Friday, December 9, 2022

ஐயப்பனுக்கு மாலை அணிந்தவர்கள்... கோபப்படக்கூடாது ஏன் தெரியுமா?



📿 ஐயப்பனுக்கு மாலை அணிந்தவர்கள்... கோபப்படக்கூடாது ஏன் தெரியுமா?

ஐயப்பன் கலியுக வரதன் ஆவார். எனவே கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. அதன்படி ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது.

பிரம்மச்சரிய விரதம் :

சபரிமலை ஐயப்பன் பிரம்மச்சரிய கடவுள் என்பதால், ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருப்பவர்கள், முழுமையாக பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.

ஐயப்பனுக்கு விரதம் இருப்பது நல்லதா?

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள், அந்த விரத முறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

ஆன்மிகத்தை பொருத்த வரையில், உபவாசம் என்னும் விரதம் இருக்கும்போது தான் மனம் தூய்மையாகி இறை சிந்தனையில் லயிக்கின்றது. வேறு எந்த தவறான எண்ணமும் எழாதவாறு கட்டுப்படுத்தப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் விரதமும் இதையே தான் உணர்த்துகிறது.

மேலும், மாலை அணிந்து மலையேறி செல்லும்போது, தேவையில்லாத உடல் உபாதைகள் ஏற்படுவதையும் தடுக்கிறது. அளவுக்கு அதிகமாக உண்பதால் மலையேறிச் செல்லும்போது, அநாவசியமாக பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும்.

அதோடு, குளிர்காலத்தில் ஜீரண உறுப்புகள் சரிவர வேலை செய்யாது. அதனால் இலகுவான உணவுகளை உட்கொண்டால் எளிதில் ஜீரணமாகிவிடும். இதனாலேயே மாலை அணிந்து மலைக்கு செல்பவர்கள் விரதம் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் வரைமுறைகளை வகுத்திருக்கின்றனர்.

மாலை அணிந்தவர்கள் கோபப்படக்கூடாது ஏன் தெரியுமா?

முதலில் மாலை அணிந்தவர்கள் தவிர்க்க வேண்டிய முக்கிய குணம் கோபம். சபரிமலை ஐயப்பன் சாந்த சொரூபி. அதனால் கோபத்தை தவிர்ப்பதோடு, யாரிடமும் பகைமை மற்றும் விரோதம் கொள்ளக்கூடாது. அனைவரிடமும் அன்போடும், சாந்த குணத்தோடும், பணிவோடும் பேசி பழக வேண்டும்.

காலணிகளை ஏன் அணியக்கூடாது?

ஐயப்பனுக்கு மாலை அணிந்தவர்கள் காலணிகளை பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால், மலையேறும்போது சிரமப்பட நேரிடும் என்பதால் தான் காலணிகளை பயன்படுத்தக்கூடாது என்று சொல்லப்படுகிறது.

ஐயப்பன் பாடல்கள் :

அதிகாலையிலேயே அதாவது விடிவதற்கு முன்பே குளிர்ந்த நீரில் குளித்து விட்டு வீட்டிலும், கோவிலிலும் சபரிமலை ஐயப்பனை மனமுருக வேண்டி ஐயப்பனின் மந்திரங்களை சொல்லி வரவேண்டும். மாலையிலும் அதே போல் குளித்து விட்டு பூஜை செய்து ஐயப்பனின் மந்திரங்களை சொல்ல வேண்டும்.

மாலையை கழற்ற நேர்ந்தால் :

விரும்பியபோது மாலையை கழற்றவோ, அணியவோக்கூடாது. ஒருவேளை ரத்த சம்பந்தம் உள்ளவர்களின் மரணம் ஏற்பட்டால் மட்டுமே, ஐயப்பனை வேண்டிக்கொண்டு, குருசாமியிடம் சொல்லி மாலையை கழற்றிய பிறகு துக்க நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.

எந்தவொரு காரணத்திற்காகவும் மாலையை கழற்ற நேர்ந்தால், அந்த ஆண்டு கண்டிப்பாக சபரிமலைக்கு செல்லக்கூடாது. ஓர் ஆண்டு முடிந்த பிறகே சபரிமலைக்கு செல்ல வேண்டும்.

🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

🙏🌹🙏அனைவருக்கும் என் இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம். இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 🙏🌹🙏

No comments:

Post a Comment

Followers

மனக்குறைகளைத் தீர்க்கும் திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள்..

_மனக்குறைகளைத் தீர்க்கும் திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள்..._ திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அழகிய முறை...