⚜️ *இறைவனும் இறைவியுமான சுயம்பு லிங்க சுந்தரேசர் அன்பர்களுக்காகப் புரிந்த ஆயிரக் கணக்கான திருவிளையாடல்களில் சங்கப் புவர்கள் போற்றிய அறுபத்து நான்கு*.
1. ஆதி காலத்திய ஒரு இந்திரனது தீராத பழி தீர்த்த திருவிளையாடல்
2. காட்டு யானையாக மாறிய ஐராவதத்தை அழகாக்கி முக்தி அருளி சிவலோகத்தில் இருத்திய
திருவிளையாடல்
3. கடம்ப வனத்தை மதுராபுரி (மதுரை) ஆக்கிய திருவிளையாடல்
4. குழந்தை வரம் வேண்டிய மலையத்துவசப் பாண்டியன் –
காஞ்சன மாலை மகள் மீனாட்சியாகப் பரா சக்தியைத் தோற்றுவித்த திருவிளையாடல்
5. மனித வடிவில் சுந்தர பாண்டியனாய் (பரம் பாண்டியனார்) உலகம் ஆண்ட திருவிளையாடல்
6. பதஞ்சலி வியாக்கிர பாத முனிவர்களுக்குத் திரு நடனக் காட்சி அருளிய திருவிளையாடல்
7. அன்னக் குழி உண்டாக்கி குண்டோதரனின் பசி போக்கிய திருவிளையாடல்
8. வைகை நதியை உண்டாக்கி குண்டோதரனின் தாகம் தீர்த்த திருவிளையாடல்
9. காஞ்சன மாலைக்காக ஏழு கடல் அழைத்த திருவிளையாடல்
10. மலையத்துவசப் பாண்டியனை மீண்டும் உயிரோடு வரவழைத்த திருவிளையாடல்
11. முருகப் பெருமானை உக்கிர குமாரனாகப் பிறப்பித்த திருவிளையாடல்
12. உக்கிர குமார பாண்டியனுக்கு வேல் வளை செண்டு வழங்கி அருளிய திருவிளையாடல்
13. உக்கிர குமாரனுக்கு வெற்றி அருளிய திருவிளையாடல்
14. நான்கு முனிவர்களுக்குத் தமிழ் சமசுகிருத வேதங்களின் பொருள் உரைத்த திருவிளையாடல்
15. அறுபத்தாறு முனிவர்களுக்காகக் கடல்மீன் வயிற்றிலிருந்து ஆகமம் மீட்டருளிய திருவிளையாடல்
16. மகுடம் இழந்த பாண்டியனுக்காக மாணிக்கம் விற்ற திருவிளையாடல்
17. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த திருவிளையாடல்
18. மதுரையை நான்மாடக் கூடலாக்கிய திருவிளையாடல்
19. எல்லாம் வல்ல சித்தரான திருவிளையாடல்
20. கல் யானைக்குக் கரும்பு ஊட்டிய திருவிளையாடல்
21. ஆறு கார்த்திகைப் பெண்களுக்கு அட்ட மா சித்தி உபதேசித்தருளிய திருவிளையாடல்
22. அகத்தியருக்கு எழுத்து சொல் பொருள் யாப்பு அணி ஆகிய தமிழ் இலக்கணம் அறிவித்த திருவிளையாடல்
23. அகத்திய முனிவர் உண்டாக்கிய தெய்வீகத் தமிழ்ச் சங்கத்தின் நாற்பத்தெட்டு புலவர்களுக்கு ஞானப் பலகை அளித்த திருவிளையாடல்
24. ஓவிய மங்கையர்க்கு உயிர் அளித்த திருவிளையாடல்
25. ஓரியூர் அம்மையாருக்காக முதியவராகி பாலகன் ஆன திருவிளையாடல்
26. பரத நாட்டியம் கற்ற பாண்டியனுக்காகத் திருவடி மாறி ஆடிய திருவிளையாடல்
27. பாண்டியனின் நீதி காத்த திருவிளையாடல்
28. மனம் திருந்திய தீயவனின் மா பாதகம் போக்கிய திருவிளையாடல்
29. பெண்ணடியவருக்காக வாளாசிரியன் உருவில் காமுகனது அங்கம் வெட்டிய திருவிளையாடல்
30. வளையல் வணிகருக்காகவும் அறுபத்து நான்கு யட்சினிகளுக்காகவும் வளையல் விற்ற திருவிளையாடல்
31. சேனாதிபதிக்காகப் படைகளைக் கொண்டு வந்து அருளிய திருவிளையாடல்
32. வேள்வி செய்யும் வேதியர்களுக்கு உலவாக் கிழி அருளிய திருவிளையாடல்
33. சித்தராக வந்து சேர மன்னனுக்கு அருள் புரிந்து நந்தி இலச்சினை இட்ட திருவிளையாடல்
34. தண்ணீர்ப் பந்தல் வைத்துப் பாண்டியனுக்கு வெற்றி அருளிய திருவிளையாடல்
