உலகில் மொழி வேறாக இசை வேறாக இருக்கும்.ஆனால் தமிழில் மட்டும் இயல், இசை, நாடகம், நாட்டியம், இறைவன், சமயம், மக்கள் என அனைத்தும் ஒரு மொழியுடன் இணைந்து பயணித்து இருக்கும்.
மனித இனத்திற்கு முதலில் கிடைத்தது இசைத்தமிழ். ஆதிகால மனிதரும் சில ஒலிகளை கொண்டே தங்கள் தகவல்களை பரிமாறிக்கொண்டதாகவும் ஆதாரங்கள் உள்ளது.
ஆரம்பகட்ட ஏழிசை என்பது குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி மற்றும் தாரம் என அழைக்கப்பட்டது. இந்த ஏழு இசைகளின் மூலம் என்பது விலங்குகள் மற்றும் பறவைகளின் ஒலியை அடிப்படையாக கொண்டு உருவானதாகும்.
தமிழ்மொழியில் வடமொழிக் கலப்பு ஏற்பட்டபோது இந்த ஏழு இசைகளை 'சுரம்' என்று அழைக்கலாயினர்.
இந்த எழு இசைகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இருபத்துநான்கு பண் இசைகளால் இறைவனை பாடி தொழப்பட்டதே பண்ணிசையால் பாடிய பன்னிரு திருமுறைகள் ஆகும்.இந்த பண்ணிசைகளே பிற்காலத்தில் கர்நாடக சங்கீதம் என்ற பெயரில் சில பெயர் மாற்றங்களுடன் வழக்கத்திற்கு வருகின்றன.
இதில் இசைத்தமிழில் இடம்பெற்ற இசைப்பிரிவு மற்றும் பண்டைய இசைக்கருவிகளின் பெயர்கள் இப்பதிவில் காண்போம்.
தமிழிசையை பண்ணிசை தாளஇசை என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதை அடிப்படையாகக்கொண்டு இசைக்கருவிகளும் இரு கூறாகப் பிரிக்கப்படுகின்றன. பண்களை இசைக்கத் தகுந்தவற்றைப் பண்ணிசைக் கருவிகள் என்றும் தாளத்தைப் பொருத்தமாகக் குறித்துச் சுவையுடன் ஒலிக்கும் கருவிகளைத் தாளக்கருவிகள் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும் அவை இசையெழுப்பும் முறைகளைக்கொண்டு அவற்றை நரம்புக்கருவி, துளைக்கருவி, தோற்கருவி, கஞ்சகக்கருவி என நான்காக பிரிக்கப்படுகிறது.
அவை மரம், மூங்கில், நரம்பு, கயிறு, தோல், மண்பானை, உலோகம் முதலியவற்றால் பல உருவில் செய்யப்படுகின்றன.
1)நரம்புக்கருவி
பெயர்கள்
1)யாழ்
2)வீணை
3)தம்பூரா
4)கோட்டுவாத்தியம்
5)சாரங்கி
6)பிடில்
7)வில் (இசைக்கருவி)
2)துளைக்கருவி
பெயர்கள்
I)புல்லாங்குழல்
2)முகவீணை
3)மகுடி
4)சங்கு
5)தாரை
6)நாதசுவரம்
7)கொம்பு
8)ஒத்து
9)எக்காளம்
10)கொக்கறை
11)நமரி
12)திருச்சின்னம்
13)தூம்பு
14)வயிர்
15)நெடுந்தாரை.
