300 அடி மலைகுகையில் மார்பளவு தண்ணீரில் உள்ள விசித்திர கோவில்...
மக்கள் செல்வதற்கு ஏதுவாக ஊருக்கு பொதுவான ஒரு இடத்தில் பல கோவில்கள் அமைந்திருப்பதை நாம் பார்த்திருப்போம்.
அதேபோல் முருகன் உள்ளிட்ட பல கடவுள்களின் கோவில்கள் மலை மேல் இருப்பதையும் நாம் பார்த்திருப்போம்.
அனால் இவற்றை எல்லாம் கடந்து ஒரு விசித்திரமான குகை கோவிலை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மணிச்சூழ மலையில் உள்ளது ஜர்னி நரசிம்மர் குகை கோவில்.
பல நூறு ஆண்டுகளாக இந்த கோவிலில் குடிகொண்டிருக்கும் நரசிம்மரை காண்பது அவ்வளவு எளிதல்ல.
ஆங்காங்கே வவ்வால்கள் தொங்கிக்கொண்டிருக்கும் 300 அடி நீளமுள்ள குகையில், மார்பளவு தண்ணீரில் நடந்து சென்றால்தான் இங்குள்ள நரசிம்மரை தரிசிக்க முடியும்.
இந்த குகையில் தானாக ஊற்றெடுத்து எப்போதும் தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது.
இந்த தண்ணீரில் பல மூலிகை சக்திகள் இருப்பதால் இதில் நடந்து சென்றால் தீராத பல நோய்கள் தீரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
குகையின் முடிவில் சிவ லிங்கமும், நரசிம்மர் சிலையும் உள்ளது.
இங்குள்ள நரசிம்மர் சுயம்புவாக தோன்றினார் என்று சிலர் கூறுகின்றனர்.
இன்னும் சிலர், பிரகலநாதனுக்காக நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்த பின்னர் ஜலசூரன் என்னும் அரக்கனையும் வதம் செய்ததாகவும். அந்த அரக்கன் ஒரு சிறந்த சிவ பக்தன் என்றும்.
இந்த குகையில்தான் அவன் தவம் செய்து சிவனை வழிபட்டதாகவும், நரசிம்மர் அவனை வதம் செய்த பின்னர் இந்த குகையில் அவன் ஜலமாக(நீராக) மாறி சிவனின் பாதத்தில் இருந்து ஊற்றெடுத்ததாகவும், அந்த அசுரனின் ஆசைக்கு இணைக்க நரசிம்மர் இந்த குகையில் குடிகொண்டார் என்றும் கூறுகின்றனர்.
கடினமான பாதைகளை கடந்து நரசிம்மரை தரிசிக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு செல்லும் பக்தர்களுக்கு இங்கு நரசிம்மரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
No comments:
Post a Comment