Saturday, May 25, 2024

கோடியக்கரை (திருக்கோடி) என்கிற கோடியக்காடு குழகேஸ்வரர் (குழகர் )

திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமுதக் கலசத்தை வாயு பகவான், தேவருலகிற்கு எடுத்துச் சென்ற போது அமுதம் சிதறிக் கீழே விழந்து சிவலிங்கமாக மாறிய இடமான,
தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான, முருகப்பெருமான் அமுத கலசத்துடன் காட்சி தரும் ஒரே தலமான நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள #கோடியக்கரை 
(திருக்கோடி) என்கிற #கோடியக்காடு
#குழகேஸ்வரர் (குழகர் )(அமுதகடேசுவரர் )
#மைத்தடங்கண்ணி (அஞ்சனாட்சி)
#அமிர்த_சுப்ரமண்ய_சுவாமி 
திருக்கோயில் வரலாறு:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் கோடியக்கரை அமிர்தகடேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மைத்தடங்கண்ணி. கோவில் இருக்கும் இடம் கோடியக்காடு என்றும் கடற்கரை பகுதி கோடியக்கரை என்றும் அழைக்கப்படுகிறது. நவகோடி சித்தர்கள் இன்றும் இத்தலத்தில் வாழ்வதாக நம்பப்படுகிறது.
கோடியக்கரை அமுதகடேசுவரர் கோயில் அல்லது திருக்கோடி குழகர் கோயில், தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரையில் அமைந்த சுந்தரரின் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 127ஆவது சிவத்தலமாகும்.

*மூலவர்:அமுதகடேஸ்வரர், குழகேஸ்வரர்
*அம்மன்:அஞ்சனாக்ஷி, மைத்தடங்கண்ணி
*தல விருட்சம்:குராமரம்
*தீர்த்தம்:அக்னி தீர்த்தம் (கடல்) , அமுதகிணறு (கோயிலுள் உள்ளது)
*புராண பெயர்:திருக்கோடி, திருக்கோடிக்குழகர், குழகர் கோயில்
*ஊர்:கோடியக்காடு
*மாவட்டம்:நாகப்பட்டினம்
*மாநிலம்:தமிழ்நாடு

வழிபட்டோர்:

இத்தல இறைவனாரை இந்திரன், சுவேதமுனிவரின் மகன் பிரமன், நாரதர், குழகமுனிவர், சித்தர்கள் முதலானோர் வழிபட்டுள்ளனர்.

பாடியவர்கள்:

திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர் 

*தேவார பதிகம் :

கடிதாய்க் கடற்காற்று வந்து எற்றக்கரைமேல் குடிதான் அயலே இருந்தால் குற்றமாமோ கொடியேன் கண்கள் கண்டன கோடிக் குழகீர் அடிகேள் உமக்கு ஆர்துணையாக இருந்தீரே.

-திருஞான சம்பந்தர்

#தல சிறப்பு:

நவக்கிரகங்கள் நேர்கோட்டில் நின்று அருள்பாலிக்கின்றனர். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 191 வது தேவாரத்தலம் ஆகும்.சேரமான் பெருமாள் நாயனாருடன் இத்தலத்திற்கு வந்த சுந்தரர், கோயில் கடலருகே தனித்திருப்பதைக் கண்டு உள்ளம் வருந்தி பாடியதாக வரலாறு சொல்லப்படுகிறது.

மிகவும் பழமையானது இந்தக்கோயில். ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன்பு இங்கு வந்தார். இவ்வூரிலிருந்து கடல் வழியே மிகக் குறுகிய தூரத்தில் இலங்கை இருக்கிறது. எனவே, இங்கிருந்து பாலம் அமைத்து இலங்கைக்கு செல்ல ஏற்பாடு செய்தான் சுக்ரீவன். ஆனால், ராமன் இங்கு பாலம் அமைக்க மறுத்துவிட்டார்.இலங்கையின் பின்பக்கமாக கோடியக்காடு அமைந்துவிட்டதால், ராமபிரான் பின்பக்கமாக சென்று ராவணனைத் தாக்குவது தனக்கு பெருமை தராது எனக் கருதி, இலங்கையின் முன்பக்கமுள்ள தனுஷ்கோடிக்கு சென்றுவிட்டார்.

