450 வருடங்களாக கண்டுகொள்ளப்படாத படாவி லிங்கம் கோயில், ஹம்பி, கர்நாடகா.
கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் அமைந்துள்ள மிக பழமையான கோயில் ஹம்பி படாவி லிங்கம் கோயில்.
பழமையான இந்த கோயிலை விஜயநகர பேரரசரின் சாம்ராஜ்யம் முடிவுக்கு பின்னர் பஹமானி சுல்தான்கள் அழிக்க முயன்றனர். இதனால் கோயிலுக்கு கோபுரம் இன்றி சிதைந்த நிலையில் உள்ளது.
கிட்டத்தட்ட 450 வருடங்களாக இந்த கோயில் பூஜை செய்யப்படாமல் இருந்தது. இருப்பினும் இந்த கோயிலுக்கு முறைப்படி பூஜை செய்ய கர்நாடகா அரசு முன்னெடுக்கவில்லை.
கடந்த 1980ம் ஆண்டில் கேஎன் கிருஷ்ண பாத் என்பவர், கண்டுகொள்ளப்படாத இங்குள்ள 9 அடி உயர சிவலிங்கத்திற்கு பூஜை செய்ய ஆரம்பித்து, 86வயது ஆன நிலையில் தினமும் இரு முறை பூஜை செய்து வருகின்றார். (இது Apr 2019 ம் வருடத்திய நிலவரம்; தற்போது உள்ள நிலவரம் எனக்கு தெரியவில்லை.) கர்நாடகாவின் சுற்றுலாத்தளங்களில் மிக முக்கிய இடமாக இந்த ஹம்பி திகழ்கின்றது.
இந்த சிவலிங்கம் கிட்டத்தட்ட இரண்டரை அடி தண்ணீர் எப்போது சூழ்ந்து காணப்படுகின்றது.
இந்த கோயில் விருபக்ஷா நரசிம்மர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.
விமானத்தில்:
விமானம் மூலம் செல்ல வேண்டும் என்றால் பெல்லாரி விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து 64 கிமீ தொலைவில் உள்ள ஹம்பி கோயிலுக்கு சாலை வழியாக செல்லலாம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்
No comments:
Post a Comment