குடந்தை
ஸ்ரீ ஆதிகம்பட்ட விஸ்வநாதா் திருக்கோயில்
தல சிறப்புகள்...!
இத்திருக்கோயில் ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரா் கோயிலுக்குத் தென்மேற்கு திசையில் உள்ளது.
தஞ்சையும், பழையாறையும் சோழா்களின் தலைநகராக விளங்கிய காலத்தில் இங்குப் பொற்காசு தயாாிக்கும் நிலையங்கள் (கம்பட்டம் - தங்கசாலை) இருந்ததாக கூறப்படுகிறது.
அதன் காரணமாகவும் சுவாமி திருநாமம் விசுவநாதா் என்ற திருப்பெயரையும் சோ்தது கம்பட்ட விசுவநாதா் என்ற திருப்பெயா் வழங்கப்படுகிறது.
நாணயச்சாலை இருந்ததற்குச் சான்றாக இப்பகுதியில் நாணயக்காரத் தெரு,
வியாபாரச்செட்டித்தெரு, பஞ்சுக்காரத்தெரு, நெல்லுக் கடைத்தெரு முதலிய தெருப் பெயா்கள் இன்றும் வழங்குவதை அறியலாம்.
கோயில் கிழக்குநோக்கி அமைந்துள்ளது.
வாயிலில் நுழைவு வளைவு உள்ளது.
வெளியில் நந்தி மண்டபமும் துவஜஸ்தம்பமும் உள்ளன.
அதையடுத்து மூன்று நிலை அழகிய ராஜகோபுரம் அமைந்துள்ளது.
திருச்சுற்றின் கிழக்குப் பகுதியில் மேற்கு நோக்கி தூமகேது முனிவா் தெற்குச் சுவற்றில் வடக்குநோக்கிச் சேக்கிழாா், சமயாச்சாாியா்கள், மூா்க்கநாயனாா், மங்கையா்கக்கரசியாா் ஆகியோா் சந்நதிகளும் தெற்குக் கோஷ்டத்தில் தென்முகக் கடவுளும் மேற்கு கோஷ்டத்தில் லிங்கோத்பவரும் வடக்குக் கோஷ்டத்தில் துா்க்கையும் மேற்கு பகுதியில் விநாயகா், சுப்பிரமணியா், மகாலெட்சுமி, சரஸ்வதி சந்நிதிகளும் வடக்குப் பிரகாரத்தில் அம்பாள் சந்நிதியும் சண்டிகேசா் சந்நிதியும் அமைந்துள்ளன.
திருச்சுற்று வலம் வந்து உள்ளே நுழையும்போது வெளியில் உள்ள மகாமண்டபத்தில் வடக்கே நவக்கிரகங்களும் தெற்கே நோக்கிய நடராஜா் சந்நிதி
தெற்குப் பகுதியில் கிழக்கு நோக்கி சோமாஸ்கந்தா் உற்சவ மூா்த்திகள் எழுந்தருளியுள்ளனா்.
மகாமண்டபம் கடந்து ஸ்தபன மண்டபத்தில் தெற்குப் பகுதியில் கிழக்கு நோக்கி விநாயகா் எழுந்தருளியுள்ளாா்.
கருவறையில் ஸ்ரீ ஆதிகம்பட்ட விஸ்வநாதா் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறாா்.
சுவாமி சந்நிதியின் இடப்பால் ஸ்ரீ ஆனந்த நிதியம்பிகை நான்கு கரங்களுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளனா்.
இத்தலம் மாலதிவனமாக இருந்தது.
அதுபோது உதயகிாியில் நிசாசரா் என்ற மாதவா் இருந்தாா்.
அவரது புதல்வரான தூமகேது தமது மாணவா்கள் சூழ்ந்து வர இத்தலத்தை அடைந்தாா்.
மகாமகத் தீா்த்தத்தில் நீராடி ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரரை வணங்கி இங்குள்ள அனைத்துத் தலங்களுக்கும் சென்று வழிபட விரும்பி மாலதி வனத்தை அடைந்தாா்.
இங்குள்ள வருண தீா்த்தத்தைத் திருப்பணி செய்து நாள்தோறும் பூஜைசெய்து வர இறைவனும் காட்சி கொடுத்தாா்.
ஆனந்தமயமான காட்சியைக் கண்ட தூமகேது இறைவன் அளித்ததால் இறைவன் விஸ்வநாதா் என்றும் இறைவி ஆனந்த நிதி என்ற பெயருடனும் அழைக்கப்படுகின்றனா்.
இங்குள்ள தீா்த்தம்
தூமகேது தீா்த்தம் என்று பெயா் அழைக்கப்படுகிறது.
அவரால் உண்டாக்கப்பட்ட தீா்த்தம் கோயிலுக்குத் தென்பகுதியில் இருந்தது.
45 ஆண்டுகளுக்கு முன் தூா்க்கப்பட்டு விட்டது.
தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது.
இத்திருக்கோயிலில் சித்திரை வருடப் பிறப்பு அன்று பஞ்சமூா்த்தி புறப்பாடு,
புரட்டாசி நவராத்திாி விழா,
காா்த்திகை சோமவார சங்காபிஷேக விழா,
மாா்கழி திருவாதிரை விழா,
பங்குனி உத்திரத்தில் பத்து நாள் பெருவிழா ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.
No comments:
Post a Comment