Friday, May 17, 2024

பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ அரங்கநாதன் பெருமாள் கோயில்!

இரண்டாம் குலோத்துங்கன் கட்டிய ஸ்ரீ அரங்கநாதன் பெருமாள் கோயில்!
இரண்டாம் குலோத்துங்கன் கட்டிய ஸ்ரீ அரங்கநாதன் பெருமாள் கோயில்!
மனைவிக்காக இரண்டாம் குலோத்துங்கன் கட்டிய திருவதிகை ஸ்ரீ அரங்கநாதன் பெருமாள் கோயில் குறித்து இங்கே காண்போம்.

மனைவிக்காக இரண்டாம் குலோத்துங்கன் கட்டிய திருவதிகை ஸ்ரீ அரங்கநாதன் பெர
பண்ருட்டி பேருந்து நிலையத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருவதிகை ஸ்ரீ அரங்கநாதன் பெருமாள் கோயில்.

குருப்புக்கோட்டை மன்னன் என்ற பட்டம் பெற்ற இரண்டாம் குலோத்துங்கன், திருவரங்கத்தில் பெண் எடுக்கச் சென்றபோது இருவேளையும் திருவரங்கனைத் தரிசித்த பெண்ணுக்குத் திருமணத்திற்குப் பின்னால் அப்பெருமானைத் தரிசிப்பது எப்படி என அப்பெண் வீட்டார் கேட்டுள்ளனர்.
அதற்குக் குலோத்துங்கனும் ஸ்ரீரங்கரை போன்ற கோயிலை அதிகாபுரியில் நிறுவியபின் திருமணம் செய்துகொள்வதாகவும், அவ்வாக்கின் படியே காவிரி கொள்ளிடம் இடையே அரங்கன் வீற்றிருப்பது போலவே திருவதிகை கருடன் நதி தென்பெண்ணை ஆறு நடுவில் அதிகாபுரியில் கோயிலை அமைத்ததாகத் தல வரலாறு கூறுகிறது.

அரங்கன் கோயில் தோன்றுவதற்கு முன்பு இவ்விடத்தில் அய்யனார் சிலை இருந்ததை நினைவு கூறும் வகையில் மூலவர் சன்னதி மகா மண்டபத்தின் முகப்பில் அய்யனார் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

சுமார் 1300 ஆண்டுகளுக்கு முந்தைய புராதன கோயில் இது. மூலவர் ஸ்ரீரங்கம் வார்த்தைகளால் எட்ட முடியாது பாம்பணையில் பள்ளி கொண்டவராய் ஆனந்த சயன விமானத்தில் கிழக்கே திருமுக மண்டலத்துடன் காட்சி தருகிறார்.

தாயார் அரங்கநாயகி, அமிர்தவல்லி, அதிகவல்லி எனப் பல திருநாமங்களுடன் தனிக் கோயிலில் எழுந்தருளி உள்ளார். ஆண்டாள் சன்னதியில் ஆண்டாள் பல்லவர் கால படைப்புகளும், பழமையான ராமர் சன்னதியில் உள்ள சிற்பங்கள் உயிரோவியமாய் காட்சி அளிக்கின்றன.

சக்கரத்தாழ்வார் சன்னதியில் சக்கரத்தாழ்வார் ஒருபுறம் சுதர்சன ஆழ்வாரும், மறுபுறம் யோக நரசிம்மரும் அருள்பாலிக்கின்றனர். எதிரில் திருக்குளமும் அனுமார் சன்னதியும் உள்ளது.


மாதாந்திர திருக்கார்த்திகையில் சக்கரத்தாழ்வாருக்கு சுதர்சன ஹோமம் சிறப்பாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் ரேவதி நட்சத்திரத்தின் போது மூலவருக்கு அவதார நட்சத்திரம் திருமஞ்சனம் நடைபெறுகிறது. 

படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே தாயுமான சுவாமிகள் குருபூஜை..

திரு தாயுமான சுவாமிகள் குருபூஜை விழா திரு தாயுமான சுவாமிகள் குருபூஜை விழா தை மாதம் விசாகம் நட்சத்திரம் இன்று 23-01-2025 தாயுமானவ...