Sunday, August 27, 2023

இன்று திங்கட்கிழமை- சோமாவார பிரதோஷம் கோவில் செல்ல மறவாதீர்கள்!

இன்று திங்கட்கிழமை- சோமாவார பிரதோஷம் கோவில் செல்ல மறவாதீர்கள்!

இன்று!
ஆகஸ்ட் 28-08-2023, சோபகிருது வருடம், ஆவணி 11, திங்கட்கிழமை

சிறப்பு : திங்கட்கிழமை பிரதோஷம் 

வழிபாடு : மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து  வில்வ மாலை சாத்தி வழிபடுதல்.

பிரதோஷமும் சிவபூஜைக்கு உரிய மிகவும் சக்தி வாய்ந்த பூஜை என்கின்றன ஆகமங்களும் தர்மசாஸ்திரங்களும்! பிரதோஷ நாளில், பிரதோஷ காலம் என்று சொல்லப்படும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான வேளையில், சிவாலயங்களுக்குச் சென்று, சிவனாரைத் தரிசிப்பதும் பூஜிப்பதும் பிரார்த்திப்பதும் பாவங்களைப் போக்கவல்லது, புண்ணியங்களைப் பெருக்கக் கூடியது என்பது ஐதீகம்!

சோமவார பிரதோசம் சிறப்பு வாய்ந்தது. சோம வாரம் திங்கட்கிழமை, தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில் திருநீலகண்டனை வழிபட்டால் அத்தனை தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞான நூல்கள்.

நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் தீவினை விலகும். நன்மையெல்லாம் பெருகும்.

சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம். பிரதோஷ நேரத்தில் ஈசுவரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வ தாக ஐதீகம். பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையும் விசேஷம். பிரதோஷமும் மிகப்பெரிய புண்ணியம். இந்த இரண்டும் சேர்ந்து வருவது, இன்னும் இன்னுமான சந்தோஷங்களையும் சத்விஷயங்களையும் நமக்குத் தந்தருளும் என்பது சத்தியவாக்கு!

சோம வாரப் பிரதோஷத்தன்று மறக்காமல், மாலை வேளையில் சிவாலயம் செல்லுங்கள். அப்போது நந்திதேவருக்கும் சிவனாருக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளைக் கண்ணாரத் தரிசியுங்கள்.

முடிந்தால், நந்திதேவருக்கு செவ்வரளியும் அருகம்புல் மாலையும் வழங்குங்கள். பன்னீர், சந்தனம், அரிசிமாவு, விபூதி, பால், தயிர் என உங்களுக்குப் பிடித்தமான அபிஷேகப் பொருட்களை வழங்குங்கள். அதேபோல், சிவனாருக்கு ஒரு கைப்பிடி அளவேனும் வில்வம் சார்த்துங்கள். 

இன்னும் முடியுமெனில், எலுமிச்சை சாதமோ தயிர் சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு விநியோகம் பண்ணுங்கள். முன்னேறுவதற்குத் தடையாக உள்ள சகலத்தையும் தகர்த்து அருள்வார் சிவனார். அடுத்தடுத்து முன்னேறிச் செல்ல வழிவகைகள் செய்வார் ஈசன்.

நம் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தந்து நம்மை ஆனந்தமாக வாழச் செய்வார் தென்னாடுடைய சிவனார்!

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...