Thursday, January 11, 2024

நெல்லிக்குப்பம் சமத்துவ பொங்கல் விழா

 தமிழர் திருநாளான பொங்கலில் மதங்களுக்கும், சாதிகளுக்கும் என்றுமே முக்கியத்துவம் தரப்பட்டதில்லை.
 எப்போதும் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு விழாவாகவே இருக்கிறது. நமக்கு உணவினை படைக்கும் விவசாயிகளுக்கும், விவசாயிகளுக்கு உறுதுணையாக நிற்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விழாவாகவே பொங்கல் இருக்கிறது. சாதி, சமயம்  மறந்து இந்த விழா தமிழகம் எங்கும் கொண்டாடப்படுகிறது. 
தமிழர்கள் வாழும் பகுதிகளில் பெருவிழாவாக  நடத்தப்படுகிறது.

சமத்துவம் பேசும் பொங்கல்
சில ஊர்களில், ஊர் பொதுமக்கள் ஒன்றாக கூடி சமத்துவ பொங்கல் வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். 
அங்கு இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்துவர்கள் ஒன்றாக கூடி பொங்கல் வைத்து, தமிழர் திருநாளை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

 சில நேரங்களில் தேவாலயங்களில் பொங்கல் விழா வெகு விமர்சையாகவும் கொண்டாடப்படும். குழந்தைகள், இளைஞர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுப் பொருட்கள் தருவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் . 
அந்த வகையில் நெல்லிக்குப்பம் தமிழ் முதல் தேதி ஆலய வழிபாட்டு குழு மற்றும் புன்னியர்பேரவை அமைப்பு மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து  சமத்துவ பொங்கல் கொண்டாப்படுகிறது.
திருக்கண்டீஸ்வரம் ஆலய அர்ச்சகர் திரு சேனாதிபதி தலைமையில் சமத்துவ பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திரளான மக்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.

இரா இளங்கோவன்
ஓம்நமசிவாய

No comments:

Post a Comment

Followers

தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..?

சிவன் வீற்றிருக்கும் கயிலாயம்  வடக்கில் இருக்கும் போது ...... தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..? .. வடக்கில் இருப்பது பூலோக கயிலாய...