இத்தலத்திற்கு வரும் வழியில் இராமர் பாதங்கள் பதிந்த இடம் உள்ளது. இலங்கைக்குச் செல்வதற்கு முன் இராமர் இத்தலம் வந்து இங்குள்ள சிவபெருமானை வணங்கினார். அவர் இங்கு வருகை தந்ததை நினைவுபடுத்தும் வகையில் ராமர் பாதம் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாலயத்தில் மேற்கு வெளிப் பிராகாரத்தில் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. இங்குள்ள சுப்பிரமணியர் விக்கிரகம் மிகவும் அழகானது. சுப்பிரமணியர் ஒரு முகமும் ஆறு கைகளும் கொண்டு காட்சி தருகிறார். தன் இடது கையில் அமுத கலசத்துடன் இவர் காட்சி தருகிறார். மற்ற கரங்களில் நீலோத்பலம், பத்மம், அபயம், வச்சிரம், வேல் முதலியவை ஏந்தியவாறு உள்ளார். இவ்வாறு அமுத கலசத்துடன் உள்ள முருகப் பெருமானை வேறு எங்கும் காண முடியாது. இவருக்கு குழகேசர் என்ற பெயரும் உண்டு. திருவாசி, மயில், முருகர் மூன்றும் ஒரே கல்லால் உருவானது. இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலம் குழகர்கோவில் என்றும் வழங்குகிறது.

#புராண வரலாறு:

திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமுதக் கலசத்தை வாயு பகவான், தேவருலகிற்கு எடுத்துச் சென்ற போது அமுதம் சிதறிக் கீழே விழ, அது சிவலிங்கமாக ஆயிற்று என்று தல வரலாறு கூறுகிறது. சேரமான் பெருமாள் நாயனாருடன் இத்தலத்திற்கு வந்த சுந்தரர், கோயில் கடலருகே தனித்திருப்பதைக் கண்டு உள்ளம் வருந்தி பாடியதாக வரலாறு சொல்லப்படுகிறது. இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்றத் தலமுமாகும். தட்சிணாயன, உத்தராயண புண்ணிய காலங்களில் தல தீர்த்தமாகிய கடலில் நீராடுவது சிறப்பு எனக் கருதுகின்றனர். இத்தலத்து முருகப்பெருமான் ஓர் முகமும், ஆறு கரங்களும், ஏனைய ஆயுதங்களுடன் ஒரு திருக்கரத்தில் அமுத கலசமும் ஏந்தியிருக்கிறார். அமுத கலசம் ஏந்தியிருப்பது தலப்புராணம் தொடர்புடையதாக இருக்கலாம். இத்தலத்து விநாயகரும் அமிர்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். கடற்கரையிலுள்ள சித்தர் கோயிலில் சித்தர்கள் பலர் இன்னும் வாழ்வதாக நம்பப்படுகிறது. நவகிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன; இத்தலம் கோளிலி தலம் எனப்படுகிறது.

இத்தலத்து முருகன், மூலவர் அமிர்தகடேசுவரரை விட சிறப்பு வாய்ந்தவர். அவருடன் வள்ளி , தெய்வானை ஆகிய இரண்டு தேவிகளும் இருக்கின்றனர். சுப்பிரமணியர் விக்கிரகம் மிகவும் அழகானது. சுப்பிரமணியர் ஒரு முகமும் ஆறு கைகளும் கொண்டு காட்சி தருகிறார். தன் இடது கையில் அமுத கலசத்துடன் இவர் காட்சி தருகிறார். மற்ற கரங்களில் நீலோத்பலம்,பத்மம், அபயம், வச்சிரம், வேல் முதலியவை ஏந்தியவாறு உள்ளார். இவ்வாறு அமுத கலசத்துடன் உள்ள முருகப் பெருமானை வேறு எங்கும் காண முடியாது. இவருக்கு குழகேசர் என்ற! பெயரும் உண்டு. திருவாசி, மயில், முருகர் மூன்றும் ஒரே கல்லால் உருவானது. இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார் இந்த முருகப்பெருமான் 'அமிர்தகரசுப்பிரமணியர்' என்றும் 'கோடிக்குழகர்' என்றும் அழைக்கப்படுகின்றார் .

