Friday, February 2, 2024

சிவாலயத்தில் வழிபாடு செய்யும் முறை...!

சிவாலயத்தில் வழிபாடு செய்யும் முறை...!
சிவாலயத்தில் வழிபாடு செய்யும் முறை...!
ஆலயம் = ஆ + லயம் . ஆ-ஆண்டவன், நம்மை ஆட்கொண்டவர் ; லயம்-லகித்து ,ஒன்றி வழிபடும் இடம் .

கோயில் = கோ + இல். கோ –அரசன்(இறைவன்) ; இல்- குடி கொண்டு இருப்பவன். 

உலகத்தில் வாழ்ந்து வரும் கோடிக்கணக்கான அன்பு உள்ளங்களுக்கு நாம் சிவனால் படைக்கப்பட்டதாக வேத சாத்திரங்களில் சொல்லபடுகிறது.எனவே சிவனை வழிபட்டு அவரது அருளையும், ஆசியையும் பெற, தினமும் அவர் விரும்பும் திருவாசகத்தை தங்களால் இயன்ற அளவு படித்து(ஓதி) பயன்பெற முயலுங்கள்.

சிவ ஆலயத்திற்கு செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.பழங்காலத்து கோயில்கள்,சித்தர்கள்,
மகரிஷிகள் பிரவேசித்த கோயில்கள், ,அப்பர்-சுந்தர்-திருஞானசம்பந்தர்,மாணிக்க
வாசகர் இவர்களால் பாடப்பட்ட ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவது சாலச் சிறந்தது.

தமிழ்நாட்டில் பழமையான ஆலயங்கள் 39,000 இருக்கின்றன;இதில் சரிபாதி சிவாலயங்களாக இருக்கின்றன.

நமது முன்னோர்கள் நடைமுறைப்படுத்திய பாரம்பரிய நடைமுறைகள்:

தினந்தோறும் கோவிலுக்கு சென்று இறைவனை வழிப்பட்ட பின்னரே, மற்ற காரியங்களை தொடங்குவது என்பது நடைமுறையில் இருந்தது. 

அதன்பிறகு அவர்களுக்கு பக்தி உணர்வை ஊட்டுவது ,ஆன்மீகத்தை வளர்ப்பது எளிதாகிறது.

கோவில் வாசலில் துவார(வாசல்) பாலகராக விநாயகர் அருள்பாலித்துக் கொண்டு இருப்பார்;அவரை மனப்பூர்வமாக வழிபட்டுவிட்டு,கோவிலி
னுள் நுழைவது முறை;

இதே போல,அம்மன் சன்னதியில் அமைக்கப்பட்டிருக்கும் நந்திபகவானை வழிபட்டப் பின்னரே,அம்மனை தரிசிக்கச் செல்ல வேண்டும்;

இங்கேயும் மனதிற்குள்  நமது கோரிக்கையை வேண்ட வேண்டும்;சிவனிடம் என்ன கோரிக்கையை வேண்டினோமோ,அதே கோரிக்கையை அம்பாளிடமும் வேண்ட வேண்டும்;

சிவன் சன்னதியில் தரப்படும்விபூதியையும்,அம்பாள் சன்னதியில் தரப்படும் குங்குமத்தையும் பத்திரமாக நமது வீட்டிற்குக் கொண்டு வர வேண்டும்;பலர் சிவன் சொத்து குல நாசம் என்ற பழமொழியைத் தவறாகப் புரிந்து கொண்டு,அர்ச்சகர்/சிவாச்சாரியார் கொடுக்கும் விபூதி,குங்குமத்தை அங்கேயே கொட்டிவிட்டு வந்துவிடுகின்றனர்; இது தவறு மட்டுமல்ல;மகத்தான பாவமும் கூட!

பழமையான சிவாலயத்தில் தரப்படும்விபூதி,குங்குமத்தை வீட்டுக் கொண்டு வந்து சேமித்துக் கொண்டே இருந்தால், நமக்கும்-நமது குடும்பத்தாருக்கும் யாராலும் எந்த ஒரு மறைமுகத் தீங்கையும் செய்யமுடியாது;(நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்தியிருந்தால்!) ஏனெனில்,இவைகளில் அளவற்ற தெய்வீக சக்தியும்,பாஸிடிவ் எனர்ஜியும் இருப்பதை இன்றைய நவீன அதீத உளவியில் விஞ்ஞானம் பலமுறைநிரூபித்திருக்கிறது

மூலவர்இருக்கும்சன்னதி
யின் பின்பக்கத்தைக் கடக்கும்போது, லிங்கோத்பவர் சன்னதி அமைக்கப்பட்டிருக்கும்;இந்த லிங்கோத்பவர் சன்னதிக்கு எதிரே அமைக்கப்பட்டிருக்கும் சிவலிங்கம், நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் மிகவும் முக்கியமான சிவலிங்கம் ஆகும்.

