தை கிருத்திகை
🌹நட்சத்திரங்களில் கிருத்திகை நட்சத்திரம் மிக மிக முக்கியமான நட்சத்திர நாள். மாதந்தோறும் வருகிற கிருத்திகை நட்சத்திர நாள் விசேஷமானது. குறிப்பாக, கார்த்திகேயனை வணங்குவதற்கு உரிய மிக முக்கிய தினமாக தை கிருத்திகை நட்சத்திர நாளும் ஆடிக்கிருத்திகை நட்சத்திர நாளும் மகோன்னதமான பலன்களைத் தந்தருளக் கூடிய நாட்கள். உத்தராயன புண்ய காலத்தின் தொடக்க மாதத்தில் வருகிற கிருத்திகையும் தட்சிணாயன புண்ய காலத்தில் வருகிற கிருத்திகையும் மும்மடங்கு பலன்களைத் தரக்கூடியது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
🌹இன்றைய தினம் 20_ம் தேதி சனிக் கிழமை தை மாத கிருத்திகை. இந்த அற்புதமான நாளில், அருகில் உள்ள முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோயிலுக்கோ, முருகப்பெருமான் சந்நிதி கொண்டிருக்கும் கோயிலுக்கோ சென்று மனம் குளிர தரிசியுங்கள். மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.
🌹வீட்டில் சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வழிபடுவதும் பிரசாதத்தை அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவதும் இல்லத்தில் சுபிட்சத்தை உண்டாக்கும்.
உங்கள் வேதனைகளையெல்லாம் போக்கி அருளுவான் வேலவன். கஷ்டங்களையெல்லாம் அகற்றி அருளுவான் கந்தகுமாரன். குறைகளையெல்லாம் நிவர்த்தி செய்து தந்தருளுவான் தணிகைவேலன்.
🌹தை கிருத்திகை விரத பலன்கள்🌹
🌹தை மாதத்தில் வரும் கிருத்திகையில் விரதமிருந்து முருகப்பெருமானை வணங்கி வழிபாடு செய்தால் நிச்சயம் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம். புத்திரபாக்கியம் கிடைக்கும். சித்திரை முதலாகத் தொடங்கும் பன்னிரு மாதங்களில் பத்தாவது மாதமாக வருவது தை மாதம். பத்து மாதம் கருவுற்று, பிள்ளைச் செல்வம் பெற வேண்டிய பெண்மணிகள், பத்தாவது மாதமான தை கிருத்திகையில் முருகனை மனமார நினைத்து விரதம் இருந்துவழிபட்டால், அவர்களின் மூடிய கருப்பை திறக்கும் கட்டாயம் குழந்தையும் பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்த தைக் கிருத்திகை தினத்தில் விரதமிருந்து கந்தவேளை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லைகள், தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் சேரும்.
ஓம் நமசிவாய
No comments:
Post a Comment