தேவர்களும் அசுரர்களும் இந்த திருப்பாற்கடலை கடைந்த போது அதில் இருந்து அமிர்தம் வெளிப்பட்டது .இந்த அமிர்த கலசத்தை தேவலோகத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றார் வாயு பகவான். அப்போது அசுரர்கள் அனைவரும் சேர்ந்து சூறாவளி காற்றை உருவாக்கினார். அதனால் வாயு பகவான் அமிர்த கலசத்தை தவறவிட்டார். அப்படி தவறி விழுந்த அமிர்த கலசத்தை தலத்தில் உள்ள முருகப்பெருமான் தன் கையில் தாங்கி பின்னர் அதனை தேவர்களிடம் ஒப்படைத்ததாக தல வரலாறு சொல்கிறது. இதனால் தேவர்கள் மகிழ்ந்து கந்தனுக்கு நீலோற்பல மலரை பரிசாக அளித்தனர்.எனவே இத்தலத்தில் அருளும் முருகப்பெருமான் தன்னுடைய கரங்களில் நீலோற்ப மலரையும் அமிர்தத்தையும் தாங்கியபடி அருள் பாலிக்கிறார். அமிர்த கலசத்தில் இருந்து சிந்திய அமிர்தத்துளிகள் சிவலிங்கமாக உருவானது. அப்பெருமானே இத்தலத்தில் அருளும் அமிர்தகடேசுவரர் ஆவார்.

கோடியக்காட்டு முகத்துவாரத்தில் ராமபிரான், சேது பந்தனம் செய்ய நின்ற இடத்தில் ராமர் பாதங்கள் இருப்பதை இன்றும் தரிசிக்க முடியும். கோடியக்கரை கடலில் ஒரு முறை நீராடினால் ராமேஸ்வரம் சேதுவில் 100 முறை நீராடிய பலனை பெறலாம் என்கிறார்கள். எனவே இது ஆதி சேது என்று போற்றப்படுகிறது. ஆடி, தை மாத அமாவாசைகளில் கடலில் நீராட மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்றத் தலமுமாகும். தட்சிணாயன, உத்தராயண புண்ணிய காலங்களில் தல தீர்த்தமாகிய கடலில் நீராடுவது சிறப்பு எனக் கருதுகின்றனர். இத்தலத்து முருகப்பெருமான் ஓர் முகமும், ஆறு கரங்களும், ஏனைய ஆயுதங்களுடன் ஒரு திருக்கரத்தில் அமுத கலசமும் ஏந்தியிருக்கிறார். அமுத கலசம் ஏந்தியிருப்பது தலப்புராணம் தொடர்புடையதாக இருக்கலாம். இத்தலத்து விநாயகரும் அமிர்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். கடற்கரையிலுள்ள சித்தர் கோயிலில் சித்தர்கள் பலர் இன்னும் வாழ்வதாக நம்பப்படுகிறது. நவகிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன; இத்தலம் கோளிலி தலம் எனப்படுகிறது.

#தலபெருமை:

அமிர்த சுப்பிரமணியர் : 

திருப்பாற்கடலில் அமுதம் கடையும்போது அசுரர்கள் சூறாவளியை ஏற்படுத்தினர்.

அமுத பாத்திரத்தை ஏந்திச் சென்ற வாயுபகவான் அந்த சூறாவளியை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அமுதம் சிறிதளவு சிந்தியது. அதை முருகப்பெருமான் ஒரு கலசத்தில் ஏந்திக்கொண்டார். அந்த கலசத்துடன் அவர் காட்சி தருகிறார்.

இவரை வணங்குவோருக்கு ஆயுள்விருத்தி ஏற்படும். இங்கே சுவாமியை விட முருகனுக்கே முக்கியத்துவம்.

அருணகிரிநாதர் திருப்புகழில் இவ்வூர் சுப்பிரமணிய சுவாமியை புகழ்ந்து பாடியுள்ளார். சுந்தரரால் பாடல்பெற்ற தலம் இது.

