Saturday, July 20, 2024

அருளமிகு பிரகதீசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர்

அருளமிகு பிரகதீசுவரர் திருக்கோயில், 
தஞ்சாவூர் - 613007 
*மூலவர்:
பெருவுடையார், பிரகதீசுவரர்
*உற்சவர்:
தியாகராசர்

*தாயார்:
பெரியநாயகி, பிரகன்நாயகி
*உற்சவர் தாயார்:
கமலாம்பிகை

*தல விருட்சம்:
வன்னி மரம்

*தீர்த்தம்:
சிவகங்கை தீர்த்தம்

*திருவிழாக்கள்:
மகா சிவராத்திரி, சித்திரை திருவிழா

*ஒன்பதாம் திருமுறையில்
இடம்பெற்றுள்ள, இத்தலத்தை போற்றும் திருவிசைப்பா
பாடியவர்: கருவூரார்.      இக்கோயிலில் கருவூர் சித்தருக்கென தனி சந்நிதி அமைந்துள்ளது. 

*சோழப் பேரரசர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார்.  
*1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி  1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன. 

*கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான ஒரு பிரம்மாண்ட கற்கோயிலை இராசராசன் சுமார் ஏழு ஆண்டுகளில் கட்டி முடித்துள்ளார்.          

*பிற்காலத்தில் பாண்டியர்களால் 13 ஆம் நூற்றாண்டில் அம்மன் சன்னிதியும், விசயநகர அரசர்களால் முருகர் சன்னிதியும் கட்டப்பட்டு, மராத்திய அரசர்களால் விநாயகர் சன்னிதி புதுப்பிக்கப்பட்டது. தஞ்சை நாயக்கர்களாலும் இக்கோயில் மேம்படுத்தப்பட்டுள்ளது.         
   
*பெருவுடையார் என்று அழைக்கப்படும் மூலவர்  உலகிலேயே பெரிய லிங்க வடிவில் உள்ளார். 
6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்டது இந்த லிங்கம் . 

*இந்த மூலவரை இராசராச சோழன் இராசராசீச்சரமுடையார் என்ற பெயரில் வழிபட்டுள்ளார். 

*இக்கோவிலின் அம்மன் பெரியநாயகி தெற்கு நோக்கிய, தனி சந்நிதியில் ஆறு அடி உயர திருவுருவாய் அருள்புரிகிறார்.                      

*ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாகவும்,  இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது. 

*வராகி அம்மன் சந்நிதியில் அருள்புரியும் ஸ்ரீவராகி திருவுருவிற்கு இரண்டு கரங்கள் மட்டுமே இருப்பது வியக்கத்தக்கது.  

*"நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க...." என்று ராஜராஜசோழன்
தன்னுடைய பங்களிப்பு மட்டுமன்றி மற்ற எல்லோரின் பங்களிப்பையும் இக்கோயில் கல்வெட்டுக்களில் ஆவணப் படுத்தியதே பாராட்டத்தக்க செயலாகும். 

*கோயிலில் அன்றாட கருமங்களை ஒழுங்காகச் செயல்படுத்துவதற்குப், பூசகர்களும், சிற்பிகளும் தேவார ஓதுவார்களும், இசைவாணர்களும், நடனமாதர்களும், மேலும் இன்னோரன்ன பணியாட்களும் தேவைகளுக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. 50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிலிருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் பகர்கின்றன.   

*இக்கோயில் 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.                  

*மக்களின் நம்பிக்கைகள் மற்றும் அவை குறித்த உண்மை தகவல்கள்:

1)தஞ்சை பெரிய கோயிலின் கோபுர நிழனானது தரையில் விழாது என்றொரு நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. ஆனால் இக்கோயிலின் விமானத்தின் நிழல் தரையில் விழுகின்ற படியே அமைக்கப்பட்டிருக்கிறது.

2)விமானத்தின் கோபுரம் 80 டன் எடைகொண்ட ஒரே கல்லால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது தவறான தகவலாகும். ஒரே கல்லால் கட்டப்படாமல், தனித்தனி கற்களை ஆரஞ்சு பழத்தின் சுளைபோல் இணைத்து விமானக் கோபுரத்தைக் கட்டியுள்ளனர்.  

*மேலும் பல்லாயிரமாண்டுகள் வாழ்க பெருவுடையார் திருக்கோயில்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. ஹ

No comments:

Post a Comment

Followers

பூரி ஜெகன்னாதர் கோயிலின் எட்டு அற்புதங்கள்.

பூரி ஜெகன்னாதர் கோயிலின் எட்டு அற்புதங்கள் ...* 1.கோயிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும். 2.கோயில் இருக்கு...