#பழனியாண்டவர் சிலையை உருவாக்க போகர் பயன்படுத்தியது நவபாஷாணங்கள் . வீரம் , பூரம் , ரஸம் , ஜாதிலிங்கம் , கந்தகம் , கௌரிபாஷாணம், வெள்ளை பாஷாணம் , மிருதார்சிங் , சிலாஹித் ஆகியவைதான் அந்த ஒன்பது பொருட்கள் . இவைதான் பிரதானம். இது போக மேலும் பல வஸ்துக்களையும் , மூலிகைகளையும் கலந்து திரவ நிலைக் குழம்பைக் கெட்டிப்படுத்தி திடப்பொருளாக மாற்றும் வித்தை போகருக்குத் தெரிந்திருந்தது.
🔥🙏🏾#போகரின் தலைமையில் 81 சித்தர்கள் ஒன்று சேர்ந்து , 81 வகையான வஸ்துக்களைக் கலந்து 9 கலவைகளாக்கிய பிறகு இந்தப் பாஷாணக்கட்டு செய்யப்பட்டது . இந்தக் கலவைகளை 9 விதமான எரிபொருளைக் கொண்டு காய்ச்சி , 81 முறை வடிகட்டி சுத்தி செய்யப்பட்டதாக அவரது பாடல்களில் சொல்லப்பட்டுள்ளது .
அந்த பாஷாணக் கலவையில் லிங்கம் , செந்தூரம் , பாதரசம் , ரச கற்பூரம் , வெடி உப்பு , பாறையுப்பு, சவுட்டுப்பு , வாலையுப்பு , எருக்கம்பால் , கள்ளிப்பால் , வெண்காரம் , சங்குப்பொடி , கல்நார் , பூநீர், கந்தகம் , சிப்பி , பவளம் , சுண்ணாம்பு, சாம்பிராணி, இரும்பு, வெள்ளீயம், அரிதாரம் , குன்றிமணி போன்ற பல சாமான்களும் பயன்படுத்தப்பட்டன .
🙏🏾🔥#இந்த_வகை பாஷாணங்களைக் கலந்து கலவையாகக் கட்டும் வரை அதைச் செய்பவர்கள் சுவாசிக்கக் கூடாது ! ஏனெனில் அவை அத்தனையும் கொடிய விஷத்தன்மையானவை . அத்தனை பேரும் மூச்சை உள்ளடக்கி சில மணி நாழிகைகள் வரை சுவாசிக்காமல் இவ்வளவு பெரிய பணியை போகரின் வழிகாட்டுதல் மூலம் செவ்வனே செய்து முடித்தார்கள் என்பதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் மலைப்பாகவே இருக்கிறது . அத்தனை பேரும் எந்த அளவுக்குச் சித்தி பெற்று பிராணாயாமத்தைக் கடைப்பிடித்திருந்தால் இப்படியொரு அசாத்தியமான மூச்சையடக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும் !
பாஷாணங்களை வைத்துக் கட்டப்பட்ட இந்தச் சிலை உஷ்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் . அதனால் போகர் எழுதி வைத்துப் பின்பற்றி வந்த ஆறு கால பூஜைகளையும், செய்விக்க வேண்டிய அபிஷேகங்களையும் இன்று வரை மாற்றாமல் கடைப்பிடித்து வருகிறார்கள்.
🔥🦚#இரவுகால பூஜைக்குப் பின் விக்கிரகத் திருமேனியில் அரைத்த சந்தனத்தைப் பூசிக் குளிர்வித்து விடுகிறார்கள் . மறுநாள் காலை விளாப் பூஜை நடக்கும் வரை , ஏறத்தாழ 10 மணி நேரங்களுக்கு எந்த அபிஷேகமும் இல்லாதபோது விக்கிரகம் வெளிப்படுத்தும் உஷ்ணத்தை உறிஞ்சி விக்கிரகத் திருமேனியைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இந்தச் சந்தனக் காப்பு உதவுகிறது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பழனியாண்டவர் விக்கிரகத்தின் ஸ்திரத் தன்மையை அறியவும் , அந்தச் சந்தனத்தில் என்னென்ன ரசாயனங்கள் தங்கியுள்ளன என்பதைக் கண்டறியவும் தமிழக கனிம வளக் கழகத்தின் அப்போதைய தலைவர் தலைமையில் விஞ்ஞானிகள் குழு ஒரு சோதனையை மேற்கொண்டது . முதல் சந்தனத்தைக் கரைசலாக்கி அதை அட்டாமிக் அப்சார்ப்ஷன் ஸ்பெக்ட்ரோமீட்டர் என்ற கருவி மூலம் பரிசோதனை செய்தனர் .
மற்ற நேரங்களில் செய்விக்கப்பட்ட அபிஷேகப் பொருள்களில் என்னென்ன ரசாயனங்கள் தங்கின என்பதை இந்தக் கருவி மூலம் துல்லியமாகக் கண்டறிந்தனர் . ஆனால் இரவுக்காலப் பூஜைக்குப் பின் சாற்றிய சந்தனத்தில் என்ன இருந்தது என்பதைப் பலமுறை, பரிசோதித்தும் கண்டறிய முடியவில்லை ! அதாவது அந்தக் கரைசலின் மூலத்துகள்களை இன்னவென்று பகுத்தறிய முடியாமல் போனது எப்படி என்பது அக்குழுவினருக்கு மிகுந்த ஆச்சரியம்தான் !
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment