⚜️ *பொன் பொருள் கொடுக்கும், செல்வம் சேர்க்கும் திருக் கோயில்கள்* .
யாருக்கு எப்போது எது வேண்டுமோ அதைத் தன்னலம் இல்லாத அன்புடன் வழிபடும் அடியார்களுக்கு அருளிச் செய்யும் அற்புத வள்ளல் சிவபெருமான்.
*அருள் வள்ளல் நாயகன்* என்பது சிவ நாமங்களில் ஒன்று.
☸️ *வேண்டுவார் வேண்டுவதே ஈவான்* (அப்பர்)
🕉️ *வேண்டத் தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ* (திருவாசகம்)
🔯 *கொடுக்ககிலா வரம் கொடுக்கும் கோளிலி எம்பெருமானே* (சம்பந்தர்)
🔴 *பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை* (சுந்தரர்)
🟡 *பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன்* (சம்பந்தர்)
என வேண்டியது எல்லாம் கொடுக்கும் வள்ளல்,
தேவை அறிந்து தரும் வள்ளல்,
யாராலும் கொடுக்க முடியாத வரங்களை யெல்லாம் அன்புடன் வழிபோடுவோருக்குக் கேட்காமலேயே கொடுக்கும் வள்ளல் பரம சிவன் பொன் பொருள் செல்வம் கொடுத்த தலங்கள் பல. *இத் தலங்களில் ஆண் பெண் தெய்வ வழிபாட்டில் முழுகாமல் சிவ பரம்பொருளை மட்டுமே வழிபடுவோருக்கு வறுமை நீங்கி செல்வம் சேரும்* .
1. கயிலை மலை *கயிலை நாதர்*. இராவணனுக்குத் தேரும் வாளும் மூன்று கோடி நாள் ஆயுளும் அருளியவர். 89967 ஆண்டுகள் இரண்டரை மாதம் ஆயுள் .
2. காசி *விஸ்வ நாதர் கோயில்* . பூஜை செய்த பராசக்திக்கு அட்சப் பாத்திரம் அருளி அன்ன பூரணி ஆக்கியவர்.
அன்ன பூரணிக்கு சிவ தரிசனம் கிடைக்க வில்லை.
தவமும் பூஜையும் செய்தாலும் காண்பதற்கு அரிய மறைத்தல் தொழில் புரியும் மகேசனை அன்ன பூரணி முன் நிற்க வைக்கும் படம் நாஸ்திகக் கற்பனை.
3. திருச்செந்தூர் *சிந்துர நாதர் கோயில்*.
பூஜை செய்த முருகனுக்கு ஞான வேலோடு பதினோரு ருத்திரர்களைப் பதினோரு ஆயுதங்களாக்கிப் பன்னிரண்டு ஆயுதங்களையும் வெற்றி வரமும் அருளிய பரமேஸ்வரன் ஜெயந்தி நாதர், முருக நாதர்.
அருள் பொழியும் ஆண்டவர் சிவ பரம்பொருள் கோயிலே அருள் பெறும் பக்தர் முருகன் கோயிலாகப் பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
4. திருச் சோற்றுத் துறை *தொலையாச் செல்வர் கோயில்*. அந்தணத் தம்பதியருக்கு அட்சயப் பாத்திரம் அருளி ஊர் மக்களின் பஞ்சம் போக்கிய அட்சய நாதர் .
5. மதுரை *சொக்க நாதர் கோயில்*. முருகன் அவதாரமான உக்கிர குமார பாண்டியனுக்குப் பகையை வெல்ல *வேல் வளை செண்டு அருளிய* சுந்தரேசர் *தெய்வத் தமிழ்ச் சங்கப் புலவர்களுக்கு சங்கப் பலகை* அருளினார்.
கிரீடம் களவு போன *பாண்டியனுக்கு நவரத்தினங்களை* அருள் புரிந்தார் .
*அடியார்க்கு நல்லார் என்ற அடியவருக்கு *உலவாக் கோட்டை* (குறையாத நெல் மலை) அருளிச் செய்தார் .
*வேதியர்களுக்கு உலவாக் கிழி* (குறையாத பொன் முடிப்பு) அருளினார்.
பாண பத்திரனுக்குத் *திருமுகப் பாசுரம் அருளிப்* பொன் பொருள் பெறச் செய்தார்.
கொட்டும் மழையிலும் நிறுத்தாமல் நீரில் நின்று யாழ் இசைத்துப் பாடிய போது பலகை அருளினார்.
தருமி அர்ச்சகருக்குக் கவிதை எழுதிக் கொடுத்துப் பொன் முடிப்பு பெறச் செய்தார்.
6. திருச்சேறை *சார பரமேஸ்வரர் கோயில்*. பத்மாவதியை மணந்து கொள்வதற்காகக் குபேரனிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் வருந்திய சீனிவாசப் பெருமாள் திருச் சேறைக்கு வந்து வழிபட்ட போது செந்நெறி யப்பர் அவருக்குப் பெருஞ் செல்வத்தை அருளிச் செய்தார். இதனால் செந்நெறி யப்பருக்குச் செல்வர் என்று அருள் நாமம்.
