கடலூர் மாவட்டம் வடலூரில் தைப்பூச தினத்தன்று நடக்கும் வள்ளலார் ஜோதி தரிசனத்தை காண தமிழகம் முழுவதிலும் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வருவார்கள். ஜோதி தரிசனத்தை நேரில் காண பலரும் வருவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
வள்ளலார் தர்ம ஞானசபையில் கண்ணாடிக்கு முன்னாள் உள்ள ஏழு வண்ண திரைகள் நீக்கப்பட்டு, நிலை கண்ணாடிக்கு பின் உள்ள ஜோதி தரிசனம் காட்டப்படும். இந்த ஆண்டு வடலூர் வள்ளலாரின் 153 வது ஜோதி தரிசன விழாவாக நடைபெற உள்ளது. இதனால் வழக்கத்தை விட அதிகமான மக்கள் இதனை காண வருவார்கள் என எதிர்பார
வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனம் : எவ்வாறு வழிபடுவது?
வடலூர் வள்ளலார் வழிபாடு :
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவது, உணவே மருந்து என உணவு ஒழுங்கு முறை கட்டுப்பாடு ஆகியவற்றை உலகிற்கு போதித்தவர் ராமலிங்க அடிகளார். யாரும் பசியால் இறக்கக் கூடாது என்பதற்காக சன்மார்க் சங்கத்தை நிறுவி 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கும் முறையை கொண்டு வந்தவர். அதனாலேயே இவரை அடியவர்கள் வள்ளலார் என அழைக்கின்றனர்.
இறைவனை ஒளி வடிவமாக வணங்கும் ஆன்மிக நெறி முறையை வகுத்தவர். வள்ளலார். இறைவனுக்கு உருவம் கிடையாது. அவர் ஜோதி வடிவானவர் என அனைவருக்கும் போதித்தவர். இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் அவதரித்தார். வள்ளலார், இறைவனுடன் ஜோதியாக கலந்த தினம் தைப்பூச திருநாள்.
தைப்பூச ஜோதி தரிசனம் :
தைப்பூச ஜோதி தரிசனம் :
இதன் நினைவாக மாதந்தோறும் வள்ளலார் நிறுவிய வடலூர் தர்ம ஞான சபையில் பூசம் நட்சத்திரத்தன்று 7 திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். இருந்தாலும் வள்ளலார் முக்தி அடைந்த தைப்பூச தினம் என்பதால், அன்றைய தினம் நடக்கும் ஜோதி தரிசனமே மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நாளிலேயே உலகின் பல பகுதிகளில் இருந்தும் வள்ளலாரின் கொள்கைகளை பின்பற்றும் பலரும் வடலூர் தலத்தில் கூடுகின்றனர். அன்றைய தினம் நாள் ஓயாமல் அன்னதானம் நடந்து கொண்டே இருக்கும்.
ஏழு திரை விலக்கி தரிசனம் :
ஏழு திரை விலக்கி தரிசனம் :
இந்த ஆண்டு வள்ளலார் தைப்பூச ஜோதி தரி சன விழா ஜனவரி 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்யப்பட்டு, தைப்பூச ஜோதி தரிசனத்திற்கான கொடியேற்றப்படும். இதைத் தொடர்ந்து தைப்பூச திருநாளான ஜனவரி 25ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் வடலூர் வள்ளலார் தர்ம ஞான சபையில் ஏழு திரைகள் விளக்கப்பட்டு ஜோதி தரிசனம் காட்டப்படும். காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 05.30 என ஆறுமுறை ஜோதி தரிசனம் காட்டப்படும். ஜனவரி 27ம் தேதி வரை இவ்விழா நடைபெறும்.
தைப்பூசம் இன்றா? நாளையா? : தைப்பூச வழிபாட்டிற்கான சரியான நேரம் எது?
எப்படி வழிபட வேண்டும் ?
எப்படி வழிபட வேண்டும் ?
விளக்கின் ஒளியின் வடிவமாக இறைவனை தரிசித்து மோட்சம் அடைந்தவர் வள்ளலார். இது அவருடைய 200 வது அவதார ஆண்டு என்பதால் இந்த ஆண்டு தைப்பூச விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில் வீடுகளில் விளக்கேற்றி நாமும் ஜோதி வடிவமாக இறைவனை வழிபட வேண்டும். வள்ளலாருக்கு விருப்பமான தயிர்சாதம் நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். இப்படி விளக்கேற்றி வழிபடுவதால் வீட்டில் எப்போதும் வளம் பெருகும்.
தைப்பூசத்தன்று நவகிரக பாதிப்புக்கள் குறைய சொல்ல வேண்டிய பாடல்
தைப்பூச நாளில் முடிந்த அளவிற்கு அன்னதானம் வழங்க வேண்டும். குறைந்தபட்சம் ஒருவருக்காவது அன்னதானம் வழங்குவது அவசியம். இப்படி வழங்குவதால் வீட்டில் அன்ன தரித்திரியம் என்பது எப்போதும் ஏற்படாது. அன்னதானம் கொடுக்க வசதி இல்லாதவர்கள் வீட்டிற்கு அருகில் ஏதாவது எறும்பு புற்று இருந்தால் அங்கு இனிப்பு கலந்த அரிசி அல்லது அரிசி மாவை தானமாக இடலாம். எத்தனை எறும்புகள் அந்த உணவை சாப்பிடுகிறதோ அத்தனை உயிர்களுக்கு அன்னதானம் வழங்கி பலன் நமக்கு கிடைக்கும்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்
No comments:
Post a Comment