Monday, November 27, 2023

குருவாயூருக்கு வாருங்கள்,ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள்:

குருவாயூருக்கு வாருங்கள்,
ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள்:
குருவாயூரில் கண்ணனுக்கு உற்சவ காலங்களில், ஆராட்டு முடிந்தபின்பு ,
இளநீர் கொண்டு அபிஷேகம் ஆகின்றது,

இதன் பின்னே ஒரு உண்மைக் கதை உண்டு,
கேரளாவீல் கணக்கன்மார்கள், என்கின்ற ஒரு இன தாழ்த்தப்பட்ட மக்கள் உண்டு. இவர்களின் பணி தென்னைமரம் ஏறி தேங்காய் பறித்தல் 

அவர்களைத்  தெங்ஙேற்றக்காரன், என அழைப்பர்

கணக்கன் அவர்கள் இனத்தின் பெயர் ,

அந்த இனத்தில் பிறந்தவன், கிட்டுண்ணி

கிட்டுண்ணி என்றால் கிருஷ்ணன் குட்டி +உண்ணி; கிட்டுண்ணி என மருவி வரும் 

இவனுக்கு குருவாயூர் கிருஷ்ணன் மேல் அலாதி ப்ரியம்,

குருவாயூரப்பனுக்கும் கிட்டுண்ணி மேல் தனிப் பிரியம்,

ஒருநாள் நட்ட பட்டப்பகல் நேரத்தில் வியர்த்து, வியர்வையினால் உடல் முழுவதும் நனைந்து குருவாயூர் கோவில்  தந்தரி  கிட்டுண்ணியின்  குடிசையின் வாசலில் அமர்ந்திருந்தார்,

கிட்டுண்ணி அப்போது தான் தென்னை மரங்கள் ஏறி தேங்காய்களை பறித்து கொடுத்து தளர்வாக தனது குடிசைக்கு வந்தான்,

குடிசை வாசலில் ஒரு ப்ராமணன் அமர்ந்திருப்பதை பார்த்து பயந்து போனான்,
சாதிய வர்க்க பேதம் கடுமையாக இருந்த காலம் அது,

அந்த  கோவில் தந்தரி அந்தணன் " ஏய் கிட்டுண்ணி கணக்கா!
எனக்கு கடுமையான நீர்தாகம், நீ என்ன செய்கிறாய் என்றால், இரண்டு இளநீர் தென்னைமரம் ஏறி பறித்து வா? "என்றார்,

"கோவில் தந்த்ரியே  கேட்டு விட்டாரே, அதுவும் தாழ்த்தப்பட்ட என்னிடம்" என்று தென்னைமரம் நோக்கி ஓடினான்.அதற்குள் அந்த அந்தணர் 
"ஏய் கிட்டுண்ணி கணக்கா!
இன்றைக்கு குருவாயூர் க்ஷேத்ரத்தில் ஆராட்டு பூஜா நடக்கின்றது, நான்தான் ஆராட்டு பூஜா கர்மங்கள் செய்கின்ற தந்திரி,
நீ ஒரு காரியம் செய்?  இளநீர் எடுத்துகொண்டு  அந்த ஆராட்டு செய்யும் க்ஷேத்ரத்திற்கு வா?" என்று கட்டளை இட்டு விட்டு 
அவர் போய் விட்டார்.

கிட்டுண்ணி பரிதவித்தான் "நானோ தாழ்ந்த குலத்தவன்!
என்னை எப்படி க்ஷேத்ரம் நுழைய தருவார்கள்?
இளநீர் கொண்டுபோய் கொடுக்கவில்லை என்றாலும் குற்றம், கொண்டு போய் கொடுத்தாலும் அதைவிட குற்றம்! மேல்சாதி மக்கள் என்னைத் தோலை உரித்து விடுவார்களே!! என்ன செய்வது" என பயந்தான் 
அன்றைய காலகட்டங்களில் தாழ் குடி மக்களுக்கு க்ஷேத்ர தர்ஸன அனுவாதம் கிடையாது,
கவலையோடு தனது குடிசை வாசலில் அமர்ந்து யோசனை செய்து கொண்டிருந்தான்,
"ஹேகிருஷ்ணா?
நான் உனது நண்பன்!
மனதால்!
உன்னை உனது க்ஷேத்ர த்தில் வந்து பார்த்தது இல்லை!
பார்க்கவும் முடியாது!
பார்க்கவும் கூடாது!!
கிருஷ்ணா!
இந்த இக்கட்டான சோதனையில் இருந்து நீ தான் என்னை காப்பாற்ற வேண்டும்!" என வேண்டினான் 

அப்போது அவன் குடிசை முற்றத்தில், ஒரு குலை தேங்காய்கள் தென்னைமரத்திலிருந்து
விழுந்தன அத்தனையும் இளநீர்கள்,
கிருஷ்ணன் கொடுத்த உத்தரவாக எண்ணி 
சோகமே உருவாக வருத்தத்தோடும், பயத்தோடும் குருவாயூர் க்ஷேத்ரம் நோக்கி, அந்த  இளநீர் குலைகளை தோளில் போட்டுகொண்டு நடந்தான்,

க்ஷேத்ர வாசலில், ஒரு கணக்கன், நீச்ச சாதியோன் இளநீர் குலையை கொண்டு வருவதை கண்டு க்ஷேத்ர நீர்வாகிகள் அதிர்ந்தனர்.

