Thursday, April 11, 2024

ஆறு வற்றும்போது மட்டுமே பார்க்க முடியும்.. 1,000 சிவலிங்கம்.

ஆறு வற்றும்போது மட்டுமே பார்க்க✨ முடியும்.. 1,000 சிவலிங்கம பிரம்மிக்க வைக்கும் இடம்..!!

                  
ஆறு வற்றும்போது தெரியும்... 1,000 சிவலிங்கம்...
✨ சுற்றிலும் பச்சைப்பசேல் என்ற மரங்களும், சலசலத்து ஓடும் நதியும், அதன் நடுவே கோவில்களும் அமைந்திருந்தால், அந்த இடம் ஆத்ம திருப்தியைக் கொடுக்கும். அப்படி இயற்கை கொஞ்சும் அழகிய இடத்தை பற்றியும்.. அங்கு அமைந்துள்ள மர்மங்களை பற்றியும் பார்க்கலாம் வாங்க..
✨ கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள சிர்சி என்ற ஊரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் சால்மலா ஆற்றங்கரை அமைந்துள்ளது. 




✨ இறைவன் எங்கும் நிறைந்தவன் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த இடம் அமைந்துள்ளது.. இங்கே ஓடும் ஆற்றில் 1,000 லிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆயிரம் லிங்கங்களும் எப்பொழுது உருவாக்கப்பட்டது? யாரால் உருவாக்கப்பட்டது? என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

✨ இந்த ஆற்றுக்குள் இருக்கும் பாறைகளால் செதுக்கப்பட்ட 1,000 (சஹஸ்ர) லிங்கங்களை பார்ப்பதற்கு இரு கண்கள் போதாது. 


✨ மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான இங்கு தென்மேற்கு பருவமழையின்போது வெள்ளம் கரை புரண்டு ஓடும். அப்போது இந்தப் பகுதியை பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அப்பொழுது இந்த லிங்கங்களை பார்க்க இயலாது. ஏனென்றால் இந்த அத்தனை லிங்கங்களும் ஆற்று நீரோட்டம் உள்ள பகுதிகளில்தான் உள்ளன. இவை அனைத்தையும் ஆற்றுநீர் வற்றும்போது மட்டும்தான் பார்க்க முடியும்.

✨ இங்குள்ள லிங்கங்கள் அனைத்தும் ஆவுடையாருடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சில லிங்கங்களுக்கு முன்பு நந்தி சிலையும் செதுக்கப்பட்டுள்ளன. அத்தனை லிங்கங்களையும் ஆற்றுக்கு நடுவில் பார்க்கும்போது, பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது 
✨ ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழாவின்போது, இந்தப் பகுதியில் பக்தர்களின் எண்ணிக்கை எண்ணில் அடங்காத அளவு குவிகிறது.

✨ கோவில்களில் உள்ள லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்வதுபோல இந்த லிங்கங்களுக்கு அபிஷேகம் எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் இந்த லிங்கங்களுக்கு எந்நாளும், எப்பொழுதும் நீரால் அபிஷேகம் நடந்துகொண்டேதான் இருக்கிறது.
ஓம்நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...