ராம நாமம் சொன்னால், அனுமனை வழிபட்டால், ஸ்ரீ ராம ஜெயம் எழுதினால் துன்பங்கள் விலகும் என பலரும் பல காலமாக கூறி வருகிறார்கள். அதை நாமம் பின்பற்றி வருகிறோம். ஆனால் ராம நாமத்தை சொல்வதாலும், கேட்பதாலும் அப்படி என்ன பலன் கிடைக்கிறது என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது.
எப்போதும் மந்திரத்தையோ நாமத்தையோ உச்சரித்துக் கொண்டிருப்பது அஜபா எனப்படும். எந்நேரமும் விழித்திருக்கும் போதும் தூங்கும் போதும் எந்நேரமும் எப்போதும் உச்சரித்துக் கொண்டிருப்பது.
இருதயத்தில் இறைவனை உணரும் வரை உச்சரித்துக் கொண்டிருப்பது. இந்த அஜபா ஜபம் உடல் மனம் ஆத்மா உங்கள் உடல் செல்கள் அனைத்திலும் ஊடுருவி பாயும். இறைவனுக்கும நமக்கும் இடைவிடாத தொடர்பு கிடைக்கும்.
இதற்கு உதாரணமாக ராம் அனுமனை சொல்லலாம். சீதாதேவிக்கு எப்போதும் அனுமன் மீது சிறிது பொறாமை ஏனெனில் ராமனும் சீதாவும் ஒன்றாக இருக்கும் போது அனுமன் வந்து விட்டால் கூட ராமன் அனுமனையே கண்களால் பார்த்துக் கொண்டிருப்பார். இதை ஒரு நாள் ராமன் கண்டு பிடித்து விட்டார்.
அனுமனின் உடலிலிருந்து ரோமத்தை பிய்த்து சீதாவின் காதருகில் கொண்டு சென்றார். அந்த ரோமத்திலிருந்து ராம்ராம் என்ற ஓசை கேட்டுக் கொண்டேயிருந்தது. ராமர் சொன்னார் இப்போது புரிகிறதா சீதா நான் அவனைப் பார்க்கவில்லை. அவன் உறுதியான ஜபம் அவனுள் பரவி அது என்னை தானாக அவன் பக்கம் இழுக்கிறது....என்று
ராம நாமத்தின் மகிமை :
உலகிலேயே உயர்ந்த நாமம் ஸ்ரீ ராமநாமம்
ராமா என்று ஒரு முறை கூறினால் செய்த பாவங்கள் தீர்ந்து விடும்
ஸ்ரீ ராமபிரான் இலங்கை செல்வதற்காக வானரங்கள் பாலம் அமைத்துக் கொண்டிருந்தனர் எல்லா வானரங்களும் கற்களைத் தூக்கி கடலுக்குள் போட்டன .
ஒவ்வொரு கல்லும் மற்றொரு கல்லின் மீது சரியாக அமர்ந்தது ஆஞ்சநேயர் அந்தப் பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார். மனதிற்குள் ராமநாமா ஜபித்த படி ராமபிரானும் இதை கவனித்துக் கொண்டிருந்தார் அவர் மனதிலும் ஆசை ஏற்பட்டது நாமும் இந்த வானரங்களுடன் இணைந்து கல்லைத் தூக்கிப் போட்டால் என்ன எனக் கருதியபடியே ஒரு கல்லை எடுத்து கடலுக்குள் போட்டார் அந்தக்கல் சரியாக மற்ற கற்களின் மீது அமரவில்லை அவை தண்ணீரில் அடித்துச் சென்று விட்டது. ராமபிரானுக்கு வருத்தம் இந்த வானரங்கள் போடும் கற்கள் மட்டும் மற்றொரு கல்லின் மீது அமர்ந்து விட்டதே இதற்கு என்ன காரணமாக இருக்கும் என வருத்தப்பட்டார் .
ஆஞ்சநேயர் ராமர்
அருகில் வந்தார் அவர் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்.ஆஞ்சநேயா நான் செய்ததை நீ பார்த்து விட்டாயா எனக்கு ஒரு கல்லை போடக்கூடத் தெரியவில்லை என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருக்கிறது என்றார்.
அதற்கு ஆஞ்சநேயர் ப்ரபோ எல்லா வானரங்களும் உங்கள் தாரக மந்திரமான ராம் ராம் என்ற உங்கள் நாமத்தைச் சொல்லிக் கொண்டே கற்களைத் தூக்கிப் போட்டன அவை சரியாக அமர்ந்தது நீர் ராமனாகவே இருந்தாலும் ராம நாமம் சொல்லி போட்டிருந்தால் அது சரியாக கற்களில் போய் அமர்ந்திருக்கும் என்றாராம்.
ராமநாமம் அவ்வளவு சக்தி வாய்ந்தது .ராமநாமம் மிகவும் அற்புதமானது .
வைகுண்டம் சென்று மகாவிஷ்ணுவிடமே கேட்டார். "ராம நாமத்திற்கு அப்படி என்ன மகிமை உள்ளது? அதை சொல்வதாலும், கேட்பதாலும் நமக்கு அப்படி என்ன பலன் கிடைக்கிறது? எனக்கு விளக்கமாக சொல்லி, என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் சுவாமி" என பரந்தாமனிடம் கேட்டார். சற்று யோசித்த மகா விஷ்ணு, "அதோ பூமியில் ஒரு புழு நெளிந்து கொண்டிருக்கிறதா? அதன் காதில் போய் ராம நாமத்தை சொல்" என்றார்.
மகாவிஷ்ணு காரணம் இல்லாமலா சொல்வார் என நினைத்துக் கொண்டு, நாரதருக்கும் சென்று அந்த புழுவின் காதில் ராம நாமத்தை சொன்னார். உடனே அந்த புழுவின் உயிர் போய் விட்டது. பதறிப் போன நாரதர், மீண்டும் மகாவிஷ்ணுவிடம் வந்து நடந்த விபத்தை சொன்னார். அப்போதும் சாதாரணமாக அப்படியா என கேட்டு விட்டு, "சரி போகட்டும் அதோ பறந்து கொண்டிருக்கிறதே அந்த பட்டாம் பூச்சியின் காதில் போல் ராம நாமத்தை சொல்" என்றார் பெருமாள்.
இறந்து போன உயிர்கள்
நாரதரும் அப்படியே செய்ய அந்த பட்டாம் பூச்சியும் இறந்து விட்டது. மீண்டும் வைகுண்டம் வந்த நாரதரிடம், அதோ தெரிகிறதே அந்த குடிசை வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் ஒரு பசு, கன்றை ஈன்றெடுக்க போகிறது. அதன் காதில் சென்று ராம நாமத்தை சொல் என்றார். இந்த முறை சற்று தயக்கத்துடனேயே சென்ற நாரதர், பிறந்த கன்றுக்குட்டியின் காதிலும் ராம நாமத்தை சொல்ல, அதுவும் இறந்து விட்டது. பதறி அடித்து ஓடி வந்து நாரதர், "என்ன சுவாமி இப்படி ஆகி விட்டது? ராம நாமத்தின் மகிமை பற்றி கேட்க வந்தால், ராம நாமத்தை ஒவ்வொரு உயிர்களின் காதிலும் சொல்ல சொன்னீர்கள். ஆனால் நான் சொன்னதும் அவைகள் இறந்து விடுகின்றன. இதுவா ராம நாமத்தின் மகிமை?" என்றார்.
நடுங்கிப் போன நாரதர்
அதற்கு பதிலளித்த மகாவிஷ்ணு, "குழப்பம் வேண்டாம் நாரதா. இந்த நாட்டின் மன்னருக்கு ஒரு குழந்தை பிறக்க போகிறது. இந்த முறை அந்த குழந்தையின் காதில் போய் ராம நாமத்தை சொல்" என்றார். நடுங்கிப் போனார் நாரதர். "நாட்டின் மன்னனுக்கு பிறக்கும் குழந்தையின் காதில் சொல்ல வேண்டுமா? ஏற்கனவே நடந்தது போல் அந்த குழந்தைக்கும் ஏதாவது நடந்து விட்டால் என்ன செய்வது? யாருடைய கண்ணிற்கு தெரிய மாட்டேன் என்பதால் தப்பித்தேன். ஒரு வேளை மன்னர் என்ன கண்டு பிடித்து விட்டால் எனது நிலை என்ன ஆகும்?" என புலம்பினார். அவருக்கு தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார் மகா விஷ்ணு.
குழந்தையின் காதில் ராம நாமம்
நாரதரும் தயங்கி தயங்கி அரண்மனைக்கு வந்தார். அப்போது மன்னனுக்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையில் காதில் சென்று ராம நாமத்தை சொல்லி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட வேண்டும் என திரும்பிய நாரதரிடம் பிறந்த குழந்தை பேசியது. "என்ன நாரதரே நலமா?" என விசாரித்தது. நாரதருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. "பிறந்த குழந்தை பேசுகிறதா? எப்படி நடக்கும் இது? அதுவும் யாருடைய கண்ணிற்கு தெரியாத என்னை அடையாளம் கண்டு, நாரதா என்கிறது. இந்த குழந்தைக்கு எப்படி நான் தான் நாரதன் என்று தெரியும்?" என மனதிற்குள் அடுக்கடுக்காக கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார் நாரதர்.
நாரதரை ஆச்சரியப்பட வைத்த குழந்தை
நாரதரின் கேள்விகளை உணர்ந்த குழந்தை பதிலளித்தது. " என்ன நாரதரே என்னை தெரியவில்லையா? என்னுடைய இந்த நிலைக்கு நீங்கள் தானே காரணம்" என்றது. தொடர்ந்து, "மண்ணில் புழுவாக நெளிந்து கொண்டிருந்த எனது காதில் ராம நாமத்தை சொல்லி என்னை புனிதம் அடைய வைத்தீர்கள். அதன் பயனாக அடுத்த பிறவியில் பட்டாம்பூச்சியாக பிறந்தேன். அப்போதும் விடாமல் என் காதில் ராம நாமத்தை சொன்னீர்கள். பிறகு கன்றுக்குட்டியாக பிறந்த போதும் என் காதில் ராம நாமத்தை சொல்லி, எனது நிலையை மேலும் உயர்த்தினீர்கள்.
நீங்கள் என் காதில் சொன்ன ராம நாமத்தின் பலனாக தற்போது இந்த நாட்டின் மன்னனுக்கு குழந்தையாக, கிடைப்பதற்கு அரிய மனித பிறவியை பெற்றுள்ளேன். நீங்கள் சொன்ன ராம நாமத்தை நான் ஒரு முறை என் காதில் கேட்டதற்கே இத்தனை உயர்வு எனக்கு கிடைத்திருக்கிறது".
என்றது. குழந்தையின் இந்த பேச்சை கேட்டு நேராக வைகுண்டம் வந்து மகாவிஷ்ணுவின் திருவடிகளை சரணடைந்தார் நாரதர். "ராம நாமத்தின் மகிமையை இப்போது புரிந்து கொண்டேன்.
ஸ்ரீ ராமரின் பெயரை இடைவிடாது உச்சரிப்பதன் மூலம் எல்லா உயிர்களிடத்தும் ராமனை காணலாம் எல்லா வகையான துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறலாம்
பாவங்களிலிருந்து கடைந்தேறலாம்.
இவ்வளவு சக்தி வாய்ந்த ராம நாமத்தை
தெருவில் நடந்து போகும் போதும்
ஆபீஸில் வேலை செய்யும் போதும்
வீட்டில் சமையல் செய்யும் போதும்
சொல்லலாம்....!!!!
ராம் என்ற சொல் புனிதமான ஓம் என்னும் மந்திரத்திற்கு சமமானது.
( நம் தமிழ்நாட்டிலதான் குட்மார்னிங் வணக்கம் என்று சொல்கிறோம். வடநாட்டு பக்கம் காலையில் வரும் பால்காரன் கூட ராம் ராம் என்று கூப்பிட்டுத்தான் பாலை ஊற்றுவான் அவ்வளவு மகத்தானது ராமநாமம் )
No comments:
Post a Comment