☀️ இந்த ஆண்டு ஜூலை 17ம் தேதி சூரியன் _மிதுன_ ராசியிலிருந்து _கடக_ ராசிக்கு மாறுகிறார். அன்றைய தினமே *ஆடி* மாதம் பிறக்கிறது. அன்றைய தினம் *அமாவாசை* யும் சேர்ந்து வருகிறது. *மாதப்பிறப்பு, தக்ஷிணாயனம், அமாவாசை* என்று மூன்று புண்ணிய காலங்கள் இணைந்த ஆடிப் பண்டிகையை இந்தாண்டு கண்டு களிக்க உள்ளோம்.
மேலும், ஆடி மாதம் 30ம் தேதி (ஆகஸ்ட் 15ம்தேதி) மீண்டும் அமாவாசை வருகிறது. இப்படி ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை தினங்கள் வருகிற போது, ஆடி அமாவாசை எனும் சிறப்பு எதற்கு உண்டு ?
எல்லோருக்கும் ஏற்படும் ஐயம் தானே? அது ஏன்?
நாம் நம் முன்னோர்களை வணங்கி வழிபடுவதால் நமக்கு அத்தகைய கேள்வி எழுகிறது.
ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசையோ, பவுர்ணமியோ, வந்தால் முதலில் வருவதை விட்டு விட்டு, பின்னதையே சிறப்புடையதாக ஏற்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
⚫
*எது ஆடி அமாவாசை ?*
-------------------------------
" *பூர்வம் த்யக்த்வா பரம் க்ராஹ்ய* " என்பது வாக்கியம்.
இதன்படி, *பூர்வம்* என்கிற முதலாவதை (" *த்யக்த்வா* ") விட்டு விட்டு , *பரம்* என்கிற பின்னால் வருவதை ( " *க்ராஹ்ய* ") எடுத்துக் கொள்ள வேண்டும், என்பது தான் அதன் பொருள்.
எனவே, ஆடி முதல் தேதியில் வரும் அமாவாசையை சாதாரணமாக தர்ப்பணம் செய்யும் நாளாகவும், ஆடி 30ம் தேதி வரும் அமாவாசையை சிறப்புடைய ஆடி அமாவாசையாகக் கொண்டு, கடல் ஆறு, குளக்கரைகளில் தர்ப்பணம், தானம் முதலியன செய்து முன்னோரின் ஆசியைப் பெறுவோமாக !இந்த ஆண்டு ஆகஸ்ட் 15, 2023 அன்று ஆடி மாதத்தின் அமாவாசை வருகிறது. இந்த நாளில் முழு பக்தியுடன் சிவனை வழிபடுபவர்களின் ஜாதகத்தில் பித்ரு தோஷத்தின் தாக்கம் குறையத் தொடங்குகிறது. இது தவிர, மலமாதம் அமாவாசை நாளில் சிவனுக்கு ஜலாபிஷேகம் செய்வது, வில்வம் இலைகளை சமர்ப்பிப்பது போன்றவை செய்தால் உங்கள் பிரச்னைகள அனைத்தும் விலகும்.
No comments:
Post a Comment