இந்த சிவலிங்கத்தை சில நிமிடங்கள் வரையிலும் வழிபட்டால் மட்டுமே நமக்கு கலியின் துன்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்;நமது மன அமைதி ஒவ்வொரு நாளும் வலுப்பெற்றுக் கொண்டே இருக்கும்;அதன் பிறகு,லிங்கோத்பவரை வழிபட வேண்டும்;

படைக்கும் கடவுளான பிரம்மா அன்னப்பறவை வடிவில் சிவனின் முடியைத் தேடி பறப்பதை இந்த லிங்கோத்பவரின் மேல்பகுதியிலும்,காக்கும் கடவுளான மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து,சிவனின் அடியைத் தேடிச் செல்வதை இந்த லிங்கோத்பவரின் கீழ்ப்பகுதியிலும், செதுக்கியிருப்பதைக் காணலாம்;

இந்த சம்பவம் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு,அண்ணாமலையில் நிகழ்ந்திருக்கிறது;அயன்,மால் இருவருக்குமே இறைவன் அந்த அண்ணாமலையாரே என்பதை இந்த லிங்கோத்பவர் சிற்பம் உணர்த்துகிறது;

கோவிலின் உட்பகுதிக்குள் அமைக்கப்பட்டிருக்கும் சண்டிகேசுவரர் சன்னதிக்கு கண்டிப்பாகச் செல்ல வேண்டும்;அவரது சன்னதியில் நின்று கொண்டு மெதுவாக கை தட்டவேண்டும்;சிவாலயத்திற்கு வந்தமைக்கான பலன்களைத் தரும் பொறுப்பு இவரையேச் சேரும்;இப்படிக் கைத்தட்டினால் தான்,சிவாலயத்திற்கு நாம் வந்திருப்பதை சண்டிகேசுவரர் பதிவு செய்வார்; 

கோயிலை விட்டு வெளியேறும் முன்பு கோவிலின் ஏதாவது ஒரு இடத்தில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பிறகே செல்ல வேண்டும்;ஏனெனில்,பல கோடி ஆண்டுகளாக சிவ வழிபாடு செய்து வரும் பல சிவபக்தர்கள் கோவிலுக்குள் சூட்சுமமாகஇருப்பார்கள்;

கோவிலின் அனைத்துப் பிரகாரங்களையும் சுற்றிவிட்டு,கோவிலுக்குள் உட்காராமல் வீட்டுக்குப் புறப்பட்டால் அவர்களும் நம்மோடு நமது வீட்டுக்கு சூட்சுமமாக வரத் துவங்குவர்;அது முறையல்ல;

ஒவ்வொரு பழமையான சிவாலயமும் நமக்கு அளவற்ற ஆத்ம சக்தியைத் தரக்கூடியவை;நமது கர்ம வினைகளை படிப்படியாகவும்,முழுமையாகவும் நீக்கக் கூடியவை;

சிவாலயத்தினுள் அல்லது சிவாலயத்தின் வாசலில் நாம் செய்யும் ஒவ்வொரு தானமும் ஏராளமான புண்ணியத்தை நமக்கு அருளக் கூடியவை;

தொடர்ந்து 48 நாட்கள் ( ஒரு மண்டலம்) சிவாலயம் சென்று வந்தாலே சிவன் அம்சமாகவே நாம் மாறிவிடுவோம்; 

தொடர்ந்து பத்து ஆண்டுகள் தினமும் சிவாலயம் சென்று வந்தால் குருவின் வடிவில் சிவ தரிசனம் நமக்குக் கிட்டும்;ஒரே ஒருசனிப்பிரதோசத்தன்று,பழமையான சிவாலயத்தில் நடைபெறும் பிரதோச அபிஷேகத்தில் கலந்து கொண்டால் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் நமக்குக் கிட்டும்;

ஒரே ஒரு திங்கட்கிழமை பிரதோஷத்தன்று,பழமையான சிவாலயத்தில் நடைபெறும் பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொண்டால்,தொடர்ந்து நான்கு தலைமுறையாக நமது வீட்டு பெண்மணிகளின் சோகங்கள் படிப்படியாக நீங்கும்; 

நமது மனதினுள் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் நீங்கும்;மன உறுதி பலப்படும்;நமது சிந்தனைத் திறன் பல மடங்கு அதிகரிக்கும்; நமது சுபாவத்துக்கு ஏற்ற ஆன்மீக குருவை நாம் சந்திக்கும் பாக்கியம் நமக்குக் கிட்டும்;

ஒரே ஒரு சாதாரண பிரதோஷத்தன்று,
பழமையான சிவாலயத்தில் நடைபெறும் பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொண்டால் தொடர்ந்து ஓராண்டு சிவாலயம் சென்று வந்த புண்ணியம் நமக்குக் கிட்டும்.

ஓம்நமசிவாய.

No comments:

Post a Comment

Followers

1008 ஆயிரத்து எட்டு லிங்கங்களின் பட்டியல்...

ஆயிரத்து எட்டு லிங்கங்களை கேட்டிருக்கோமே தவிர, அந்த 1,008 லிங்கங்கள் என்னென்ன என்று பலருக்கும் தெரியாது.  இதோ அந்த 1008 லிங்கங்களின் பட்டியல...