மிகவும் பழமையான இந்தக்கோயிலில் அம்பாள் மையார்தடங்கண்ணி அழகுபொங்க காட்சி தருகிறாள்.

இக்கோயிலில் மற்றொரு வித்தியாசமான அம்சம் நவக்கிரகங்கள் நேர்கோட்டில் நின்று, சுவாமி அம்பாள் திருமணக்காட்சியைக் காண்பதாகும்.

கோடியக்காடு காட்டுப்பகுதி என்பதால், மக்களின் பாதுகாப்பிற்காக சூகாடு கிழாள்’ என்ற வனதேவதையும் இந்த கோயிலில் அருள்பாலிக்கிறாள்.

#தல வரலாறு:

மிகவும் பழமையானது இந்தக்கோயில். ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன்பு இங்கு வந்தார். இவ்வூரிலிருந்து கடல் வழியே மிகக் குறுகிய தூரத்தில் இலங்கை இருக்கிறது. எனவே, இங்கிருந்து பாலம் அமைத்து இலங்கைக்கு செல்ல ஏற்பாடு செய்தான் சுக்ரீவன். ஆனால், ராமன் இங்கு பாலம் அமைக்க மறுத்துவிட்டார்.

இலங்கையின் பின்பக்கமாக கோடியக்காடு அமைந்துவிட்டதால், ராமபிரான் பின்பக்கமாக சென்று ராவணனைத் தாக்குவது தனக்கு பெருமை தராது எனக் கருதி, இலங்கையின் முன்பக்கமுள்ள தனுஷ்கோடிக்கு சென்றுவிட்டார். அவர் இங்கு வருகை தந்ததை நினைவுபடுத்தும் வகையில் ராமர் பாதம் அமைக்கப்பட்டுள்ளது. ராமன் இலங்கை செல்லும்போது இங்குள்ள சிவபெருமானை வணங்கினார். இவருக்கு அமிர்தகடேஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு.

இத்தல இறைவனாரை இந்திரன், சுவேதமுனிவரின் மகன் பிரமன், நாரதர், குழகமுனிவர், சித்தர்கள் முதலானோர் வழிபட்டுள்ளனர்.

பொன்னியின் செல்வன் :

கல்கி தமது பொன்னியின் செல்வன் நூலில் இத்தலக்குறிப்பை பயன்படுத்தியுள்ளார். அந்நூலில் இரண்டாம் பாகத்தின் முதல் அத்தியாயத்தில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இத்தலத்திற்கு சுந்தரமூர்த்தி நாயனார் வந்து இறைவனை வணங்கியதாகவும், இத்தலத்து இறைவன் தனிமையில் இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

இவ்வாலயம் கிழக்கு நோக்கிய 7 நிலை இராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே பலிபீடமும், அதையடுத்து 16 கால் முன் மண்டபமும் உள்ளது. மண்டபம் கடந்து நேரே மூலவர் அமிர்தகடேசுவரர் சந்நிதி உள்ளது. மூலவர் கிழக்கு நோக்கு சுயம்பு லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். இறைவி மையார் தடங்கன்னி சந்நிதி முன் மண்டபத்தில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோடியக்காடு காட்டுப்பகுதி என்பதால், மக்களின் பாதுகாப்பிற்காக காடுகிழாள் என்ற் அம்பிகையின் சந்நிதியும் முன் மண்டபத்திலுள்ளது. இத்தல இறைவனை பிரம்மா, நாரதர், இந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். இறைவன் கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

ஆலய தீர்த்தம் ருத்ர தீர்த்தம் எனப்படும் இங்குள்ள கடல் ஆகும். இக்கோடிக்கரைக் கடலில் ஒருமுறை நீராடினால் சேதுவில் நூறு முறை நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடி, தை மாத அமாவாசைகளில் கடலில் நீராட மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். 

பிரார்த்தனை:

சரியாக பேச்சு வராத குழந்தைகள் இங்கு முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்த தேனை பருகினால் சிறந்த பலனை பெறுகின்றனர். சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமான அபிஷேகம் செய்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொடர்ந்து ஆறு சஷ்டி திதியில் விரதம் இருந்து இத்தல முருகனுக்கு ஆறு நிறத்தில் உள்ள மலர்களை சூட்டி ஆறு நைவேத்தியங்களை படைத்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும். இங்கு வழிபட்டால் பித்ரு தோஷம் விலகும்.

உயர்ந்தோங்கிய ராஜகோபுரம், கொடிமரமில்லை. பிராகாரத்தில் அமிர்த விநாயகர், முருகன் சந்நிதிகள் தனித்தனிக் கோயிலாய் உள்ளன. இங்குள்ள முருகப்பெருமான் சிறப்பான மூர்த்தி - ஒருமுகம், ஆறுகரங்கள், ஒருகரத்தில் அமுதகலசம், மற்றகரங்களில் நீலோற்பலம், பத்மம், அபயர், வச்சிரம், வேல் முதலியவை ஏந்திய அழகிய திருக்கோலம், மயில் வடக்கு நோக்குகிறது. இத்லம் கோளிலித் தலமாதலின் நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன. முன்மண்டபத்தில் வலப்பால் (காட்டுப் பகுதியாதலின்) காடுகிழாள்' கோயிலும், அடுத்து தெற்கு நோக்கி அம்பாள் சந்நிதியும் உள்ளன.

மகாமண்டபத்தில் குழகமுனிவர் உருவமுள்ளது. மூலவர் - அழகிய திருமேனி - சதுரபீடம். இங்கிருந்து 1 1/2 கி.மீல் ஆதிசேது எனப்படும் கோடியக்கரை உள்ளது. கடல் தீர்த்தம். தக்ஷிணாயன, உத்தராயண புண்ணிய காலங்களில் நீராடுதல் விசேஷம் - கடற்கரையிலுள்ள சித்தர்கட்டம் (சித்தர் கோயில்) சிறப்பான இடம். சித்தர்கள் பலர் இங்கு வாழ்வதாக இன்னமும் நம்புகின்றனர். (குழகர் கோயில் உள்ள இடம் கோடியக்காடு - கடல் உள்ள இடம் கோடியக்கரை என்று சொல்லப்படுகிறது) , சேரமான் பெருமாள் நாயனாருடன் வந்த சுந்தரர், கோயில் கடலருகே தனித்திருப்பதைக் கண்டு உள்ளம் வருந்தி பாடியதாக வரலாறு. தற்போது வீடுகள் உள்ளன.

நவகிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன; இத்தலம் கோளிலி தலம் எனப்படுகிறது.

திருவாவடுதுறை குருமூர்த்திகளான சித்தர் சிவப்பிரகாசர், இங்கே ஜீவசமாதி அடைந்துள்ளார். கோடியக்கரை கடலில் ஒரு முறை நீராடினால் ராமேஸ்வரம் சேதுவில் 100 முறை நீராடிய பலனைப் பெறலாம் என்கிறார்கள். எனவே இது 'ஆதிசேது' என்றும் போற்றப்படுகின்றது. மாசி மகம், ஆடி மற்றும் தை அமாவாசைகளில் இங்கு நீராடி, பித்ரு தர்ப்பணம் செய்தால் முன்னோர்கள் முக்தி நிலையை அடைவார்கள்.

*கல்வெட்டுகள்:

சுந்தரர் இக்கோயிலின் சிவபெருமானைப் போற்றிப் பாடல்கள் பாடியிருப்பதால், மூலக் கோயில் 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இருந்திருக்கலாம்,  இக்கோயில் சோழர் காலத்தில் கற்கோயிலாகப் புனரமைக்கப்பட்டது, அதற்குப் பிற்காலப் பங்களிப்புகள் பாண்டியர்களின் (ராஜகோபுர வாயிலில் எம்பால் உள்ளது - இரண்டு. மையத்தில் மீன் செண்டு ) மற்றும் விஜயநகர நாயக்கர்கள்.  

