Thursday, January 25, 2024

தன்னையே சிவம் சக்தி என இரண்டாகப் பிரித்து ஜோதியும் அதன் வெப்பமுமாக விளங்குபவள்.

ஆதிசக்தி அல்லது ஆதிபராசக்தி என்பவள் இந்து மதத்தில் எல்லாவற்றிற்கும் ஆதி ரூபமாக எல்லோரையும் படைத்த மூலசக்தியாக விளங்குபவள்.
 தன்னையே சிவம் சக்தி என இரண்டாகப் பிரித்து ஜோதியும் அதன் வெப்பமுமாக விளங்குபவள். 

சக்தியை முழுமுதற்கடவுளாக வழிபடப்படும் சமயம் மிகப்பழமையான சமயங்களுள் ஒன்றான சாக்தம் ஆகும்.

 தாய் தெய்வ வழிபாட்டின் மிகப் பெரும் எல்லையைக் கடந்துள்ள சக்தி வழிபாடானது, அகிலாண்டம் அனைத்திற்குமே ஆதிசக்தியே தாய் என்று உரைக்கிறது.

அகிலாண்டேசுவரி என்று ஆதிசக்தி அழைக்கப்படுகிறார்.

முப்பெரும் தேவியரான கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகியோர் ஆதிசக்தியின் அம்சமாகவே இந்து தொன்மவியல் நூல்கள் உரைக்கின்றன.

திருமால்
≠=======
ஆதிசக்தியின் சகோதரனாக திருமால் போற்றப்படுகிறார்.

நந்தி தேவர்

சிவபெருமான் முதல் தொண்டனான நந்தி தேவர், ஆதிசக்தியின் மகனுக்கு இணையானவராக கூறப்படுகிறது.

கங்கை
=======
இமவானின் மகளான கங்கா தேவி ஆதிசக்தியின் (பார்வதி) சகோதரியாகக் கருதப்படுகிறார்.
ஓம் நமசிவாய

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...