Wednesday, May 3, 2023

சிறப்புக்கள் வாய்ந்த சிவஸ்தலம் தென் கைலாயம் எனப்படும் சதுரகிரி இத்தலத்தின் பதிவுகள் அறிந்திராத வரலாறு

_சதுரகிரி வரலாறு_


சிறப்புக்கள் வாய்ந்த சிவஸ்தலம் தென் கைலாயம் எனப்படும் சதுரகிரி  இத்தலத்தின் பதிவுகள் அறிந்திராத வரலாறு

சுமார் 300- கோடி ஆண்டுகள் பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்து பழமையானவராக, சற்றே சாய்ந்த மிகச்சிறிய சுயம்பு லிங்தத்திருமேனியராய் இத்தலத்தில்  வீற்றிருக்கும்
நம் இனிய ஈசன்தான்,
உலகத்தின் உயரமான 
இடத்தில் அருட்குடி
கொண்டிருக்கும் இறைவனாவார் என்பது இச்சிவாலயத்தின்
பெரும் சிறப்பாகும்.

'சதுரகிரி' என்பதற்கு,
'நான்கு (மலைகளுக்கு) கிரிகளுக்கு நடுவே அமைந்த லிங்க வடிவ " மூலவர் தான் சதுரகிரி ஸ்ரீ சுந்தரமகாலிங்க திருமேனி ஆவார்

ஒரு ராமாயண கால வரலாற்றின் படி அனுமன் சஞ்சீவி மலையினை தூக்கிக்கொண்டு செல்லும் பொழுது இவ் வழியாக பயணப்படும் பொழுது அனுமன்
வழிபட்ட சிவஸ்தலமாகும்.

இமயமலையில்,
உள்ள பார்வதி பரமேஸ்வரன் திருக்கல்யாணம் புராண கதைகள் அதிகம் தொடர்புடைய 
சிவஸ்தலம் சதுரகிரி
 ஐந்து முக்கிய வழிபாட்டு மலைகோவில்.

1.ஸ்ரீசுந்தர மகாலிங்கேஸ்வரர்- சுயம்பு (மூலவர்)

2.ஸ்ரீ சுந்தரமூர்த்தி அகத்தியர் முனி பூஜித்தது பிரதிஸ்டை செய்தது. (துணைவர்)

3.ஆனந்த வள்ளி அம்பாள்- (இறைவி)

4.ஸ்ரீசந்தன மகாலிங்கேஸ்வரர்-அடியார்களால் பிரதிஷ்டை செய்தது

5.ஸ்ரீ பிலாவடி கருப்பன்-
சதுரகிரியின் காவல் தெய்வம் . 

இவை அனைத்தும் மலையின் மேல் நாம் பார்க்க வேண்டிய திருத்தலங்கள்.

இவைகளில் இவர்களுக்கு மேல் பகுதியில் பெரிய மகாலிங்கம் என்ற பாறை போன்ற திருமேனி லிங்க வடிவில் உள்ளது ஆதிகாலத்தில் அமாவாசை பௌர்ணமி காலங்களில் பெரிய மகாலிங்கம் திருமேனிக்கு பரம்பரை பூஜாரியாகவும்  பரம்பரை அறங்காவலர் இருக்கும் குடும்பத்தார்களால் பூஜை செய்யப்பட்டு வந்துள்ளது ஆதி காலத்தில் 
மேலும் சித்தர்கள் நடமாடும் சித்தர்கள் தவம் செய்த இடமான தவசி பாறை எனும் குகை உள்ளது.
ஆதி காலத்தில்    ஆதி மகாலிங்கம் எனும் இடம் இருந்திருக்கிறது இன்றும் இருக்கிறது அது மனித நடமாட்டம் அதிகமான பின்பு கால போக்கில்  நம் கண்களுக்கு புலப்படுவதில்லை  ஆதி காலத்தில் பூஜை செய்யப்பட்டு வந்துள்ளது மலைகளின் ஆதிவாசிகளான பலியர்களாலும்,பரம்பரை பூஜாரி
குழந்தையானந்த சுவாமிகளும் 9ம் தலைமுறை பரம்பரை அறங்காவலரும் ஆன இவர்களது குடும்பத்தின் சார்பாகவும்  பூஜை செய்யப்பட்டு  வந்துள்ள வரலாறு ஆகும்.

