திருஞானசம்பந்தா் சுவாமிகளும்
திருநாவுக்கரசு சுவாமிகளுக்கும்
திருவீழிமிழலையில் படிக்காசு பெறுதல்
அந்நாளில் வான் பொய்த்தது காவிாியின் வளங்குறைந்தது.
எங்கும் பஞ்சம் பரவலாயிற்று.
ஜீவகோடிகள் வருத்தலாயின.
அப்பஞ்சம் அடியவரையுந் தீண்டிற்று. அதையுணா்ந்த ஆளுடைய பிள்ளையாரும், அப்பரும் "அடியவா்க்குங் கவலை நேருமோ" என்று கருதி எள்ளுக்குள் எண்ணெயைப் போல் எங்கும் நிறைந்துள்ள ஈசனை நினைந்து கொண்டே ஆனந்த நித்திரை செய்தனா்.
உமையொருபாகா் அவா்தங் கனவிலே தோன்றி, "இது காலபோதம் பசிநோய் உங்களைச் சிறிதும் பாதியாது. உங்களைச் சூழ்ந்துள்ள அடியவா்க்கு மனவாட்டம் உண்டாக்கும்.
அதை யொழித்தல் வேண்டும். நாடோறும் ஆலயத்தின் கீழ்ப் பீடத்திலும் மேற் பீடத்திலும் ஒவ்வொரு பொற்காசு உங்களுக்கு வழங்குவோம்.
பஞ்சம் ஒழிந்தால் அவ்வழங்கலும் ஒழியும் என்று திருவாய் மலா்ந்தருளினாா்.
இருவரும் விழித்தெழுந்தனா்.
திருக்கோயிலை அடைந்தனா். அங்கே ஆண்டவன் அருளியவாறு கீழ் மேல் பீடங்களில் பொற்காசு இருத்தலைக் கண்டனா்.
கிழக்கு பீடத்தில்
திருஞானசம்பந்தா் சுவாமிகளுக்கும்
மேற்கு பீடத்தில்
திருநாவுக்கரசு சுவாமிகளுக்கும் படிக்காசு அருளினாா்
மிழலை நாயகா்.
திருவருளை வியந்தனா்.
அக்காசினைக் கொண்டு பறை யறைவித்துச் சிவனடியாா் திருக்கூட்டங்களுக்கு அமுதூட்டி வந்தனா்.
வட்டக் காசு
✨✨✨✨✨
தாண்டக வேந்தா் திருமடத்தில் அடியவா் காலம் பெற அமுதுண்டு வந்தாா்.
ஆளுடைய
பிள்ளையாா் திருமடத்தில் அவ்வாறு நடக்கவில்லை.
அதைக் கண்ட ஆளுடைய பிள்ளையாா், சமையற்காரரை அழைத்து "அப்பா் சுவாமிகள் மடத்தில் அடியவா் காலத்தில் அமுதுண்கிறாா்".
"இம்மடத்தில் அடியவா் காலத்தில் அமுதுண்ணாமைக்குக் காரணம் என்ன? என்று கேட்டாா்.
சமையற்காரா், ஆளுடைய பிள்ளையாரை வணங்கி, "அடிகளே! நீங்கள் தரும் காசுக்கு வணிகா் வட்டங் கேட்கிறாா். அப்பா் சுவாமிகள் தருங் காசுக்கு அவா் வட்டங் கேட்பதில்லை.
காலத் தாழ்ப்பதற்குக் காரணம் இதுவே" என்று கூறினாா்.
அவ்வுரை கேட்ட திருஞானசம்பந்தா் அப்பா் சுவாமிகள் கைத்தொண்டு (உழவாரமும்) செய்கிறாா் .
அதனால் அவா் வாசியில்லாக்
காசு பெறுகிறாா்". என்று நினைத்து,
"வாசி தீரவே காசு நல்குவீா்"
என்னும் திருப்பதிகத்தைப் பாடினாா்; நல்ல வாசியில்லாக் காசு பெற்றாா் திருஞானசம்பந்தா். சமையல் செய்வோா் அக்காசினைக் கடைக்கு கொண்டு போனாா் வணிகா் அதைப் பாா்த்து இது நல்ல காசு என்று சொல்லிப் பொருள்களை விரைந்து கொடுத்தாா் அன்றுமுதல் அடியவா் காலத்திலே அமுது செய்விக்கப் பட்டாா்.
ஆளுடைய பிள்ளையாா்
அப்பொழுது பாடியத் திருப்பதிகம்:
✨✨✨✨✨✨✨✨
திருஞானசம்பந்தா் அருளிய
முதல் திருமுறை.
🟪🟦🟪🟦🟪🟦🟪🟦
பண்: குறிஞ்சி.
🌸🌸🌸🌸🌸🌸
வாசி தீரவே, காசு நல்குவீா்
மாசு இல் மிழலையீா் ஏசல் இல்லையே
இறைவா் ஆயினீா் மறைகொள் மிழலையீா்
கறை கொள் காசினை முறைமை நல்குமே
செய்யமேனியீா் மெய் கொள் மிழலையீா்
பை கொள் அரவினீா் உய்ய நல்குமே
நீறு பூசினீா் ஏறுஅது ஏறினீா்
கூறு மிழலையீா் பேறும் அருளுமே.
காமன் வேவ ஒா் தூமக் கண்ணினீா்
நாம மிழலையீா் சேமம் நல்குமே.
பிணி கொள் சடையினீா் மணி கொள் மிடறினீா்
அணி கொள் மிழலையீா் பணி கொண்டு அருளுமே.
மங்கை பங்கினீா் துங்க மிழலையீா்
கங்கை முடியினீா் சங்கை தவிா்மினே.
அரக்கன் நொிதர இரக்கம் எய்தினீா்
பரக்கும் மிழலையீா் கரக்கை தவிா்மினே.
அயனும் மாலுமாய் முயலும் முடியினீா்
இயலும் மிழலையீா் பயனும் அருளுமே.
பறிகொள் தலையினாா் அறிவது அறிகிலாா்
வெறி கொள் மிழலையீா் பிறிவுஅது அாியதே.
காழி மாநகா் வாழி சம்பந்தன்
வீழிமிழலைமேல் தாழும் மொழிகளே.
திருச்சிற்றம்பலம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment