வேறெங்கும் காணமுடியாத, நெல்லையப்பர் கோவிலில் உறைந்து கிடக்கும் அற்புதம்!... உங்களுக்கு தெரியுமா?
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ்மிக்க நெல்லையப்பர் கோவிலில் பல அரிய சிறப்புகள் காணப்படுகின்றன.
அவற்றுள் சில வேறெங்கும் காணமுடியாத தனிச்சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புகழ்மிக்க நெல்லையப்பர் கோவிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி படுத்திருக்கும்.
அடுத்து உள்ளே சென்றார் சுமார் 9 அடியில் விநாயகர் வீற்றிருக்கிறார். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் இருக்கின்றன.
முதல் பிரகாரத்தில் எல்லாக் கோவில்களையும் போல தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சந்நிதிகள் இருக்கின்றன. கோவிந்தப் பெருமாள் சிவனுக்கு அருகிலேயே சயனித்திருக்கிறார்.
இந்த கோவிலின் இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. இங்கே “ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில் தான் தாமிர சபை உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.
மூன்றாவது பிரகாரம் மிகவும் பெரியது. 3 யானைகள் கூட இதில் சேர்ந்து நடக்கலாம். அவ்வளவு அகலம் கொண்டது.
இந்த பிரகாரத்திலிருந்து, அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதிக்கு செல்லலாம். இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோருக்கு தனிச் சந்நிதிகள் இருக்கின்றன. கோவிலின் மிகப் பெரிய உள் தெப்பம் இருக்கிறது.
மூன்றாவது பிரகாரம் மிகவும் பெரியது. 3 யானைகள் கூட இதில் சேர்ந்து நடக்கலாம். அவ்வளவு அகலம் கொண்டது. இந்த பிரகாரத்திலிருந்து, அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதிக்கு செல்லலாம்.
இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோருக்கு தனிச் சந்நிதிகள் இருக்கின்றன. கோவிலின் மிகப் பெரிய உள் தெப்பம் இருக்கிறது.
இந்த மூன்றாவது பிரகாரத்தில் முருகப்பெருமானுக்கு தனியாக பெரிய சந்நிதி இருக்கிறது. ஆறுமுகமாய், மயில் வாகனனாய், வள்ளி தெய்வானையுடன் சந்தனக்காப்பில் நின்று அருள் புரிகிறார் முருகன்.
இந்த கோவிலில் உள்ள விநாயகர் பொல்லாப் பிள்ளையார் என்றும், முருகப் பெருமான் ஆறுமுகப் பெருமான் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இந்த நெல்லையப்பர் கோவிலில், சிவபெருமான் நெல்லையப்பராக காடசியளிக்கிறார். அன்னை காந்திமதி அம்பாள் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார்.
நெல்லையப்பர் கோவில் இரு மூலவரைக் கொண்ட துவிம்மூர்த்தி என்ற வகை கோவிலாகும். இரு மூலவர்களாக சுவாமி நெல்லையப்பர் லிங்க வடிவத்திலும், கோவிந்தராஜர் சயன கோலத்திலும் அருகருகே தனித்தனி சன்னதியில் பக்தர்களுக்குக் காட்சி தருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான ஐந்து சிவசபைகளில் திருநெல்வேலியில் உள்ள ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபைபைய் கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோவில் திருத்தலமும் ஒன்று என்பது சிறப்பாகும்.
கிழக்கு நோக்கிய சன்னதி வாயிலின் இரு பக்கமும் துவார பாலகர்கள் காவல்புரிய, உள்ளே கருவறையில் வெட்டுப்பட்ட லிங்கத் திருமேனியராய் காட்சியளிக்கிறார் நெல்லையப்பர்.
இவரது தலைப் பகுதியில் கோடாரியால் வெட்டுப்பட்ட தழும்பை இன்றும் காணலாம். இந்த நெல்லையப்பருக்கு, வேண்ட வளர்ந்த நாதர், வேணுவன நாதர், சாலிவாடீசர், வெட்டுபட்ட இறைவன், வேய்முத்தர், திருநெல்வேலி உடைய நயினார் ஆகிய பெயர்களும் இருக்கிறது.
சுவாமி நெல்லையப்பர் கோவிலின் நடுநயமாக சுவாமிக்கு நேர் எதிரே காட்சித் தரும் நந்தியை மாக்காளை என்று போற்றுகின்றனர்.
மிக பிரம்மாண்ட வர்ண கலாபத் திருமேனியாகிய இந்த மாக்காளை சுண்ணாம்பு சுதையால் உருவாக்கப்பட்ட திருமேனியாகும்.
இந்த நெல்லையப்பர் கோவில் பல கட்டங்களில், பல மன்னர்களால் கட்டப்பட்டது. தற்போது இருக்கும் நிலைவரை நின்றசீர் நெடுமாற பாண்டியனால் கட்டப்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில், வேறெங்கும் காணமுடியாத அற்புதம் மிக்க இசைக்கல்வெட்டு (Music Inscription) ஒன்று உறைந்து கிடக்கிறது.
அது கம்பிவேலியிட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதில் தாள-லயம் பற்றியும், தாளத்தில் உள்ள அங்கங்கள் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.
அங்கிருக்கும் கல்வெட்டில் பிச்சை அண்ணாவி அவர்கள் பிரமாணம் செய்த இந்த தாளகதிகள் என்றும், அவர் கங்கமுத்து அண்ணாவி என்பவரின் மாணவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பசுவந்தனை என்ற கிராமத்தின் பெயரும் அதில் இடம்பெற்றுள்ளது.
புகழ்பெற்ற இசைவானர் முத்துசாமி தீட்சிதர் இந்த கோவிலின் அன்னை காந்திமதி அம்பாளை போற்றி பாடியுள்ள பாடல்கள் புகழ்பெற்றவை.
இந்த கோவிலுக்கும் இசைவாணர்கள், நாட்டிய கலைஞர்களுக்கும் இருக்கும் தொடர்பை எடுத்துரைக்கும் பல சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன.
அந்த வகையில் இது இசை-நடனத்துடன் நெருங்கிய தொடர்புடைய கோவிலாக இருப்பதை இங்கிருக்கும் பல ஆதாரங்கள் எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தனை சிறப்புமிக்க நெல்லையப்பர் கோவிலில் “நெல்வேலிக்கு கல்வேலி கட்டுகிறேன். இந்த கல்வேலிக்கு இந்த சொல்வேலியாக இந்த கல்வெட்டை எழுதுகிறேன்” என்று கவித்துவம் வாய்ந்த கல்வெட்டு ஒன்று இங்கே இருப்பதையும் பார்க்கமுடியும். இந்த கோவிலுக்கு வருபவர்கள் இங்கிருக்கும் இதுபோன்ற சிறப்புகளையும் பார்க்கத் தவறாதீர்கள்.
No comments:
Post a Comment