சட்டநாத முனிவர் குகை கோரக்கர் குகை தவசி குகை முனிவர்கள் தவம் செய்த இடமாக இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பக்தர்களால் இன்று சந்தனமகா
லிங்கத்திற்கும்  
திருக்கோவில் அன்னதான கூடத்திற்கும் நடுவே ஆதி மகாலிங்கம் எனும் திருமேனி. லிங்கம் பக்தர்களால் பூஜை செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இன்றளவும் சித்தர்கள் உலா வரும் இடமாகவும் இச்சதுரகிரி இருக்கிறது. 

கடல் மட்டத்தில் 3050 அடி உயரத்தில் அமைந்துள்ள 
இந்த ஆலயம் சதுரகிரி எனும் நாமத்தில் மலைகளுக்கு  நடுவே   
 அமைந்துள்ள 

ஸ்ரீசுந்தர மகாலிங்கம் சுயம்புலிங்க
 ஸ்தலமாகவும் விளங்குகிறது.

தென் இந்தியாவிலேயே 
18 சித்தர்களும் ஒரே இடத்தில்  வாழ்ந்து வழிபட்ட சிவஸ்தலம் இச்சதுரகிரி 
 
சதுரகிரி மலையில் காயகற்ப மூலிகைகள் நிறைந்து இருப்பதால் இம்மலையை மூலிகைகளின் சாவிஎன்று அழைப்பார்கள்.

மலைகளைச் சுற்றி கவுண்டிய தீர்த்தம் கல்சுனை,
குளிராட்டி தீர்த்தம்
 18 சித்தர்களும் நீராடிச் சென்ற எண்ணற்ற தீர்த்தங்களும் சுனைகளும், கன்னிமார் ஓடை போன்ற நீர் ஓடைகள் அமைந்துள்ள இடம்.

ஆதிகாலத்தில் சுந்தர மகாலிங்கம் திருமேனிக்கு ஒற்றக்கொம்பு யானை பூஜை செய்வது பிளுறுவது வழக்கம் விழா கால தினங்களில் (1900- 1971)

சுயம்புலிங்க திருமேனியான ஸ்ரீசதுரகிரி சுந்தர மகாலிங்கம் மாவிலிங்க மரத்தின் அடியில் சுயம்புவாக தோன்றினார்.
மாவிலிங்க மரத்தின் வேரானது தற்பொழுது பரம்பரை அறங்காவலர் அவர்களின் வீட்டில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தலத்தின் சிறப்பு வாய்ந்த விழா காலங்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை,புரட்டாசி மாத நவராத்திரி கொலு 7 நாட்கள்

தல மரம்-- மாவிலிங்க மரம்

பிரசாதம் - தேனும் திணை மாவும்

திருக்கோவில்  அமைந்திருக்கும் ஊர் சாப்டூர் சதுரகிரி பேரையூர் வட்டம், மதுரை மாவட்டம், 

அலுவலக இருப்பு. வத்திராயிருப்பு 

இன்னும் பல பல சிறப்புக்கள் பெற்ற 
இத்தல ஈசனை, 
இன்றைய நாளின்
இந்த நேரத்தில் 
நாம் நினைப்பதே ஒரு பெரிய புண்ணியம்தான்

ஓம் நமச்சிவாய நமக.

No comments:

Post a Comment

Followers

வடபழநிஆண்டவர் தண்டாயுதபாணி திருக்கோயில்

#தென்பழநிக்கு செல்ல முடியாதவர்கள்  தமிழகத்தின் தலைநகரான #சென்னை_மாநகரில்  உள்ள புகழ்பெற்ற முருகப் பெருமான் குடிகொண்ட #சென்னையம்பதி  #கோடம்பா...