தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான #திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பழமையான
#பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள
#மதம்_பிடித்த_யானையை_அடக்கிய_கோழி!
சோழ மன்னன் கரிகால-பெருவளத்தான் தன் பட்டத்து யானை மேல் ஏறி உறையூரை வலம்வந்து கொண்டிருந்தபோது திடீரென யானைக்கு மதம் பிடித்து எல்லோரையும் துன்புறுத்த ஆரம்பித்தது. யானையை அடக்க முடியாமல் மன்னனின் படை வீரர்கள் கலங்கினர். சிவபெருமான் மீது தீராத பக்தியுள்ள மன்னன் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்தான்.
சிவபெருமானும் கருணை கூர்ந்து உறையூர் தெருவிலுள்ள ஒரு கோழியை தன் கடைக்கண்ணால் நோக்க, அந்தக் கோழியும் அசுர பலம் பெற்று பறந்து சென்று யானையின் மத்தகத்தின் மீது அமர்ந்து அதை குத்தித் தாக்கியது. கோழியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் யானை மிரண்டு ஓடி ஒரு வில்வ மரத்தடியின் கீழ் நின்றது கோழியும் அங்கே வந்தமர்ந்தது.
கோழியின் வீரச் செயலைக் கண்ட மன்னன் உறையூர் தலத்தின் மகிமையை உணர்ந்து தான் வணங்கும் சிவபெருமானுக்கு இத்தலத்தில் ஆலயம் ஒன்று எழுப்பினான். இத்தலம் திருக்கோழியூர் (உறையூர்)
என்ற பெயரில் சிறப்புடன் விளங்கியது.
#மூக்கீச்சுரம்:
சோழ அரசர்களில் ஒருவர் பட்டத்து யானை மீது உலா வருகின்றபோது, யானைக்கு மதம் பிடித்தது. அரசனும் பாகனும் திகைத்திருந்தனர். அப்போது இறைவன் அருளால் ஒரு கோழியொன்று வந்து பட்டத்துயானையின் மீது ஏறி யானையின் மத்தகத்தின் மீது மூக்கால் கொத்தியது. அதன் பின்பு யானை மதம் நீங்கி இயல்பு நிலைக்கு வந்தது. அக்கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. வில்வ மரத்தடியில் தேடிப்பார்த்தபோது சிவலிங்கமொன்ரு இருப்பதைக் கண்டு அவருக்கு கோயில் எழுப்பினான்.அது திருமூக்கிச்சுரம் என்று அழைக்கப்படுகிறது.
உறையூர் பகுதியானது முக்கீச்சுரம் என்றும், கோழியூர் என்றும் புராணக் காலத்தில் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
வீரவாதித்தன் என்னும் சோழ அரசன் உலாவரும்பொழுது அவனது யானையைக் கோழி சண்டையிட்டு வென்றதால் இத் தலத்திற்குக் கோழியூர் என்ற பெயரும் உண்டு.
முக்கீச்சுரம் திருச்சிராப்பள்ளி நகரின் ஒரு பகுதியான உறையூரே முக்கீச்சுரம் எனப்படுகிறது. கடைத்தெருவில் இக்கோயில் உள்ளது.
இத்தல வரலாற்றை நினைவுப்படுத்தும் வகையில் மூலவர் கருவறை வெளிச் சுவற்றில் வலதுபுறம் யானையின் மதத்தை கோழி அடக்கும் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இப்போதும் அந்தக் கோயிலுக்கு சென்றால் அந்த சிற்பத்தைக் காணலாம்.
#திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்:
"மருவலார்தம் மதிலெய் ததுவும்மான் மதலையை
உருவிலாரவ் வெரியூட் டியதும்முல குண்டதால்
செருவிலாரும் புலிசெங் கயலானையி னான்செய்த
பொருவின்மூக் கீச்சரத்தெம் மடிகள்செயும் பூசலே......
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்..
No comments:
Post a Comment