சக்கரவாகேஸ்வரர் திருக்கோவில்.
இறைவன் - சக்கரவாகேஸ்வரர்
இறைவி - தேவநாயகி.
ஊர் - சக்கரப்பள்ளி
மாவட்டம் - தஞ்சாவூர்.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள
17வது சிவத்தலமாகும்.
சக்கரவாகப் பறவை வழிபட்டதாலும், (சக்கரமங்கை வழிபட்டதாலும்) இவ்வூர் சக்கரப்பள்ளி என்று வழங்கலாயிற்று.
திருமால் வழிபட்டுச் சக்கராயுதம் பெற்ற தலம். சக்கரவாகப் பறவை வழிபட்டத் தலம் என்று கூறுவதும் உண்டு.
பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தியன்று சூரியன் இவ்விறைவனை வழிபடும் அற்புதக் காட்சியைக் காணலாம்.
செம்பியன்மாதேவி இக்கோவிலை கற்றளியாக மாற்றியமைத்தார். செம்பியன்மாதேவி இவ்வூர் இறைவனை மலர்கொண்டு வழிபடும் புடைப்புச்சிற்பம் இதனை உறுதிப்படுத்தும்.
சப்தமாதர்கள் வழிபட்ட ஏழு கோயில்களில், சக்கராப்பள்ளி சப்தஸ்தானத் தலமாகக் கோயில்களில், இதுவும் ஒன்றாகும்.
சக்கரவாகேஸ்வரர் கோவிலில் நவக்கிரகம் கிடையாது. இறைவனே நவக்கிரக நாயகனாக அருள் ஆட்சி செய்து வருகிறார்.
சக்கரவாகேஸ்வரர் கோவிலில் உள்ள தெட்சிணாமூர்த்தி சன்னதி வேறு எங்கும் காண இயலாத சிற்ப அழகுடன் 5 தலை நாகம் குடைபிடிக்க ஆலமரத்தின் கீழே அமர்ந்து தன்னை நாடும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது போன்ற தோற்றத்துடன் உள்ளது.
தஞ்சாவூரில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. தஞ்சாவூர் - கும்பகோணம் சாலை மார்க்கத்தில் உள்ள அய்யம்பேட்டை என்ற ஊரில் நெடுஞ்சாலையின் ஓரத்திலேயே சற்று உள்ளடங்கி கோயில் உள்ளது.
No comments:
Post a Comment