Sunday, April 14, 2024

குரோதி எனப்படும் தமிழ் புத்தாண்டு

மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் நாளான இன்று  
ஆங்கில நாள் காட்டி எனப்படும் கிரேக்க கலண்டரின் அடிப்படையில் 

13 ஆம் திகதி 4 ஆம் மாதம் 2024 ஆம் ஆண்டு  அதாவது 

தமிழ் நாள்காட்டியின் அடிப்படையில் சித்திரை மாதம் முதலாம் திகதி

குரோதி எனப்படும் தமிழ் புத்தாண்டு பிறந்திருக்கின்றது. 

இந்த புத்தாண்டை  கொண்டாடும் சைவத்தமிழ் உறவுகளுக்கும் இந்துத் தமிழ் சொந்தங்களுக்கும் 

இந்த சங்கரானந்தா புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு 

இந்த புத்தாண்டை தொடர்ந்து இந்த குரோதி வருடத்தில்  வரும் 

சித்திரை சித்திரை  

வைகாசி விசாகம் 

ஆனி உத்தரம் 

ஆடிப் பூரம் 

ஆவணி ஓணம் 

புரட்டாதி  பூரட்டாதி 

ஐப்பசி அஸ்வினி

கார்த்திகை கார்த்திகை 

மார்கழி திருவாதிரை 

தைப் பூசம் 

மாசி மகம் 

பங்குனி உத்தரம்

போன்ற சமய திருவிழாக்களை பக்தியுடன் கொண்டாடி 

எம் தமிழினத்தின்  மரபை காத்து பண்பாட்டு மீட்சியை கொண்டுவர  

அன்பிற்குரிய எனது 

சைவத் தமிழ் உறவுகளையும் 

இந்து தமிழ் சொந்தங்களையும் 

வேண்டிக்கொண்டு  

இந்த குரோதி வருடத்தின் தை மாதம் முதலாம் நாளில் வரப்போகும் 

பொங்கல் பண்டிகையானது 

ஆங்கில நாள் காட்டி எனப்படும் கிரேக்க கலண்டரின் அடிப்படையில் 

14 ஆம் திகதி 1 ஆம் மாதம் 2025 ஆம் ஆண்டில் வருகின்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 

தமிழர் என்ற ஆர்வத்துடன்  இந்த குரோதி வருடத்தில் வரும் பொங்கல் விழாவை 

மதம் சார்ந்த பண்டிகை இல்லாமல் மண்சார்ந்த பண்டிகை என்று கூறி  கொண்டாடப்படுகிறது. 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 


No comments:

Post a Comment

Followers

நாக சாதுக்கள் யார்? நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்? கும்பமேளாவுக்குப் பிறகு எங்கு செல்கிறார்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பம...