அட்சய என்றால் குறையாதது என்று பொருள். *சங்க நிதி, பதும நிதி* என்ற இரண்டு செல்வங்கள் எடுக்க எடுக்கக் குறையாத செல்வங்கள் அதாவது *அட்சய ஐஸ்வர்யங்கள்.* இந்தச் செல்வங்களை உடையதால் *யாவும் கடந்த ஒரே கடவுளான பரமேஸ்வரனுக்குத் தொலையாச் செல்வர் ஐஸ்வர்யேஸ்வரர்* என்று அருள் நாமங்கள்.
திருவையாறு ஐயாறப்பர் கோயில் அருகே உள்ள *திருச் சோற்றுத் துறையில் ஈசனுக்குத் தொலையாச் செல்வர்* என்று அருள் நாமம்.
செல்வக் கடவுளான பரமேஸ்வரன் இந்த *இரண்டு செல்வங்களை லட்சுமிக்கும் குபேரனுக்கும் அருளிச் செய்து அவர்களை முறையே செல்வத்தின் தெய்வமாகவும் செல்வத்தின் தேவனாகவும் ஆக்கி அருளினார்*.
. ⚜️ *அதிபதி செய்து அளகை வேந்தனை நிதிபதி செய்த நிறை* (திருமூலர்)
என திரு நின்றியூர் திரு நின்றவூர் திருமாணி குழி திருநெல்வேலி திருவானைக்கா எனப் பல தலங்களில் *பூஜை செய்த லட்சுமிக்கும் குபேரனுக்கும் பரா பரன் அட்சய செல்வம் அருளிய திரிதியை நாள் அட்சய திரிதியை* எனப்படுகிறது.
திருச் சேறை , திருப் பராய்த்துறை , திருநெல்வேலி மற்றும் பல தலங்களில் பரமேஸ்வரனுக்கு *செல்வர்* என்று திருப்பெயர்.
🔴 செல்வத்திற்கு தேவன் குபேரன். தெய்வம் லட்சுமி, கடவுள் ஐஸ்வர்யேஸ்வரராகிய பரம சிவன்.
☸️. கல்விக்கு தேவன் புதன்,
தெய்வம் சரசுவதி, கடவுள் சிவபெருமானாகிய ஞான தட்சிணா மூர்த்தி.
💥 வீரத்திற்கு தேவன் வீரபாகு,
தெய்வம் வீரபத்திரர், கடவுள் வீரட்டேஸ்வரர் ஆகிய பரம சிவன்.
🔯 காலத்திற்கு தேவன் யமன்,
தெய்வம் ருத்திரன், கடவுள் ருத்திர நாதனாகிய கால காலர் சிவபெருமான்.
⚜️ *கோன் என்று பல் கோடி உருத்திரர் போற்றும்* (சம்பந்தர்),
🕉️ *உருத்திர நாதனுக்கே* உந்தீபற ( திருவாசகம்)
என்பவை தெய்வீகத் திருமுறை வரிகள்.
🔴 அழகிற்கு தேவன் மன்மதன், தெய்வம் முருகன், கடவுள் சுந்தரேசர்.
☘️ மருந்திற்கு மருத்துவத்திற்கு தேவன் அசுவினி குமார்கள்,
தெய்வம் தன்வந்திரி.
கடவுள் மருந்தீஸ்வரர் வைதீஸ்வரராகிய பரம சிவம்.
இவ்வாறே பிறவும் அமையும்.
*வானவர் தேவர் தெய்வம் கோடிக் கணக்கில் உள்ளன*. கோடிக் கணக்கில் தோன்றி முடிகின்றன.
*தோற்றம் முடிவு இல்லாமல் எல்லாவற்றையும் கடந்து உள்ள கடவுள் ஒன்றே ஒன்றுதான். எல்லாவற்றுக்கும் கடவுள் பரம சிவம் மட்டுமே.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம் .
No comments:
Post a Comment