மூன்றாம் ராஜராஜனின் 14 வது  ஆட்சியாண்டு கல்வெட்டு, நந்திநல்லூரைச் சேர்ந்த ஒருவரால் நன்கொடை அளிக்கப்பட்ட வற்றாத தீபத்தை எரித்ததற்கான கொடையை பதிவு செய்கிறது. (கல்வெட்டு சேதமடைந்ததால் முழு விவரம் தெரியவில்லை).

ஜடாவர்மன் கோனேரிமைகொண்டானின் 18 வது  ஆட்சியாண்டு கல்வெட்டு அரசனின் கட்டளையை பதிவு செய்கிறது. 17 ஆம்  ஆண்டு வரை (விதி) சேவைகளுக்காக செலவழித்த பிறகு 55 பொன் தொகையை ஏற்பாடு செய்வது உபரியாக இருந்தது . மற்றொரு 63 பொன், 18 ஆம் ஆண்டு முதல் கோவிலில் சேவைகள், பழுது மற்றும் பராமரிப்பு ஆகியவற்றிற்கு மூலதனமாக சில கட்டணங்கள் பயன்படுத்தப்பட்டன  . 

ஜடவர்மன் பராக்கிரம பாண்டியரின் 5 வது ஆட்சி ஆண்டு கல்வெட்டு , "காமுதேவன் ஆண்டன் பேரரனால்" கோயிலுக்கு  150 வராஹன் பரிசாக வழங்கப்பட்ட வற்றாத விளக்கை எரித்ததற்கான கொடையை பதிவு செய்கிறது .  

மூன்றாம் இராஜேந்திர சோழரின் 22 ஆம்  ஆட்சியாண்டு கல்வெட்டு, திருக்கோடிக்குழகர் கோயில் ஆதி சண்டேஸ்வரர் அறங்காவலர்களிடம் நந்தவனம் உருவாக்க நிலம் முதலியார் சத்தநாட்டு எதிர் ஒப்பிலத்தார் என்ற சோமநாததேவர் முதலியார் என்பவருக்கு விற்கப்பட்டதை பதிவு செய்கிறது.

மற்றொரு ராஜேந்திர சோழா-III இன் கல்வெட்டில் தேவாங்கமிகள் / அறங்காவலர்கள் மற்றும் சிவபிராமணர்களின் செயல்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, நந்தவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களிடமிருந்து சேனாபதிகளுக்கு நிலம் மாற்றப்பட்டது, அதற்குப் பதிலாக வேறொரு நிலம் வாங்க முன்மொழியப்பட்டது. கோவிலுக்கு வழங்க வேண்டிய நெல் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. கல்வெட்டு சேதமடைந்து காணப்பட்டது மேலும் முழு விவரம் தெரியவில்லை.

கோடியக்காடு கல்வெட்டு, ஜடாவர்மன் திருபுவனச்  சக்கரவர்த்தி  கோனேரிமைகொண்டான் காலத்து கல்வெட்டு, திருக்கொடி குழகர், திருஅகத்தியன் பள்ளி ஆகிய தலங்களைக் குறிப்பிடுகிறது.

காப்புக்காடு  /காட்டின் நடுவில் ராமர் பாதம் உள்ளது  . தனுஸ்கோடி செல்லும் வழியில் ராமர் இக்கோயிலுக்குச் சென்று சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது. ராமர் இந்தக் கோயிலுக்கு வந்ததை ராமர் பாதம் உறுதிப்படுத்துகிறது.   

1.5 கிமீ சென்றவுடன், கடற்கரையில் உள்ள இடம் கோடியக்கரை என்றும் அழைக்கப்படும் "ஆதி சேது" என்று அழைக்கப்படுகிறது. உத்தராயணம்  மற்றும் தட்சிணாயன காலங்களில் நீராடுவது  இங்கு விசேஷம். சித்தர் கட்டிடம் / கட்டிடம் சித்தர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் இன்றும் சித்தர்கள் வாழ்ந்து வருவதாக ஐதீகம்.  

*தேவார பாடல்:

சுந்தரரின் "கடிதாய்க் கடற்காற்று (7-32)." எனத் துவங்கும் தேவாரப்பாடல் இத்தல இறைவனார் மீது பாடப்பட்ட ஒன்று. இந்த தலத்தைப் போற்றி சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் உள்ளன.