35. நடனப் பெண்மணியான பொன்னனையாளுக்குப் பொன்மேனி அருளிய திருவிளையாடல்
36. பாண்டியனாக வந்து சோழனைச் சிறை மீட்ட திருவிளையாடல்
37. தாய்ப் பன்றியாகிப் பன்னிரண்டு பன்றிக் குட்டிகளுக்குப் பாலூட்டிய திருவிளையாடல்
38. அடியார்க்கு நல்லான் என்ற உழவருக்கு உலவா அரிசிக் கோட்டை அருளிய திருவிளையாடல்
39. சிறுவனின் மாமனாக வந்து வழக்கு தீர்த்த திருவிளையாடல்
40. சோழனை மடுவில் ஆழ்த்திப் பாண்டியனைக் காத்த திருவிளையாடல்
41. மான் குட்டிக்குப் புலியைப் பால் ஊட்டுவித்த திருவிளையாடல்
42. கருங் குருவிக்கு அருளிய திருவிளையாடல்
43. நாரைக்கு முக்தி அருளிய திருவிளையாடல்
44. மீனாகப் பிறந்த நந்தி தேவருக்கும் மீனவப் பெண்ணாகப் பிறந்த பராசக்திக்கும் அருள் புரிய மீன்வலை வீசிய திருவிளையாடல்
45. ஈசனைத் தவிர வேறு யாரையும் பாடாத மெய்ப்பாடகி இசைவாணிக்கு வெற்றி அருளிய திருவிளையாடல்
46. போர் வீரனாய் சுந்தரப் பேரம்பு எய்து பாண்டியனுக்கு வெற்றி வழங்கிய திருவிளையாடல்
47. இமய மலையில் மீன் சின்னம் பொறித்து பாரதம் முழுவதும் ஆண்ட பேரரசன் வரகுண பாண்டியச் சக்கரவர்த்திக்கு மதுரையில் சிவலோகக் காட்சி அருளிய திருவிளையாடல்
48. மாணிக்க வாசகருக்கு ஓங்காரம் உரைத்து நந்தி தேவராக்கி ஆட்கொண்டு அருளிய திருவிளையாடல்
49. பகல் பொழுதில் நாட்டில் மண் சுமந்து புண் சுமந்த திருவிளையாடல்
50. இரவுப் பொழுதில் காட்டில் வேடுவனாக வந்து நரிகளைப் பரிகள் ஆக்கிய திருவிளையாடல்
51. காலையில் போர்ச் சேவகனாக வந்து அருளிய திருவிளையாடல்
52. பரிமேல் வந்து பேரின்பம் வழங்கிய திருவிளையாடல்
53. திருப் பாதம் காட்டிச் சிலம்பொலி கேட்பித்த திருவிளையாடல்
54. மாணிக்க வாசகரின் குடி முழுவதும் ஆண்ட திருவிளையாடல்
55. நான்மாடக் கூடலைத் திருவாலவாய் ஆக்கிய திருவிளையாடல்
56. அடியார் பணி புரிந்து இரவும் பகலும் மழையிலும் இசை பாடிய இசைக் கலைஞரான பாண பத்திரருக்குத் திருமுகமும் பலகையும் அருளி விறகுவெட்டியாய் சாதாரி பாடிய திருவிளையாடல்
57. கொல்லும் கொடூரச் சமணர்களிடமிருந்து பாண்டியரையும் மதுரையையும் காத்த திருவிளையாடல்
58. தீய வஞ்சகச் சமணர்கள் விடுத்த மாயப் பசுவை மலையாக்கிய திருவிளையாடல்
59. மூர்த்தி நாயனாருக்கு அரசு அளித்த திருவிளையாடல்
60. இடைக்காடர் என்ற சங்கப் புலவருக்கு அருளிய திருவிளையாடல்
61. தருமி என்ற அர்ச்சகருக்குப் பொற்கிழி அருளிச் செய்த திருவிளையாடல்
62. ஊமை வணிக மகனாய்ப் பிறந்த முருகன் மூலம் கபிலர் பரணர் நக்கீரர் ஆகிய சங்கப் புலவர்களின் உரை நூல்களைத் தேர்வு செய்து அருளிய திருவிளையாடல்
63. காரியார் நாரியார் பா பகுத்து அருளிய திருவிளையாடல்
64. கல்லாடர் என்ற சங்கப் புலவருக்கு அருள் செய்து நூறு கல்லாடப் பாடல்களுக்குத் திருமுடி அசைத்து ஆமோதித்து அருளித் திருக் கோவையாரின் தெய்வீகம் காட்டிய திருவிளையாடல்.
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி (திருவாசகம்)
மதுரையில் வருஷம் முழுவதும் மாதந்தோறும் சொக்க நாதர் திருவிளையாடல்கள் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டன.
சிவப்பிரியா
No comments:
Post a Comment