தற்காலத்தில் சார பரமேஸ்வரர் என்று பெயர்.
7. சீர்காழி *பிரம்ம புரீஸ்வரர் கோயில்*. *தோடுடைய செவியன் விடையேறி* ,
*ஒருமை பெண்மை உடையன்* சடையன் விடையூரும் இவன்,
*தாயு நீயே தந்தை நீயே* ,
*பொற்கிண்ணத்து அடிசில்* (சம்பந்தர்)
*ஆனாத் திரளை* அவன் வயின் அருள (பட்டினத்து அடிகள்)
*யாவர்க்கும் தந்தை தாய் எனும் இவர்* ,
*எடுத்து ஆண்ட* பெருந்தகை,
*மன்றுளார் அளித்த ஞான வட்டில் வண் கையன்* (சேக்கிழார்)
என பிரம்மபுரீசர் சம்பந்தருக்கு ஒரு காதில் தோடும் ஒரு காதில் குழையும் கொண்ட இருபால் அலிப்பெருமானய் நந்தி மேல் காட்சி தந்து மூன்று வயது சம்பந்தரைத் *தன் திருமடியில் எடுத்து அமர்த்தித் தங்கக் கிண்ணத்தில் பசும்பால் சாதம்* ஊட்டி அருளினார். ( ஆன் ஆத் திரள் - பசும்பால் சாதம், ஈசன் மண்ணுலக வாசியான பார்வதியோடு வந்தார், பிள்ளை இல்லாத பால் சுரக்க முடியாத பார்வதி தன் பால் ஊட்டினாள் என்பது திருமுறை உண்மைக்கு மாறுபட்ட பிற்கால நாடகக் கற்பனை.)
8. திருக்கோலக்கா *சப்த புரீஸ்வரர் கோயில்*.
பிஞ்சுக் கரங்களால் தாளம் இட்டுப் பாடிய போது சப்த புரீசுவரர் திருவருளால் நமச்சிவாய நாமம் பொறிக்கப்பட்டுப் *பாடலுக்கு ஏற்றவாறு ஒலித்துக் கொண்டு வந்த தங்கத் தாளம்* சம்பந்தர் கரத்தில் வந்து சேர்ந்தது.
🔔 *ஒலி கொள் சம்பந்தன்*
🔔 *சந்தம் கொள் சம்பந்தன்* (தேவாரம்)
என்று *ஒலியை , இசையைக் கைக் கொண்ட அற்புதத்தை* தெய்வ மழலை தெரிவிக்கிறார்.
சம்பந்தர் வரி காட்டும் இந்த அருமையை அப்படியே
🟠 அஞ்செழுத்தும் எழுதிய நல் *செம்பொன் தாளம் ஐயர் அவர் திருவருளால் எடுத்த பாடலுக்கு இசைந்த அளவால் ஒத்த* வையம் எலாம் உய்ய வரு *மறைச் சிறுவர் கைத் தலத்து வந்தது அன்றே* (பெரிய புராணம்)
என்று சத்தியப் புலவர் சேக்கிழார் பெருமான் பாடுகிறார்.
எனவே ஈசன் தாளம் கொடுத்தார் அம்பாள் ஓசை கொடுத்தாள் என்பது எல்லாம் பிற்காலத்திய வடிகட்டிய கற்பனையே .
தலமே சப்த புரி அதாவது *ஒலியூர்* என்று தெரியாமல் , ஓசை ஒலிப் பெருமான் நடராஜர் என்று உணராமல் கட்டப்படும் சிவ விரோதக் கட்டுக் கதையே.
✡️ *ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே* *
🔔 *ஓவாத சத்தத்து ஒலியே* (அப்பர்)
என நிறுத்தாமல் சதா சர்வ காலமும் ஒலிக்கும் இயங்கும் ஓசையொலிப் பெருமான் இயக்க நாதர் நடராஜர் .
*சிவமே இறைவி, சைவத்தில் பெண் வழிபாடு இல்லை* என்று தெரியாமல்
செத்துப் பிறக்கும் அம்பாளை வைத்துக்கொண்டு கூறப்படும் கட்டுக் கதைக்கும் சம்பந்தரோடு சேர்த்துக் கூறப்படும் கற்பனைக்கும் அளவில்லை.
9. திருநெல்வாயில் அரத்துறை *அரத்துறை நாதர் கோயில்* . பிஞ்சுக் கால்களால் நடந்து வந்த சம்பந்தருக்கு அரத்துறை நாதர் முத்துப் பல்லக்கு மற்றும் சின்னம் ஊது குழல் அருளினார்.
10. பட்டீஸ்வரம் *தேனுபுரீஸ்வரர் கோயில்*.
