Sunday, July 2, 2023

மங்கையின் மானம் காத்த இறைவன் திருப்பனந்தாள்

மங்கையின் மானம் காத்த இறைவன்
திருப்பனந்தாள் என்ற தலத்தில் உள்ள இறைவனை தாடகை என்ற பெண் நாள்தோறும் பூஜித்து வந்தாள் ஒரு நாள் சிவனுக்கு மாலை சாத்தும் போது அவளது மேலாடை நழுவியது ஆடையை ஒரு கையால் பற்றிக்கொண்டு மாலை சாத்தமுடியாமல் அப்பெண் வருந்தினாள்.

அப்போது இறைவன் அந்த பெண்ணுக்காக இரங்கி தன் தலையை சற்று சாய்த்து கொடுத்தார் மங்கையும் மாலையை அணிவித்து விட்டு மகிழ்ச்சியுடன் வணங்கிச் சென்றாள் அன்று முதல் சிவலிங்க திருமேனி சாய்ந்தே இருந்தது.

பிறகு இந்த ஈசன் அடியாருக்காக தலை நிமிர்ந்த கதையும் உண்டு. அக்கதை பின்வருமாறு:

அப்போது இந்தக்கோயிலில் சோழ மன்னனின் திருப்பணி நடந்து கொண்டிருந்தது சிவன் தலை சாய்ந்திருக்கும் செய்தியை மன்னன் கேள்விப்பட்டான்

உடனே தனது படையை அனுப்பி சிவனது தலையை நிமிர்த்த ஏற்பாடு செய்தான் யானைகளை சிவலிங்கத்தோடு சேர்த்து கயிற்றால் கட்டி இழுத்தனர் ஆனால் முடியவில்லை மனம் வருந்தினான் மன்னன்.

63 நாயன்மார்களில் ஒருவரான குங்குலியக்கலய நாயானர் இத்தல சிவனை வழிபட வந்திருந்தார் அவருக்கும் இந்த செய்தி எட்டியது நமச்சிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி சிவனுக்கு குங்குலியப்புகையினால் தூபமிட்டார்

பின் பூவினால் சுற்றப்பட்ட ஓர் கயிறை எடுத்து ஒரு முனையை சிவலிங்கத்தில் இணைத்து, மற்றொரு முனையை தன் கழுத்தில் கட்டி பலமாக இழுத்தார் கயிறு இறுகியதால் இவரது உயிர் போகும் நிலை ஏற்பட்டது ஆனால் நாயனார் கவலைப்படவில்லை

தன் முழு பலத்தையும் கொண்டு இழுத்தார் இவரது அன்புக்கு கட்டுப்பட்டார் சிவன் இதற்கு மேலும் நாயனாரை இறைவன் சோதிக்க விரும்பவில்லை சிவலிங்கம் நேரானது குங்குலியக்கலயனாரின் பக்தியையும், இறைவனிடம் கொண்ட அன்பையும் கண்ட மன்னன் மகிழ்ந்தான் நாயனாருக்கு பல பரிசுகள் கொடுத்து கவுரவப்படுத்தினான்

No comments:

Post a Comment

Followers

மார்பு நோய்களை களையும் மணப்பாறை அகத்தீஸ்வரர்

மார்பு 🥢நோய்களை களையும் மணப்பாறை அகத்தீஸ்வரர் ஆலயம் மணப்பாறை ஸ்ரீவடிவுடைநாயகி உடனாகிய ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம் பெண்களின் மார்பு ச...