Friday, December 9, 2022

வீட்டில் கன்னி தெய்வ வழிபாடு எப்படி செய்வது

🔥🌷ஓம் நமசிவாய 🌷🔥
🌹வீட்டில் கன்னி தெய்வ 
வழிபாடு எப்படி செய்வது🌹

🌺ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குல தெய்வம் இருக்கும். குல தெய்வத்தை சரியாக வணங்கி வந்தாலே வாழ்வில் அனைத்தும் சிறக்கும்.🌺

🌼குலதெய்வ வழிபாடு அனைத்து நன்மையையும் செய்யும் மற்ற தெய்வ வழிபாடுகள் பிறகுதான். 🌼

குலதெய்வம் தெரியாதவர்கள் ஆக இருந்தாலும் குலதெய்வத்தை வணங்குபவர்களாக இருந்தாலும் அவர்களின் குடும்ப முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பது கன்னி தெய்வ வழிபாடு.

உங்கள் வீட்டுக்கு யாராவது ஒரு குடுகுடுப்பை அடிப்பவர், குறி சொல்பவர்கள் என யாராவது வந்தால் பலரும் முதலில் சொல்லுவது உங்கள் வீட்டு கன்னிதெய்வம் பற்றித்தான்.
 யார் இந்த கன்னி தெய்வம்.

சில பல தலைமுறைகளுக்கு முன்னர் நம் அப்பா வழி உறவில் பிறந்து திருமணம் ஆகாமல் சிறு குழந்தையிலேயே இறந்து போன பெண் தான் நம் வீட்டின் கன்னி தெய்வமாக இருக்கிறது என்பது ஐதீகம். ஒவ்வொரு குடும்பத்திலும் திருமணம் ஆகாமல் யாராவது சிறு பெண்கள், குழந்தைகள் எத்தனையோ தலைமுறைக்கு முன்னர் ஒருவராவது இறந்திருப்பார்கள்.

அது தெய்வமாகி நம் வீட்டையே பாதுகாத்து வரும் என்பது நம்பிக்கை. இது உண்மையும் கூட.

பலரது வீட்டில்அவர்கள் குடும்பத்தில் வரும் பெரிய ஆபத்துக்களில் இருந்தும் வீட்டில் நடக்கும் சின்ன பிரச்சினைகள் வரை பெரிதாக பூதாகரம் ஆகாமலும், அப்படியே ஆனாலும் அந்த பிரச்சினையை சமரசமாக ஆக்கி கொண்டு வரும் சக்தி உடையது வீட்டின் கன்னி தெய்வம்.

இது போல வீட்டின் காவல் தெய்வமாக இருக்கும் கன்னி தெய்வத்துக்கு உரிய பூஜை முறைகளை நாம் செய்யவேண்டும். வீட்டின் பூஜையறையில் கடையில் விற்கும் பட்டுவினால் ஆன சிறு துணியை வாங்கி அதற்கு மஞ்சள் அல்லது சந்தனத்தில் கண் வாய் மூக்கு உருவங்கள் அந்த துணியில் வரைந்து ஒரு ஆணி அடித்து அந்த துணியை மாட்டி விட வேண்டும். உங்கள் வீட்டு கன்னி தெய்வமாய் நினைத்து தினமும் வழிபடவேண்டும். குடும்பத்தை முன்னேற்றவும் பிரச்சினைகளுக்கு தீர்வுக்காகவும் வேண்டிக்கொள்ள வேண்டும்.

கன்னிதெய்வத்தை அம்மன் போல பாவித்து வணங்க வேண்டும். பவுர்ணமி தோறும் உங்கள் பூஜையறையில் உள்ள கன்னி தெய்வத்துக்கு வாசனை மலர்கள் சூடி, ஏதாவது ஒரு இனிப்போ, பலகாரமோ செய்து அதற்கு படைத்து சாம்பிராணி புகை, ஊதுபத்தி, கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும். தெய்வத்துக்கு முன்பு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.

ஒவ்வொரு பவுர்ணமி தோறும் சைவமாக சமைத்து இருக்க வேண்டும் அன்று அசைவம் சேர்க்க கூடாது இதை தொடர்ந்து செய்து வந்தால் குடும்பத்தில் சிறிது சிறிதாக நற்காரியங்கள் நடக்க ஆரம்பிக்கும்.

No comments:

Post a Comment

Followers

மனக்குறைகளைத் தீர்க்கும் திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள்..

_மனக்குறைகளைத் தீர்க்கும் திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள்..._ திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அழகிய முறை...