Wednesday, March 13, 2024

ஒரே_கோட்டில் அமைந்த 8 சிவத்தலங்கள்..அறிவியல் ஆச்சர்யம்..

ஒரே_கோட்டில் அமைந்த 8 சிவத்தலங்கள்...ஓர் ஆச்சர்யம்..
🙏🏾🔥#நாம்_வணங்கும் இறைவன் நம்மில் மட்டுமல்லாமல், எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருப்பவன். அண்டசராசரங்களின் முக்கிய சாராம்சமாக இருப்பவன். நாம் தோல்வியில் துவளும்போது மனதில் நம்பிக்கையை விதைப்பவன். அதனால்தான், இறைவன் எங்கு இருப்பான்? என்ற கேள்விக்கான விடைதேடும் அன்பர்களுக்கு பிரகலாதனைக் காரணமாகக் கொண்டு ' தான் தூணிலும் இருப்பவன், துரும்பிலும் இருப்பவன்' என்று உணர்த்தி இருக்கிறான். இறைவன் மெய்ஞ்ஞான ரகசியங்களை முழுவதும் அறிந்துகொள்வதற்கு மனிதனுக்கு பல யுகங்கள் கூட போதாது என்பதில் இருந்தே அவனுடைய அளவற்ற ஆற்றலை நம்மால் புரிந்துகொள்ள முடியும். 🙏🏾

🔥🙏🏾#பொதுவாக, புவியியலில் கூறப்படும்  'தீர்க்க ரேகைகள்' என்பவை பூமியின் மேல்பகுதியில் மேற்கில் இருந்து கிழக்குதிசையை நோக்கி வரையப்படும் கற்பனைக்கோடுகள் என்றும், 'அட்ச ரேகைகள்' என்பவை, பூமியின் மேல்பகுதியில் வடக்குதிசையில்இருந்து தெற்கு நோக்கி வரையப்படும் கற்பனைக் கோடுகள் எனவும் வரையறுக்கப்படுகின்றன.  இவை குறிப்பாக ஓர் ஊரை, இடத்தைச் சுட்டிக்காட்டுவதில் முக்கியப்பங்கு ஆற்றுகின்றன.
 👍🏿#இன்று_நம்மிடம் ஒரு ஆண்ட்ராய்டு மொபைலும், அதில் தக்க இடத்தைக் கண்டறியும் ஆப் ஒன்றும் இருந்தால், நாம் தேட இருக்கும்  இடத்தை அதன் நிலவியல் கூறுகளோடு எளிதில் வகைப்படுத்திவிடமுடியும். ஆனால், அது பற்றிய எந்தவொரு புரிதலும் இல்லாத காலத்தில் நம் இந்தியர்கள், எம்பெருமான் சிவனுக்கு ஒரே நேர்க்கோட்டில்,  கோயில் எழுப்பி வழிபட்டு உள்ளனர் என்பது நம்மில் பலரும் அறிந்திடாத உண்மையே. ஆம். அவர்கள் கட்டுவித்த சிவாலயங்களின் சராசரியான தீர்க்க ரேகை மதிப்பு 79° இருக்கிறது என்றால் ஆச்சர்யம்தானே..!  இப்படி  ஒத்த புள்ளியில் அமைக்கப்பட்ட பஞ்சபூத தலங்கள் பற்றியும், இன்ன பிற முக்கிய சிவன் கோயில்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

1.  🔥#ராமேஸ்வரத்தில் அமைந்துஉள்ள  ராமநாதசுவாமி திருக்கோயில் பன்னிரண்டு ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில், ராவணனைக்கொன்ற பாவம் நீங்க, ராமன் சிவனைக் கடல் மணலில் லிங்கம் அமைத்து வழிபட்டதாகக் கூறுவர். இந்த திருத்தலம் அமைந்துள்ள கோயிலின் ரேகை மதிப்பு - 9° 17'17.18'' N, 79° 19' 2.21'' E

 2. 🔥#திருச்சி_அருகில் உள்ள திருவானைக்காவலில் அமைந்திருக்கிறது ஜம்புகேஸ்வரர் ஆலயம். பஞ்சபூத தலங்களில் 'நீருக்கு உரியது' என வர்ணிக்கப்படும் தலம் இது. முன் ஜென்மத்தில் சிலந்தியாக பிறந்த கோச்செங்கட்சோழனின் சிவபக்தி மாமன்னர் ஆகியும் தொடரவே, அவன் ஆட்சியில் கட்டுவித்த முதல் பெருங்கோயில் இது. இந்த திருத்தலம் அமைந்துள்ள கோயிலின் ரேகை மதிப்பு    -  10° 51' 12'' N, 78° 42' 20'' E.