என்ன திமிர் இவனுக்கு? என்று தன்க்சளுக்குல்பேசி முடிவெடுத்து

கிட்டுண்ணியை அப்படியே க்ஷேத்ர வாசலில் தூணில் கயிற்றால் கட்டினர்,

சாட்டை வந்தது!

சுளீர்! சுளீர்!!
என அடித்தனர்! க்ஷேத்ர நிர்வாகிகள்!

கிட்டுண்ணிக்கு வலியோ. அடிப்பட்ட தழும்போ அவன் சரீரத்தில் தோன்றவில்லை!

ஏதோ புஷ்பம் கொண்டு தழுவுதல் போன்று தோன்றியது!

கண்களை மூடி கொண்டு கிருஷ்ணா! கிருஷ்ணா! என மனதால் ப்ரார்த்தித்து கொண்டிருந்தான்.

க்ஷேத்ர நிர்வாகிகளுக்கு பேரதிர்ச்சி!!!

அதுமட்டுமல்ல மூலஸ்தானத்தில்
க்ஷேத்ர மேல்சாந்தி க்ஷேத்ரத்தினுள் , போய் நோக்கியபோது குருவாயூரப்பன் மேனியெங்கும் இரத்தக் காயம்.

அதிர்ந்தார்கள் க்ஷேத்ர நிர்வாகிகள்,

தீடீரென ஒரு அசரீரி,
மேல்சாந்தியே! இளநீர் கொண்டு வந்திருக்கும் கிட்டுண்ணி கணக்கன் என் ஆத்ம தோழன

இதோ தூணில் உங்களால் கட்டப்பட்டு துன்புறுத்தப்பட்டுருக்கும் கிட்டுண்ணி ,
 தாழ்ந்த குலத்தில் ஜெனித்ததால் என்னை வந்து பார்க்க முடிய வில்லை!

என்னை பார்க்க வராத அந்தத தோழனை  நான் தான் தந்தரி   வேஷத்தில்  பார்த்து வந்தேன்! எனக்கு பிடித்தச இளநீரும் கேட்டு வந்தேன் 

அது மட்டுமல்ல அவனை என்னை நேரில் , பார்க்க வைக்க நான் செய்த லீலா வினோதம் தான் இது!

என் ஆத்ம நண்பனை  சாட்டையால் அடித்த அடிகளை நான்  தான் தாங்கி கொண்டேன்.

எனவே எனது நண்பனை  அவிழ்த்து விடுங்கள்!! அவனிடம் மன்னிப்பு கேளுங்கள் 

இனி வருஷா வருஷம் நடக்கின்ற, உற்சவ ஆராட்டு முடிந்தபின்னர், கிட்டுண்ணி வீட்டு முற்றத்து நிலத்தில் இருக்கும்,
தென்னைமரத்திலிருந்து இளநீர் கொண்டு வந்து எனக்கு இளநீர் அபிஷேகம் செய்ய. வேண்டும்,

நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்,

எனக்கு , வர்க்க சாதி பேதங்கள் கிடையாது,,

நீங்கள் தான் உருவாக்கியது ! நீங்கள் பூஜிப்பது. ஒரு ப்ராமண கிருஷ்ணனை அல்ல!?

நானும் தாழ்த்தப்பட்ட யாதவ குலத்தில் (இடைய) ஜெனித்தவன் தான்,

நீங்கள் ப்ராமண குலத்தில் ஜெனித்ததால் பெரிய அகந்தை கொள்ள வேண்டாம்.

காரணம் ஜென்மம் கொண்டு என் நண்பன்  கிட்டுண்ணி  கணக்கன் என்கின்ற நீச்ச குலத்தில் ஜெனித்தாலும் கர்ம்மம் கொண்டு அவன் பரிசுத்த ப்ராமணன்,

ஜென்மதோ ஜாயதா நீச்சா
கர்மணே பவதி ப்ராமணா!!

ஆகவேதான் எல்லா பிராமணர்களும் தாழ்குலத்தில் ஜெனித்த இடையனான என்னை தேடி வருகிரீர்கள் ,

ஆனால் தாழ்குலத்தில் ஜெனித்தாலும் என்மேல் பக்தி கொண்டு. உயர்ந்தவன்  ஆன கிட்டுண்ணி குடிசைக்கு நான் சென்றேன், இளநீர் கேட்டேன்,

என் நண்பனையும் என் க்ஷேத்ரத்தினுள்ளில் வரவழைத்தேன்! இனியாவது திருந்துங்கள் !"

 என்று உரத்த குரலில் கூறிய அசரீரி மறைந்தது

இன்றும் கிட்டுண்ணி குடும்பம் உள்ளது . அவர்கள்  பகவான் அனுக்ரகம் கொண்டு செல்வந்தர்கள் ஆகி விட்டனர்

இப்போதும் வருஷாவருஷம் நடக்கின்ற உற்சவ ஆராட்டு பூஜா முடிந்த பின்னர் பழைய கிட்டுண்ணி முற்றத்து நிலத்திலுள்ள தென்னை மரத்திலுள்ள இளநீர் கொண்டுதான், பகவானுக்கு இளநீர் அபிஷேகம் செய்யப்படுகின்றது,
ஹரே ஸ்ரீ கிருஷ்ணா குருவாயூரப்பா !

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா .இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...