இந்தியாவில் சரஸ்வதி தேவி ஆலயங்கள்..
கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவிக்கு இந்தியாவில் சில பகுதியில்
ஆலயங்கள் இருக்கின்றன. அவை
1. காஷ்மீர்
2. சிருங்கேரி
3. பாசர்
4. பனச்சிகாடு
5. கூத்தனூர்
6. புஷ்கர்
7. வாரங்கல்
8. பிலானி
1. காஷ்மீர் :
இங்குள்ள நீலம் பகுதியில் சரஸ்வதிக்காக எழுப்பப்பட்ட மிகவும் பழைமையான ஆலயம் உள்ளது. இது சாரதா பீடம் என அழைக்கப்படுகிறது. இதிலுள்ள நான்கு வாசல்களில் தெற்கு வாசல் வழியாக யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். இந்த தெற்கு வாசல் வழியே நுழைந்தவர் ஆதிசங்கரர் ஒருவரே என்கின்றனர்
2. சிருங்கேரி :
கர்நாடக மாநிலத்தில் ஆதிசங்கரரால் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகிய முப்பெரும் தேவிகளை உள்ளடைக்கிய ஒரே சொருபமாக ஶ்ரீசக்கரத்தின் மேல் சிம்மாசனத்தில் அருளுகிறாள்.
3. பாசர் :
தெலுங்கானாவில் கோதாவரி நதிக்கரையில் பாசர் என்ற தலத்தில் ஞான சரஸ்வதி என்னும் திருநாமத்தில் சரஸ்வதி கோவில் கொண்டு அருள்புரிகிறார்.
4. பனச்சிகாடு :
கேரளாவில் கோட்டயம் அருகேயுள்ள விஷ்ணு தலத்தில் தேவி சரஸ்வதி தட்சிண மூகாம்பிகா என்னும் நாமத்தில் அருளுகிறாள்.
5. கூத்தனூர் :
ஒட்டக்கூத்தருக்காக சோழ மன்னன் அமைத்த இத்திருக்கோவில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது. இத்தேவிக்கு வெள்ளை பட்டு வஸ்திரம், வெண் தாமரை சாற்றி வழிபாடு செய்கின்றனர்.
6. புஷ்கர் :
ராஜஸ்தான் மாநிலத்தில் புஷ்கர் நகரில் உள்ள சரஸ்வதி கோவில் தனித்துவமான மற்றும் அழகான கட்டிட அமைப்பை கொண்டுள்ளது. இதன் கட்டிட கலையை காணவே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு அதிகமாக வருகின்றனர்.
7. வாரங்கல் :
இத்தலம் தெலுங்கானாவில் உள்ளது. இத்தலத்தில் வித்யா சரஸ்வதி என்னும் நாமத்தில் சரஸ்வதி ஹம்சவாகினி ஆக அருள்புரிகிறார். வசந்த பஞ்சமி மற்றும் சாரதா நவராத்திரி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. காஞ்சி சங்கர மடம் இக்கோவிலை பராமரித்து வருகிறது.
8. பிலானி :
ராஜஸ்தானில் உள்ள இத்தலத்தில் 7 அடி உயரத்தில் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலை 70 தூண்கள் தாங்கி நிற்கின்றன. பிர்லா மந்திர் என்று அழைக்கப்படும் இத்தலம் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
படித்து பகிர்ந்தது
இரா. இளங்கோவன் நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment