சிவாயநம திருச்சிற்றம்பலம்.
திருவாசகம் என்பது என்ன?.
திருவாசகம் இன்ன துறை சார்ந்தது இன்ன நெறி சார்ந்தது என குறிப்பிட முடியாதது.
அண்டம் கடந்த விரிசடையானை எப்படி அளவிட முடியாதோ திருவாசகமும் அதுபோல் அளவிட முடியாதது.அதில் இல்லாத கேள்வியும் இல்லை.அதில் இல்லாத விடையும் இல்லை.
இந்த திருவாசகத்தில் பல பொருள்கள் இருந்தாலும் நமக்கு தேவையானது பரம்பொருள் ஒன்றே.எனவே அப்பொருளை அடைய திருவாசகத்தில் கூறப்பட்டுள்ள மந்திரத்தை அறிவதே சிறப்பு.ஒரு பாடலில் மட்டுமே இம்மந்திரம் எதற்காக யாரால் வழங்கப்பட்டது என மணிவாசக பெருமான் தெரிவித்துள்ளார்.
சிவாயநம என்பதே அந்த மந்திரம்.இந்த அல்லல் பிறவியில் விடுபட்டு இறைவன் திருவடிபேற்றை அடைய ஆவல் உள்ள உயிர்கள் அனுதினம் உச்சரிக்க வேண்டிய ஐந்தெழுத்து மந்திரம் சிவாயநம ஆகும்.
பாடல்;
நானேயோ தவம் செய்தேன்
சிவாயநம எனப் பெற்றேன்
தேனாய்என் அமுதமுமாய்த்
தித்திக்கும் சிவ பெருமான்
தானேவந்து எனது உள்ளம் புகுந்து
அடியனேற்கு அருள் செய்தான்.
ஊன்ஆறும் உயிர் வாழ்க்கை
ஒறுத்து அன்றே வெறுத்திடவே.
No comments:
Post a Comment