Friday, March 31, 2023

*திருவாரூர்தேர்*அமைந்துள்ள,தியாகராஜர் கோயில்தான் இந்தியாவின் மிகப் பெரிய கோயிலாகும்*

🌹🌹சிவ லோக நாதனே  இனிய ஈசனே உன் ஆழ்ந்த கருணையுடன் இந்தியாவின் மிகபெரிய கோயில் எது தெரியுமா
🌹🌹_தெரிந்து கொள்வோம்‼️_

🌹🌹33 ஏக்கர் (14 லட்சம் சதுரடி) நிலப்பரப்பில்
திருவாரூரில் அமைந்துள்ள,
தியாகராஜர் கோயில்தான் இந்தியாவின் 
மிகப் பெரிய கோயிலாகும்!

🌹🏵️ 9 ராஜ கோபுரங்கள்,
🏵️ 80 விமானங்கள்,
🏵️ 12 பெரிய மதில்கள்,
🏵 13 மிகப்பெரிய மண்டபங்கள்,
🏵️ 15 தீர்த்தக்கிணறுகள்,

🌹🏵️ 3 நந்தவனங்கள், 
🏵️3 பெரிய பிரகாரங்கள்,
🏵️ 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்),
🏵️ 100க்கும் மேற்பட்ட சன்னதிகள்,
🏵️ 86 விநாயகர் சிலைகள்,
🏵️ 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக விளங்குகிறது.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
சோழர்கள் கட்டிய கோவில் இது.

 🌹🌹சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலை சிறப்பாக நிர்வகித்துள்ளனர்.

*🌹🌹திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும்.*
 தெற்கு வடக்காக 656 அடி அகலமும்,
கிழக்கு மேற்காக 846 அடி நீளமும்,
சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை
நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.❗

நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது.
ஸ்வாமியின் நடனம் அஜபா நடனம்.
ஸ்வாமி திருமேனி தரிசனம் கிடையாது. மார்கழி திருவாதிரை ஒரு பாதமும், பங்குனி உத்திரம் மற்றொறு பாதமும் தரிசனம் கிடைக்கும்.🙏

 🌹🌹திருமேனியை யாரும் பார்த்தது கிடையாது. பார்த்தால் கண் குருடாகிவிடும் என்பதால் யாருக்கும் தரிசனமும் கிடையாது❗
அர்ச்சகர்களும் பார்த்தது கிடையாது. 
கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

🌹🌹திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.

🌹🌹கோயில் ஐந்து வேலி,*
*குளம் ஐந்து வேலி,*
*செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி*
என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்).

 🌹🌹கோவிலின் மொத்த பரப்பளவு 33 ஏக்கர் ஆகும். அதாவது பதினாலு லட்சத்து முப்பத்து ஏழாயிரத்து நானுற்று என்பது
(1437480 ) சதுர அடியாகும்
இவ்வளவு பிரமாண்டமான ஆலயத்தை முழுமையாக தரிசனம் செய்து முடிக்க வேண்டுமானால் ஒரு நாள் முழுவதும் செலவிட்டால் தான் முடியும்.🙏🌹

🌹🌹நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம் ‌‌ சிவனே சரணாகதி

🌹🌹அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதம் பணிந்து இன்றைய விடியலை மனமுவந்து நமக்கு அளித்த இனிய ஈசனுக்கு நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரம் ஈசனே

🌹🌹உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள்.

🌹அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி. 🦜🦜🦜

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...