Tuesday, April 9, 2024

அரியும் சிவனும் ஒன்னு;

அரியும் சிவனும் ஒன்னு;
                  அறியாதவன் வாயில மண்ணு !

அமிர்தம் கடைந்தபொழுது சிவன் நஞ்சுண்டு நீலகண்டன் ஆனதும் பாற்கடலில் துயில்கொள்ளும்உருவான விஷ்ணுபுரத்தின் கதை

எதுகை,மோனை,இயைபு நயம் அமைந்த இந்தச் சொலவடை நம்மில் பலரும் கேட்டது.கடவுள் பக்தியுடன் ,பலரும் ,பாருங்கள்!கடவுள் ஒருவரே!நமக்குள் எதற்கு மதச்சண்டைகள் என்றுகூட வாசித்துக்காட்டி சைவமும் வைணவமும் ஒன்றுதான் .இந்த உண்மை அறியாதவர்கள் தேவையில்லாமல் அடித்துக்கொள்கிறார்கள் என்று வியாக்கியானம் செய்திருப்பார்கள்.

தசாவதாரம் படத்தில்  விஷ்ணுவின் சிலையுடன்கமலஹாசனைக்கட்டிக்  கடலில் எறிந்து   நெப்போலியன் சிவ அரசனாக வந்து அட்டக

அந்தச்சொலாவாடை சொல்லும் உண்மைப் பொய் ஒன்றுதான்.

அமிர்தம் கடைந்த கதை கேட்டிருப்பீர்களே!

பாற்கடலில் மேரு மலையை நிறுத்தி வாசுகி என்னும் பாம்பைச்சுற்றி,தேவர்களும் அசுரர்களும் கடைந்த பொழுது,முதலில் நஞ்சு வந்தது.அந்த நஞ்சை சிவபெருமான் தேவர்களைக்காப்பாற்றஎடுத்து உண்டார்.ஆனால் பார்வதி சிவபெருமானின் கழுத்தைப் பிடிக்க நஞ்சு நீலமாகத்தொண்டையிலேயே நின்று விட்டது அதனால் தான் அவர் திரு நீலகண்டர் .

அதாகப்பட்டது,தேவபாஷையாகிய சமஸ்கிருதமும் நீச பாஷைகளும் ஒன்று கலந்தன .அப்பொழுது காதலும் காமமும் ஆகிய நஞ்சு வெளிப்பட அந்த நஞ்சு நீக்கப்பட்டு தொண்டையில் எழுத்தொலியாக நிறுத்தப்பட்டு மேலும் கடைய அமுதமாகிய கவிதை,கலை,இவற்றுடன் ஸ்ரீ தேவி யும் அவளோடு விஷ்ணு பாற்கடலில் ஆதி சேஷனைப் படுக்கையாகக் கொண்டு படுத்திருக்கிறார்..ஆதி சேஷன் =முதல் பாம்பு.ஏடன் தோட்டத்துப் பாம்பு.

சிவனும் விஷ்ணுவும் ஒன்னுதானே!பாற்கடல் .ஆண்பால்,பெண்பால்,/இந்தப்பால் சங்கஇலக்கியத்தில்இல்லை .முருகனைக் கைப்பற்றியவுடன் தொல்காப்பிய இலக்கணத்தில் அஃறிணை/உயர்திணை வருகிறது.அல்+திணை என்ற சொல் தமிழில் வர வாய்ப்பில்லை .நல் +தாய் நற்றாய் எனக்காட்டும் தொல்காப்பியர் ,அல்

என்னும் எதிர்மறை முன்னொட்டைத் தமிழில் சேர்த்து அஃறிணை எனக்குறிப்பதை உரையாசிரியர்கள் கேள்விக்குட்படுத்துகிறார்கள் ..

தொல்காப்பியர் வடமொழிப்புலமையும்ஐந்திரமாகிய தமிழ்ப்புலமையும் குறித்து தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார் குறிப்பிடுகிறார்

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...