸ்வரரை சரணடையுங்கள். நோயற்ற வாழ்வு எவ்வளவு முக்கியமோ அதே போல கடனில்லாத (பிறவி கடன்) வாழ்வு வாழ்வதும் மிகவும் முக்கியம்.
.
திருச்சேறை என்ற இடத்தில் உள்ளது சாரபரமேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலய இறைவன் பெயர் சாரபரமேஸ்வரர். செந்நெறியப்பர், உடையவர் என்பன இறைவனின் பிற பெயர்கள். இறைவியின் பெயர் ஞானாம்பிகை.
.
இத்தலத்தில் பிரார்த்தனை தெய்வமாகவும், எல்லா வகை கடன்களையும் நிவர்த்திசெய்கின்ற கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகவும் ஸ்ரீரிணவிமோசன லிங்கேஸ்வரர் தனிசன்னதி கொண்டு உள்ளார்.
.
ஞானம் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழு மனிதன் ஆவான். எவ்வளவு செல்வம் இருப்பினும் அதை காக்க அறிவு என்ற ஞானம் வேண்டும்.
.
தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளித் தருவதால், இத்தல இறைவி ஞானாம்பிகை என அழைக்கப்படுகிறாள்.
.
தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற 127 தலங்களில் 95-வது தலமாக விளங்குகிறது திருச்சேறை.
.
கடன்நிவர்த்தி ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் ஒரே சன்னதியில் சிவ துர்க்கை,விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவ துர்க்கை என 3 துர்க்கைகள் அருள்பாலித்து வருகின்றனர்.
.
கடன் தீர்க்கும் இறைவர் இத்தலத்தில் பரிகார தெய்வமாக ரிண விமோசன லிங்ககேஸ்வரர் விளங்குகிறார். மார்க்கண்டேய முனிவர் தன்னுடைய ஆசிரமத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார்.
.
அந்த மார்கண்டேய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அவரின் ஆத்மார்த்த லிங்கமே ரிண விமோசன லிங்கேஸ்வரர்.
.
சிவனுக்கு அபிஷேகம் பொதுவாக மனிதனாகப் பிறந்தவருக்கு பிறவிக்கடனும், இப்பிறவியில் பொருள் கடனுமாக இரண்டு கடன் உண்டு.
.
ரிண விமோசன லிங்கேஸ்வரரை முறையோடு வழிபட்டால், இந்த இரண்டு கடன்களிலிருந்து விடுபடலாம்.
.
எனவே இவர் கடன் நிவர்த்தீஸ்வரர் (பிறவி கடன்) என போற்றப்படுகிறார். தொடர்ந்து 10 திங்கட்கிழமைகள் இவருக்கு அர்ச்சனை செய்து, 11வது வார முடிவில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் உரிய பலன் கிடைக்கும்.
.
எப்படி செல்வது மகாபாரதத்தில் எரியும் அரக்கு மாளிகையில் இருந்து பாண்டவர்கள் வெளியேற யுத்திகள் கூறியவரும், குந்திதேவிக்கு உபதேசம் செய்தவருமான தவுமிய மகரிஷி இத்தலத்தில் மோட்சம் பெற்றதாக வரலாறு.
.
கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்ப கோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்கு செல்ல கும்பகோணத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

ஓம் நமசிவாய வாழ்க

🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...