Tuesday, May 21, 2024

சிவன் மயானத்தில் குடிகொண்டிருப்பதாக 5 (ஐந்து) திருத்தலங்கள்...

 ஒரு நாளில் ஒரு முறையேனும் ஓம் நமசிவாய எனக் கூறுங்கள்
🌿 நமசிவாய மந்திரம்
 நாளும் நலம் தரும் மந்திரம் 🏵️

 சிவபெருமான், #அம்பலவாணனாய் தில்லையில் மட்டும் திருநடனம் புரிந்து அருள் பாலிப் பவரல்லர்.

அவர் மயானங்களிலும் சுடலைப் பொடி பூசி நடனமாடி உள்ளம் கவர்கள்வனாகக் குடியிருந்து அருள் பாலிக்கிறார் என்றும் தெரிகிறது.

வைணவர்கள் சிவனைச் "#சுடுகாட்டுச்சாமி " என்று பகடி செய்வதும் உண்டு.

அதனாலென்ன?

அந்தச் சுடுகாட்டுச் சாமியின் அடிமுடி காண முடியாமல் சரணடைந்து அவனின் அருள் பெற்றவர்கள்தான் வைணவக் கடவுள்களான #திருமாலும், #நான்முகனும் என்பது உலகறிந்த செய்தி !

சிவன் மயானத்தில் குடிகொண்டிருப்பதாக 5 (ஐந்து) திருத்தலங்கள் குறிப்பிடப்படுகின்றன !

அவை :

1.கச்சி மயானம், 
2. கடவூர் மயானம், 
3. நாவலூர் மயானம், 
4. காழி மயானம், 
5. வீழி மயானம் ஆகியவை.

ஐந்து மயானங்கள் என்று சொல்லப்படும். 
இத்தலங்களில் ....

முதலாவதாக இடம் பெறுவது கச்சி மயானம் எனும் மயானலிங்கேஸ்வரர் கோயில்.இது காஞ்சிபுரத்தில் உள்ளது

இரண்டாவதாக கடவூர் மயானம் என்பது திருக்கடை யூரில் உள்ளது. 

மூன்றாவதாக இடம் பெறும் மயானத்தலம் நாவலூர் மயானம்.
இது திருநாவலூரில் அமைந்துள்ளது.

இவை மூன்றும் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் ஆகும்.

நான்காவதாக, சீகாழியிலிருந்து திருமுல்லைவாசல் செல்லும் சாலையில் 2 கி.மீட்டர் தூரத்தில் அக்னீஸ்வரர் கோயில் உள்ளது; இதுவே காழி மயானம் என்று அறியப்படுகிறது.
 திருவீழிமிழலைக்குப் பக்கத்தில் திருமெய்ஞ்ஞானம் என்றொரு ஊருள்ளது; இதுவே வீழி மயானம் என்று அறியப்டும் 5 ஆவது மயானதலமாகும்.

மனித வாழ்வு இறுதி பெறும் போது, அந்த ஆன்மா இறைவனைச் சென்று சேரும் என்பதை நம்புகிறோம்.

மனித உடம்பு இறுதியில் சென்று சேரும் இடம் சுடலை எனப்படும் மயானம். அந்த மயானத்தில் இருந்து மக்களை ஆட்கொள்கிறார் சிவன் என்ற தத்துவத்தின் விளக்கமாக இந்த 5 (ஐந்து) மயானத் திருத்தலங்கள் விளங்குகின்ற என்று கூறுவது மிகையாகாது.

அந்தப் பரம்பொருள் இணையடி போற்றித் துதித்து மகிழ்வோம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் திருஆலவாய் மதுரை

*இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் - திருஆலவாய்( மதுரை)* *மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்).* பொதுவாக சிவ...