வெய்யிலில் வந்த சம்பந்தருக்குத் தேனுபுரீஸ்வரர் முத்துப் பந்தல் அருளினார்.
இவ்வாறு வேண்டாமல் கேட்காமல் *தக்க சமயத்தில் தேவை அறிந்து தானே எல்லாவற்றையும் அருளும்* *பரமன் கருணையைப்*
⚜️. *பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன்*
என்று தெய்வக் குழந்தை போற்றுகிறார்.
11. திருவீழிமிழலை *வீழி நாதர் கோயில்*. அப்பருக்கும் சம்பந்தருக்கும் வீழி நாதர் நாள்தோறும் பொற்காசு அருளினார்.
சுந்தரருக்கு ஆபரணங்களை அருள் புரிந்தார் .
12. அரிசில் கரைப் புத்தூர் (அழகார் புத்தூர்) *படிக்காசுப் பரமர் கோயில்*. புகழ்த்துணை நாயனாருக்குப் படிக்காசுப் பரமர் தினமும் ஒரு தங்கக் காசு அருளினார்.
13. திருவாவடுதுறை *கோமுக்தீஸ்வரர் கோயில்*.
சம்பந்தருக்கு மாசிலா மணீசர் எடுக்க எடுக்கக் குறையாத ஆயிரம் பொன் முடிப்பு அருளினார்.
14. திரு ஆமாத்தூர் *அழகிய ஐயர்* (அபி ராமேஸ்வரர்) *கோயில்* . வறுமையிலும் விடாமல் தளரும் உடலோடு பூஜை செய்த சிவாச்சாரியாரைக் கண்ட சம்பந்தர் அவருக்காகப் பாடித் தொழுத போது ஆமாத்தூர் ஐயர் பெருஞ்செல்வம் அருளினார்.
15. திரு நாகைக் காரோணம் *காரோணேஸ்வர சுந்தர விடங்கத் திருக் கோயில்* .
நாகைப் பெருமான் சுந்தரருக்கு பொன் முத்து மாணிக்கம் வைரம் பட்டு மாலை சுரிகை உணவு உடை ஆகிய யாவும் அருளினார்.
16. விருத்தாச்சலம் *விருத்த கிரீசுவரர் கோயில்*.
சுந்தரருக்கு ஆயிரக்கணக்கான பொன்னை அருளி அதை மணி முத்தாற்றில் இட்டுத் திருவாரூர் திருக்குளத்தில் பெறுமாறும் பேரருள் புரிந்தார்.
17. திருக் கடையூர் *கால சம்ஹார வீரட்டேஸ்வரர் கோயில்*.
அமுத கடேஸ்வரர் குங்குலியக் கலய நாயனாரின் இல்லம் முழுவதும் செல்வத்தால் பொன் பொருளால் நிரப்பினார்.
18. திரு வல்லம் *வல்ல நாதர் கோயில்*. லட்சுமியிடம் உள்ள செல்வத்தை விட அதிகமான செல்வத்தை வழங்கியருளி ஊர் மக்களை உய்யச் செய்ததை தெய்வ மழலை போற்றுகிறார்.
19. திருவஞ்சைக்களம் *அஞ்சைக் களத்து அப்பர் கோயில்*. சுந்தரர் மீண்டும் சிவ லோகம் செல்ல அஞ்சையப்பர் வெள்ளை யானையை அருளினார். சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பறக்கும் தெய்வீகக் குதிரையை அருளினார். முடி சூட்டிக் கொண்ட நாளிலிருந்து பறக்கும் குதிரை அவரிடம் இருந்தும் அவர் எங்கும் பறந்து செல்லவில்லை. *திருக்கோயில்களுக்கு சுந்தரருடன் நடந்துதான் சென்றார்* .
20 . திருக்கோளிலி (திருக் குவளை) அருகே குண்டையூர் கிழாருக்கு குண்டையூர் ஊர் முழுவதும் நெல் மலைகளை *நெல்லை யப்பர்* அருளிச் செய்தார்.
21. பல தலங்களில் பூஜை செய்த லட்சுமிக்கும் குபேரனுக்கும் *ஐஸ்வர்யேஸ்வரர்* சங்க நிதி பதும நிதிகளை அருளி செல்வத்திற்கு அதிபதிகள் ஆக்கினார்.
*விஷ்ணுவிடம் உள்ள சங்கு சக்கரம் கதாயுதம் அனைத்தும் அவர் சிவ பூஜை செய்து பெற்றவையே* . துர்க்கையிடம் உள்ள சூலம், பரசு ராமரிடம் உள்ள மழுவாயுதம் மற்றும் பிறரிடம் உள்ள அனைத்தும் சிவபெருமான் அருளியவையே . இவ்வாறு இன்னும் பலப்பல கோயில்கள் , பலப்பல அடியார்கள்.
சிவப்பிரியா
No comments:
Post a Comment