3. 🙏🏾#கடலூர் மாவட்டத்தில் இருக்கும் சிதம்பரத்தில் அமைந்திருக்கிறது நடராஜர் ஆலயம். பஞ்சபூத தலங்களில் 'ஆகாயத்துக்கு ஏற்ற தலம்' என வர்ணிக்கப்படுவது.இங்கு சமயக்குரவர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர்,மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும்  தேவாரம் பாடியுள்ளனர். இந்தத் திருத்தலம் அமைந்துள்ள  கோயிலின் ரேகை மதிப்பு 11° 24'0'' N, 79° 42' 0'' E

4. #திருவண்ணாமலையில் எல்லாம் வல்ல இறைவன் ஜோதிபிழம்பாக  அருணாசலேஸ்வரராக அருள்பாலிக்கிறார். பஞ்சபூத தலத்தில் 'அக்னிதலமாக', இதைக் கருதுகின்றனர். இங்கு அன்னை உண்ணாமலையாக வீற்றிருக்கிறாள். இத்தலத்தின் ரேகை மதிப்பு - 12° 13' 53.76''N, 79° 4'1.92'' E.

5. '#ப்ருத்வி லிங்கம்' அருளும் காஞ்சிபுரம் -ஏகம்பரேஸ்வரர்  திருக்கோயிலும், 'வான்மீகிநாதர்' அருள்புரியும்  திருவாரூர் தியாகராஜர் கோயிலும் பஞ்சபூத தலங்களில் நிலத்தைக்குறிப்பன. இத்தலத்தின் ரேகை மதிப்புகள்  முறையே 12°50'51''N, 79°42'0''E; மற்றும் 10° 46'' 0' N, 79° 39' 0'' E.

 6. 🔥#ஆந்திரப்பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டத்தில்  அமைந்து உள்ள ஊர் ஶ்ரீகாளஹஸ்தி. பஞ்சபூத தலங்களில் 'வாயுலிங்கம்' என அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் ரேகை மதிப்பு - 13°44'58''N, 79°41'54''E.

7. 🙏🏾#தெலுங்கானா மாநிலத்தில்  உள்ள, கரீம்நகர் மாவட்டத்தில்  கோதாவரி நதிக்கரையில் அமைந்திருக்கிறது காலேஷ்வரம்  முக்தீஸ்வரா திருக்கோயில். இத்தலத்தின் ரேகை மதிப்பு - 18°48'41''N , 79°54'24'' E.
  
8.#உத்ரகாண்ட் மாநிலத்தில், மந்தாகினி நதிக்கரையில் அமைந்திருக்கும் நகரம் 'கேதார்நாத்'.இங்கு இருக்கும் சிவாலிக் மலைத்தொடரில் அமைந்திருக்கிறது இந்த  'பனிலிங்கம்' ஆலயம் .  12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு நிலவும் பனியின் காரணமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் தீபாவளிவரை மட்டுமே பக்தர்கள்  இக்கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இத்தலத்தின் ரேகைமதிப்பு - 30° 43' 48''N, 79° 4' 12'' E.

      🙇🔥#ஆக_நம்_முன்னோர்கள் கட்டமைத்த ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னும், பல ஆண்டுகளைத் தாண்டி நிற்கும் அறிவியல் நிற்கிறது. அந்த அறிவியலுடன் ஆன்மிகமும் பிணைத்திருக்கிறது. 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

மருதமலை முருகன் கோயில் கோவை...

*மருதமலை* *முருகன் கோயில்...*  கோயமுத்தூர் நகரில், மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக...