Thursday, May 9, 2024

அட்சய திருதியை நாளன்று என்ன செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

அட்சய திருதியை நாளன்று என்ன செய்தால் என்ன பலன் கிடைக்கும்?_


அட்சய திருதியை அன்று குழந்தைகளுக்கு எழுத கற்றுக் கொடுத்தால் அவர்களது கல்விச் செல்வம் பெருகும்.

அட்சய திருதியை அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் பாவம் போகும். பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் முக்கூடல் எனப்படும் மூன்று புண்ணிய நதிகள் சங்கமிக்கும் இடம் உள்ளது. அட்சய திருதியை அன்று அங்கு சென்று நீராடினால் நல்ல பலன் கிடைக்கும்.

அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்வதும் சிறப்பான பலனைத் தரும். அன்னை பராசக்தி இந்த நாளில் ஈசனுக்கு அன்னம் அளித்தாள் என்பர். இந்த நாளில் அன்னதானம் செய்தால் இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிடைக்கும். மேலும் கிருஷ்ணர் வழிபாட்டை மேற்கொண்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும்.

ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு செய்யும் தான தர்ம உதவிகள், பல பிறவிகளுக்கு புண்ணிய பலன் தரும்.

புத்தாடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும். கற்பூரம் தானம் செய்தால் சக்ரவர்த்தியாகும் பிறப்பு கிடைக்கும்.

தாமரை, மல்லிகைப்பூ தானம் செய்தால் மன்னர் குலத்தில் பிறப்பு கிடைக்கும். தாழம்பூ தானம் செய்தால் மகாவிஷ்ணுவின் அருள் கிடைக்கும்.
பாக்கு, வாசனைத் திரவியங்கள், பழங்கள் தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.

தானியங்கள் தானம் செய்தால் அகால மரணத்தில் இருந்து தப்பிக்கலாம்.

மோர், பானகம், குடிநீர் ஆகியவற்றை தானம் செய்தால் முற்பிறவி பாவம் தீர்ந்து வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

தன் சக்திக்கு ஏற்ப தானம் செய்தால் நரகத்தின் கொடுமைக்கு ஆளாகாமல் கைலாயம் செல்லலாம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும்.

வெள்ளி வாங்கினால் சரும நோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை ஆகியவை தீரும்.

தங்கம் வாங்கினால் தீராத கடன்களையும், ஏழ்மையையும் மிக குறுகிய காலத்தில் தீர்க்கும்.

தயிர் சாதம் ஏழைகளுக்குத் தருவது 11 தலைமுறைக்கு குறைவில்லா அன்னம் கிடைக்க வழிவகுக்கும்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...