Wednesday, August 9, 2023

மீன்I உருவத்தில் மச்சமுனி சித்தர் அருள் செய்யும் திருப்பரங்குன்றம் மலை...!

மீன்
I உருவத்தில் மச்சமுனி சித்தர் அருள் செய்யும் திருப்பரங்குன்றம் மலை...! 
மச்சமுனி சித்தர் பிறந்தது ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில். 300 வருடம் 62 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். திருப்பரங்குன்றத்தில் சமாதியடைந்தார்.

இவர் காக புசுண்டரின் சீடராவார். மச்சமுனி சிவாம்சத்துடனும் முழுமையான சிவனருளோடும் பிறந்தவர். மச்சமுனியின் பிறப்பு மிக விசேஷமானது. தடாகம் ஒன்றின் கரையில் சிவபெருமான் உமாதேவியாருடன் பிறப்பு மற்றும் இறப்பு பற்றியும் உயிர்களின் தோற்றம் மாற்றம் பற்றியும் பலவாறாக பேசியபடி இருக்க, அதைக் கேட்டபடி இருந்த உமா தேவிக்குக் கண்ணயர்ச்சி ஏற்பட்டு உறக்கம் வந்து விட்டது. ஆனால், தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்த தாய் மீன் ஒன்று, அதைக் கேட்டபடி இருந்தது. அந்தத் திருக்குளத்து மீனின் வயிற்றில் ஒரு குஞ்சு மீன் இருந்தது. அந்த மீன், கொடுத்து வைத்த மீன். அது கருவில் திருகொண்ட மீன்.

உலக நாயகன், உலகநாயகிக்குக் கூறிய உபதேச மொழிகளை முழுவதுமாகக் கேட்க கொடுத்து வைத்திருந்த மீன் அது. ‘என்று ஒரு தேவ குரலை அது செவி மடுக்கிறதோ, அன்று அதற்கு சாபவிமோசனம்’ என்று இருந்திருக்க வேண்டும். அந்தக் குஞ்சு மீன், ஒரு பாலகனாய் மாறி உமாதேவன் முன்னால் காலை உதைத்துக் கொண்டு அழுதது. தாய்மீனும் மானிட வடிவம் கொண்டு ஓடிவந்து அணைத்துக் கொண்டு, அப்படியே உலக நாயகன் நாயகி காலில் விழுந்தாள். மச்சமாய் இருந்து, இறை உபதேசம் கேட்டு பிறந்ததால் மச்சேந்திரநாதன் என்ற திருப்பெயரும் ஏற்பட்டது. கூடவே, அந்த ஈஸ்வரனின் பரிபூர்ண கிருபா கடாஷமும் மச்சேந்திரனுக்குக் கிட்டியது!
மச்சமுனி ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள் 62 நாள் ஆகும்.

மச்சமுனி சித்தர் விசாலாட்சி சமேதராக மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் காசிவிஸ்வநாதர் சிலை உள்ள பீடத்தில் தன் ஆன்மாவையும், தன் உடலை நக்கீரர் உருவாக்கிய கங்கை தீர்த்தத்தில் மீனாகவும் ஜீவசமாதி அடைந்துள்ளார். மச்சமுனி ஐயாவை காண பக்தர்கள், தயிர் வாங்கி சுனை நீரில் விடும்பொழுது ஐயா மீன் வடிவத்தில் வந்து தயிரை உண்டு நம் பாவங்களை களைவர் என்பது நம்பிக்கை…

சித்தான சித்து முனி மச்சனப்பா
சீருலகில் நெடுங்காலம் மிகுந்த சித்து
சத்தான திரேகமதை நம்பாமல் தான்
தாரனியிலிருந்த தொரு தனத்தை எல்லாம்
நித்தியமும் அகதிகட்கு அன்னந் தந்து
நிட்களங்க நிடேத வழி தெரிந்துமே தான்
பக்தியுடன் னம்பாளின் தரிசனாத்தால்
பாருலகை மறந்ததொரு சித்தனாமே”

அகத்தியர் 12000

No comments:

Post a Comment

Followers

பதவி உயர்வு தரும் பதஞ்சலி நாதேஷ்வரர் கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர்..

*#பதவி #உயர்வு #தரும் #பதஞ்சலி #நாதேஷ்வரர்* கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர் என்ற இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோ...