Friday, July 12, 2024

ஆனி உத்திரம் நடராஜர் அபிஷேகம்.

ஆனி உத்திரம் நடராஜர் அபிஷேகம். 
உலகெங்கிலும் வாழும் மக்களுக்கெல்லாம் பரம்பொருளாக இருந்து இந்த உலகையும், மக்களையும் காத்தருள்கின்ற சிவனுக்கு உகந்த நாட்களில் ஒன்றாக ஆனி உத்திரம் அமையப்பெற்ற ஒரு நன்னாள் ஆகும்.
சிவபெருமானின் 64 மூர்த்தி வடிவங்களில் நடராஜர் முக்கியமானவா் ஆவார். ஆடலரசரான நடராஜருக்கு சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை, மாசி வளர்பிறை சதுர்த்தசி என ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த 6 நாட்களில் மார்கழி திருவாதிரையும், ஆனி உத்திரமும் சிறப்பு வாய்ந்தவை.
இந்த இரண்டு நாட்களில் மட்டும் தான், சிதம்பரம் நடராஜருக்கு அதிகாலை நேரத்தில் அபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற நாட்களில் மாலை நேரத்தில்தான் அபிஷேகம் நடைபெறும்.

சிவபெருமானின் பஞ்ச சபைகளில் பொற்சபையாகவும், பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் ஆலயம்.
நடராஜப் பெருமான் ஆடும் ஆனந்தத் தாண்டவம் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்து தொழில்களையும் உணர்த்துகிறது. 

வலது கையில் உள்ள உடுக்கை படைத்தலையும், உயர்த்திய வலது கரம் காத்தலையும், இடது கரம் அழித்தலையும், ஊன்றிய பாதம் மறைத்தலையும், மற்றொரு தூக்கிய நிலையில் உள்ள கால் அருளலையும் குறிப்பதாகக் கூறப்படுகிறது.

இதனடிப்படையில் நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள எய்தனூர் கிராமத்தில் ஆதிபுராதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ நடராஜ ருக்கு அபிஷேகம் நடைபெற்றது. 

ஓம் நமசிவாய படித்து பகிர்ந்தது இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

1008 ஆயிரத்து எட்டு லிங்கங்களின் பட்டியல்...

ஆயிரத்து எட்டு லிங்கங்களை கேட்டிருக்கோமே தவிர, அந்த 1,008 லிங்கங்கள் என்னென்ன என்று பலருக்கும் தெரியாது.  இதோ அந்த 1008 லிங்கங்களின் பட்டியல...