ஏழாம் திருமுறையில் இடம் பெற்றுள்ள பாடல், கொல்லிப் பண்ணில் அமைந்தது.
“ 
கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேற்
குடிதான் அயலேஇருந் தாற்குற்ற மாமோ
கொடியேன் கண்கள்கண் டனகோடிக் குழகீர்
அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே. (7.32.1)

கோடிக்குழகர் கோயிலின் அயலிலும் அதன் புறத்திலும் எங்கும் தேடியும் ஒரு குடியும் காணாத நிலையில், கோயிலுள் புகுந்து இறைவரின் திருவடியைத் தொழுது உள்ளம் வருந்தி மலர் போன்ற கண்களில் நீர் வரக் `கடிதாய்க் காற்று' எனத் தொடங்கும் பதிகம் பாடிக், கொற்றவையுடன் இறைவர் வீற்றிருக்கின்ற தன்மையையும் அப்பதிகத்துள் வைத்துப் போற்றினர்.

பன்னிரண்டாம் திருமுறையில், கழற்றறிவார் நாயனார் புராணத்தில் 89வது பாடலிலும் குறிப்பு உள்ளது.
“ 
கோடிக் குழகர் கோயில்அயல்
குடிக ளொன்றும் புறத்தெங்கும்
நாடிக் காணா துள்புக்கு
நம்பர் பாதந் தொழுதுள்ளம்
வாடிக் கடிதாய்க் கடற்காற்றென்று
எடுத்து மலர்க்கண் ணீர்வாரப்
பாடிக் காடு காள்புணர்ந்த
பரிசும் பதிகத் திடைவைத்தார்.

திருத்தொண்டர் புராணத்தின் பன்னிரண்டாம் திருமுறையில் இரண்டாம் காண்டத்திலும் சில பாடல்கள் உள்ளன.
88, 89வது பாடல்கள்
“ 
எழுந்து பணிந்து புறத்து எய்தி இருவர் பெரும் தொண்டரும் சில நாள்
செழுந்தண் பழனப் பதியதனுள் அமர்ந்து தென்பால் திரைக் கடல் நஞ்சு
அழுந்து மிடற்றார் அகத்தியான் பள்ளி இறைஞ்சி அவிர் மதியக்
கொழுந்து வளர் செம் கடைக் குழகர் கோடிக் கோயில் குறுகினார்.

கோடிக் குழகர் கோயில் அயல் குடிகள் ஒன்றும் புறத்து எங்கும்
நாடிக் காணாது உள்புக்கு நம்பர் பாதம் தொழுது உள்ளம்
வாடிக் கடிதாய்க் கடல் காற்று என்று எடுத்து மலர்க் கண்ணீர் வாரப்
பாடிக் காடு காள் புணர்ந்த பரிசும் பதிகத்து இடை வைத்தார்.

கல்கி தமது பொன்னியின் செல்வன் நூலில் இத்தலக்குறிப்பை பயன்படுத்தியுள்ளார். அந்நூலில் இரண்டாம் பாகத்தின் முதல் அத்தியாயத்தில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இத்தலத்திற்கு சுந்தரமூர்த்தி நாயனார் வந்து இறைவனை வணங்கியதாகவும், இத்தலத்து இறைவன் தனிமையில் இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

*அமைவிடம்:

இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் வேதாரண்யத்திலிருந்து கோடியக்கரை செல்லும் வழியில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோடியக்காடு என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.

வேதாரண்யத்திலிருந்து கோடிக்கரைக்குப் பேருந்துச் செல்கிறது. சாலையின் இருபுறமும் உப்பளங்கள், மரங்கள் காட்சி தருகின்றன. கோடிக்கரை காட்டுப் பகுதியில் உள்ளது. வேதாரண்யத்திலிருந்து பேருந்தில் வருவோர் குழகர் கோயில் எனக்கேட்டுக் கோயிலருகில் இறங்கவேண்டும். சிறிய ஊர், (இதற்கு 1 1/2 கி.மீல் கோடிக்கரை தீர்த்தமும் (கடல்) ருத்தரகோடி தீர்த்தமும் உள்ளன.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...