Thursday, July 11, 2024

பூரி ஜெகன்நாதர் ஆலயம் ரதம் விழா...

புரி ரத யாத்திரை பற்றிய பதிவுகள் :*
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் புரி கடற்கரை நகரத்தில் அமைந்துள்ளது புரி ஜெகன்நாதர் ஆலயம் (Puri Jagannath Temple).

இந்த கோயிலின் ஜெகன்நாதர், பலபத்திரர், சுபத்திரை ஆகியோர் ஒவ்வொரு ஆண்டும், தனித்தனியாக மூன்று ரதங்களில், புரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிப்பர். 

இந்த ரத யாத்திரை திருவிழா ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இதுகுறித்து நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
ஒடிசா மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த பூரி ஜெகன்நாதர் ஆலயம் விளங்குகிறது. அதோடு இங்கு நடைபெறும் ரத யாத்திரை உலகப் புகழ் பெற்றது.

*ஒன்பது நாள் திருவிழா :* 

ரத யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் ஆசாட மாதம் எனும் (ஆடி மாதம்) இரண்டாம் நாள் துவங்கி தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும். இந்த தேரோட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் புதிய தேர்கள் செய்யப்படுகிறது.

*வரலாறு சிறப்பு :*
இந்த கோவிலில் நடைபெறும் தேர்த் திருவிழாவின் போது பூரி மன்னரின் பரம்பரைச் சேர்ந்தவர்கள், தங்கத்தினால் ஆன துடைப்பத்தைக் கொண்டு தேர் வலம் வரும் சுறுப் பாதையை தெருவையும் சுத்தம் செய்வார்களாம். 

இந்த தேர்‌ திருவிழாவிற்காக ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக தேர்தல் செய்யப்படுகிறது. இதன் காரணம் இதுவரை புலப்படவே இல்லை.

இத்தனை மர்மங்கள் இந்த ஆலயம், தமிழ் மன்னனான சோழ மன்னரால் கட்டப்பட்டது என்பது கூடுதல் ஆச்சரியம்.

*ஜெகன்நாத கோவில் ரத யாத்திரை தேதி ;*

பூரி ராத யாத்திரை 2024 ஜூன் 29 ஆம் தேதி தொடங்கி ஜூலை 7ஆம் தேதி முடிவடைகிறது.

ஒடிசா, கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் அமாவாசைக்கு மறுநாள் அவர்களின் மாதம் தொடங்கும் அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் ஆஷாட மாதம் எனும் ஆடி மாதம் தொடங்கியுள்ளது.

*வரலாறு மற்றும் முக்கியத்துவம்*

பிரபஞ்சத்தின் அதிபதியான ஜெகன்நாதர், கோவிலுக்கு வர முடியாத பக்தர்களுக்காக கோவிலை விட்டு தானே வெளியே வந்து அருள் வழங்குவதாக நம்பப்படுகிறது.

மற்றொரு புராண நம்பிக்கையின்படி அரசன் இந்திரத்யும்னனின் முன்னாள் ராணியான குண்டிச்சா ராணிக்கு வாக்களித்தபடி, ஒவ்வொரு ஆண்டும் ஜெகன்நாதர் வருகை தருவதாக கூறப்படுகிறது.

அதனால் ஜெகன்நாதர் கோவிலிலிருந்து கிட்டத்தட்ட 3 கிமீ தொலைவில் உள்ள குண்டிச்சா கோவிலுக்கு செல்கின்றனர். பிறகு, எட்டு நாட்கள் அங்கேயே தங்குவார்கள்.

இந்த ராத யாத்திரை திருவிழாவின் 4 ம் நாளில் ஜெகன்நாதரின் மனைவியான லட்சுமி தேவி இறைவனை தேடி குண்டிச்சா கோயிலுக்கு வருவதாக நம்பப்படுகிறது.

எட்டு நாட்கள் குண்டிச்சா கோயிலில் தங்கிய பிறகு, தெய்வங்கள் ஒன்பதாம் நாளில் தங்கள் வீடான ஜகன்நாதர் கோயிலுக்கு திரும்புகின்றன, இது பஹுதா யாத்ரா என்று அழைக்கப்படுகிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

1008 ஆயிரத்து எட்டு லிங்கங்களின் பட்டியல்...

ஆயிரத்து எட்டு லிங்கங்களை கேட்டிருக்கோமே தவிர, அந்த 1,008 லிங்கங்கள் என்னென்ன என்று பலருக்கும் தெரியாது.  இதோ அந்த 1008 லிங்கங்களின் பட்டியல...