Sunday, April 14, 2024

முன் ஜென்ம தீவினைகள் நீங்க வழிபட வேண்டிய ஆலயம்

முன் ஜென்ம தீவினைகள் நீங்க வழிபட வேண்டிய ஆலயம் பற்றி பார்ப்போம்..
போன ஜென்மத்தில் நான் என்ன பாவம் செய்தேனோ அதனால இந்த ஜென்மத்தில் இப்படி கஷ்டங்களை அனுபவிக்கிறேன் என்று புலம்பாத ஆளே கிடையாது..

நிச்சயம் அனைவரும் புலம்பி இருப்போம்..

அப்படி நம் முன் ஜென்ம தீவினைகள் நிங்கி வாழும் இப்பிறவியில் இன்பம் பெறுக வணங்க வேண்டிய ஆலயம் ஒன்று உள்ளது.. 

*தேவாரம் பாடல் பெற்ற
திருவாடானை ஆதிரத்தினேசுவரர் திருக்கோயில்

*திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

மூலவர்:
ஆதிரத்தினேசுவரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர்
தாயார்:
சினேகவல்லி, அம்பாயி அம்மை
தல விருட்சம்:
வில்வம்
தீர்த்தம்:
சூரிய புஷ்கரிணி

அமைவிடம்
ஊர்:
#திருவாடானை
மாவட்டம்
#ராமநாதபுரம்

🌼சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 199-வது தலமாகும். பாண்டிய நாட்டு தலங்கள் 14-ல் 9-வது தலம்

வருண பகவானின் மகனான வாருணி, துர்வாச முனிவரின் தவத்தை கலைத்தான். அதனால் அவனை ஆட்டின் தலையும், யானை உடலுமாக மாறும்படி துர்வாசர் சாபமிட்டார். அந்த சாபம் நீங்குவதற்காக திருவாடானை வந்த வாருணி, இத்தல இறைவனை வேண்டி விமோசனம் பெற்றான். ஆடு + ஆனை என்பதே 'திருவாடானை' என்றானது. 

இங்குள்ள சோமாஸ்கந்தமூர்த்தியை, பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன் நிறுவியதாக சொல்லப்படுகிறது. ஈசனை வேண்டி பாசுபத அஸ்திரத்தைப் பெற்றான் அர்ச்சுனன். ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று அவன் அறியவில்லை. அதை அறிவதற்காக இத்தலம் வந்து சிவனை வேண்டினான். சிவனும் கற்றுக்கொடுத்தார். அதற்கு நன்றியாகவே சோமாஸ்கந்த மூர்த்தியை நிறுவினான்.

சூரியனுக்கு தன்னுடைய பிரகாசமான ஔியால் கர்வம் உண்டானது. அந்த ஆணவத்தால் தன்னுடைய ஒளியை, சிவபெருமானின் முகத்தில் பாய்ச்சினான். அப்போது அந்த ஒளியை நந்தி உள்ளிழுத்துக்கொண்டார். இதனால் ஒளியை இழந்த சூரியன், நந்தியை வேண்டினாா். நந்திேயா, திருவாடானை இறைவனை வேண்டும்படி சொல்ல, நீல ரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டு, தன் ஒளியை மீண்டும் பெற்றார், சூரிய பகவான்.

இத்தல நாயகியான சிநேகவல்லி அம்மன், சுக்ரனுக்குரிய அதிதேவதை ஆவார். எனவே இந்த ஆலயம் சுக்ரனுக்குரிய பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது.

இந்த ஆலயத்தில் அமைந்த 9 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம், 130 அடி உயரம் கொண்டது

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது

#திருஆடானை2.112

#மாதோர் கூறுகந் தேற தேறிய
ஆதியா னுறை ஆடானை
போதினாற் புனைந் தேத்து வார்தமை
வாதியா வினை மாயுமே.

இத்தல இறைவனை வழிபடுவதால் நமது வினைகள் நீங்கும் என்று குறிப்பிடும் சம்பந்தர், நோய் பிணிகள் ஆகியவற்றில் இருந்தும் விடுபடுவோம் என்று 3-வது, 11-வது பாடலில் குறிப்பிடுகிறார்.

எனவே இவ்வாலயத்தை வந்து வழிபட்டால்

👉முன் ஜென்ம தீவினைகள் அகலும்🪔
👉சுக்கிர தோஷத்தில் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் சுக்கரணின் பரிபூரண அருள் அனைவருக்கும் கிடைக்கும்🪔
👉தீராத நோய்களும் தீரும். 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

நாக சாதுக்கள் யார்? நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்? கும்பமேளாவுக்குப் பிறகு எங்கு செல்கிறார்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பம...