3)தோற்கருவி
பெயர்கள்
1)பொரும்பறை
2)சிறுபறை
3)பெருமுரசு
4)சிறுமுரசு
5)பேரிகை
6)படகம்
7)பாடகம்
8)இடக்கை
9)உடுக்கை
10)மத்தளம்
11)சல்லிகை
12)கரடிகை
13)திமிலை
14)தக்கை
15)கணப்பாறை
16)தமடூகம்
17)தண்ணுமை
18)தடாரி
19)அந்தரி
20)முழவு
21)முரசு
22)சந்திர வளையம்
23)மொந்தை
24)பாகம்
25)உபாங்கம்
26)துடி
27)நாளிகைப்பறை
28)தமுக்கு
29)உறுமி மேளம்
30)பறை
31)தம்பட்டம்
32)தமருகம்
33)நகரா
34)மண்மேளம்
35)தவண்டை
36)குடமுழவு (ஐம்முக முழவம்)
37)நிசாளம்
38)துடுமை
39)அடக்கம்
40)தகுனிச்சம்
41)தூம்பு
42)பேரிமத்தளம்
43)கண்விடு
44)துடுகை
45)உடல்
46)உருட்டி
47)சன்னை
48)அரைச்சட்டி
49)கொடுகொட்டி
50)அந்தலி
51)அமுதகுண்டலி
52)அரிப்பறை
53)ஆகுளி
54)ஆமந்தரிகை
55)ஆவஞ்சி
56)உடல் உடுக்கை
57)எல்லரி
58)ஏறங்கோள்
59)கோதை
60)கண்தூம்பு
61)கணப்பறை
62)கண்டிகை
63)கல்லல்
64)கிரிகட்டி
65)குண்டலம்
66) சடடை
67)செண்டா
68)சிறுபறை
69)தகுனித்தம்
70)தட்டை
71)தடாரி
72)பதவை
73)குளிர்
74)கிணை
75)துடி
76)பம்பை
4)கஞ்சகக்கருவி
பெயர்கள்
1)கைமணி
2)தாளம் அல்லது பாண்டில்
3)நட்டுவாங்க தாளம்
4)கஞ்ச தாளம்
5)கொண்டி
6)கடம்
7)சேமக்கலம்
8)தட்டுக்கழி
பண்ணிசையில் இடம்பெற்ற கருவிகளின் பெயர்கள்.
1)ஆகுளி
2)இடக்கை
3)இலயம்
4)உடுக்கை
5)ஏழில்
6)கத்திரிகை
7)கண்டை
8)கரதாளம்
9)கல்லலகு
10)கல்லவடம்
11)கவிழ்
12)கழல்
13)காளம்
14)கிணை
15)கிண்கிணி
16)கிளை
17)கின்னரம்
18)குடமுழா
19)குழல்
20)கையலகு
21)கொக்கரை
22)கொடுகொட்டி
23)கொட்டு
24)கொம்பு
25)சங்கு
26)சச்சரி
27)சலஞ்சலம்
28)சல்லரி
29)சிரந்தை
30)சிலம்பு
31)சின்னம்
32)தகுணிச்சம்
33)தக்கை
34)தடாரி
35)தட்டழி (தோலிசைக் கருவிகளில் ஒன்று, திருச்செந்துறைக் கோயில் கல்வெட்டு குறிக்கிறது)
36)தத்தளகம்
37)தண்டு
38)தண்ணுமை
39)தமருகம்
40)தாரை
41)தாளம்
42)துத்திரி
43)துந்துபி
44)துடி
45)தூரியம்
46)திமிலை
47)தொண்டகம்
48)நரல்
49)சுரிசங்கு
50)படகம்
51)படுதம்
52)பணிலம்
53)பம்பை
54)பல்லியம்
55)பறண்டை
56)பறை
57)பாணி
58)பாண்டில்
59)பிடவம்
60)பேரிகை
61)மத்தளம்
62)மணி
63)மருவம்
64)முரசு
65)முரவம்
66)முருகியம்
67)முருடு
68)முழவு
69)மொந்தை
70)யாழ்
71)வங்கியம்
72)வட்டணை
73)வயிர்
74)வீணை
75)வீளை
76)வெங்குரல்
காரைக்கால் அம்மை மற்றும் சேரமான் பெருமான் இருவரும் தங்கள் பதிகத்தில் மேற்குறிப்பிட்ட பல இசைக்கருவிகளை பாடி அருளிஇருப்பர். திருக்கயிலாய இசைக்குழுக்களால் இதில் பல கருவிகள் தற்போதும் புழக்கத்தில் உள்ளது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment